Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ரஞ்சிக் கோப்பை: தமிழகம் முன்னிலை

Posted: 22 Nov 2013 01:31 PM PST

உத்தரப் பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை லீக் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தமிழகம் 297 ரன் எடுத்தது.

புதிய உலக சாம்பியன் கார்ல்ஸென்

Posted: 22 Nov 2013 01:30 PM PST

ஐந்து முறை உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தை அவரது சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, புதிய உலக சாம்பியனாக உருவெடுத்தார் நார்வேயின் கார்ல்ஸென்.

தீவிபத்தில் மாணவி சாவு

Posted: 22 Nov 2013 01:29 PM PST

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக லால்குடி போலீஸார் விசாரிக்கின்றனர்.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் இடமாற்றம்: உரிய அறிவிப்பு இல்லாததால் சிரமப்பட்ட பயணிகள்

Posted: 22 Nov 2013 01:28 PM PST

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வெள்ளிக்கிழமை முதல் அரசுக்கல்லூரி எதிரே தாற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பாக உரிய முன்னறிவிப்பு இல்லாததால் பொதுமக்கள் சிரமப்பட நேரிட்டது.

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி

Posted: 22 Nov 2013 01:28 PM PST

புதுக்கோட்டையில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் சார்பில் ஒருங்கிணைப்பட்டிருந்த மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நியாயவிலை கடைகளில் மண்ணெண்ணெய் திருட்டு

Posted: 22 Nov 2013 01:28 PM PST

இலுப்பூர் அருகே உள்ள மேலப்பட்டி, அன்னவாசல் ஆகிய நியாயவிலைக் கடைகளில் 810 லிட்டர் மண்ணெண்ணெய் வெள்ளிக்கிழமை திருடப்பட்டுள்ளது.

ஐசான் வால் நட்சத்திரம்:ஊர்தி பிரசார இயக்கம்

Posted: 22 Nov 2013 01:27 PM PST

ஐசான் வால் நட்சத்திரம் நவம்பர் 28-ம் தேதி சூரியனுக்கு அருகில் செல்ல இருக்கும் நிகழ்வு குறித்த தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினரின் ஊர்திப்பிரசார இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகை திருட்டு

Posted: 22 Nov 2013 01:27 PM PST

ஜயங்கொண்டம் அருகேயுள்ள மெய்காவல் புத்தூர் பிரதான சாலையில் வசிப்பவர்  கருணாகரன் (55). நியாய விலைக் கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார்.

கொள்ளிடத்தில் தடுப்பணை: விவசாயிகள் வலியுறுத்தல்

Posted: 22 Nov 2013 01:26 PM PST

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டி மழைக்காலங்களில் வீணாகும் நீரை சேமிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

டிச. 3, 4-ல் பாரதிதாசன் பல்கலை. தொலைநிலைக் கல்வி பி.எட். கலந்தாய்வு

Posted: 22 Nov 2013 01:26 PM PST

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைக்கல்வி மைய பி.எட். படிப்புக்கான சேர்க்கை கலந்தாய்வு டிசம்பர் 3,4 தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராம மக்களை ஒதுக்கிவைத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி புகார்

Posted: 22 Nov 2013 01:25 PM PST

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே, கோவில் பிரச்னையில் கிராம மக்களை ஒதுக்கி வைத்த நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, அரும்பாவூர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.

அரசுப் பள்ளியில் கழிவறை தின விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 22 Nov 2013 01:25 PM PST

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்டம், பெரம்பலூர் நகராட்சி, இந்தோ அறக்கட்டளை சார்பில், உலக கழிப்பறை தின விழிப்புணர்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அரசாணை வெளியிட வலியுறுத்தல்

Posted: 22 Nov 2013 01:25 PM PST

நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அரசாணைகள் வெளியிட வேண்டுமென ஓய்வுபெற்ற அலுவலர் சங்க மாவட்ட செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டது.

அனைத்து ஊராட்சிகளிலும் வங்கிக் கிளை தொடங்க வலியுறுத்தல்

Posted: 22 Nov 2013 01:24 PM PST

அனைத்து ஊராட்சிகளிலும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிக் கிளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பேராவூரணி ஒன்றிய பாஜக கூட்டம்

Posted: 22 Nov 2013 01:24 PM PST

பாரதிய ஜனதா கட்சியின் பேராவூரணி ஒன்றிய கூட்டம்  வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சையில் ஆந்திரா வங்கி கிளை தொடக்கம்

Posted: 22 Nov 2013 01:24 PM PST

தஞ்சாவூர் மாரீஸ் கார்னர் பகுதியில் ஆந்திரா வங்கியின் தஞ்சாவூர் கிளையை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தொடக்கி வைத்தார்.

இலவச கண் பரிசோதனை முகாம்

Posted: 22 Nov 2013 01:23 PM PST

பூதலூர் அரிமா சங்கம், தஞ்சாவூர் வாசன் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து, பூதலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின.

ஐசான் வால்நட்சத்திரம் குறித்து பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted: 22 Nov 2013 01:23 PM PST

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஐசான் வால் நட்சத்திரம் காண்போம் என்ற விழிப்புணர்வு பயணத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இன்று ரெப்கோ ஹோம் வீட்டு கடன் முகாம்

Posted: 22 Nov 2013 01:23 PM PST

தஞ்சாவூர், கும்பகோணத்தில் உள்ள ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவன கிளையில் வீட்டு வசதி கடன் முகாம் சனிக்கிழமை (நவ.23) நடைபெறவுள்ளது. இதுகுறித்து நிறுவன கிளை மேலாளர் என். செல்

பாபநாசத்தில் ரத்த தான முகாம்

Posted: 22 Nov 2013 01:23 PM PST

பாபநாசம் மக்கள் நல மன்றம், இந்திய செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்டவை இணைந்து பாபநாசம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அண்மையில் ரத்த தான முகாமை நடத்தின.

தேசிய ஒருமைப்பாட்டு நாள் விழா

Posted: 22 Nov 2013 01:21 PM PST

பாபநாசம் லியோ சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா, தேசிய ஒருமைப்பாட்டு நாள் விழா ஆகியன கோவில்தேவராயன்பேட்டை ஸ்ரீ நடராஜா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

ரயிலுக்காக காத்திருந்தவர் மாரடைப்பால் மரணம்

Posted: 22 Nov 2013 01:21 PM PST

திருவாரூர் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அமர்ந்திருந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மாரடைப்பில் உயிரிழந்தார்.

தொடக்கப் பள்ளியில் பணம், பொருள்கள் திருட்டு

Posted: 22 Nov 2013 01:21 PM PST

மன்னார்குடியில் வியாழக்கிழமை இரவு  எட்டு அறைகளின் பூட்டுகளை உடைத்து பணம், சமையல் செய்ய வைத்திருந்த பருப்பு வகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த கார் மோதியதில் தொழிலாளி காயம்

Posted: 22 Nov 2013 01:20 PM PST

மன்னார்குடி அருகே வெள்ளிக்கிழமை வெளி மாநில மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த கார் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி காயமடைந்தார்.

"மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தஉதவும் அறிவியல் கண்காட்சிகள்'

Posted: 22 Nov 2013 01:20 PM PST

மாணவர்களின் தனித் திறனை வெளிப்படுத்த அறிவியல் கண்காட்சிகள் அடித்தளம் அமைக்கின்றன என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி.

கால்நடை இறப்பு, பயிர் இழப்புக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

Posted: 22 Nov 2013 01:20 PM PST

நாகை மாவட்டத்தில் கோமாரி நோயால் உயிரிழந்த கால்நடைகளுக்கும், புயல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட தோட்டக்கலைப் பயிர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக பட்டா மாறுதல் ஆணை

Posted: 22 Nov 2013 01:20 PM PST

: பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு  உடனடியாக பட்டா மாறுதல் ஆணைகள்  வழங்கப்பட்டு வருகின்றன என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி.

வரி வசூலில் சுணக்கம், கூடுதல் செலவு, பொதுநிதி பற்றாக்குறை நிதி நெருக்கடியில் திருநெல்வேலி மாநகராட்சி

Posted: 22 Nov 2013 01:17 PM PST

வரி வசூலில் சுணக்கம், கூடுதல் செலவு, பொதுநிதியில் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

கொள்ளையைத் தடுக்க கண்காணிப்பு குழுக்கள்

Posted: 22 Nov 2013 01:16 PM PST

திருநெல்வேலியில் அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்க பகுதி வாரியாக கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வேண்டும் என பாளையங்கோட்டையைச் சேர்ந்த குடியிருப்போருக்கான 42 நலச்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

கோவில் கும்பாபிஷேகம்

Posted: 22 Nov 2013 01:16 PM PST

ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளை ஸ்ரீகாளிஅம்பாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நெல்லையில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம்

Posted: 22 Nov 2013 01:16 PM PST

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம், திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை கூடுகிறது.

