Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


'ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்!

Posted: 22 Nov 2013 10:51 AM PST

பொதுவாக காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுவது தான் மிகவும் நல்லது என்று சொல்வார்கள். ஆனால் காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதால், அதில் உள்ள சத்துக்கள் அப்படியே கிடைப்பதோடு, உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களும் கரையும். குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டால், ஆரோக்கியமான முறையில் உடல் எடையானது குறையும். எப்படியெனில், இத்தகைய உணவுகளில் புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. மேலும் உடல் எடையை குறைக்கும் ...

சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு !

Posted: 22 Nov 2013 10:24 AM PST

பீஜிங்:இறந்ததாக நினைத்து இறுதி சடங்கு செய்தபோது குழந்தை திடீரென கதறி அழுதது. சீனாவில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனாவில் அகு மாகாணத்தில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. இங்கு ஹபே நகரத்தை சேர்ந்த தம்பதியின் ஆண் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. பிறந்து சில நாட்களே ஆன அந்த குழந்தை மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டது. இதனால் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சையளித்து வந்தனர். இந்த நிலையில் குழந்தையின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. பெற்றோரிடம், ...

அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்?

Posted: 22 Nov 2013 09:51 AM PST

பட்டங்கள் கொடுப்பது பற்றி அமெரிக்க அரசியல் சட்டம் என்ன சொல்கிறது? அரசியல் சட்டம் ஆர்ட்டிகிள் 1, பிரிவு 9:8 "அமெரிக்க அரசு எந்த பட்டத்தையும் யாருக்கும் வழங்க கூடாது. அமெரிக்க அரசில் பணியாற்றும் யாரும் எந்த வெளிநாட்டு மன்னர், அரசிடமும் எந்த பட்டத்தையும் பெறக்கூடாது..." அமெரிக்க தேச தந்தையர் அன்றைய காலகட்ட ஐரோப்பாவில் "பிரபு, மை லார்ட், ஹிஸ் எக்சலன்சி" என அழைக்கும் மரபை கடுமையாக வெறுத்தார்கள். தாமஸ் பெயின் அது குறித்து கூறுகிறார்: "பட்டங்களும், அடைமொழிகளும், மைலார்ட் என்பதுபோன்ற ...

விமானத்தில் போன், இன்டர்நெட் அனுமதி : அமெரிக்கா ஆலோசனை

Posted: 22 Nov 2013 09:46 AM PST

விமான பயணத்தின் போது போனில் பேசவும், லேப்டாப்பில் இணையத்தைப் பயன்படுத்தவும் பயணிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது. பரிந்துரையின் அடிப்படையில் நடைபெறும் ஆலோசனையின்படி, விமானம் 3 ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு மேல் பறக்கும் போது செல்போனில் பேசவும், இன்டர்நெட்டை பயன்படுத்துவும் அனுமதிக்கலாம் என்றும், விமானம் புறப்படும் போதும், இறங்கும் போதும் ஏற்கனவே உள்ள தடை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. thinamani

அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு !

Posted: 22 Nov 2013 09:41 AM PST

நெல்லை: காற்றாலை மின் உற்பத்தி ஒற்றை இலக்கமாக மாறியதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி இல்லாததால் கடுமையான மின்வெட்டு நிலவுகிறது. காற்று காலங்களில் மட்டும் காற்றாலைகளின் உதவியால் மின்தடை தற்காலிகமாக விலக்கி கொள்ளப்படுகிறது. புதிய மின் திட்டங்கள் பல முழுமை பெறாத நிலையில் காற்றாலைகள் காலைவாறும் போதெல்லாம் மின்வெட்டு விஸ்வரூபம் எடுக்கிறது. தற்போது வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கிவிட்டதால் கடந்த ...

முத்தான முப்பது விஷயங்கள் !

Posted: 22 Nov 2013 09:34 AM PST

* நமது முன்னோர்கள் கிடைப்பதற்கரிய மற்றும் விலை உயர்ந்த சில அரிய பொருட்களைக் கண்டறிந்து அவைகளைத் திறம்பட பயன்படுத்தி உள்ளனர். அவற்றில் நவரத்தினங்கள் என்ற ஒரு பிரிவு உள்ளது. ஒன்பது வகையான விலை உயர்ந்த அரிய மருத்துவத்தன்மை கொண்டது மட்டுமின்றி மனதிற்கு மகிழ்ச்சியையும் அளிக்கும் ரத்தினங்களையே நவரத்தினம் என்கிறார்கள். இவற்றில் முத்து என்ற நவரத்தினமும் ஒன்று. மணிகளின் அரசன் என முத்து போற்றப்படுகிறது. * பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் முத்தின் பயன்களை உணர்ந்து பயன்படுத்தியுள்ளனர். அக்கால ...

