Daily Thanthi |
- காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை கருணாநிதியை சந்தித்த பிறகு ப.சிதம்பரம் பேட்டி
- பாட்னா குண்டுவெடிப்பில் பலியானோர் குடும்பத்தினருக்கு நரேந்திர மோடி நேரில் ஆறுதல் தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார்
- நடிகர் ஷாருக்கான் 48-வது பிறந்தநாளை கொண்டாடினார் திரையுலக பிரமுகர்கள் வாழ்த்து
- ஆஸ்திரேலியா -இந்தியா கடைசி ஒரு நாள் போட்டி: 57 ரன்கள் வித்யாசத்தில் இந்தியா வெற்றி
- ஆந்திரா மாநிலம் விஜயநகரத்தில் பயணிகள் மீது ரெயில் மோதியதில் 8 பேர் பலி; 8 பேர் படுகாயம்
- ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் ரெயில் மோதியதில் 8 பேர் பலி
- தமிழகம், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் ஆளும் கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெறும்: அகிலேஷ் யாதவ்
- இந்தியா - ஆஸ்திரேலியா
- அகமதாபாத்தில் தீபாவளி
- இந்திய பாதுகாப்பு படை வீரர்கள்
| Posted: 02 Nov 2013 11:45 AM PDT சென்னை, காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார். கருணாநிதியுடன் சந்திப்பு தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் பொன்முடி உடன் இருந்தார். முடிவு எடுக்கவில்லை |
| Posted: 02 Nov 2013 11:12 AM PDT பாட்னா, பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பீகார் சென்றார் அப்போது பொதுக் கூட்டம் நடைபெற்ற காந்தி மைதானத்தில் பயங்கர குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் பலியானார்கள். 83 பேர் காயம் அடைந்தார்கள். பலியானோரின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க நரேந்திர மோடி திட்டமிட்டார். |
| நடிகர் ஷாருக்கான் 48-வது பிறந்தநாளை கொண்டாடினார் திரையுலக பிரமுகர்கள் வாழ்த்து Posted: 02 Nov 2013 10:55 AM PDT மும்பை, இந்தி நடிகர் ஷாருக்கான் தனது 48-வது பிறந்த நாளை நேற்று கேக் வெட்டி கொண்டாடினார். ஏராளமான திரையுலக பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஷாருக்கான் |
| ஆஸ்திரேலியா -இந்தியா கடைசி ஒரு நாள் போட்டி: 57 ரன்கள் வித்யாசத்தில் இந்தியா வெற்றி Posted: 02 Nov 2013 09:40 AM PDT பெங்களூர், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 57 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் புனே, மொகாலியில் நடந்த முதலாவது 3–வது ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும், ஜெய்ப்பூர், நாக்பூரில் நடந்த 2–வது மற்றும் 6–வது ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றன. 4–வது, 5–வது ஒரு நாள் போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. இதையடுத்து இந்த தொடர் 2–2 என்ற கணக்கில் சமனில் இருக்கிறது. |
| ஆந்திரா மாநிலம் விஜயநகரத்தில் பயணிகள் மீது ரெயில் மோதியதில் 8 பேர் பலி; 8 பேர் படுகாயம் Posted: 02 Nov 2013 09:22 AM PDT விஜயநகரம், ஆந்திர பிரதேசத்தில் பயணிகள் மீது ரெயில் மோதியதில் 8 பேர் பலியாகியுள்ளனர். |
| ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் ரெயில் மோதியதில் 8 பேர் பலி Posted: 02 Nov 2013 08:38 AM PDT விஜயநகரம், ஆந்திரபிரதேச மாநிலம் விஜயநகரம் போபில்லி ரெயில் நிலையத்தில் பயணிகள் ரெயில் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெயில்வே தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்த போது அவர்கள் மீது ரெயில் மோதியதாக கூறப்படுகிறது. |
| Posted: 02 Nov 2013 08:18 AM PDT சாப்ரா(பீகார்), 2014ம் ஆண்டு நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மூன்றாவது அணியை அமைக்க சமாஜ்வாடி கட்சி முயற்சி செய்து வருகிறது. பீகார் மாநிலம் சாப்ராவில் பேசிய உத்தரபிரதேச மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா தவிர உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், தமிழ் நாடு மறும் ஒடிசாவில் ஆளும் கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெறும். இது மூன்றாவது அணி அமைப்பதற்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்று அகிலேஷ் கூறியுள்ளார். |
| Posted: 02 Nov 2013 07:50 AM PDT பெங்களூரில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் பெய்லியின் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள். |
| Posted: 02 Nov 2013 07:37 AM PDT குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தீபாவளி கொண்டாடிய ஒரு குடும்பத்தினர் வீட்டில் விளக்கேற்றி வைத்திருந்த காட்சி. |
| இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் Posted: 02 Nov 2013 06:48 AM PDT மேற்குவங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூரில் எல்லையில் தீபாவளி கொண்டாடிய இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் வங்காளதேச வீரர்களுக்கு இனிப்பு வழங்கிய காட்சி. |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |