Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பாகிஸ்தான்: ஷியா - சன்னி கலவரத்தில் மாணவர்கள் உயிருடன் எரிப்பு - 10 பேர் படுகொலை

Posted: 15 Nov 2013 01:16 PM PST

முஹர்ரம் நாளையொட்டி பாகிஸ்தானில் இன்று பல இடங்களில் நினைவு ஊர்வலங்கள் நடைபெற்றன. ராவல்பிண்டி அருகே உள்ள காரிசன் நகரில் சன்னி பிரிவினர் ஊர்வலமாக சென்றனர். ராஜா பஜார் பகுதியில் உள்ள ஷியா அரபு பாடசாலை (மதரசா) அருகே அவர்கள் வந்த போது பாடசாலையில் இருந்த சிலர் சன்னி மக்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். ஊர்வலத்தில் வந்தவர்கள் ஆவேசத்துடன் மதரசாவுக்குள் நுழைந்து கண்ணில் பட்டவர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தினர். மதரசா மாணவர்கள் சிலரை உயிருடன் தீ வைத்து எரித்தனர். இந்த தாக்குதலில் ...

சவூதி அரேபிய வானில் பறந்த ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறந்ததால் பயணிகள் அச்சம்

Posted: 15 Nov 2013 01:11 PM PST

ஏர் இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 747 ஜம்போ ஏஐ 964 என்ற விமானம், இன்று காலை சவூதி அரேபியா ஜெட்டா நகரிலிருந்து புறப்பட்டு மும்பைக்கு வந்து கொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களில் சுமார் 400 பயணிகளுடன் நடுவானில் பறந்துகொண்டிருந்த அந்த விமானத்தின் விமானி அறையின் ஒரு கதவு சரியாக மூடப்படாதது குறித்து விமானி அறையின் கருவி எச்சரித்தது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் ஜெட்டா நகர விமானநிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த பயணிகள் அனைவரும் பயத்தில் உறைந்தனர். ஜெட்டா விமான ...

The Fall 2006- வீழ்ச்சி -இயக்குநர் - தர்சேம் சிங்

Posted: 15 Nov 2013 09:49 AM PST

விபத்தாகிப் போன ஒரு சினிமா காட்சியை நாம் திரையில் பார்க்கிறோம். பீத்தோவனின் ஏழாவது சிம்பொனி பின்னணியில் ஒலிக்கிறது. (பீத்தோவன் மறைந்து 186 வருடங்களானாலும் அவரது இசை இன்னும் பரவலாக உபயோகிக்கப்படுகிறது. சமீபத்தில் தமிழில் வெளியான நேரம் திரைப்படத்தில் கூட பீத்தோவனின் Fur Elise சில காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருந்தது). லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் விபத்தில் கால்கள் பாதிக்கப்பட்ட ஒரு சினிமா ஸ்டன்ட் கலைஞன் சிகிச்சை பெற்று வருகிறான். ஆரஞ்சு பறிக்கப் போய் கீழே விழுந்து கையில் ...

நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Posted: 15 Nov 2013 09:03 AM PST

உங்களை தமிழகத்தின் முதல்வராக ஆக்கினால் என்ன செய்வீர்கள்..?

உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்..


என்னுடைய கருத்துகள் நாளை பதிவு செய்கிறேன் :

இது ஒரு பொது விவாதம் ,

ஈழத்தின் அவலம் - ஆன்மிகப்பின்னணி !!

Posted: 15 Nov 2013 09:00 AM PST

ஈழம் தொடர்பாக எனக்கும் நோவுகள் உண்டு ! பல நாட்கள் பிரார்தித்திருக்கிறேன் பிரார்தித்தும் வருகிறேன் ஆனாலும் இப்பிரச்சினையின் அடிப்படை ஒன்று உண்டு ! அது ஈழமே முதல் மனிதனின் பூமி ! எனவே ஒட்டுமொத்த மனித இனத்தின் பாவங்கள் அதனை பிடித்து வாட்டுகிறது முதல் மனிதனான ஆதாம் தேவர்களை விட உயர்ந்தவனாக கடவுளால் தேவலோகத்தில் படைக்கப்பட்டு தேவர்கள் அனைவரும் அவருக்கு பணிவிடை செய்யும்படியாக கடவுளால் பணிக்கப்பட்டார் ! அதனை ஏற்றுக்கொள்ள மனமில்லாத தேவர்களில் சிலர் ஆதாமின் நிமித்தமாகவே கடவுளை எதிர்த்து அசுரர்களாக ...