இன்றைய மருத்துவ உலகம்!

Posted: 22 Nov 2013 09:14 AM PST

இன்றைய மருத்துவ உலகம்! ஒவ்வொருக்கும் ஒவ்வொருவிதமான அசெளகாரியங்கள், மனக்கஷ்டங்கள், உடல் உபாதைகள். இவைகளிலிருந்து விடுபட நாம் தேடிச் செல்வது மருந்தகங்கள், மருத்துவமனைகள். அதிலும் தற்பொழுது சூப்பர் ஸ்பெஷாலிட்டி, மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகள் – போன்றவை. அங்கு நமக்கு கிடைப்பது – புதுப்புது பெயர்களைக்கூறி நம்முடைய பயத்தினை அதிகப்படுத்துவதும் தொடர்ச்சியாக பலவிதமான (இரத்தம், மலம், இ.ஜி.சி, திரட்மில், எக்ஸ்ரே, எம் ஆர் ஸ்கேன் போன்ற பெயர்களில்) பரிசோதனைகளும்தான். இவைகளுக்கு நாம் கொடுக்கவேண்டியது ...

மின்சாரத்தை சேமிக்கும் வழிகள் !

Posted: 22 Nov 2013 08:54 AM PST

ஒரு யூனிட் மின்சாரத்தை சேமிப்பது இரண்டு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு சமம் என்று கூறப்படுகிறது. இதனை கருத்தில் வைத்து நமது வீட்டில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதால் நமக்கென்ன பலன் என்று நினைக்கலாம். நிச்சயமாக உள்ளது. உங்கள் வீட்டு மின் கட்டணம் குறைவாக வரும், மேலும், உங்கள் வருங்காலத்துக்கு மின் தடையற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுக்கலாம். இதற்கு வீட்டில் நாம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம். வீட்டில் தேவையற்ற ...

எடையற்ற நிலையை உணர

Posted: 22 Nov 2013 08:48 AM PST

சர்வதேச விண்வெளி நிலையம் ISS: எடையற்ற நிலையில் உயிரினங்கள் எவ்வாறு படிவளர்ச்சியுற ுகின்றன [Evolve], நிலவுக்கும், செவ்வாய் போன்ற தூர கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்பும் போது நீண்ட காலம் எடையற்ற நிலையில் அவர்கள் இருக்க வேண்டியிருப்பதால், அது என்னவித மாற்றங்களை மனிதனுக்கு ஏற்படுத்துகிறது உள்ளிட் ட பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அமரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், கனடா உள்ளிட்ட ஒரு டஜனுக்கும் மேற்ப்பட்ட நாடுகளின் பன்னாட்டு க ூட்டு முயற்சியால் 1998 ஆம் ஆண்டு பூமியிலிருந்து 400 கி.மீ. ...

இன்றைய இந்தியா.......

Posted: 22 Nov 2013 08:36 AM PST

கூடங்குளம் திறப்பதற்கு முன் ஒரு பகுதி போராடியது வருங்கால நாட்கள் இருண்டுவிடும் என்று திறந்தபின்னும் பல பகுதி போராடுகிறது நிகழ்காலநாட்கள் இருளில் கடப்பதை எண்ணி திறப்பதற்கு முன்போ தடையில்லா மின்சாரம் திறந்த பின்போ தடையில்லா மின்வெட்டு ஒரு பகுதியில் மழையின்றி மக்கள் வாட மறுபகுதி மழை வெள்ளத்தில் மக்கள் உடலை தேட ஒரு பகுதி காவிரியில் வெள்ளம் ஓட மறுபகுதியில் செடிகள் காய்ந்து வாட கடுங்குளிர் காலமும் வந்து விட்டது கருத்த வானம் மேகம் மூட கனமழை பெய்ய காலம் வருமோ? காயும் பயிர் செழிக்குமோ ? கடவுளே ...

பூமியின் மைய அணு உலை உண்டாக்கிய பாதுகாப்பு காந்தமண்டலம்

Posted: 22 Nov 2013 08:07 AM PST

ப+மியின் மைய அணு உலை உண்டாக்கிய பாதுகாப்புக் காந்த மண்டலம் சி. ஜெயபாரதன் பூமியின் வயது ஏற ஏறத் தீர்ந்திடும் அணு உலை எருவின் அளவைக் கணக்கிடும் போது, அணுப்பிளவில் விளையும் ஹீலியம்–3, ஹீலியம்–4 பின்னம் மிகையாகி வருவதாகத் தெரிகிறது. அதாவது ஹீலியம்–4 துகளை வெளியேற்றும் யுரேனிய எரிபொருள் குறைந்து கொண்டு வருவதைக் காட்டுகிறது. ஐஸ்லாந்து, ஹவாயி எரிமலைக் குழம்பிலிருந்து கசியும் ஹீலியங் களின் பின்னத்தை நோக்கும் போது உட்கரு அணு உலையின் ஆயுள் குன்றி வருவதை அவை முன்னறிவிக்கின்றன. டாக்டர் ...

நாஸ்கா கோடுகள், தமிழர் விமானதளமா?

Posted: 22 Nov 2013 07:47 AM PST

பெர்முடா முக்கோணம், ராம் – சேது பாலம், போன்று உலகில் விடை கண்டறியப்படாத விசித்திரங்களுள் ஒன்றைத்தான். நாஸ்கா கோடுகள் என்று அழைக்கப்படும் வடிவங்கள் தென் அமெரிக்காவின் பெரு என்ற நகரின் அருகே மலைத் தொடரில் அமையப்பட்டுள்ளது. சாதாரணமாக தரையில் இருந்து பார்த்தால் எந்த ஒரு வித்தியாசமும் இல்லாத நிலப்பரப்பாக தென்படும் இந்த மலைத்தொடர் சற்று உயரப் பறந்து வானில் இருந்து பார்க்கும் போது அதிசயமான வரிகளையும், உருவங்களையும் கொண்டதாகத் தெரிகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3500 மீட்டர் உயரமுள்ள இந்த மலைத் ...

1945 ஆகஸ்டு 16 க்குப் பிறகு நேதாஜியின் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள்

Posted: 22 Nov 2013 07:27 AM PST

1945 ஆகஸ்டு 16 க்குப் பிறகு நேதாஜியின் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள் விமான விபத்துக்குப் பிறகு நேதாஜி ரஷ்யாவில் காவலில் சில ஆண்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. 1949-ல் ஜோசஃப் ஸ்டாலினும் வ்யாஸ் லால் மொலேடோவ்-ம் நேதாஜி ரஷ்யாவில் தங்கியிருப்பது குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. 1949-ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தான் நேதாஜியை ரஷ்யாவில் சந்தித்ததாகவும் அவருடன் சீனாவில் தங்கியதாகவும் கூறிப்பிட்டார். இவர் இவ்வாறு கூறிய பிற்பாடுதான் இந்தியாவில் நேதாஜியை பற்றிய மர்மம்த்தை அறிய மக்களிடம் ...

இன்று அமெரிக்க முன்னாள் அதிபர் கென்னடி இறந்த நாள்

Posted: 22 Nov 2013 07:23 AM PST

ஐம்பது ஆண்டுகளுக்கு ம்னுர் 22.11.1963 அப்பொழுதிய அமமெரிக்க அதிபர் ஜான் எப் கொன்னட சுட்டுக் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டார்.

காணொளி இங்கே.

http://www.youtube.com/watch?v=V-LA0ypFXig

கடலுக்குள் அட்லான்டிஸ

Posted: 22 Nov 2013 07:18 AM PST

அட்லான்டிஸ் என்ற மர்மத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் கிரேக்க அறிஞர் ப்ளாட்டோதான்(இவர் தத்துவ மேதை சாக்ரடிஸின் சீடர்).அட்லான்டிஸ் என்பது மிக முன்னேறிய ஒரு தீவு நாகரீகத்தைப் பற்றிய கர்ண பரம்பரைக் கதை. இதைப் பற்றி ப்ளாட்டோ தன்னுடைய " தைமியஸ் மற்றும் க்ரிடியஸ் " என்ற உரையாடல் தொகுப்புகளில் குறிப்பிட்டுள்ளார். அந்த உரையாடல்களில் வரும் கதாபாத்திரங்கள் , அட்லான்டிஸ் பற்றியும், அது (ப்ளாட்டோவின் காலத்துக்கு) 9000 ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் பூகம்பத்தினாலோ சுனாமியினாலோ அழிந்து விட்டது என்று குறிப்பிடுகின்றன.கதையில் ...

பட்டுப் புடவையும் பராமரிப்பு முறையும் :)

Posted: 22 Nov 2013 07:10 AM PST

பெண்கள் பட்டுப் புடவை எடுப்பதற்குள் கடை ஒரு வழி ஆகிவிடும் என்று பரவலாக கிண்டலடிப்பது உண்டு. பட்டுப் புடவை விலை அதிகம் கொடுப்பதால், அதை அவ்வளவு சிரத்தையுடம் எடுப்பார்கள். அது மட்டும் அல்ல, அதனை பராமரிப்பதற்கும் நிறைய வேலை இருக்கிறது. அதாவது, பீரோவில் திறந்த நிலையில் பட்டுப்புடவைகளை வைக்கக் கூடாது துணிப் பையில் போட்டு அதனை கவரில் வைத்து வைக்கலாம். நிறைய ஜரிகை உள்ள பட்டுப் புடவைகளை அடிக்கடி அதீத சூட்டில் அயர்ன் செய்யக்கூடாது. அப்படி செய்தால் ஜரிகைகள் சூடு தாங்காமல் கறுத்துப் போகும். ...

வேடந்தாங்கல் பறவைகள் சீசன் தொடங்கியது !

Posted: 22 Nov 2013 07:08 AM PST

மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கும் சீசன் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் பார்வைக்கு இச்சரணாலயம் வெள்ளிக்கிழமை முதல் (நவ. 22) திறந்துவிடப்படுகிறது. செங்கல்பட்டுக்கு தென்மேற்கில் செங்கல்பட்டு - உத்தரமேரூர் சாலையில் 25 கி.மீ. தொலைவில் உள்ளது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை இங்கு வெளிநாட்டுப் பறவைகள் தங்கி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வது வழக்கம். நீர் நிறைந்த பகுதிகளில் பறவைகள் தங்கி ஓய்வு எடுக்கின்றன. ...

நாஸ்கா கோடுகள் -புரியாத புதிர்

Posted: 22 Nov 2013 07:05 AM PST

இந்த பூமிப்பந்தானது பல்வேறு மர்மங்களையும் அதிசையங்களையும் தன்னகத்தே அடக்கியது. இம்மர்மங்களின் முடிச்சுகள் அவிழ்க்கப்படும் தருணம் அவை மானுட வாழ்வியலுக்கான புதியதொரு திறவுக்கொலாக அமைந்துள்ளது. பலகோடி நட்சத்திர மண்டலங்களையும் கிரகங்களையும் உள்ளடக்கிய இந்த அண்டத்தில் பூமி என்னும் இக்கோளில் மட்டுமே உயிர்கள் தோன்றியது முதல் அவ்வுயிர்கள் அண்டத்தை ஆளும் வேட்கை கொண்டு அலைவது வரை அனைத்துமே விந்தையானது. இதில் இன்றும் மானுட அறிவிற்கு சவால் விடும் அதிசயங்களையும் மர்மங்களையும் இயற்க்கை தன்னகத்தே கொண்டிருக்கிறது. ...

சமையலின் போது செய்யும் 5 மோசமான தவறுகள் !

Posted: 22 Nov 2013 06:50 AM PST

சமையலில் உப்பை அதிகமாக சேர்த்து விடுவதோ, காரத்தை அளவு தெரியாமல் போட்டுவிடுவதோ தவறு அல்ல. அது அப்போதைய சமையல் ருசியை மட்டுமே கெடுக்கும். ஆனால்.. அதையும் விட நமக்கு தவறு என்று தெரியாமல் வெறும் ருசிக்காகவும், அழகுக்காகவும் சில தவறுகளை செய்து விடுகிறோம். அதனால் நமது உடல் ஆரோக்கியமும் பாதிக்கிறது. 1. எந்த உணவு பொருளையும் கழுவாமல் பயன்படுத்தவே கூடாது. உதாரணத்துக்கு சிலர் புளியை தண்ணீர் ஊற்றி கரைப்பார்கள். ஆனால், அதையும் ஒரு முறை தண்ணீர் சேர்த்து அலசி கீழே ஊற்றிவிட்டு, அடுத்து நீர் ஊற்றி கரைத்துக் ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

Posted: 22 Nov 2013 06:39 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

லஞ்சம் கொடுத்த நகரங்களில் பெங்களூர் முதலிடத்திலும், சென்னை.......................

Posted: 22 Nov 2013 06:35 AM PST

சென்னை: அரசு அதிகாரிகளுக்கு அதிகம் லஞ்சம் கொடுத்த நகரங்களில் பெங்களூர் முதலிடத்திலும், சென்னை இரண்டாவது இடத்திலும் உள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த என்.ஜி.ஓ.வான ஜனகிரஹா ஊழலுக்கு எதிராக ஒரு இணையதளத்தை துவங்கியுள்ளது. www.ipaidabribe.com என்று பெயரிடப்பட்டுள்ள அந்த இணையதளத்தில் தங்களுக்கு வேலை நடக்க அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தவர்கள் அதன் விவரங்களை தெரிவித்து வருகின்றனர்.அந்த இணையதளத்தில் உள்ள லஞ்ச விவரங்களை வைத்து அதிகமாக லஞ்சம் கொடுத்த நகரங்களை பார்ப்போம். இதுவரை... நாடு ...

இன்கா தங்கம்-மர்மங்கள்

Posted: 22 Nov 2013 06:04 AM PST

ஆதிகாலத்திலிருந்தே மனிதனுக்கு தங்கம் என்ற உலோகத்தின் மீதிருந்த மோகம் அலாதியானதுதான்.அதுவும் ஸ்பானியர்களுக்கு வெறி என்றே சொல்லலாம். 16 ஆம் நூற்றாண்டுகளில் ஸ்பானியர்கள் தென்னமெரிக்க நாடுகளுக்குச் சென்றதும்,அங்குள்ள பழங்குடியினர் மீது தாக்குதல்கள் நடத்தி வெறியாட்டம் போட்டதும் நாடுகளைப் பிடிப்பதற்காக என்பதை விட, அங்கே அளவுக்கதிகமாகக் கொட்டிக்கிடப்பதாக நம்பிய தங்கத்திற்காகவும்தான்.அப்படி அவர்களால் ஆக்ரமிக்கப் பட்டதுதான் பெரு நாட்டின் இன்கா மக்களும் அதன் அரசும் .ஸ்பானியர்கள் சூறையாடியது போக மிகப் பெரும் ...

கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23

Posted: 22 Nov 2013 05:41 AM PST

பெரிய தொகை கட்டும்படி கடவுளிடம் பில் நீட்டப்பட்டது. ஆமாம். கடவுளின் பெரியப்பாவுக்கு உடல் நலம் சரியில்லை! விழுந்து விழுந்து கவனித்துதார் கடவுள்! நாற்பது ஆண்டுகள் 'வாயக் கட்டி வயித்தக் கட்டி சேர்த்து வைத்த பணம் எல்லாம் ஏழுநாள் மருத்துவச் செலவுக்கே போதவில்லை'. பக்கத்து வீட்டுக்காரரிடம் கடன் வாங்கும்படி பெரியப்பா கட்டளையிட்டார். கடவுள் பக்கத்து வீடு அக்கத்துவீடு என்று பலரிடமும் கடன் வாங்கி மருத்துவம் பார்த்தார். சரியாகிவிடும் சரியாகிவிடும் இந்தப் பணத்தைக் கட்டுங்கள் அந்தப் பணத்தைக் ...

போரடித்த வீட்டுவேலை... தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ‘ரோபோ’ !

Posted: 22 Nov 2013 05:36 AM PST

வியன்னா: மனமுடைந்த மனிதர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொள்வது வழக்கமான ஒன்று தான். ஆனால், ஆஸ்திரியாவில் உள்ள ரோபோ எனும் இயந்திர மனிதன் ஒருவன் மனமுடைந்து தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மனிதர்களைப் போல சிந்திக்கும் திறன் இல்லாவிட்டாலும், மனிதர்களை விட பன்மடங்கு வேலைகளைச் செய்ய வல்லமை பெற்றவை ரோபோக்கள். ஆனால், எஜமானர்களின் கொடுமையால் சராசரி மனிதர்களைப் போல இயந்திர மனிதனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உலக மக்களிடையே அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ...

விநாயகருக்காக மேற்கொள்ளப்படும் சஷ்டி விரதம்...

Posted: 22 Nov 2013 01:48 AM PST

தர்மருக்கு விஷ்னு சகஸ்ர நாமத்தை உபதேசித்தவர் - பீஷ்மர் - பகவத் கீதையின் பிற பெயர்கள் - ஹரி கீதை, வியாச கீதை - நம்பியாண்டார் நம்பி தொகுத்த திருமுறைகள் - 11 - பெரிய புராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் - திருத்தொண்டர் புராணம் - விநாயகருக்காக மேற்கொள்ளப்படும் சஷ்டி விரதம் -குமாரசஷ்டி விரதம் )பிள்ளையார் நோன்பு) - ஆலயம் என்பதன் பொருள் - ஆன்மா லயிக்கும் இடம் (உயிர் இறைவனை சேருமிடம்) - அரியத்தர் என்ற  சொல் குறிப்பது - சங்கரநாராயணர் - யதிராஜர் (துறவிகளின் அரசர்) என அழைக்கப்படுபவர் - ...

தைப்பூச விழா: மேல்மருவத்தூரில் இன்று முதல் விரைவு ரயில்கள் நின்று செல்லும்

Posted: 22 Nov 2013 01:48 AM PST

இருமுடி மற்றும் தைப்பூசவிழாவை முன்னிட்டு மேல்மருவத்தூரில் நவ.22 (வெள்ளிக்கிழமை) முதல் 2014 ஜனவரி 15 வரையில் 24 விரைவு ரயில்கள் தாற்காலிகமாக நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மேல்மருவத்தூரில் நிறுத்தப்படும் ரயில்கள்,நேரம் மற்றும் நின்று செல்லும் நாள்கள் விவரம்: 16177- சென்னை எழும்பூர்-திருச்சி(மலைக்கோட்டை),இரவு 11.58, நவ.22 முதல் 2004 ஜன.15 வரை. 16178- திருச்சி-சென்னை எழும்பூர், பிற்பகல் 3.10, நவ.21 முதல் ஜன.14 வரை. 12635-சென்னைஎழும்பூர்-மதுரை (வைகை), பிற்பகல் 2.45, ...

மதுரை - துபை நேரடி விமான சேவை இன்று துவக்கம்

Posted: 22 Nov 2013 01:47 AM PST

மதுரையில் இருந்து துபைக்கு நேரடி விமானம் இன்று முதல் இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 32 பேர் கொண்ட தூதுக்குழு பயணம் செய்கிறது. - சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் மதுரை - துபை முதல் விமானத்தில், தொழில் வர்த்தக சங்கத்தின் தூதுக் குழு 36 உறுப்பினர்களுடன் பயணம் செய்கிறது. கெய்ரோவில் எமிரேட்ஸ் நிறுவனத்துடன் சுற்றுலா வளர்ச்சி குறித்த கலந்துரையாடல் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுசீந்திரம் நாராயணி

Posted: 22 Nov 2013 01:47 AM PST

- தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்துள்ளது நாராயணி தேவியின் ஆலயம். 51 சக்தி பீடங்களில் 7வது பீடமாக விளங்கும் இது, அன்னையின் மேல் பற்கள் விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. குமரி என்றாலே அம்மாவட்டத்தின் தென்கோடியில் வீற்றிருக்கும் பராசக்தி கன்னியாகுமரி அன்னையின் தோற்றமே மனதில் சட்டென்று தோன்றும். இங்கே தேவியின் மேல் பற்கள் விழுந்த இடம் என்பதால் ப்ருகு பீடம் என்று அழைக்கப்படுகிறது. ப்ருகு எனும் இம்மகாசக்தி பீடத்தை சுசி பீடம் என்றும் கூறுவர். இங்கு அருள் பாலிக்கும் ...

பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்!

Posted: 22 Nov 2013 01:46 AM PST

- "விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனேவிண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணிற் படுமின் பணிந்து.!" - என்று ஒரு தமிழ்ப் பாடல் இருக்கிறது. இதன் அர்த்தம் என்னன்னா, நம்மளோட வினை எல்லாத்தையும், அதாவது நாம் செய்யற, செய்யப் போற பாவங்கள் எல்லாத்தையும் வேரோடு அறுத்து விடுவான் விநாயகன் என்று முதல் வரிக்கு அர்த்தம். 2வது வரிக்கு விநாயகன் நம்முடைய வேட்கை தணிவிப்பான் என்றால் நம்முடைய நியாயமான வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பான் என்று பொருள் கொள்ள ...

