Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


வங்க கடலில் கடும் சூறாவளியுடன் புயல் சின்னம் நெருங்கியது: நாகை - சென்னை இடையே இன்று மாலை தாக்கும்

Posted:

சென்னை: 'வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமான புயல் சின்னம், தீவிரம் அடைந்து, இன்று மாலை, நாகை - சென்னை இடையே, கரையை கடப்பதால், வட தமிழகத்தின், கடலோரப் பகுதிகளில், கனமழை பெய்யும்; தரைக்காற்று பலமாக வீசக் கூடும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை, தீவிரமடைந்து உள்ளதை காட்டும் வகையில், லட்சத்தீவு அருகில், நிலை கொண்டு உள்ள, காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகத்தின், சில பகுதி களில், தொடர் மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், அந்த மான் அருகில், சில தினங்களுக்கு முன், காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த ...

தமிழக காங்கிரசுக்கு 18ம் தேதி நாள் குறிப்பு

Posted:

தமிழக காங்கிரஸ் நிலவரம் குறித்து, நாளை மறுநாள் 18ம் தேதி, டில்லியில் மிக முக்கிய ஆலோசனை கூட்டத்தை, ராகுல் நடத்துகிறார்.அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக, ராகுல் பதவி ஏற்ற பின், ஒவ்வொரு மாநில நிர்வாகிகளையும், வரிசையாக அழைத்துப் பேசியவண்ணம் உள்ளார். அந்த வகையில், கடைசியாக, கடந்த ஜூலை மாதத்தில், தமிழக காங்கிரசின் நிர்வாக ஆலோனைக் கூட்டம், ராகுல் தலைமையில் நடந்தது. அதன்பின், நான்கு மாதங்கள் கழித்து, இப்போது, மீண்டும் தமிழக காங்கிரசை, ராகுல் தன் கையில் எடுத்துள்ளார். நாளை மறுநாள் 18ம் தேதி, டில்லியில், தமிழக காங்கிரசின், ஆலோசனை கூட்டம் ...

அமைச்சர் குர்ஷித் குரல் கொடுப்பாரா: கருணாநிதி கேள்வி

Posted:

சென்னை: 'இலங்கை ராணுவத்தினர் நடத்திய பாலியல் கொடுமைகள் குறித்து, காமன்வெல்த் மாநாட்டில், குரல் கொடுக்க, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் முன் வருவாரா?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: "இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை, இந்தியா மற்றும் அனைத்து உறுப்பு நாடுகளும் புறக்கணிக்க வேண்டும். இதன் மூலம், சிறுபான்மை இனமாக வாழும் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட மனிதத் தன்மையற்ற செயல்களுக்கும் நீதி கிடைக்கும்' என, தென்னாப்ரிக்காவில் அமைதியை போதிப்பவரும், நோபல் பரிசு பெற்றவருமான, ஆர்ச் பிஷப் ...

தண்டனை தரும் அமைப்பாக காமன்வெல்த்தை மாற்றி விடக்கூடாது: இலங்கை அதிபர் ராஜபக்ஷே பேச்சு

Posted:

கொழும்பு: காமன்வெல்த் அமைப்பை, தண்டனை தரும் அமைப்பாக மாற்றி விடக்கூடாது,'' என, இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.காமன்வெல்த் அமைப்பில், 53 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின், 22வது மாநாடு, இலங்கை தலைநகர், கொழும்பில் நேற்று துவங்கியது. வழக்கமாக, இந்த மாநாட்டை, பிரிட்டிஷ் அரசி, இரண்டாவது எலிசபெத் துவக்கி வைப்பார். வயோதிகத்தின் காரணமாக, அவர் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை; அவருக்கு பதிலாக, இந்த மாநாட்டை, பிரிட்டிஷ் இளவரசர், சார்லஸ் துவக்கி வைத்தார். இந்த மாநாட்டில் துவக்க உரையாற்றிய, அதிபர் ராஜபக்ஷே பேசியதாவது: இலங்கையில், 30 ஆண்டுகளாக ...

கணினி மூலம் சேவைகள் பெறுவதில் தமிழகம் 13வது இடம்: குஜராத் முதலிடம்

Posted:

தேசிய அளவில், அரசு சேவைகளை, கணினி மூலம் பெறும் மாநிலங்களில், தொடர்ந்து, குஜராத் முதல் இடத்தை பிடித்து வருகிறது. கடந்த மாதம், ஒன்பதாவது இடத்தில் இருந்த தமிழகம், இம்மாதம், மேலும் பின்தங்கி, 13வது இடத்தை பிடித்துள்ளதாக, மத்திய அரசின், இ - தால் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது.மின்னணு சேவை: தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக, மக்கள் இருந்த இடத்தில் இருந்தே, அரசின் பல்வேறு சேவைகளை பெற முடியும். இந்த வசதிக்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்து உள்ளன. இதன் மூலம், சம்பந்தப்பட்ட அலுவலக வாயில்களில் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய அவசியம் ...

மாநிலங்கள் பலவற்றில் 1 கிலோ உப்பு விலை ரூ.200: கிடைக்காது என வதந்தி பரவியதால் தட்டுப்பாடு

Posted:

பாட்னா: ஒடிசாவைத் தொடர்ந்து, பீகாரிலும் உப்புக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், சாதாரணமாக, 1 கிலோ உப்பு, 15 ரூபாய்க்கு விற்றது போய், 200 ரூபாய்க்கு விற்ற அவலம், அம்மாநிலத்தின் பல மாவட்டங்களில் நிகழ்ந்துள்ளது.வெங்காயம் தட்டுப்பாடு: நாட்டின் அனைத்து மாநிலங்களில், கடந்த சில வாரங்களுக்கு முன், வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. சாதாரணமாக, 1 கிலோ, 20 - 30 ரூபாய் விற்கப்படும் வெங்காயம், 100 ரூபாயை தாண்டி விற்றது. கடந்த சில நாட்களாகத்தான், அதன் விலை குறைந்து, இயல்பு நிலைக்கு வந்துள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க, வட மாநிலங்கள் மற்றும் சில ...

நக்சல் தீவிரவாதத்தை வளர்த்தது காங்.,: மோடி ஆவேச பேச்சு

Posted:

ராய்கார்: ''சத்தீஸ்கரில், நக்சல் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த, ரமண் சிங் அரசு தவறிவிட்டதாக, காங்கிரஸ் தலைவர், சோனியா குற்றம் சாட்டி உள்ளார். நேபாளம் முதல் திருப்பதி வரை, நக்சல்களை வளர்த்து விட்டதே காங்கிரஸ் கட்சி தான்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார். பாரதிய ஜனதாவைச் சேர்ந்த முதல்வர், ரமண் சிங் தலைமையிலான, சத்தீஸ்கர் மாநிலத்தில், முதற்கட்ட சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது.பகிரங்க சாடல்: 19ம் தேதி நடக்கவிருக்கும் இரண்டாம் கட்ட தேர்தலின் பிரசாரத்திற்காக, நேற்று முன்தினம், பிமெத்ரா என்ற இடத்தில் நடந்த, ...

பகல் கனவு காணும் பா.ஜ., - சோனியா பகிரங்க தாக்கு

Posted:

கார்கோன்: ''மத்தியில் எப்படியும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என, பா.ஜ., தலைவர்கள் பகல் கனவு கண்டு வருகின்றனர். அதற்காக, அவர்களுக்குள் குடுமிப்பிடி சண்டை நடக்கிறது; ஒருவரை ஒருவர் வசைபாடுகின்றனர்,'' என, காங்., தலைவர், சோனியா பேசினார்.இரண்டு முறை வெற்றி: பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, ம.பி., மாநிலத்தின், 25ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, பா.ஜ.,வும், அதை எப்படியும் தடுத்தே தீருவது என, காங்.,சும் முடிவு செய்துள்ளதால், இந்த மாநிலத்தில் ...

கருத்து கணிப்புக்கு தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையம் பரிந்துரை

Posted:

புதுடில்லி: தேர்தல் கருத்து கணிப்புகளுக்கு தடை விதிப்பதற்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதையடுத்து, கருத்துக்கணிப்புக்கு தடை விதிக்கக் கோரி, மத்திய அரசுக்கு, தலைமை தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.பா.ஜ.,எதிர்ப்பு: தேர்தல் கருத்து கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், தேர்தல் கருத்து கணிப்புகளுக்கு தடை விதிக்க, பா.ஜ.,எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையை மத்திய அரசு கோரியிருந்தது. தேர்தல் ஆணையமும், அரசியல் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™