Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தடை செய்யப்பட்ட 730 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Posted: 15 Nov 2013 01:37 PM PST

தடை செய்யப்பட்ட 730 கிலோ பிளாஸ்டிக் பைகளை கோவை   மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

ரயில் மறியல்: 57 பேர் கைது

Posted: 15 Nov 2013 01:36 PM PST

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்றதைக் கண்டித்து, கோவையில் வெள்ளிக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலைச் ச

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 20 பேர் கைது

Posted: 15 Nov 2013 01:36 PM PST

தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டதைக்  கண்டித்து, கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோமாரி நோயை சரிப்படுத்த கள்மட்டி வழங்க கோரிக்கை

Posted: 15 Nov 2013 01:36 PM PST

கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோயை சரிப்படுத்த வெளிமாநிலங்களில் இருந்து கள்மட்டி வாங்கித் தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெ.நா.பாளையம் வட்டாரத்தில் பரவும் கோமாரி நோய்

Posted: 15 Nov 2013 01:35 PM PST

பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் கோமாரி நோய் தாக்குதலால் பல மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மின்வெட்டை நீக்க நடவடிக்கை கோரி கடையடைப்பு நடத்த "கோப்மா' முடிவு

Posted: 15 Nov 2013 01:35 PM PST

மின்வெட்டை முழுமையாக நீக்க நடவடிக்கை கோரி மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தம் நடத்தப்படும் என "கோப்மா' தெரிவித்துள்ளது.

ரயிலில் அடிபட்டு மெக்கானிக் சாவு

Posted: 15 Nov 2013 01:35 PM PST

கோவையில் ரயிலில் அடிபட்டு மெக்கானிக் உயிரிழந்தார்.

பெ.நா.பாளையத்தில் கூட்டுறவு வார விழா

Posted: 15 Nov 2013 01:35 PM PST

பெரியநாயக்கன்பாளையம் காய்கறி வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தின் சார்பில், கூட்டுறவு வாரவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 

தடையற்ற மின்சாரம் வழங்க முதல்வருக்கு "டேக்ட்' கோரிக்கை

Posted: 15 Nov 2013 01:34 PM PST

தனியார் மற்றும் மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரத்தைப் பெற்று தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்று, தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

துடியலூரில் குழந்தைகள் தினவிழா

Posted: 15 Nov 2013 01:34 PM PST

ஜவாஹர்லால் நேரு பிறந்தநாளையொட்டி, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா  வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஜிகா அனிமேஷன் நிறுவனம் சார்பில் 1,000 பேருக்கு கல்வி உதவித் தொகை

Posted: 15 Nov 2013 01:34 PM PST

அனிமேஷனில் சாதிக்க விரும்பும் ஆயிரம் பேருக்கு ஜீ வித்யாநிதி கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

நவம்பர் 16 மின் தடை

Posted: 15 Nov 2013 01:34 PM PST

பீளமேடு, தேவராயபுரம் மற்றும் மாதம்பட்டி துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (நவ.16) மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணிமுதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

அமிர்த சேவா கேந்திரம் சார்பில் நாளை 5008 மகா தீப வேள்வி

Posted: 15 Nov 2013 01:33 PM PST

கோவை அமிர்த சேவா கேந்திரம் சார்பில் 5008 மகா தீப வேள்வி நவம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.

மின்வெட்டு பிரச்னை:வெளிப்படைத் தன்மையை பின்பற்ற வலியுறுத்தல்

Posted: 15 Nov 2013 01:33 PM PST

மின்வெட்டு பிரச்னையில் மின் வாரியம் வெளிப்படைத் தன்மையைப் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கத்தின் தலைவர் டி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கோவையில் சீன ஜவுளித் துறை குழு

Posted: 15 Nov 2013 01:32 PM PST

சீன ஜவுளித் துறை குழுவினர், கோவையில் உள்ள ஜவுளி ஆலைகளை பார்வையிட்டனர்.

18 இல் ஜோதிபாசு நூற்றாண்டு விழா:பிரகாஷ் காரத் பங்கேற்பு

Posted: 15 Nov 2013 01:32 PM PST

கோவை, கவுண்டம்பாளையத்தில் வருகிற 18 ஆம் தேதி  நடைபெற உள்ள ஜோதிபாசு நூற்றாண்டு விழா கருத்தரங்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் பங்கேற்கிறார்.

