Tamil News | Online Tamil News |
- இலங்கையில் நல உதவி செய்யும் போது வாய் திறக்காதவர்கள் இப்போது தடுப்பது ஏன்? குர்ஷித்
- காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
- சச்சின் டெண்டுல்கரை இழுக்க காங்., முயற்சி
- மோடியை புகழ்ந்தால் 'பாரத் ரத்னா' பறிக்கப்படும்: பாடகி லதா மங்கேஷ்கருக்கு மிரட்டல்
- மன்னியுங்கள்... மன்னியுங்கள்... மன்னியுங்கள்: பணிந்தார் சி.பி.ஐ., தலைவர்
- உலகின் மிக பெரிய இந்து கோவிலை கட்டுகிறார் நிதிஷ்: மோடியின் சர்தார் படேல் சிலை முயற்சிக்கு பதிலடி
- இது தான் தேர்தல் விதிமுறையா? சோதனை செய்யாமல் அனுப்பி வைக்கப்பட்ட மந்திரி வாகனங்கள்
- "அம்மா' என்ற வார்த்தை யாரை குறிக்கிறது? விளக்கம் கேட்கிறது தேர்தல் கமிஷன்
- 18ம் தேதி கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் : டெசோ கூட்டத்தில் முடிவெடுக்க கருணாநிதி திட்டம்
- இரண்டு நாட்களில் தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு:கடற்கரையை நெருங்குகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
| இலங்கையில் நல உதவி செய்யும் போது வாய் திறக்காதவர்கள் இப்போது தடுப்பது ஏன்? குர்ஷித் Posted: கொழும்பு: இலங்கையில், தமிழர் பகுதிகளில், மத்திய அரசு, நலத்திட்ட பணிகளை செய்யும் போது ஒருவரும் வாய் திறக்கவில்லை; தற்போது, நான், காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது புதிராக உள்ளது,'' என, மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.இலங்கையில், காமன்வெல்த் மாநாடு, நாளை துவங்குகிறது. "இந்த மாநாட்டில் மத்திய அரசு பங்கேற்கக் கூடாது' என, தமிழக சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் எழும்பிய எதிர்ப்பு காரணமாக, பிரதமர் மன்மோகன் சிங், இந்த மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துவிட்டார். ஆனால், ... |
| காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை Posted: புதுடில்லி: 'தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக, நீங்கள் அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை. பிரசாரத்தின்போது, நீங்கள் பேசிய விதமும், தொனியும் தவறானவை. எதிர்காலத்தில், பிரசாரம் செய்யும்போது, கவனமாக இருக்க வேண்டும்' என, காங்., துணை தலைவர், ராகுலுக்கு, தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.தேர்தல் பிரசார கூட்டங்கள்: இதற்கிடையே, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கும், தேர்தல் விதிமுறைகளை மீறியது தொடர்பாக, தேர்தல் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. காங்., துணை தலைவர் ராகுல், சில நாட்களுக்கு முன், ராஜஸ்தான் மற்றும், ... |
| சச்சின் டெண்டுல்கரை இழுக்க காங்., முயற்சி Posted: புதுடில்லி: 'கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கரை, காங்கிரஸ் இழுக்க முயற்சி மேற்கொள்கிறது. மும்பையில் நடைபெறும், டெஸ்ட் போட்டியுடன், சச்சின், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து, அவரை முழு நேர அரசியலில் ஈடுபடுத்த, காங்., முயற்சியை துவங்கியுள்ளது.ராஜிவ் சுக்லா கூறியதாவது: ராஜ்யசபா எம்.பி., பதவிக்காக, பி.சி.சி.ஐ., சார்பில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் கபில்தேவ் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. எனினும், காங்., தலைவர் சோனியா, சச்சின் டெண்டுல்கரை, எம்.பி.,யாக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். அதனால் தான், ... |
| மோடியை புகழ்ந்தால் 'பாரத் ரத்னா' பறிக்கப்படும்: பாடகி லதா மங்கேஷ்கருக்கு மிரட்டல் Posted: மும்பை: 'குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை மீண்டும் புகழ்ந்து பேசினால், லதா மங்கேஷ்கருக்கு வழங்கப்பட்டுள்ள, 'பாரத் ரத்னா' விருதை பறிக்கக் கோரி, பிரதமருக்கு கடிதம் எழுதுவேன்' என, மும்பை, காங்., தலைவர், ஜனார்தன் சந்துர்கர் கூறியுள்ளார். இதற்கு, பா.ஜ., சிவசேனா கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.2001ல் விருது: பிரபல பின்னணி பாடகி, லதா மங்கேஷ்கரின் சாதனையைப் பாராட்டி, மத்திய அரசு, இவருக்கு, 'பத்ம பூஷண்' மற்றும், 'பத்ம விபூஷண்' விருதுகளை வழங்கியுள்ளது. 2001ம் ஆண்டு, நாட்டின் மிக உயரிய விருதான, பாரத் ரத்னா விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. ... |
