Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நீச்சல் போட்டிகளில் பங்கேற்று அசத்துகிறார் 60 வயது ஸ்வப்னா

Posted:

மும்பை: மும்பையில் இன்று நடக்கவுள்ள, கடலில், 6 கி.மீ., நீச்சல் போட்டியில், 60 வயதான ஸ்வப்னா வாணி உட்பட பலர் பங்கேற்கின்றனர். சிறு வயதிலிருந்து, நீச்சல் போட்டிகளில் பங்கேற்கும் வாணி, 74 விருதுகளைப் பெற்றுள்ளார். நாற்பது வயதைத் தாண்டி விட்டாலே, வாழ்க்கையே அவ்வளவு தான் என, நினைத்து, பலரும் சோம்பிக் கிடக்கையில், 60 வயதில், நாட்டில் எங்கு நீச்சல் போட்டி நடந்தாலும், அதில் ஆர்வமாக பங்கேற்று, விருதுகளைக் குவித்து வருகிறார், வாணி. மும்பையில் இன்று நடைபெற உள்ள கடல் நீச்சல் போட்டியில், வாணியும் பங்கேற்கிறார். கடலில், 6 கி.மீ., நீச்சல் அடிக்க வேண்டிய இந்த போட்டியில், 16 ...

ஆந்திராவின் மசூலிபட்டினத்தை ஹெலன் புயல் தாக்கியது : கனமழையுடன் சூறைகாற்றும் வீசியதால் சேதம் அதிகம்

Posted:

ஐதராபாத்: வங்கக்கடலில், நிலை கொண்டிருந்த, "ஹெலன்' புயல், ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினம் அருகே, நேற்று பிற்பகல் கரையைக் கடந்தது. இதை தொடர்ந்து, கனமழையுடன், சூறைகாற்றும் வீசியதால், கடலோர மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது; பலர் பலியாகி உள்ளனர்.வங்கக்கடலின், மேற்கு மத்திய பகுதியில், ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினம் அருகே நிலைகொண்டிருந்த, ஹெலன் புயல், நேற்று பிற்பகல், 2:00 மணியளவில், அதே பகுதியில், கரையை கடந்தது. அப்போது, மணிக்கு, 100 முதல், 110 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் கரையை கடந்தபோது, கிருஷ்ணா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை ...

தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி உட்பட 144 பேர் மீது சி.வி.சி., நடவடிக்கை

Posted:

புதுடில்லி: தமிழகத்தை சேர்ந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி உட்பட, ஊழல் புகாரில் சிக்கிய, 144 அரசு அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையமான, சி.வி.சி., தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பரில், தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பான அறிக்கையை, சி.வி.சி., வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: செப்டம்பரில், அரசுத் துறையின் பல்வேறு அதிகாரிகளுக்கு எதிராக, 2,940 ஊழல் புகார்கள் வந்தன. இந்த புகார்களை, முறையாக விசாரித்து, நடவடிக்கை எடுத்துள்ளோம். இது தொடர்பாக, 144 அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க ...

கிரிமினல்கள் பிடியில் இருந்து பார்லிமென்ட், சட்டசபை விடுபட வாய்ப்பு

Posted:

புதுடில்லி: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் இருந்து கிரிமினல்களை அப்புறப்படுத்த, தேர்தல் கமிஷன் புது யோசனையை தெரிவித்துள்ளது. 'குற்ற வழக்குகளில், ஐந்து அல்லது அதற்கு மேலான ஆண்டுகள் சிறைத் தண்டனை பெறும் வகையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில், தேர்தல் கமிஷன், பதில் மனு தாக்கல் செய்துள்ளது.பொது நல மனு:'பொது நலனுக்கான அமைப்பு' என்ற, அரசு சாரா அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில், பொது நல மனு தாக்கல் செய்திருந்தது. அதில், 'கிரிமினல் குற்றம் ...

'வீணாகும் கோதுமையை மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்குவது ஏன்?' நரேந்திர மோடி கேள்வி

Posted:

போபால் : ''சேமிப்பு கிடங்குகளில் வீணாகும் கோதுமையை, ஏழைகளுக்கு வழங்குவதற்கு பதிலாக, மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, காங்., தலைமையிலான, மத்திய அரசு வழங்குகிறது,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.25ல் சட்டசபை தேர்தல்:மத்திய பிரதேசத்தில், முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும், 25ல், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, கந்த்வா என்ற இடத்தில், நேற்று நடந்த கூட்டத்தில் ...

வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தீவிரம்: ராகுல் பேச்சு

Posted:

போபால் : ''மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், காங்கிரஸ், எப்போதுமே, மெத்தனம் காட்டுவது இல்லை. உணவு பாதுகாப்பு சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளிட்ட, பல முக்கியமான சட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்,'' என, காங்., துணை தலைவர், ராகுல் கூறினார்.ம.பி.,யில் பா.ஜ.,:ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சி்ங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும், 25ல், சட்டபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலில் போட்டியிடும், காங்., வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் துணை தலைவர் ராகுல், பாகல்காட்டில், நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பேசியதாவது:காங்., தலைமையிலான, ...

பாதுகாப்பு வீடியோ; 150 கி.மீ.,க்கு ஒரு டிரைவர்: ஆம்னி பஸ்களுக்கு ஐந்து கட்டளைகள்

Posted:

'விபத்துகளை தவிர்க்க, ஆம்னி பஸ்களில், பயணிகளுக்கு பாதுகாப்பு வீடியோ காட்சிகளை காட்டுவது; 150 கி.மீ.,க்கு ஒரு டிரைவர் கட்டாயம் உள்ளிட்ட, ஐந்து கட்டளைகளை உடனடியாக பின்பற்ற வேண்டும்' என, பஸ் உரிமையாளர்களுக்கு, தமிழக போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம், மெகபூப் நகர் மற்றும் கர்நாடக மாநிலம், ஹாவேரி ஆகிய இடங்களில், அடுத்தடுத்து, இரண்டு, "வால்வோ' ஆம்னி பஸ்கள் விபத்துக்குள்ளான சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள ஆம்னி பஸ்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறைப்படுத்த, போக்குவரத்து துறையினர் ...

டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு

Posted:

சேலம்: சேலம், டவுன் ரயில்வே ஸ்டேஷன் எதிரில், டாஸ்மாக் கடையில், 100 ரூபாய்க்கு, தொப்பியை அடகு வைத்து குடித்த, "போதை' போலீஸ் ஏட்டு யார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.தமிழக போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசாருக்கு, தொப்பி, பெல்ட், பெயர் பேட்ஜ் ஆகியன, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. இவற்றை, அவர்கள், துளைத்து விடும் பட்சத்தில், போலீசில் பணியாற்ற, தகுதி இல்லாதவராக கருதப்படுவர். இந்த பொருட்கள், தவறும் பட்சத்தில், அதற்கான விளக்கத்தை, துறை அதிகாரிகளுக்கு அளிக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுவர்.சேலம், டவுன் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள டாஸ்மாக் ...

கூடுதலாக ஐந்து ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' மதுபான கடை துவக்க முடிவு

Posted:

'டாஸ்மாக்' நிறுவனம், சென்னையில், மேலும், ஐந்து ஷாப்பிங் மால்களில், மதுபான கடைகளை திறக்க, முடிவு செய்துள்ளது. டாஸ்மாக் கடைகளில், "குடிமகன்கள்' கூட்டம் அதிகமாக இருப்பதால், தனிமை விரும்பிகள், உயர் வருவாய் பிரிவினர் உள்ளிட்ட ஏராளமானோர், தாங்கள் விரும்பிய, மது வகைகளை வாங்குவதில் சிரமப்பட்டு வந்தனர். இவர்களின் வசதிக்காக, டாஸ்மாக் நிறுவனம், பார் வசதி இல்லாமல், சென்னை எழும்பூரில் உள்ள, குளுகுளு வசதி உள்ள அல்சா ஷாப்பிங் மாலில், நவீன வசதியுடன் கூடிய, மதுபான கடையை திறந்துள்ளது. இங்கு, இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உயர் ரக மது வகைகள் விற்பனை ...

அ.தி.மு.க., தேர்தல் ஆபீஸாக மாறிய ராமர் கோவில்: பக்தர்கள் அச்சம்

Posted:

சேலம்:அயோத்தியாபட்டணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமர் கோவிலில், அ.தி.மு.க.,வினர் தேர்தல் பணி மேற்கொள்ளும் அலுவலகம் போல் அமைத்து செயல்படுகின்றனர். வெளிமாவட்ட கட்சியினர், போதையில் கோவிலுக்குள் வந்து உருளுவதால், பக்தர்கள், பெண்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணத்தில் கோதண்டராமர் கோவில் உள்ளது. ஓராண்டுக்கு முன், இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் உள்ள இக்கோவிலுக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள மக்களும், ஸ்வாமியை தரிசிக்க வருகின்றனர்.ஏற்காடு ...

மக்கள் அனைவருக்கும் சம்பளம்: சுவிட்சர்லாந்து நாட்டில் புரட்சி திட்டம்

Posted:

பெர்ன் : உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான, சுவிட்சர்லாந்து நாட்டில், அனைவருக்கும், மாதந்தோறும், குறைந்த பட்ச ஊதியம் வழங்கும், புரட்சிகரமான திட்டம் துவக்கப்பட்டுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை போன்றவற்றை ஒழிப்பதற்கு, உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த பிரச்னையை சமாளிக்க, மக்கள் அனைவருக்கும், மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை ஊதியமாக வழங்க, சுவிட்சர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் படி, ஒருவருக்கு, 1.70 லட்ச ரூபாய் ஆண்டு ஊதியம் கிடைக்கும். சுவிஸ் நாட்டின் மக்கள் தொகை, 8 கோடி. ஏழை, பணக்காரர், முதியவர், பெண்கள் என்ற பாகுபாடின்றி, ...

பறக்கும் "கியர்': நள்ளிரவில் "பியர்': போதைக்கு "பிரேக்' போடுவது யார்?

Posted:

கோவை : நள்ளிரவில் குடிபோதையில், அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டி வரும் வாலிபர்களால், நல்ல சூழலில் வாகனங்களை ஓட்டி வருபவர்களுக்கும், விபத்தில் கை, கால் முறிவு ஏற்படுவதும், உயிரிழப்பு ஏற்படுவதும் சகஜமாகி போய்விட்டது.கோவை நகரில் கல்லூரிகள் தங்கிப்படிக்கும், கேரள மற்றும் வட மாநில இளைஞர்கள் சிலர், இரவு நேரத்தில் கல்லூரிகள் அமைந்துள்ள பகுதி அருகே சங்கமிக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மது அருந்துகின்றனர். போதை தலைக்கேறியவுடன், பைக் மற்றும் கார்களில் நண்பர்களுடன் பறக்கும் இவர்கள் கண் மூடித்தனமாக வாகனத்தை இயக்குகின்றனர். ஒருவருக்கொருவர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™