மனநலன் பாதிக்கப்பட்டோருக்கு மையம்

Posted: 22 Nov 2013 01:16 PM PST

திருநெல்வேலியில் மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான மையம்  விரைவில் தொடங்கப்படும் என, ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்தார்.

உணவக ஊழியர் கொலை வழக்கு: சென்னையில் ஒருவர் சரண்

Posted: 22 Nov 2013 01:15 PM PST

கடையநல்லூரில் உணவக ஊழியர் கொலை வழக்குத் தொடர்பாக ஒருவர் வெள்ளிக்கிழமை சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பீட்சா, பர்கர் புறக்கணிப்போம்: சாமை, தினைக்கு மாறுவோம்

Posted: 22 Nov 2013 01:15 PM PST

பீட்சா, பர்கர் உள்ளிட்ட ஜங்க் புட் வகைகளைப் புறக்கணித்து  இயற்கை உணவுகளான சாமை, தினை மற்றும் சிறு தானியங்கள் பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும் என திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மருத்துவக் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

பாளையங்கோட்டையில் கருத்தரங்கு

Posted: 22 Nov 2013 01:15 PM PST

பாளையங்கோட்டையில் ரோட்டரி சங்கம் சார்பில் வாழ்க்கை முறை சீரழிதல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

கழிப்பறை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted: 22 Nov 2013 01:15 PM PST

திருநெல்வேலி அருகே நாரணம்மாள்புரத்தில் உள்ள புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் உலக கழிப்பறை தினத்தையொட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அனுமதி மீறி கட்டப்பட்ட 2 மாடி வணிக வளாகத்துக்கு சீல்

Posted: 22 Nov 2013 01:14 PM PST

திருநெல்வேலியில் அனுமதி மீறி கட்டப்பட்ட 2 மாடி வணிக வளாக கட்டடத்துக்கு மாநகராட்சி அலுவலர்கள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனர்.

பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்திவிளையாட்டுப் போட்டிகளில் அசத்திய மாற்றுத்திறனாளிகள்!

Posted: 22 Nov 2013 01:14 PM PST

திருநெல்வேலி மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் 295 பேர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

மேல்மருவத்தூரில் இருமுடி தொடக்க விழா

Posted: 22 Nov 2013 01:13 PM PST

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தைப்பூச விழாவை முன்னிட்டு, சக்திமாலை அணிந்து இருமுடி செலுத்தும் விழா வெள்ளிக்கிழமை நடந்தது.

பாம்பன் பாலத்தை கடந்து சென்ற 2 மிதவைக் கப்பல்கள்

Posted: 22 Nov 2013 01:12 PM PST

கோவாவில் இருந்து கொல்கத்தா செல்வதற்காக புதிதாக தயாரிக்கப்பட்ட 265 அடி நீளம் கொண்ட இரண்டு மிதவைக்கப்பல்கள் புதன்கிழமை ராமேசுவரம் பாம்பன் கடல் பகுதிக்கு வந்தன.

மீனவர் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் பாராமுகம்

Posted: 22 Nov 2013 01:10 PM PST

மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் முனைப்புக் காட்டவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

ஏடிஎம் மையங்களில்  முழுபாதுகாப்பு வசதி கோரி வழக்கு

Posted: 22 Nov 2013 01:10 PM PST

சென்சார் கருவிகளுடன் கூடிய சிசிடிவி கேமராக்களை அனைத்து ஏடிஎம் மையங்களிலும் நிறுவக் கோரும் மனுவுக்கு, ரிசர்வ் வங்கி ஆளுநர், தமிழக டி.ஜி.பி. உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அட்டாக் பாண்டி மனைவி தலைமறைவு: உறவினர் கைது

Posted: 22 Nov 2013 01:09 PM PST

மதுரையில் வீட்டு உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து, அந்த வீட்டை அபகரிக்க முயற்சி செய்ததாக, திமுக பிரமுகர் அட்டாக் பாண்டியின் மனைவி தயாளம்மாளை போலீஸார் தேடி வருகின்றனர்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

Posted: 22 Nov 2013 01:09 PM PST

  மதுரையில் வியாழக்கிழமை இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவர் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனராம்.

தேசிய அறிவியல் மாநாடு: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

Posted: 22 Nov 2013 01:09 PM PST

சோழவந்தான் அருகே உள்ள காடுபட்டி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் மாநாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை-துபை விமான சேவை துவங்கியது

Posted: 22 Nov 2013 01:09 PM PST

மதுரை-துபை நேரடி விமான சேவை வெள்ளிக்கிழமை முதல் துவங்கியது.

மதுரை விமான நிலையத்தில் மல்லிகைப் பூ விற்பனை நிலையம்

Posted: 22 Nov 2013 01:08 PM PST

மதுரை விமான நிலையத்தில், மல்லிகைப் பூ விற்பனை நிலையத்தை, மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

கல்வீச்சில் பெயிண்டர் சாவு

Posted: 22 Nov 2013 01:08 PM PST

மதுரையில் மதுபானக் கடையில் சிலர் கற்களை வீசித் தாக்கியதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெயிண்டர் ஒருவர்,  கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

குராயூர் அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம்

Posted: 22 Nov 2013 01:08 PM PST

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே குராயூர் அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி

Posted: 22 Nov 2013 01:08 PM PST

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், 2014-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் உள்சார்புத்(முதல் கட்டம்) தேர்வில் பங்கேற்போருக்கு 6 மாதம் இலவச சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

"விக்ரமாதித்யா' கப்பலில் வீரர்களுக்கு போர் பயிற்சி

Posted: 22 Nov 2013 01:08 PM PST

ரஷிய நாட்டு உதவியுடன் அண்மையில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட "விக்ரமாதித்யா' விமானம் தாங்கிப் போர்க் கப்பலில் வீரர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கடற்படைத் தளபதி டி.கே. ஜோஷி தெரிவித்தார்.

பயிர்க் காப்பீடு: பிரீமியம் பெற மறுக்கும் கூட்டுறவு சங்கங்கள்

Posted: 22 Nov 2013 01:07 PM PST

பயிர்க் காப்பீட்டுக்கான பிரீமியம் பெற தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மறுத்து வருவதாக, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள முன்னுரிமைப் பிரிவு பதிவுதாரர்கள் கவனத்துக்கு...

Posted: 22 Nov 2013 01:07 PM PST

மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகத்தில் பதிவு செய்துள்ள முன்னுரிமைப் பிரிவு பதிவுதாரர்கள், தங்களது பதிவு விவரங்களில் திருத்தங்கள் இருப்பின், நவம்பர் 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என வேலைவாய்ப்பு அலுவலர் மு.கருணாகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்

கிரானைட் குவாரிகள் சேதப்படுத்திய பாசனக் கால்வாய்கள் சீரமைப்பு எப்போது?

Posted: 22 Nov 2013 01:07 PM PST

கிரானைட் குவாரி தோண்டுவதற்காக சேதப்படுத்தப்பட்ட பாசனக் கால்வாய்களைச் சீரமைப்பது எப்போது என, மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.

நவம்பர் 23 மின் தடை

Posted: 22 Nov 2013 01:07 PM PST

மேலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (நவ.23) நடைபெற உள்ளன.  எனவே, காலை 9 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை, மேலூர் நகர், தும்பைப்பட்டி,

ஒருபோக சாகுபடி பகுதிக்கு தண்ணீர்: சிவகங்கை, ராமநாதபுரம் ஆட்சியர்களிடம் பேச வலியுறுத்தல்

Posted: 22 Nov 2013 01:06 PM PST

பெரியாறு-வைகை பாசனத் திட்டத்தில், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு அளிக்கப்படும் தண்ணீர் பங்கீட்டில் இருந்து, மதுரை மாவட்டத்தின் ஒருபோக சாகுபடி பகுதிக்கும் கேட்டு

பேச்சியம்மன் பால்பண்ணை உணவகம் திறப்பு

Posted: 22 Nov 2013 01:06 PM PST

பழங்காநத்தம் பைபாஸ் சாலைப் பகுதியில், பேச்சியம்மன் பால்பண்ணை ரெஸ்டாரண்ட் திறப்பு விழா, வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவிகளுக்கு தலைமைத்துவ திறன் வளர் பயிற்சி

