Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பொதுநிகழ்ச்சியில் நடிகையிடம் காங்., மூத்த எம்.பி., அத்துமீறல்

Posted:

கொல்லம்: கேரளாவில் நடந்த படகு போட்டி நிகழ்ச்சியில், பிரபல மலையாள நடிகை, ஸ்வேதா மேனனை, கேரளாவின் மூத்த, காங்கிரஸ், எம்.பி., பீதாம்பர குருப், மானபங்கம் செய்ததாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தன் மீதான, நடிகையின் குற்றச்சாட்டை, எம்.பி., மறுத்தாலும், அந்த நிகழ்ச்சியின், "வீடியோ' காட்சிகளில், நடிகையை வேண்டுமென்றே பல முறை, எம்.பி., தொடுவது தெளிவாகத் தெரிகிறது.சூடான அரசியல் விவாதங்களுக்கும், பாலியல் பலாத்கார சர்ச்சைகளுக்கும் பெயர்பெற்ற கேரள அரசியலில், புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகையிடம், 73 வயது ...

படை பலத்துடன் அ.தி.மு.க., முகாம்: 10 மாவட்டங்களுடன் களமிறங்கும் தி.மு.க.,

Posted:

சேலம்: ஏற்காடு இடைத் தேர்தல் பணியை கவனிக்க, 32 அமைச்சர்கள் உட்பட, 52 பேர் அடங்கிய, "மெகா' தேர்தல் பணிக் குழுவை, ஆளும் அ.தி.மு.க., நியமித்துள்ளது.ஆளும் கட்சியில், மொத்தம், 52 மாவட்ட அமைப்புகள் உள்ளன. அதில், 31 மாவட்டங்களுக்கு, அமைச்சர்கள் தான் மாவட்ட செயலர். மீதி, 21 பேரில் பலர், எம்.பி., - எம்.எல்.ஏ., பதவி வகிக்கின்றனர். இவர்கள் அனைவரும், நவ., 4ம் தேதி முதல், ஏற்காட்டில் முகாமிடுகின்றனர். அவர்களுடன், அந்தந்த மாவட்ட நிர்வாகிகள், பிரமுகர்கள் என, பெரிய படையே திரண்டு வருகிறது. ஏற்காடு களை கட்டும்: நவ., 4 முதல் டிசம்பர், 4 வரை, ஆளும் கட்சியை சேர்ந்த பெரும் படை, அமைச்சர்கள் தலைமையில், ...

வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நிதி பெற தடை? பா.ஜ., - காங்., எதிர்ப்பு தெரிவிப்பதால் சிக்கல்

Posted:

புதுடில்லி: அரசியல் கட்சிளுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாகவோ அல்லது அந்த நிறுவனங்களின், இந்திய துணை நிறுவனங்கள் வழியாகவோ நன்கொடைகள் அளிப்பதற்கு தடை விதிக்கப்பட உள்ளது. ஆனால், இதற்கு, முக்கிய கட்சிகளான, பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால், வெளிநாட்டிலிருந்து இந்திய அரசியல் கட்சிகள் நன்கொடைகள் பெறுவதை தடை செய்ய முடியவில்லை.'அரசியல் கட்சிகளுக்கு வரும் நன்கொடை விபரத்தை, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், வெளிப்படையான தன்மை அவசியம் இருக்க வேண்டும்; அரசியல் கட்சிகளின் கணக்கு விவரங்களை, தணிக்கையாளர் ...

வெங்காய விதை வாங்க சிபாரிசு கடிதம் அவசியம்: திருச்சி அருகே வினோத "விளம்பர' போர்டு

Posted:

திருச்சி: "இந்திய அரசியலில் முக்கிய இடம் பிடித்து விட்ட வெங்காய விலையேற்றம், தற்போது வெங்காய விதை வாங்க சிபாரிசு கடிதம் கொண்டு வரவேண்டும்' என, தெரிவிக்கும் அளவுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.இன்றைக்கு இந்திய அரசியலையே புரட்டிப்போடும் அளவுக்கு, வெங்காய விலை உயர்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது. சின்னவெங்காயம், 200 ரூபாய்க்கு மேலும், பெரிய வெங்காயம், 100 ரூபாய்க்கு மேலும் விற்பனை செய்யப்பட்ட காலமும் உள்ளது. தற்போதும் கிட்டத்தட்ட அதே விலைக்கு தான் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. வெங்காய விலை உயர்வால், டில்லி மாநில அரசு ஒருமுறை கவிழ்ந்துள்ளது ...

மந்திரியுமில்லை; திட்டமும் இல்லை; வெட்டியாய் போன 15 தேர்தல்கள்

Posted:

கோவை: தொழில் முக்கியத்துவம் வாய்ந்த கோவை லோக்சபா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,யாருமே, இதுவரை மத்திய அமைச்சரவையில் இடம் பெறவில்லை என்பதால், அமைச்சராகும் "வாய்ஸ்' கொண்ட ஒரு வி.ஐ.பி., வேட்பாளரை வரும் தேர்தலில் தொழில் அமைப்பினரும், பொது மக்களும் எதிர்பார்க்கின்றனர்.சென்னைக்கு அடுத்ததாக தொழில் வளமும், பொருளாதார வளர்ச்சியும் கொண்ட நகரம் கோவை. இந்நகரின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல, சர்வதேச விமான நிலையம், கூடுதல் ரயில் வசதிகள், பாலங்கள், புறவழிச்சாலைகள் போன்ற கட்டமைப்பு வசதிகளை இங்குள்ள தொழில் முனைவோர் ...

உரத்த சிந்தனை: காமன்வெல்த்: நீதிக்காக நிராகரிப்போம் -எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி-

Posted:

'காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளக் கூடாது' என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது. இதனால் என்ன தான் நடந்துவிடும்.கடந்த, 2008ல் இருந்தே, இலங்கையில் இறுதி போர் துவங்கி விட்டது. தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். உலக நாடுகள் ஊமையாகவே இருந்தன.ஐ.நா.,வின் உலக உணவு ஸ்தாபனம், இலங்கை போர் பகுதியில், 4.2 லட்சம் தமிழ் மக்கள் உள்ளதாக செப்டம்பர், 2008ல் கூறியது. ஆனால், இலங்கை அரசோ, போர் பகுதியில் ஒரு லட்சம் பேர் மட்டும் உள்ளதாக கூறியது.எனவே, 4.2 லட்சம் மக்களுக்கு பதிலாக, சரியாக ஒரு லட்சம் மக்களுக்கு மட்டுமே உணவு எடுத்துச் செல்ல, ...

கருணாநிதியை சமரசம் செய்யும் காங்கிரஸ் முயற்சி பலிக்கவில்லை: மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற தி.மு.க., திட்டம்!

Posted:

சென்னை:இலங்கையில் நடைபெறும், காமன்வெல்த் அமைப்பின் தலைவர்கள் மாநாட்டில், இந்தியா பங்கேற்றால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என, மத்திய அரசுக்கு, தி.மு.க., தலைவர், கருணாநிதி விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அவரை சமாதானப்படுத்த, மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் மூலம், பிரதமர் எடுத்த முயற்சி பலிக்கவில்லை; தோல்வியில் முடிந்தது."தமிழகத்தின் எதிர்ப்பை மீறி, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், மத்திய அரசுக்கு, வெளியலிருந்து அளித்து வரும் ஆதரவையும் வாபஸ் பெறவேண்டியிருக்கும்' என, சிதம்பரத்திடம் கருணாநிதி தெரிவித்துள்ளதாக, அக்கட்சி ...

திக்... திக்... பயணம்!

Posted:

அடுத்தடுத்து நிகழும், ஆம்னி பஸ் விபத்துக்கள், காண்போர் நெஞ்சை பதறவைக்கின்றன; கோர விபத்துகளில்,உயிர்கள் கொத்து, கொத்தாக, பலியாவது தொடர்கதையான பிறகும், அரசு, ஆம்னி பஸ் உரிமையாளர்கள், என யாரும் பாடம் கற்றுக்கொள்ளாத நிலைதான் தொடர்கிறது, என, பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில், கடந்த 2011ம் ஆண்டு, வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் நடந்த, ஆம்னி பஸ் விபத்தில், பஸ் தீப்பிடித்து எரிந்ததில், 23 பேர் உயிரிழந்தனர். விபத்துநேரத்தில், வெளியேற முடியாமல் பயணிகள் தீயில் கருகி இறந்தனர்; பெரும்பாலானவர்கள் தீக்காயங்களுடன் தப்பினர். தற்போது ஐதராபாத் ...

குமரியில் விவேகானந்தர்-திருவள்ளுவர் பாறைகளை இணைத்து பாலம் அமைக்கப்படுமா:

Posted:

கன்னியாகுமரி:கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு படகுசேவை பெரும்பாலான நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதால் சுற்றுலாபயணிகள் திருவள்ளுவர் சிலையை காணமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை நீடிக்கிறது. இதனால் இரு பாறைகளையும் இணைத்து பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் வான்மறை புலவர் வள்ளுவருக்கு சிலை அமைக்க எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு, தி.மு.க., ஆட்சியில் 2000-ம் ஆண்டின் முதல்நாளன்று அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது. கடல் ...

ஆந்திராவில் ரயில் விபத்து: பயணிகள் 10 பேர் பரிதாப பலி

Posted:

விஜயநகரம்: ஆந்திர மாநிலம் விஜயநகரம் அருகே, ரயில் மோதிய விபத்தில், பயணிகள் பத்து பேர் பலியாகினர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.கேரளாவின் ஆலப்புழா நகரில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு, பொகாரோ எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், நேற்றிரவு 7.00 மணிக்கு, ஆந்திர மாநிலம் விஜயநகரம் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது, ஆலப்புழா- தன்பாத் ரயிலில் தீப்பற்றியுள்ளதாகவும், பெட்டிகள் எரிந்து விடும் என்றும் கிளம்பிய வதந்தியை நம்பிய பயணிகள் சிலர், அபாயச்சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். உடனே பலர் ரயிலில் இருந்து கீழே குதித்தனர். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™