கோமாரி நோய்க்கு முறையற்ற சிகிச்சை அளிப்போர் மீது சட்ட நடவடிக்கை

Posted: 15 Nov 2013 01:32 PM PST

கோமாரி நோய்க்கு முறையற்ற சிகிச்சை அளிக்கும் தகுதியற்ற

வனத்துறையினர் பணிக்கு இடையூறு செய்ததாக வழக்கு

Posted: 15 Nov 2013 01:32 PM PST

யானைகளை விரட்ட வந்த வனத் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தரத்தில் தொங்கும் வீடுகள்; ஆபத்தில் 1,000 குடும்பங்கள்

Posted: 15 Nov 2013 01:31 PM PST

குன்னூர் அருகே, தொங்கும் நிலையில் உள்ள பேரட்டி ஊராட்சி பாரத் நகர் குடியிருப்புகளைப் பாதுகாத்து அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று, இப் பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலைநயமிக்க கல் குத்துவிளக்குகள்!

Posted: 15 Nov 2013 01:30 PM PST

பித்தளை குத்துவிளக்குகளுக்கு மட்டுமே கிராக்கி உள்ள நிலையில், தற்போது கல்லால் தயாரிக்கப்படும் குத்துவிளக்குகளுக்கும் மவுசு கூடி வருகிறது.

கோபியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 15 Nov 2013 01:30 PM PST

கோபியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

எரிவாயுக் கசிவால் தீப்பிடித்து எரிந்த வேன்

Posted: 15 Nov 2013 01:30 PM PST

கோபி அருகே வீட்டு உபயோக சமையல் எரிவாயுவை வேனுக்கு நிரப்பும்போது ஏற்பட்ட எரிவாயுக் கசிவால் தீப்பிடித்தது.

நேரு பிறந்த நாள்: காங்கிரஸார் மரியாதை

Posted: 15 Nov 2013 01:30 PM PST

முன்னாள் பிரதமர் நேருவின் 125-ஆவது பிறந்த தினத்தையொட்டி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், நேருவின் உருவப்படத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் எஸ்.சேகர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

லாரி மோதி மூதாட்டி சாவு

Posted: 15 Nov 2013 01:29 PM PST

கோபி அருகே டிப்பர் லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழந்தார்.  கோபியை அடுத்த பங்களாப்புதூரைச் சேர்ந்த சீரங்கன் மனைவி பழனியம்மாள் (80). இவர்,

ஸ்ரீவெங்கடேஸ்வரா வித்யாலய மெட்ரிக் மாணவர்களுக்குப் பரிசு

Posted: 15 Nov 2013 01:29 PM PST

கோபி ஸ்ரீவெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அறிவியல் சாதனை படைத்தனர்.

மொடக்குறிச்சியில் கால்நடைத் துறை அதிகாரிகள் ஆய்வு

Posted: 15 Nov 2013 01:29 PM PST

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்ட இலவச ஆடுகள் மற்றும் பயனாளிகள் குறித்து எம்.எல்.ஏ. மற்றும் கால்நடைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பவானிசாகர் அணை நீர்மட்டம் 67.84 அடி

Posted: 15 Nov 2013 01:29 PM PST

 பவானிசாகர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 67.84 அடியாக இருந்தது.

கோபி: கோமாரி நோயைக் கட்டுப்படுத்த 10 குழுக்கள்

Posted: 15 Nov 2013 01:28 PM PST

கோபி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கோமாரி நோயைக் கட்டுப்படுத்துவதற்காக நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள் 4 பேர் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, மண்டல இணை இயக்குநர் வணங்காமுடி தெரிவித்துள்ளார்.

சச்சின் உருவத்துடன் திரைச்சீலை

Posted: 15 Nov 2013 01:28 PM PST

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 200-ஆவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதால் அவரது உருவத்துடன் கூடிய திரைச்சீலையை ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் கே.அப்புசாமி உருவாக்கியுள்ளார்.

கோத்தகிரி நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

Posted: 15 Nov 2013 01:27 PM PST

கோத்தகிரி வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில், நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

"42 ஆயிரம் கால்நடைகளுக்குத் தடுப்பூசி'

Posted: 15 Nov 2013 01:27 PM PST

நீலகிரி மாவட்டத்தில் கோமாரி நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 42 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தெரிவித்துள்ளார்.

நம்பாலக்கோட்டை சிவன் மலையில் நாளை கிரிவலம், கார்த்திகை தீபம்

Posted: 15 Nov 2013 01:27 PM PST

கூடலூர் அடுத்துள்ள நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் கோயில் சிவன் மலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ.17) கிரிவலமும் கார்த்திகை தீப விழாவும் நடைபெற உள்ளது.

2-ஆவது சீசனுக்கு தயாராகும் கோத்தகிரி நேரு பூங்கா

Posted: 15 Nov 2013 01:27 PM PST

இரண்டாவது சீசனுக்கு கோத்தகிரி நேரு பூங்காவைத் தயார்படுத்தும் பணியில் அதன் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

உற்பத்தியாளர்களுக்கு பால் கறக்கும் எந்திரங்கள்

Posted: 15 Nov 2013 01:26 PM PST

நீலகிரி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கறக்கும் எந்திரங்கள் வழங்கப்பட உள்ளதாக, உதகையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நவம்பர் 16 மின் தடை

Posted: 15 Nov 2013 01:26 PM PST

  நீலகிரி மின் பகிர்மான வட்டம், ஜெகதளா மற்றும் சாண்டிநள்ளா துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இத் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (நவ.16) மின் விநியோகம் இருக்காது எனத்

நவம்பர் 16 மின் தடை

Posted: 15 Nov 2013 01:26 PM PST

சத்தியமங்கலம் மின்கோட்டம், செண்பகபுதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (நவ.16) மின் விநியோகம் இருக்காது என, சத்தி கோட்ட செயற் பொறியாளர் பி.சந்திரசேகர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

கூடலூரில் 20-இல் அனைத்துக் கட்சி உண்ணாவிரதம்

Posted: 15 Nov 2013 01:25 PM PST

கூடலூரில் அனைத்துக் கட்சி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நேரு கோப்பை இறகுப் பந்து:சென்னை அணி வெற்றி

Posted: 15 Nov 2013 01:25 PM PST

கூடலூரில் நடைபெற்ற நேரு கோப்பை இறகுப் பந்து போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது .  நீலகிரி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மார்த்தோமா நகரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு ஆணைய

உதகையில் ரயில் நிலையமுற்றுகை: 30 பேர் கைது

Posted: 15 Nov 2013 01:25 PM PST

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், உதகை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இக் கட்சியின் மாநில துணைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்த

ஸ்கேட்டிங் கிரிக்கெட்: மகளிர் பிரிவில் தமிழகம் சாம்பியன்

Posted: 15 Nov 2013 01:24 PM PST

  ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் கிரிக்கெட் போட்டியில், மகளிர் பிரிவில் தமிழகம் சாம்பியன் பட்டம் வென்றது.

நவம்பர் 16 மின் தடை

Posted: 15 Nov 2013 01:24 PM PST

சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (நவ.16) மின்சாரம் இருக்காது.

2 லாரிகள் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் சாவு

Posted: 15 Nov 2013 01:23 PM PST

கோவை அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஓட்டுநர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

2014 மார்ச்சில் திருப்பூரில் இண்டர்நெட் போன் சேவை தொடங்க திட்டம்

Posted: 15 Nov 2013 01:23 PM PST

அடுத்த ஆண்டு (2014) மார்ச் மாதத்தில் திருப்பூரில் இண்டர்நெட் போன் சேவை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வேன் கவிழ்ந்து 18 பேர் படுகாயம்

Posted: 15 Nov 2013 01:23 PM PST

பொள்ளாச்சி அருகே வேன் கவிழ்ந்ததில் 18 பேர் படுகாயமடைந்தனர்.