Posted: 22 Nov 2013 01:06 PM PST

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவிகள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் சுயஉதவிக் குழுத் தலைவிகளுக்கான தலைமைத்துவ திறன் வளர் பயிற்சி முகாம், கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெற்றன.  அருள் ஆனந்தர் கல்லூரியின் மகளிரியல் மையமும்,

டிராக்டர், கார் மோதல்: பெண் சாவு; இருவர் காயம்

Posted: 22 Nov 2013 01:05 PM PST

அரக்கோணம் நகரில் வியாழக்கிழமை நடந்த விபத்தில் பெண் ஒருவர் இறந்தார். காரின் டிரைவர் மற்றும் காரில் இருந்த பேக்கரி நிறுவன பெண் உரிமையாளர் ஆகியோர் காயமடைந்து மருத்துவ

பெண் தற்கொலை:கணவர் உள்பட 3 பேர் கைது

Posted: 22 Nov 2013 01:05 PM PST

பெண் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் உள்ளிட்ட 3 பேரை ஆற்காடு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்

கட்டட மேஸ்திரி தற்கொலை

Posted: 22 Nov 2013 01:04 PM PST

குடியாத்தம் அடுத்த கள்ளூரைச் சேர்ந்தவர் சங்கர்(35). கட்டட மேஸ்திரியான இவர் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

குடியாத்தத்தில் பொதுமக்கள் எளிதில் அணுகும் இடத்தில் உழவர் சந்தை

Posted: 22 Nov 2013 01:03 PM PST

குடியாத்ததில் தற்போதுள்ள இடத்தில் இருந்து உழவர் சந்தையை காலி செய்யும் நிலையில், பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் நகரின் மையப் பகுதியில் மாற்று இடம் ஒன்றை நகராட்சி நிர்வாகம் தேர்வு

பீடி லேபிள் ஒட்டும் பெண் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 22 Nov 2013 01:03 PM PST

ரிங் பீடி லேபிள் ஒட்ட அடிப்படைக் கூலி ரூ.10 ஆயிரம் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு மகளிர் ரிங்பீடி லேபிள் ஒட்டும் தொழிலாளர் சம்மேளனத்தினர் (ஏஐடியூசி) குடியாத்தம் புதிய பஸ் நிலையம் எதிரே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மண்டி வீதி வழியாக மேம்பாலம்: வியாபாரிகள் எதிர்ப்பு

Posted: 22 Nov 2013 01:02 PM PST

வேலூர் மண்டி வீதி வழியாக மேம்பாலம் அமைப்பதற்கான சர்வே நடைபெறுவதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் வியாபாரிகள் மனு கொடுத்தனர்.

புதிய சினிமா டவுன் லோடு செய்த 4 பேர் கைது

Posted: 22 Nov 2013 01:02 PM PST

சோளிங்கர் பகுதியில் புதிய சினிமா, பாடல்களை டவுன்லோடு செய்து விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அடிப்படை வசதிகள்: நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை

Posted: 22 Nov 2013 01:01 PM PST

திருப்பத்தூர் நகர்மன்ற அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் சு.அரசு தலைமை வகித்தார். ஆணையாளர் ஏ.சர்தார் முன்னிலை வகித்தார்.

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்புமத்திய அரசைக் கண்டித்து ஆற்காடு நகராட்சி தீர்மானம்

Posted: 22 Nov 2013 01:01 PM PST

காமன்வெல்த் மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான்குர்ஷித் கலந்து கொண்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆற்காடு நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குடியிருப்புப் பகுதியில் கழிவுநீரைத் திறந்துவிட்ட வாகனம் சிறைபிடிப்பு

Posted: 22 Nov 2013 01:01 PM PST

சிப்காட் பகுதியில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலைகளின் கழிவுநீரைக் கொண்டுவந்து குடியிருப்புப் பகுதிகளில் திறந்துவிட்ட கழிவுநீர் வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர்.

தனியார் நிறுவன ஊழியர் கார் எரிப்பு

Posted: 22 Nov 2013 01:01 PM PST

சோளிங்கர் பாட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (45). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது காரை வீட்டருகே நிறுத்தியிருந்தார்.

கண்ணியம் தவறி பேசினால் ஒழுங்கு நடவடிக்கை

Posted: 22 Nov 2013 01:00 PM PST

இனி வருங்காலத்தில் வேலூர் மாநகராட்சி கூட்டங்களில் கண்ணியம் தவறி பேசினால், உறுப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பி.கார்த்தியாயினி எச்சரிக்கை விடுத்தார்.