என் உறவுகளின் வாழ்த்துக்காக பகிர்கிறேன்.

Posted: 15 Nov 2013 08:58 AM PST



காமராஜன் கிராமிய நல அறக்கட்டளை கல்வி சாதனையாளர் என்னும் விருதினை வழங்கியுள்ளது. இதனை என் ஈகரை உறவுகளுடன் பகிர்ந்து கொள்வதை விட வேறு என்ன மகிழ்வு? என் முன்னேற்றத்தில் மகிழும் உறவுகளுக்காக இதனை இங்கு பகிர்கிறேன்.

'பராசக்தி' தொடருகிறாள்...

Posted: 15 Nov 2013 08:48 AM PST

''பராசக்தி' தொடருகிறாள்... தொடர் 1 பாகம் 2 பராசக்தியைப் பற்றி சில தகவல்கள். 1. பராசக்தி படத்தில்தான் முதன் முதலாக டைட்டிலின் போது பின்னால் பாடல் ஒலிக்கும் முறை அறிமுகப்படுத்தப் பட்டது. 2. சிவாஜி ஒல்லியாக இருந்ததினால் நேஷனல் பிக்சர்ஸ் கம்பெனி மேக்கப் மேனிடம் நிர்வாகத்தால் பணம் வழங்கப்பட்டு சிவாஜிக்கு 'தயார்த் தீனி' அளிக்கப்பட்டது. அதாவது இறைச்சி வகைகள், முட்டை, மீன் இதர மாமிச வகைகள் சிவாஜிக்கு ஒரு கிராமத்தில் இரண்டுமாத காலம் கொடுக்கப்பட்டு அவருடைய உடம்பு கதாநாயகனுக்குத் தக்கபடி ...

கந்தர் அலங்காரம் - சில முத்துகள் !

Posted: 15 Nov 2013 08:45 AM PST

அருணகிரிநாதர் முருகனால் ஆட்கொள்ளப்பட்டு அருள் நிலையில் பாடியவர் ! அவரால் அருளப்பட்ட `` கந்தர் அலங்காரம் `` பக்தியும் ஞானமும் பொதிந்த பொக்கிஷமாகும் ! 100 கவிகள் உள்ளன ! இருந்தாலும் இசை வடிவில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களால் கொடுக்கப்பட்ட சில பாடல்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளேன் ! இவை தொடர்பான ஞான விளக்கங்கள் ஆழ்ந்து ஆழ்ந்து உணரப்படவேண்டியவை ! நான் உணர்ந்தவைகளை எழுதுவேன் ! அவை பலருக்கு ஒருவேளை கடினமானவையாக இருக்ககூடும் ! எனவே அவர்களும் ஒருவேளை பயன்பெறக்கூடும் என்பதால் இப்படல்களை ...

பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்.

Posted: 15 Nov 2013 08:34 AM PST

பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள். பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும் சொல்லலாம். அது போன்ற போருட்களின் பட்டியலை பார்க்கலாம். வெங்காயம் வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த ...

என் மகளின் காதணி விழா

Posted: 15 Nov 2013 08:24 AM PST




வணக்கம்

Posted: 15 Nov 2013 06:51 AM PST

அன்பு நண்பர்களே, தங்களையெல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ஈகரையின் நீண்ட கால வாசகன். இன்று முதல் அங்கத்தினன். ராகவேந்திரன் என் பெயர். அன்பு நண்பர் நெய்வேலி வாசுதேவன் அவர்களைப் போல் நானும் ஒரு சிவாஜி ரசிகன். சென்னை வாசி. தமிழ்ப் படப் பாடல்களைப் பெரிதும் விரும்புபவன். அடியேனின் மற்றோர் உற்ற நண்பர் பெங்களூரு வினோத் அவர்கள். தொடரும் பதிவுகளில் நடிகர் திலகத்தைப் பற்றியும், தமிழ்த்திரைப்படப் பாடல்கள் - குறிப்பாக பழைய திரைப்படப் பாடல்கள் .. அதிலும் மெல்லிசை மன்னரின் இசைக்கும் ரசிகனாகிய ...

9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா !

Posted: 15 Nov 2013 05:58 AM PST

9 ஆண்டுகளுக்குப் பிறகு ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பல் இந்திய கடற்படையுடன் சேர்க்கப்படுகிறது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பல் இந்திய கடற்படையுடன் சனிக்கிழமை சேர்க்கப்பட உள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டு, 974 மில்லியன் டாலர் செலவில் ரஷ்யாவிடம் இருந்து இந்த போர்க்கப்பலை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. ஆனால் போர்க்கப்பலை இந்தியாவுக்கு வழங்குவதில் ரஷ்யா தொடர்ந்து இழுபறி செய்து வந்தது. இழுபறி ஏன்? கப்பல் கட்டும் பணியும் தாமதமாகவே நடந்து வந்தது. இதனால் கப்பல் ...

கண்ணீர் வலி .......

Posted: 15 Nov 2013 05:56 AM PST

ஒரு வேளை உணவுக்கு ஏங்கி கிடக்கிறது பல உயிர்கள் பஞ்சத்தின் பிடியில் கோர தாண்டவம் ஆடுகிறது சாலை ஓரங்களில் எங்கள் வாழ்க்கை சரிந்து கிடக்கிறது இங்கே கொக்கரித்து மார்தட்டி கொண்டாடுகிறது ஒரு கூட்டம் உலகின் பணக்கார நாடுகளில் எங்கள் நாடும் --ஆம் எங்கள் வாழ்க்கையில் உறிந்து குடித்த நச்சுக்கள் அல்லவா நீங்கள் நாங்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீரும் உங்களின் ஒவ்வொருவரின் வம்சமும் அழியுமடா ................

பீகாரில் ஒரு கிலோ உப்பு ரூ. 150க்கு விற்பனை !

Posted: 15 Nov 2013 04:15 AM PST

பாட்னா, நவ. 15– பீகார் மாநிலம் முழுவதும் நேற்று உப்பு தொடர்பாக திடீரென ஒரு வதந்தி பரவியது. உப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. இனி ஒரு மாதத்துக்கு உப்பே கிடைக்காது'' என்று மக்களிடையே யாரோ வதந்தியை ஏற்படுத்தி விட்டனர். அந்த வதந்தியை உண்மையென நம்பிய மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளுக்கு படையெடுத்தனர். போட்டி போட்டுக் கொண்டு அதிகமான உப்பை வாங்கினார்கள். உப்புக்கு திடீரென கிராக்கி ஏற்பட்டு விட்டதை உணர்ந்த வியாபாரிகள் உடனே விலையை உயர்த்தி விட்டனர். பெரும்பாலான வியாபாரிகள் ஒரு கிலோ ...

வெங்காயத்தின் மகிமை :)

Posted: 15 Nov 2013 02:51 AM PST

வெங்காயத்தின் காரத் தன்மைக்குக் காரணம் அதில் உள்ள "அலைல் புரோப்பைல் டை சல்பைடு" என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. முருங்கைக்காயை விட அதிக பாலுணர்வு தரக்கூடியது. தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும், வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார். வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். ...

ஒளி விளக்கு'...

Posted: 15 Nov 2013 02:05 AM PST

என் வாழ்க்கையின் முதல் வெளிச்சத்தை... 1969 இல்... 'ராஜா' தியேட்டர் இருட்டில் கண்டு பிடித்தேன்!' 'ஒளி விளக்கு'... நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படம் ! ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தடுமாற்றம் என்று இருந்த என்னை... நம்பிக்கை என்னும் தடம் மாற்றி... வாழ்க்கையின் முதல் பிடிப்பைத் தந்தவர்... நீங்கள் தான்! நாத்திகராக உங்களை நீங்கள் அடையாளங் காட்டினாலும்... உண்மையான ஆன்மீகம் எது ?என்பதை எனக்குக் கற்றுத் தந்தது... உங்கள் வாழ்க்கை தான்! ஒரு தெய்வத்தால் மட்டுமே தரக் கூடிய ...

குழந்தை பாக்கியம் கிடைக்க செய்யும் மகாலட்சுமி விரதம் !

Posted: 15 Nov 2013 12:45 AM PST

வலம்புரி சங்கில் வாழ்பவள் சங்கலட்சுமி, மாங்கல்யத்தில் உறைபவள் சவுபாக்கியலட்சுமி, தீபத்தில் இருப்பவள் தீபலட்சுமி, வீரனின் தோளில் வாளில் திகழ்பவள் வீரலட்சுமி, வீட்டின் வாயிலில் பஞ்சலட்சுமி, மகுடத்தில் மகுட லட்சுமியாகவும், குபேரனுக்கு செல்வவளம் கொடுத்து, சங்கநிதி, பத்மநிதியாகவும் விளங்குபவள் மகாலட்சுமி. வெள்ளிகிழமைகளில் தாமரை கோலமிட்டு, மலர்களால் திருமகளின் பல்வேறு நாமம் சொல்லி அர்ச்சிப்பவருக்கு எல்லா நலமும் அருளக்கூடியவள் திருமகள். தேனையும், பாலையும் நைவேத்தியமாக விரும்ப கூடியவள். ...

வேர்கடலை கொழுப்பு அல்ல!

Posted: 15 Nov 2013 12:27 AM PST

வேர்கடலை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்து தான். இதனால் உடல் பருமன் கூடும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் வரும் என்ற நம்பிக்கை தான் இருந்து வருகின்றது. ஆனால் வருகின்ற ஆராய்ச்சிகளில் இந்த நம்பிக்கைகளுக்கு எந்த ஒரு ஆதாரமுமில்லை என்றே தெரிகிறது. காரணம் வேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்ற படியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான ...

நினைவில் நின்றவை

Posted: 15 Nov 2013 12:04 AM PST

பழைய செய்தித்தாள் விளம்பரங்கள், பாட்டுப் புத்தகங்கள் போன்றவை நம் நினைவில் ஏற்படும் பரவசம் தனி அனுபவம். அவற்றை இளைய தலைமுறையினரிடம் பகிர்ந்து கொள்வதிலும் ஒரு சந்தோஷம் இருக்கத் தான் செய்கிறது.

இதில் நினைவுகளை மலர வைக்கும் நிழற்படங்கள் அணிவகுக்கும்..

தொடக்கமாக



நன்றி முகநூல் நண்பர்கள்

நடக்கும் போது மொபைல் போன் பயன்படுத்தினால் விளைவு விபரீதமாகும் !

Posted: 15 Nov 2013 12:03 AM PST

நடக்கும் போது மொபைல் போன் பயன்படுத்தினால் விளைவு விபரீதமாகும் - ஓர் ஆய்வு நடக்கும் போது மொபைல் போனைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும், எஸ்.எம்.எஸ். அனுப்புவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது எவ்வளவு ஆபத்தானது என்று நியூயார்க் நகரில் இயங்கும் ஸ்டோனி புரூக் என்னும் அமெரிக்க பல்கலைக் கழகம் ஆய்வு நடத்தியது. 20 வயது இளைஞர்களாக 33 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்விற்கு உட்படுத்தியது. மொபைல் போன்களைப் பயன்படுத்துவதில் திறமைசாலிகளாய் இருக்கும் ஆண், பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 30 அடி தூரத்தில் ...

பேசும் கொலுசு

Posted: 15 Nov 2013 12:02 AM PST

பேசும் கொலுசு ====தாயவளுக்கு ==== தூக்கம் கலைந்திட குழந்தை எழுவதை கட்டி கொடுக்கும் கண்ணாடியாய் அருகில்தான் இருக்கிறாள்என்பதை உணர்த்தும் தன் குழந்தையின் ``````சலங்கைகொலுசு `````` ====குழந்தைக்கு==== பூச்சிப்பொட்டுக்கள் தீண்டாமல் காத்திடும் பாதுகவலனாய் ஆசை நடைபழக ஆர்வம் கூட்டிடும் தோழமையாய் ``````முத்துக்கொலுசு `````` ====மங்கையவளுக்கு==== மாதவிலக்கில் மங்கிப்போகாமல் புத்துணர்ச்சி தந்திடும் நிவாரணியாய் கால்வழிசெல்லும் மூளை நரம்பினால் மூளையின் செயல்களை ...

டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!

Posted: 14 Nov 2013 11:47 PM PST

தமிழகத்தில், தற்சமயம், பரவலாக பருவ மழை ஆரம்பித்து விட்டது. இது, சந்தோஷமான விஷயம் தான். ஆனால், இந்த மழைக்காலங்களில் தான், மலேரியா, டெங்கு மற்றும் காய்ச்சல்களை ஏற்படுத்தும், அனபிலஸ், ஏடிஸ், எஜிப்டி கொசுக்களும், அதிகளவில் உற்பத்தியாகிறது என்பது, கவலைக்குரிய விஷயம். புதிய கட்டுமானப் பகுதிகள், காலி மனை, வீட்டுக்கு அருகாமையில் உள்ள காலியிடங்கள், மூடியில்லாத சிமென்ட் தொட்டிகள், பயன்பாடற்ற கார் டயர்கள், மற்றும் பூந்தொட்டிகள் ஆகியவற்றில் தேங்கி நிற்கும் மழை நீரில் தான், இந்த கொசுக்கள் உற்பத்தியாகின்றன. ...

புதுமணத் தம்பதியரைப் பிரிக்கும் டிவி இயக்குநர்களே! கொஞ்சம் திருந்துங்களேன்!!

Posted: 14 Nov 2013 11:40 PM PST

இப்போதெல்லாம் டிவி சீரியல்களில் அதிகம் இடம் பெறுவது திருமணமான இளம் தம்பதியரை எப்படி பிரிப்பது என்பதுதான். திருமணம் நடைபெறாமல் தடுப்பது எப்படி என்று அண்ணியோ, கொழுந்தியாளோ, அத்தையோ வில்லத்தனம் செய்துவந்த காலம் மலையேறிவிட்டது. அதையும் மீறி திருமணம் நடந்து விட்டால் அதை பொறுக்க முடியாமல் மாமா பெண்ணையோ, அத்தை பெண்ணையோ கொண்டுவந்து வீட்டிற்குள் வைத்துக்கொண்டு குடைச்சல் கொடுத்து எப்படியாவது அவர்களை பிரித்துவிடவேண்டும் என்று வில்லத்தனம் செய்கின்றனர். தென்றல் இந்த வில்லத்தனத்தை முதலில் ...

வாழ்க்கைக்கு ஏற்ற சில பொன்மொழிகள்:)

Posted: 14 Nov 2013 10:24 PM PST

மனிதர்கள் தங்களது வாழ்க்கை முறைகளை சரியாக அமைத்துக் கொள்ளவும், அவர்கள் தங்களது தவறுகளை திருத்திக் கொள்ளவும் நமது முன்னோர்கள் ஏராளமான பொன்மொழிகளை சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர். அதில் வாழ்க்கைக்கு ஏற்ற சில பொன்மொழிகளை இங்கேக் காணலாம்... ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்; பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள். மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்க முடியுமானால் அந்த விலையைப் பற்றியும் நாம் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்போம். அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழ வேண்டும். உனக்கு ...

சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும்

Posted: 14 Nov 2013 09:47 PM PST

* கோவிலில் உள்ள நந்தி சிலையானது முழுவதும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டதாகும்... * 1003 வருடங்கள் ஆனாலும் பழமை மாறாமல் இருப்பது இன்னொரு பெருமை. * ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரூபாய் நோட்டு, நாணயம், மற்றும் அஞ்சல் துறை வெளியிட்ட அஞ்சல் தலை, ஆகியவற்றில் நம் பெரிய கோவில் உள்ளது, இவை மூன்றிலும் இடம் பெற்ற ஒரே கட்டிடம், தஞ்சை கோவில் மட்டுமே. * இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக ...

Requesting Excel VCF converter

Posted: 14 Nov 2013 06:43 PM PST

நண்பர்களே,
கணினியில் எக்ஸ்செல் வடிவில் உள்ள முகவரிகளை விசிஎப் VCF வடிவில் மாற்றுவதற்கான, முற்றிலும் இலவசமான மென்பொருள் கிடைக்குமா


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™