பல்லடம் நூலகத்தில் பள்ளி மாணவர்கள் கள ஆய்வு

Posted: 15 Nov 2013 01:22 PM PST

மாதப்பூர், ஜெம் இண்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் குழந்தைகள் தினமான வியாழக்கிழமை, பல்லடம் கண்ணம்மாள் நினைவு கிளை  நூலகத்தை பார்வையிட்டனர்

அரசு பேருந்து-ஆம்னி வேன் மோதல்: 6 பேர் படுகாயம்

Posted: 15 Nov 2013 01:22 PM PST

தாராபுரம் அருகே, குண்டடத்தில் அரசு பேருந்து, ஆம்னி வேன் மோதியதில் 6 பேர் வெள்ளிக்கிழமை படுகாயமடைந்தனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டு

Posted: 15 Nov 2013 01:22 PM PST

தாராபுரம் மகாராணி கல்வி நிறுவனங்களின் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சாலை மேம்பாடு பணிகள் துவக்கம்

Posted: 15 Nov 2013 01:21 PM PST

உடுமலை சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட குடிமங்கலம் ஒன்றியப் பகுதிகளில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாடு பணிகள் துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

நந்தனார் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை

Posted: 15 Nov 2013 01:21 PM PST

தமிழகத்திலுள்ள நந்தனார் சமுதாய மக்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து மோதி இருவர் படுகாயம்

Posted: 15 Nov 2013 01:21 PM PST

அவிநாசி அருகே, ஆட்டையாம்பாளையத்தில் வெள்ளிக்கிழமை தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர்.

நவம்பர் 16 மின் தடை

Posted: 15 Nov 2013 01:20 PM PST

காங்கயம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பர் 16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என காங்கயம் மின்வாரிய செயற்பொறியாளர் க.தண்டபாணி தெரிவித்துள்ளார்.

கணபதிபாளையத்தில் சுகாதார நிலையம் அமைக்கப்படுமா?

Posted: 15 Nov 2013 01:20 PM PST

கணபதிபாளையத்தில் சுகாதார நிலையம் அமைக்கப்படுமா? எனஅப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சாலை விதி மீறல்: ரூ. 13 லட்சம் அபராதம்

Posted: 15 Nov 2013 01:20 PM PST

பல்லடம் நகரில் சாலை விதிகளை மீறியதாக வாகன ஓட்டுநர்களிடம் ரூ. 13 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கூடைப்பந்து, இறகுப்பந்தில் ஈரோடு பி.வி.பி. பள்ளி முதலிடம்

Posted: 15 Nov 2013 01:20 PM PST

மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியில் கூடைப்பந்து இரட்டையர் பிரிவு, இறகுப் பந்துப் போட்டியில் ஈரோடு பி.வி.பி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தைப் பெற்றது.

ரயில் மறியலுக்கு முயன்ற 14 பேர் கைது

Posted: 15 Nov 2013 01:19 PM PST

இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றிருப்பதைக் கண்டித்து திருப்பூரில் ரயில் மறியலில் ஈடுபட முயன்றதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 14 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சல்மான் குர்ஷித்,  ஞானதேசிகன் உருவப் படம் எரிப்பு: திருப்பூரில் 16 பேர் கைது

Posted: 15 Nov 2013 01:19 PM PST

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து திருப்பூரில், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் ஆகியோரது உருவப் படங்களை எரித்ததாக 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாளை பள்ளி மாணவர்களுக்கு திறனாய்வுத் தேர்வு

Posted: 15 Nov 2013 01:19 PM PST

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) நடைபெற உள்ளது.

மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி

Posted: 15 Nov 2013 01:18 PM PST

திருப்பூர் வேலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. மாணவிகளுக்கான வாலிபால் போட்டிகள் சனிக்கிழமை (நவம்பர் 16) நடைபெற உள்ளன.

பொதுமக்கள் முற்றுகையால் தார்ச்சாலை பணி நிறுத்தி வைப்பு

Posted: 15 Nov 2013 01:18 PM PST

பல்லடம் அருகே, நல்லாகவுண்டன்பாளையத்தில் பொதுமக்கள் முற்றுகையால் தார்ச்சாலை பணி வெள்ளிக்கிழமை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

ஸ்கேட்டிங் கிரிக்கெட்: மகளிர் பிரிவில் தமிழகம் சாம்பியன்

Posted: 15 Nov 2013 01:18 PM PST

ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் கிரிக்கெட் போட்டியில், மகளிர் பிரிவில் தமிழகம் சாம்பியன் பட்டம் வென்றது.

எரிவாயுக் கசிவால் தீப்பிடித்து எரிந்த வேன்

Posted: 15 Nov 2013 01:17 PM PST

 கோபி அருகே வீட்டு உபயோக சமையல் எரிவாயுவை வேனுக்கு நிரப்பும்போது ஏற்பட்ட எரிவாயுக் கசிவால் தீப்பிடித்தது.