| மன்னியுங்கள்... மன்னியுங்கள்... மன்னியுங்கள்: பணிந்தார் சி.பி.ஐ., தலைவர் Posted: புதுடில்லி: கிரிக்கெட் சூதாட்டத்தை, பாலியல் பலாத்காரத்துடன் ஒப்பிட்டு பேசிய, சி.பி.ஐ., இயக்குனர், ரஞ்சித் சின்காவுக்கு, பெண்கள் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதையடுத்து, அவர், மன்னிப்பு கேட்டுள்ளார்.டில்லியில் நடந்த, சி.பி.ஐ., பொன்விழா நிகழ்ச்சியில், நேற்று முன்தினம், சி.பி.ஐ., இயக்குனர் ரஞ்சித் சின்கா பேசும் போது, 'ஓட்டல்களில், சூதாட்ட விடுதிகள் செயல்படுகின்றன. சில மாநிலங்களில், லாட்டரிச் சீட்டுகளுக்கும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சூதாட்டம், பாலியல் பலாத்காரம் போன்றது; அதை, சட்டத்தால், தடுக்க முடியா ... |
| உலகின் மிக பெரிய இந்து கோவிலை கட்டுகிறார் நிதிஷ்: மோடியின் சர்தார் படேல் சிலை முயற்சிக்கு பதிலடி Posted: பாட்னா: குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, உலகிலேயே மிக உயரமான சிலையை குஜராத்தில் அமைக்க உள்ள நிலையில், மோடியின் அரசியல் எதிரியும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த, பீகார் முதல்வருமான, நிதிஷ்குமார், உலகிலேயே மிகப் பெரிய, இந்து கோவிலை, பீகாரில் அமைக்கிறார்.காங்கிரசுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைந்து, பா.ஜ., தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி என்ற அமைப்பை ஏற்படுத்தின. அந்த கூட்டணியில், 17 ஆண்டுகளாக இடம் பெற்றிருந்த, முக்கிய கட்சியான, ஐக்கிய ஜனதாதளம், சில மாதங்களுக்கு முன் விலகியது.மோடியை வசைபாடும் நிதிஷ்: பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, மோடி ... |
| இது தான் தேர்தல் விதிமுறையா? சோதனை செய்யாமல் அனுப்பி வைக்கப்பட்ட மந்திரி வாகனங்கள் Posted: சேலம்:"ஏற்காடு இடைத்தேர்தலை ஒட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள, சோதனை சாவடிகளில், பாரபட்சமின்றி எல்லோரது வாகனங்களையும், சோதனைக்கு உட்படுத்திய பிறகே அனுப்பி வைக்க வேண்டும்' என, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால், சேலம். உடையாப்பட்டி செக்போஸ்டில், அணிவகுத்து வந்த அமைச்சர்களின் கார்களை, நேற்று, சோதனை செய்யாமலேயே அனுப்பி வைத்த கூத்து அரங்கேறியது. ஆனால், போலீஸார் சல்யூட் அடிக்காமல் அனுப்புகின்றனர் என, அ.தி.மு.க.,வினர் கமெடி செய்தனர்.ஏற்காடு இடைத்தேர்தல், டிச.,4ல் நடப்பதால், சேலம் மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசு எந்திரமும், அதிகாரிகளும், தேர்தல் ஆணைய ... |
| "அம்மா' என்ற வார்த்தை யாரை குறிக்கிறது? விளக்கம் கேட்கிறது தேர்தல் கமிஷன் Posted: சென்னை : "அம்மா என்ற வார்த்தை யாரை குறிக்கிறது? அதற்கு விரிவாக்கம் உண்டா?' என, தேர்தல் கமிஷன், அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளது.ஏற்காடு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, ஆளும்கட்சியினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக, தி.மு.க.,வினர் தொடர்ந்து, தேர்தல் கமிஷனிடம் புகார் மனு கொடுத்து வருகின்றனர். தலைமை தேர்தல் கமிஷனரிடம் கொடுத்த, புகார் மனுவில் கூறியிருப்பதாவது:தமிழக அரசு சார்பில், சேலம் மாநகராட்சியில், "அம்மா' உணவகம் திறக்கப்பட்டுள்ளது. அதில், முதல்வர் படம் ஒட்டப்பட்டுள்ளது. "அம்மா' என்ற வார்த்தை, முதல்வரை குறிக்கிறது. எனவே, அந்தப் பெயர் ... |
| 18ம் தேதி கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் : டெசோ கூட்டத்தில் முடிவெடுக்க கருணாநிதி திட்டம் Posted: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்வதை கண்டிக்கும் வகையில், இம்மாதம், 18ம் தேதி கறுப்பு பேட்ஜ் அணிந்து, ஒரு நாள் அடையாள போராட்டம் நடத்துவது குறித்து, ஆலோசிக்க, 17ம் தேதி அறிவாலயத்தில், டெசோ கூட்டம், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் நடக்கிறது.இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க, வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், நேற்று, கொழும்பு சென்றார். 'இந்தியா சார்பில், துரும்பு கூட காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது' என, கருணாநிதி, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். 'பெயரளவில் கூட, ... |
| Posted: வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலு பெற்று, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, 15ம் தேதி இரவு, சென்னை - நாகை இடையே கரையைக் கடக்கிறது. இதனால், தமிழகத் தில், இரண்டு நாட்களில், கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை துவங்கி, 20 நாட்களுக்கும் மேலாகிறது. வங்கக்கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதிகள், தாழ்வு மண்டலங்கள் உருவாகினாலும், ஓரிரு இடங்களை தவிர, தமிழகத்தின் மற்ற பகுதிகளில் போதுமான மழை கிடைக்கவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம், லட்சத்தீவுகள் அருகில் உருவான, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 14,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |