Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஏற்காடு தேர்தலில் தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் "நோ!': கருணாநிதி பாணியிலேயே பதிலடி தர வியூகம்

Posted:

சென்னை: ஏற்காடு இடைத்தேர்தலில், தி.மு.க.,வை ஆதரிக்க முடியாது' என, காங்கிரஸ் கைவிரித்து விட்ட தகவல் தெரிய வந்துள்ளது. "லோக்சபா தேர்தலில், எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை முடிவு செய்யாத நிலையில், தி.மு.க., பக்கம் சாய்வது சரியாக இருக்காது' என, தமிழக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்ட யோசனையை ஏற்று, காங்கிரஸ் மேலிடம், இந்த முடிவை எடுத்துள்ளது. தி.மு.க., பாணியிலேயே கூட்டணி வியூகத்தை காங்கிரஸ் வகுத்து வருவதால், கருணாநிதி அதிர்ச்சி அடைந்துள்ளார்.ஏற்காடு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல், டிச., 4ம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், கடந்த மாதம், 4ம் தேதி, ...

'சொத்து குவிப்பு வழக்கு' போர்டு வைப்பதை தடுத்தேன்: கருணாநிதி

Posted:

சென்னை: 'கோபாலபுரம் கொழுத்தது' என்ற போர்டுக்கு போட்டியாக, முதல்வர் ஜெயலலிதா வீட்டு வாசலில், 'சொத்துக் குவிப்பு வழக்கு' பற்றிய போர்டு வைக்க, முற்பட்டதை நான் தடுத்து நிறுத்தினேன்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: முதல்வர் ஜெயலலிதா, நான்கு திருமணங்களை ஒரே இடத்தில் நடத்தச் சொல்லி, அதில் பங்கேற்றிருக்கிறார். இதனால், போக்குவரத்து எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டது என்பது பற்றியும், ஜெயலலிதா வரும் வழியில் திருமண வீட்டார் சார்பில், அடுத்தடுத்து வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகளாலும் சாலைகளில் யாரும் செல்ல முடியாத ...

முதல்வரை சந்தித்த கோரிக்கை நிறைவேறவில்லை: தே.மு.தி.க., எம்.எல்.ஏ., சுந்தர்ராஜன் புலம்பல்

Posted:

மதுரை: ""முதல்வர் ஜெ.,வை எதற்காக சந்தித்து பேசினேனோ, அந்த விஷயம், அதிகாரிகளை கொஞ்சிப் பார்த்தும் நடக்கவில்லை; கெஞ்சிப் பார்த்தும் நடக்கவில்லை,'' என, அ.தி.மு.க., ஆதரவு தே.மு.தி.க., எம்.எல்.ஏ., சுந்தர்ராஜன், மதுரை மாநகராட்சி கூட்டத்தில், கவலையோடு தெரிவித்தார்.மதுரை மாநகராட்சி கூட்டம், மேயர் ராஜன்செல்லப்பா தலைமையில் நேற்று நடந்தது. தே.மு.தி.க., சார்பில் மதுரை மத்திய தொகுதியில் வெற்றி பெற்ற, அ.தி.மு.க., ஆதரவு எம்.எல்.ஏ., சுந்தர்ராஜன் பேசியதாவது: என் தொகுதியில் சில குறைகள் இருப்பதால், அதை தெரிவிக்க வந்துள்ளேன்; அதை, குற்றமாக கருதவேண்டாம். கால்வாய் பிரச்னைகள் குறித்து ...

கோபாலபுரத்தில் கருணாநிதியுடன் சோ திடீர் சந்திப்பு

Posted:

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது கோபாலபுரம் இல்லத்தில், 'துக்ளக்' பத்திரிகை ஆசிரியர் சோ நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு, 15 நிமிடம் நீடித்தது. நீண்ட நாட்களுக்கு பின், இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.முதல்வர் ஜெயலலிதாவை நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில், 'துக்ளக்' பத்திரிகை ஆசிரியர் சோ சந்தித்து, தன் மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார். நேற்று காலை, 11:15 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை, சோ சந்தித்தார். இருவரின் சந்திப்பு, 15 நிமிடம் நீடித்தது. சந்திப்பின்போது சோ, தன் மகனின் திருமண ...

டில்லி சட்டசபை தேர்தல்: ஒரு வாரம் முகாமிட விஜயகாந்த் முடிவு

Posted:

சென்னை: டில்லி சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மற்றும் அக்கட்சி முக்கிய நிர்வாகிகள் வரும், 27ம் தேதி டில்லி செல்ல திட்டமிட்டு உள்ளனர்.டில்லி சட்டசபை தேர்தலில், முதன் முறையாக போட்டியிடும், தமிழக கட்சி என்ற அந்தஸ்தை, தே.மு.தி.க., பெற்றுள்ளது. இத்தேர்தலில், 11 வேட்பாளர்களை தே.மு.தி.க., களமிறக்கியுள்ளது. வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன், தன் மனைவி பிரேமலதாவுடன் விஜயகாந்த் டில்லி சென்றார். தேர்தல் தொடர்பாக, டில்லி மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து, சென்னை திரும்பினார். ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிய, ...