தெரிந்துகொள்ளுங்கள் - ஆன்மீகம்...

Posted: 22 Nov 2013 01:39 AM PST



குபேரனிடம் இருக்கும் நவநிதிகள்


1.பத்மம்,
2.மகாபத்மம்,
3.மகரம்,
4.கச்சயம்,
5.குமுதம்,
6.நந்தம்,
7.சங்கம்,
8.நீலம்,
9.பத்மினி

மங்கல்யான் செயற்கைக்கோள் அனுப்பிய முதல் படம் 'ஹெலன் புயல்' 1

Posted: 22 Nov 2013 01:37 AM PST

ஸ்ரீஹரிக்கோட்டா; செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து கடந்த 5ம் தேதி மங்கல்யான் செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் மங்கல்யான், தனது முதல் புகைப்படத்தை அனுப்பியுள்ளது. தற்போது ஆந்திர மாநிலத்தை அச்சுறுத்தி வரும் ஹெலன் புயலின் நிலையைதான் மங்கல்யான் தனது முதல் புகைப்படமாக அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. விண்ணில் ஏவப்பட்டுள்ள மங்கல்யான், முழுவதும் இந்தியாவின் உள்ளூர் ...

ஐஸ்க்ரீம் பார்லரில் பாலியல் தொழில் : கேரள அரசுக்கு நோட்டீஸ்

Posted: 22 Nov 2013 01:18 AM PST

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் ஐஸ்க்ரீம் பார்லரில் பாலியல் தொழில் நடந்தது குறித்து முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் தொடர்ந்த வழக்கில் கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. ஐஸ்க்ரீம் பார்லரில் பாலியல் தொழில் நடந்த சம்பவத்தில் கேரளாவில் உள்ள அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும்,  இதனை சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும் அச்சுதானந்தன் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. tinamani

'சே குவேரா' பெற்றோருக்கு எழுதிய கடிதம்...

Posted: 22 Nov 2013 12:57 AM PST

அன்பிற்குரியவர்களே! மீண்டும் என் கால்களுக்கடியில் "ரோசினாண்டேயின்" விலா எலும்புகளி உணர்கிறேன். கேடயத்தை கைகளில் ஏந்திக்கொண்டு பயணத்தை ஆரம்பிக்கிறேன். 10 வருடங்களுக்கு முன்பும் இதே போல விடைபெற்று ஒரு கடிதத்தை எழுதியிருந்தேன். அதில் நான் ஒரு சிறந்த படை வீரனாகவும், சிறந்த மருத்துவராகவும் இல்லாமல் இருந்ததற்காக வருத்தப்பட்டிருக்கிறேன். இன்று நான் அவ்வளவு மோசமான படை வீரன் அல்ல. மேலும் நம்பிக்கையுள்ளவனாக நான் இருப்பதைத் தவிர வேறு ஒரு மாற்றமும் இல்லை. என்னுடைய மார்க்சீயம் இன்னும் ஆழமானதாகவும், ...

ஐயோ இது உண்மையா?

Posted: 22 Nov 2013 12:33 AM PST

ஒரு அடர்ந்த காட்டின் வழியாக இருவர் நடந்து சென்று கொண்டிருந்தனர் இரவு ஒன்பது மணி அவர்கள் ஊருக்கு செல்லும் பாதை அது ,அவர்கள் ஊர் வரை செல்ல பேருந்து வசதி கிடையாது அவர்கள் இருவருமே ஐம்பது வயதை தாண்டியவர்கள் அவர்களின் பேச்சிலும் முதிர்ச்சி தெரிந்தது தாங்கள் கடந்து வந்த வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டிருந்தனர் அவர்கள் இருவரையும் ஒருவர் பின் தொடர்ந்து கொண்டுருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை,அப்பொழுது ஒரு ஏரிக்கரையின் மீது சென்றுகொண்டிருந்தார்கள் அந்த ஏரியில் எப்பொழுதுமே தண்ணிர் இருந்துகொண்டேயிருக்கும் ...