தேசிய நூலக வார விழா

Posted: 22 Nov 2013 01:00 PM PST

குடியாத்தம் கிளை நூலகத்தில் 46வது தேசிய நூலக வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

எஸ்.எம்.எஸ். மூலம் மின் கட்டணம் அறியலாம்

Posted: 22 Nov 2013 01:00 PM PST

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் பயன்பாட்டிற்கான கட்டணத் தொகையை அறிய எஸ்.எம்.எஸ். முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரிய பள்ளிகொண்டா கோட்ட செயற்பொறியாளர் கோ. சென்னகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 23 மின் தடை

Posted: 22 Nov 2013 12:59 PM PST

திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டத்துக்குள்பட்ட, விண்ணமங்கலம் 230 கேவி துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய மின்பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால் சனிக்கிழமை (நவம்பர் 23) காலை 9 மணி

சர்ச்சைக்குரிய கருத்து: ஆம் ஆத்மி பிரமுகர் மீது போலீஸில் புகார்

Posted: 22 Nov 2013 12:59 PM PST

முனிவர் வால்மீகி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் குமார் விஸ்வாஸ் மீது தில்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

செல்லப் பிராணிகள் வளர்ப்பு குறித்து கலந்துரையாடல்

Posted: 22 Nov 2013 12:59 PM PST

வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் செல்ல பிராணிகள் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஐஸ்கிரீம் பார்லர் பாலியல் வழக்கு: கேரள அரசு, சி.பி.ஐ.க்கு நோட்டீஸ்

Posted: 22 Nov 2013 12:59 PM PST

கேரளாவை உலுக்கிய ஐஸ்கிரீம் பார்லர் பாலியல் மோசடி வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணை கோரி முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து பதிலளிக்குமாறு கேரள மாநில அரசுக்கும் சி.பி.ஐ.க்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

நவம்பர் 24 மின் தடை

Posted: 22 Nov 2013 12:58 PM PST

ராணிப்பேட்டை, சிப்காட் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை சிப்காட், சிட்கோ, பெல், நரசிங்கபுரம், தெங்கால், புளியந்தாங்கல், லாலாபேட்டை, அக்ராவரம், சீக்கராஜபுரம், வானாபாடி,

மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Posted: 22 Nov 2013 12:58 PM PST

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தேர்தல் வேட்புமனு தொடர்பாக சமூக ஆர்வலர் சுனில் சராவ்கி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

எல்ஐசி பாலிசி மீதான சேவை வரியை நீக்க முகவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 22 Nov 2013 12:57 PM PST

எல்ஐசி பாலிசி மீது மத்திய அரசு, 3.06 முதல் 12.36 சதவீதம் வரை விதித்துள்ள சேவை வரியை நீக்கக்கோரி குடியாத்தம் எல்ஐசி கிளை அலுவலகம் எதிரே முகவர்கள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டு குடிநீர்த் திட்டத்துக்கு ரூ.87 கோடி கடன்பெற ஒப்புதல்

Posted: 22 Nov 2013 12:57 PM PST

காவிரியில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு குடிநீர் எடுத்துவர மேற்கொள்ளப்படும் வேலூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் அரக்கோணம் நகராட்சியையும் இணைத்து பணிகள் நடைபெற, தமிழ்நாடு வளர்ச்சி நிதிய கடனுதவி மூலம் ரூ.87.42 கோடி பெற அரக்கோணம் நகர்மன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பது அவசியம்

Posted: 22 Nov 2013 12:57 PM PST

நாட்டின் பொருளாதார மந்தநிலையைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

விஐடியில் இன்டெல் நிறுவன கணினி ஆய்வகம் தொடக்கம்

Posted: 22 Nov 2013 12:56 PM PST

விஐடியில் இன்டெல் நிறுவனத்தின் சார்பில் கணினி ஆய்வகம் ஒன்றை அதன் ஆசிய பசிபிக் நிறுவன உயர்கல்வி பிரிவு தலைவர் சுமித் வர்மா தொடங்கி வைத்தார்.

லஞ்ச புகார்களில் சிவிசி பரிந்துரை: மத்திய அரசு ஊழியர்கள் 144 பேர் மீது துறைரீதியான நடவடிக்கை

Posted: 22 Nov 2013 12:56 PM PST

லஞ்சம் வாங்கியதான குற்றச்சாட்டில் பல்வேறு மத்திய அரசுத்துறைகளைச் சேர்ந்த 144 பேர் மீது கடந்த செப்டம்பர் மாதம் துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மழையூர் கோயில் கும்பாபிஷேக விழா

Posted: 22 Nov 2013 12:56 PM PST

ஆற்காடு தாலுகா மழையூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ செல்ல வாழியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது

பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு பஸ் நிலையத்தில் மீட்பு

Posted: 22 Nov 2013 12:55 PM PST

வேலூர் புதிய பஸ் நிலையப் பகுதியில், பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவை போலீஸார் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

குடியாத்தம் நகர பாஜக செயற்குழுக் கூட்டம்

Posted: 22 Nov 2013 12:55 PM PST

குடியாத்தம் நகர பாஜகவின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் பி.ஸ்ரீகாந்த் தலைமையில் அண்மையில்  நடைபெற்றது.

கல்லூரியில் பட்டமளிப்பு விழா:  ஜி.கே.வாசன் நாளை பங்கேற்பு

Posted: 22 Nov 2013 12:55 PM PST

ஆம்பூர் ஸ்ரீ வித்ய விஹார் கல்வியியல் கல்லூரியின் 2-ம் ஆண்டு பட்டமளிóப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (24-11.2013) கல்லூரி வளாகத்தில் காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. 

பைபாஸ் சாலையின் நடுவே தடுப்புக் கம்பி அமைக்க கோரிக்கை

Posted: 22 Nov 2013 12:54 PM PST

ஆம்பூர் பைபாஸ் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலையின் நடுவே தடுப்பு கம்பிகள் அமைக்க நகர்மன்றம் மூலம் நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் அனுப்ப வேண்டுமென ஆம்பூரில் புதன்கிழமை நடந்த நகர்மன்ற சாதாரண கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.

"இன்றைய தொழில்நுட்பத்தில் முன்னேற கணிதம் அவசியம்

Posted: 22 Nov 2013 12:54 PM PST

இன்றைய தொழில்நுட்பங்கள் அனைத்துக்கும் அடிப்படையாக கணிதம் அமைந்துள்ளது. அதனால் இன்றைய மாணவர்கள் கணிதத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐஐடி கணிதப் பே

லோக் அதாலத் மூலம் ரூ.16 லட்சம் வங்கிக் கடன் வசூல்

Posted: 22 Nov 2013 12:54 PM PST

திருப்பத்தூரில் நடைப்பெற்ற மக்கள் நீதி மன்றத்தில் (லோக் அதாலத்) ரூ. 16 லட்சம் கடன் வசூலானது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Posted: 22 Nov 2013 12:53 PM PST

திருப்பத்தூரில் வியாழக்கிழமை மெயின் ரோட்டிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம் நடைப்பெற்றது.

ஆம்பூர்

Posted: 22 Nov 2013 12:52 PM PST

மதுரை

Posted: 22 Nov 2013 12:52 PM PST

திருநெல்வேலி

Posted: 22 Nov 2013 12:51 PM PST

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

Posted: 22 Nov 2013 12:51 PM PST

காரைக்கால் பகுதியில் செயல்படும் கிறிஸ்தவ சபைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆசிரியர் தகுதித் தேர்வு:தேர்வு பெற்றவர்களுக்கு நவ. 25 முதல் சான்றிதழ் வழங்கல்

Posted: 22 Nov 2013 12:51 PM PST

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருவாரூரில் நவ. 25 முதல் தேர்வு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ. நிர்மலா.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிள்ளைகளை வேலைக்கு அனுப்பினால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்

Posted: 22 Nov 2013 12:31 PM PST

வறுமையின் காரணமாக பெற்றோர்கள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கரூர் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.

விவசாய சங்கத்தினர் உண்ணாவிரதம்

Posted: 22 Nov 2013 12:31 PM PST

கொடுமுடி வாய்க்கால் திட்டத்தை நிறைவேற்றக்கோரி, கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் விவசாய சங்கத்தினர் வெள்ளிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை

Posted: 22 Nov 2013 12:31 PM PST

கரூர் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு ஆசிரியை அடித்ததுதான் காரணம் எனக்கூறி மாணவியின் உறவினர்கள் அரசு மருத்துமனையை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு நியமன ஆணை

Posted: 22 Nov 2013 12:30 PM PST

கரூரில் அண்மையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™