ரயிலில் அடிபட்டு மெக்கானிக் சாவு

Posted: 15 Nov 2013 01:17 PM PST

கோவையில் ரயிலில் அடிபட்டு மெக்கானிக் உயிரிழந்தார்.

மின்வெட்டை நீக்க நடவடிக்கை கோரி கடையடைப்பு நடத்த "கோப்மா' முடிவு

Posted: 15 Nov 2013 01:17 PM PST

  மின்வெட்டை முழுமையாக நீக்க நடவடிக்கை கோரி மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தம் நடத்தப்படும் என "கோப்மா' தெரிவித்துள்ளது.

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 20 பேர் கைது

Posted: 15 Nov 2013 01:16 PM PST

தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டதைக்  கண்டித்து, கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

நேரு கோப்பை இறகுப் பந்து:சென்னை அணி வெற்றி

Posted: 15 Nov 2013 01:16 PM PST

கூடலூரில் நடைபெற்ற நேரு கோப்பை இறகுப் பந்து போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது .

விடுதலைச் சிறுத்தைகள் ரயில் மறியல்

Posted: 15 Nov 2013 01:16 PM PST

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில், ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

மரக்கன்றுகள் நடும் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும்

Posted: 15 Nov 2013 01:16 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டுமென ஆட்சியர் மு. கருணாகரன் கேட்டுக்கொண்டார்.

ஆட்சியர் அலுவலகம் முன் மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு

Posted: 15 Nov 2013 01:15 PM PST

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பட்டப்பகலில், மர்மநபர்கள் மூதாட்டியிடம் 3 பவுன் நகையைப் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

"1000 பீடிகள் சுற்ற ரூ.350 கூலி வழங்க வேண்டும்

Posted: 15 Nov 2013 01:15 PM PST

1000 பீடிகள் சுற்ற ரூ.350 கூலியாக பீடி நிறுவனங்கள் வழங்க வேண்டுமென, திருநெல்வேலி மாவட்ட பீடித் தொழிலாளர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விவசாயி கொலை வழக்கு:ஆட்டோ ஓட்டுநர் கைது

Posted: 15 Nov 2013 01:15 PM PST

திருநெல்வேலி அருகே தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

பென்சனர்கள் சங்க செயற்குழுக் கூட்டம்

Posted: 15 Nov 2013 01:14 PM PST

திருநெல்வேலி மாவட்ட அரசு பென்சனர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், திருநெல்வேலியில் நடைபெற்றது.

தவ்ஹீத் ஜமாத் பொதுக்கூட்டம்

Posted: 15 Nov 2013 01:14 PM PST

மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ரூ.10 ஆயிரம் கோடிக்கு ரெப்கோ வங்கி வர்த்தக இலக்கு

Posted: 15 Nov 2013 01:14 PM PST

ரெப்கோ வங்கியின் வர்த்தக இலக்கு வரும் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அதன் செயல் இயக்குநர் கே.ராஜேந்திரன் தெரிவித்தார்.

நெல்லை: 28 அஞ்சலகங்களில் செல்போன் மூலம் பணம் அனுப்பும் வசதி

Posted: 15 Nov 2013 01:14 PM PST

திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தில் உள்ள 28 அஞ்சலகங்களிலும் செல்போன் மூலம் எந்த இடத்துக்கும் பணம் அனுப்பும் வசதி சனிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

நவம்பர்18}ல் நெல்லை அருங்காட்சியகத்தில் ஓவியம், வண்ணம் தீட்டுதல் போட்டி

Posted: 15 Nov 2013 01:13 PM PST

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ஓவியம் தீட்டுதல், வண்ணம் தீட்டுதல் போட்டி திங்கள்கிழமை நடைபெறுகிறது.

பள்ளியில் சச்சினுக்கு பாராட்டு விழா

Posted: 15 Nov 2013 01:13 PM PST

தச்சநல்லூர் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியில், இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

21-இல் நெல்லையில் பட்டாமாறுதல் சிறப்பு முகாம்

Posted: 15 Nov 2013 01:13 PM PST

திருநெல்வேலி வட்டத்துக்கான விரைவு பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நவ. 21-ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெறுகிறது.