பஞ்ச தாண்டவ தலங்கள்

Posted: 22 Nov 2013 12:18 AM PST

- ஐம்பெரும் தாண்டவங்களைத்தான் பஞ்ச தாண்டவம் என்று அழைப்பர். - சைவக் கடவுளான சிவபெருமான் ஆடிய ஐந்து தாண்டவங்களை வகைப்படுத்துவதாகும். பரதநாட்டியக் கலையில் ஆணின் நடனம் தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது. - ஆனந்த தாண்டவம் - சிதம்பரம் அஜபா தாண்டவம் - திருவாரூர் சுந்தர தாண்டவம் - திருவாலவாய் ஊர்த்துவ தாண்டவம் - அவினாசி பிரம்ம தாண்டவம் - திருமுருகன் பூண்டி ஆகியவை பஞ்ச தாண்டவ தலங்கள் என்பர்.

கோபாலபுரத்தில் கருணாநிதியுடன் சோ திடீர் சந்திப்பு

Posted: 22 Nov 2013 12:15 AM PST

நேற்று காலை, 11:15 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை, சோ சந்தித்தார். இருவரின் சந்திப்பு, 15 நிமிடம் நீடித்தது. சந்திப்பின்போது சோ, தன் மகனின் திருமண அழைப்பிதழை க ருணாநிதியிடம் வழங்கினார். ""திருமண விழாவுக்கு கண்டிப்பாக வர வேண்டும்; மணமக்களை ஆசீர்வதிக்க வேண்டும்,'' என, சோ கூறியதும், கருணாநிதி, ""நான் கண்டிப்பாக வருவேன்,'' என்றார். பின், இருவரும் ஒருவருக்கொருவர் உடல் நலம் குறித்து விசாரித்துக் கொண்டனர். அப்படியே தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியுள்ளனர். ...

ஈகரையின் புதிய வசதிகள்!

Posted: 21 Nov 2013 11:46 PM PST

ஈகரையில் சிவா அண்ணா தினமும் உறவுகளின் வசதிக்காக புதிய புதிய வசதிகளை செயல்படுத்தி வருகிறார் .. அந்த வரிசையில் ஒருவரை எளிதாக நண்பராக இணைக்க கீழே காட்டப்பட்டுள்ள இடத்தில் கிளிக் செய்தால் போதும் . மேலும் பதிவு வரிசை எண்கள் அவதார் மேலே கொடுக்கப்பட்டுள்ளது..... சிவா அண்ணா சிவா அண்ணா

சிறந்த அந்த பத்து படங்கள்...

Posted: 21 Nov 2013 11:27 PM PST

டில்லியில் உள்ள இந்தியா இண்டர்நேஷனல் போட்டோகிராபி கவுன்சில் அமைப்பின் சார்பில், உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு ஏழாவது முறையாக அகில இந்திய அளவிலான புகைப்பட போட்டி நடத்தப்பட்டது. ஐஐபிசி சேர்மன் பங்கஜ் சர்மா புகைப்பட போட்டியின் தலைவராக செயல்பட்டார். இந்த போட்டியில் 13 மாநிலங்களில் இருந்து 60 ஆண், பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனுப்பிய படங்களில் இருந்து பத்து படங்கள் சிறந்த படங்களாக பல்வேறு கட்ட பரிசீலனைக்கு பிறகு தேர்வாகியது. இது போக 17 படங்கள் சான்றிதழ் பெற்றது, மேலும் 254 ...

ஈகரை வலை திரட்டி

Posted: 21 Nov 2013 10:49 PM PST

ஐயா,

1) ஈகரை வளைதிரட்டி உபயோகத்தில் இருக்கிறதா?

இல்லையென்றால் எப்பொழுது வேலை செய்யும்?

**********************************************************************

2) "ஈகரைக்கான தள/வலைபூ இணைப்பு பட்டை" இதன் பயன் யாது? எப்படி உபயோகப் படுத்துவது?

நன்றி.

அக்டோபர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...

Posted: 21 Nov 2013 10:12 PM PST

23-10-2013-ஆனந்த விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/hdzc2fxls88jka0/Anantha+Vikatan+23.10.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 28-10-2013-புதிய தலைமுறை கல்வி http://www.mediafire.com/download/hp5c2x4x7fsg7n6/PTK+28.10.13%28OrathanaduKarthik.blogspot.com%29.%282%29.pdf 27-10-2013-கல்கி இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/hajcy5rtqlygbg8/Kalki+27-10-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 21-10-2013-புதிய தலைமுறை கல்வி http://www.mediafire.com/download/edh6c5pcb89iza9/PTK+21.10.13%28OrathanaduKarthik.blogspot.com%29..pdf 14-10-2013-புதிய ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™