காங்., செய்த பாவத்தில் தோன்றிய கட்சிகள்: உ.பி.,யில் மோடி ஆவேசம்

Posted:

ஆக்ரா: ஓட்டு வங்கி அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காங்கிரஸ் கட்சியின் பாவத்தில் தோன்றியவை தான், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள். அந்த கட்சிகளும், ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபடுகின்றன,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.'வெற்றி சங்கநாதம்': உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில், லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ., 'வெற்றி சங்கநாதம்' என்ற பெயரிலான தேர்தல் பிரசார கூட்டத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி நேற்று பேசினார். லட்சக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:நான் இங்கு வர சற்று தாமதமாகி ...

"சிட்டி' ஆவதால் அழியும் சிட்டுக்குருவி இனம்: வாழ்விடம் தரும் செயற்கை கூடுகள்

Posted:

கோவை: அழிந்து வரும் சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்கவும், நகரப் பகுதிகளுக்குள் அவற்றை வளர்க்கவும் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.உலக அளவில் வேகமாக அழிந்து வரும் பறவைகளின் பட்டியலில், சிட்டுக்குருவியும் இடம் பெற்றுள்ளது. காகங்களுக்கு அடுத்ததாக, நமக்கு அதிகம் பரிச்சயமான பறவையினமான சிட்டுக்குருவியின் எண்ணிக்கை, நகரமயமாதலால் வேகமாகக் குறைந்து வருகிறது. கிராமப்புற ஓட்டு வீடுகளிலும், வயல், கண்மாய், குளம், ஏரி கரையோர மரங்களிலும் சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவது வழக்கம். ஆனால், இப்போது ...

பணம், பரிசு பொருட்கள் வழங்க 'டோக்கன்' ரெடி?

Posted:

ஏற்காடு தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் வழங்குவதை தடுக்க, தேர்தல் கமிஷன் தீவிரமாக கண்காணித்து வருவதால், 'டோக்கன்' மூலம், இவற்றை வழங்க, அரசியல் கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.டிசம்பர், 4ல் நடக்கவுள்ள, ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்காக, ஆளும் கட்சியினருக்கு போட்டியாக, தி.மு.க.,வினரும், தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். லோக்சபா தேர்தல் நெருங்குவதால், தி.மு.க.,வும், இந்த தேர்தலில் தீவிரம் காட்டி வருகிறது. வெற்றி பெற முடியாவிட்டாலும், வெற்றி வித்தியாச ஓட்டுகளின் எண்ணிக்கையை குறைத்தே தீர வேண்டும் ...

மத்திய மின் நிலையங்கள் கைவிரிப்பால் தமிழகம் கவலை: உற்பத்தியும் குறைந்ததால் மின் வாரியம் தவிப்பு

Posted:

தமிழகத்தில், மின் உற்பத்தி குறைந்த நிலையில், மத்திய மின் நிலையங்களில் கிடைக்கும், மின்சாரத்தின் அளவும் குறைந்துள்ளதால், தமிழ்நாடு மின்சார வாரியம் தவித்து வருகிறது.3,600 மெகாவாட்: ஆந்திராவில், ராமகுண்டம் மற்றும் சிம்மாதிரியில், மத்திய அரசின், என்.டி.பி.சி., நிறுவனத்துக்கு சொந்தமாக, 3,600 மெகாவாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட, அனல்மின் நிலையம் உள்ளது. இந்த மின் நிலையங்களில் இருந்து, தமிழகத்திற்கு, 900 மெகாவாட்; ஒடிசாவில், 2,000 மெகாவாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட, தால்சர் அனல்மின் நிலையத்தில் இருந்து, 500 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ...

பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்த "தெஹல்கா' வார இதழ் ஆசிரியருக்கு சிக்கல்

Posted:

புதுடில்லி: புலனாய்வு வார பத்திரிகையான, "தெஹல்கா' ஆசிரியர், அருண் தேஜ்பால், பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படும் விவகாரம், பூதாகாரமாக உருவெடுத்துள்ளது . அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.பா.ஜ., தலைவராக, 2001ல், பங்காரு லட்சுமண் இருந்த போது, ரகசிய, "வீடியோ' நடவடிக்கையில், அவர் பணம் பெற்றதை, "தெஹல்கா டாட் காம்' என்ற, இணையதளம் அம்பலப்படுத்தியது. இதையடுத்து, அவரின் பதவி பறிக்கப்பட்டது. இது போல், பல விவகாரங்களில், இந்த ஊடகம், ரகசிய வீடியோ நடவடிக்கைகளை மேற்கொண்டு, பலரின் பதவிகளையும், அதிகாரங்களையும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™