கூடுதல் கட்டணம் வசூல்: பொதுக் கழிப்பிடமாக மாறிய சந்திப்பு பஸ் நிலையம்

Posted: 15 Nov 2013 01:13 PM PST

பயணிகள், பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சிக் கழிப்பிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பராமரிப்பு இல்லாத கழிப்பிடங்களை தவிர்த்து பயணிகள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் திருநெல்வேலி சந்திப்பு பஸ்

மீண்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு

Posted: 15 Nov 2013 01:12 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் மீண்டும் அமலுக்கு வந்துள்ள  அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளன. மின்வெட்டால் அனைத்துத் தரப்பினருமே பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

விளாத்திகுளம் பகுதியில் நடவு முறையில் துவரை சாகுபடி

Posted: 15 Nov 2013 01:12 PM PST

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டாரத்தில் நிகழாண்டில் நடவு முறையில் துவரை சாகுபடி எனும் புதிய முறையை மேற்கொள்வதால் 20 சதவீத கூடுதல் மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

எட்டயபுரம் மணிமண்டபத்தில் பாரதியின் பேத்தி

Posted: 15 Nov 2013 01:12 PM PST

:எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்துக்கு பாரதியின் பேத்தி சரோஜினி பாரதி வெள்ளிக்கிழமை வருகை தந்தார்.

சீனாவில் கூடுதல் தனியார் முதலீடுகளுக்கு அனுமதி

Posted: 15 Nov 2013 01:11 PM PST

சீனாவில் பொருளாதாரச் சரிவைத் தடுக்க, பொது நிறுவனங்களில் தனியார் முதலீடுகளை கூடுதலாக அனுமதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

ஏற்காடு இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள்

Posted: 15 Nov 2013 01:02 PM PST

ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய சனிக்கிழமை (நவம்பர் 16) கடைசி நாள் ஆகும்.

சிறுதானியம்; பெரும்பயன்

Posted: 15 Nov 2013 01:01 PM PST

நம் முன்னோர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு முக்கியக் காரணமாக அமைந்தது அவர்கள் கடைப்பிடித்த உணவுப் பழக்கமேயாகும். அவர்கள் உண்ட உணவே மருந்தாகவும் இருந்ததால் நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்தது.

வாழ்ந்திடத்தானே வாழ்க்கை?

Posted: 15 Nov 2013 01:00 PM PST

அண்மைக் காலமாக பத்திரிகைகளில் கந்துவட்டிக் கொடுமையால் குடும்பமே தற்கொலை,காதலுக்கு எதிர்ப்பு இளைஞன் தற்கொலை, தேர்வில் தோல்வி மாணவி தற்கொலை, கடன் தொல்லை தாளாமல் விவசாயி தற்கொலை இவ்வாறு செய்திகள் வாராத நாள் உண்டா?

யாராக இருந்தால் என்ன?

Posted: 15 Nov 2013 12:59 PM PST

விதிமுறை மீறல்களுக்கு நீதிமன்றங்களில் நிவாரணம் கிடைக்கும் என்பதற்கு, மும்பை கேம்ப கோலா அடுக்குமாடிக் குடியிருப்பு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஓர் உதாரணம். மும்பையின் விலையுயர்ந்த பகுதியான வொர்லியில், கேம்ப கோலா குளிர்பானத் தயாரிப்பு நிறுவனம் இருந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டியது ஒரு தனியார் கட்டுமான நிறுவனம்.

சிறுமி பலாத்காரம்: ஆசிரியர் மீது வழக்கு

Posted: 15 Nov 2013 12:57 PM PST

கே.வி. குப்பம் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி, அங்குள்ள தனியார் ஆங்கிலப் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார்.

6 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Posted: 15 Nov 2013 12:57 PM PST

வாணியம்பாடி ராமையன் தோப்பு ஆற்றில் மணல் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வியாழக்கிழமை நள்ளிரவு வாணியம்பாடி வட்டாட்சியர் கீதாராணி தலைமையில் வருவாய்த்

பெண்ணிடம் நகை பறிப்பு: இரு இளைஞர்கள் கைது

Posted: 15 Nov 2013 12:56 PM PST

சோளிங்கரில் பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற வழக்கில் இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா அன்னதானத்துக்காக 6,500 கிலோ காய்கறிகள் அன்பளிப்பு

Posted: 15 Nov 2013 12:56 PM PST

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, அன்னதானம் வழங்குவதற்காக 6,500 கிலோ எடையுள்ள காய்கறிகளை வேலூர் நேதாஜி மார்க்கெட் காய்கனி வியாபாரிகள் சங்கத்தினர் அன்பளிப்பாக

சூடு பிடித்தது அகல் விளக்கு விற்பனை

Posted: 15 Nov 2013 12:56 PM PST

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அகல் விளக்கு விற்பனை சூடு பிடித்துள்ள நிலையில், நுகர்வோரை கவரும் வகையில் புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகள் வேலூர் கடை வீதிகளில் விற்பனைக்கு காத்திருக்கின்றன.

100% மானியத்தில் பண்ணைக் குட்டைகள்

Posted: 15 Nov 2013 12:56 PM PST

வேலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள 409 கிராமங்களிலும் 100 சதவிகித மானியத்தில் விவசாயிகளுக்கு பண்ணைக்குட்டைகளை அமைத்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக விவசாய அணி கோரிக்கை விடுத்துள்ளது.

விசைத்தறி நெசவாளர்களுக்கு கூலி குறைப்பு இல்லை

Posted: 15 Nov 2013 12:55 PM PST

குருவராஜபேட்டையில் விசைத்தறி நெசவாளர்களுக்கு கூலி குறைப்பு இல்லை என அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ சு.ரவி முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இன்று திருமுறை சொற்பொழிவு

Posted: 15 Nov 2013 12:55 PM PST

குடியாத்தம் திருமுறை நன்னெறிச் சங்கம் சார்பில் சனிக்கிழமை (நவம்பர் 16) மாலை 6 மணிக்கு நடுப்பேட்டை ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலில் திருமுறைச் சொற்பொழிவு நடக்கிறது. இதில் திருமுறையும் ஆகமமும் என்ற தலைப்பில் சந்திரசேகர் குருக்கள் ஆன்மிக உரையாற்றுகிறார்.

4 அடி உயர அம்மன் சிலை கண்டெடுப்பு

Posted: 15 Nov 2013 12:55 PM PST

நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை அன்னாசாகரம் கிராமத்தில் பார்பன் குட்டை ஏரி உள்ளது. இங்கு ஏரிப்பகுதியில் உள்ள முள்புதரில் அம்மன் சிலை ஒன்று மண்ணில் புதைந்து இருப்பதை

சித்தா, இந்திய மருத்துவக் கல்வி மறுகலந்தாய்வு 20-இல் தொடக்கம்

Posted: 15 Nov 2013 12:54 PM PST

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் சித்தா உள்பட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான நகர்த்துதல் மற்றும் மறுகலந்தாய்வு வரும் 20-ஆம் தேதி தொடங்குகிறது.

டாஸ்மாக் கடையில் தண்ணீர் கலந்து விற்பனை கண்காணிப்பாளர் உள்பட மூவர் கைது

Posted: 15 Nov 2013 12:54 PM PST

காவேரிப்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் மதுபான பாட்டில்களை தண்ணீர் கலந்து விற்பனை செய்த கடையின் கண்காணிப்பாளர், விற்பனையாளர் உள்பட மூவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

விடுமுறையில் சென்றார் ஆட்சியர்

Posted: 15 Nov 2013 12:54 PM PST

வேலூர் மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெள்ளி மற்றும் சனிக்கிழமை விடுமுறையில் சென்றுள்ளதை அடுத்து மாவட்ட நிர்வாகத்தின் அவசரப் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் கை

கருத்துக் கணிப்புகளுக்குத் தடை

Posted: 15 Nov 2013 12:54 PM PST

தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளில் இருந்து கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்குமாறு மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஆடு, மாட்டு சந்தைகள் தாற்காலிகமாக மூடல்

Posted: 15 Nov 2013 12:53 PM PST

வேலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதை அடுத்து மாவட்டத்தில் நடைபெறும் கால்நடை சந்தைகளின் செயல்பாட்டை தாற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆட்சியர் (பொறுப்பு) கை.பலராமன் உத்தரவிட்டுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™