ஈகரை தமிழ் களஞ்சியம் |
- இந்திய குழந்தைகள் நாள் - நவம்பர் 14
- வீடு வந்தாச்சு!
- மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் படை காவலர் உடலுக்கு ஆட்சியர் அஞ்சலி
- முருகன் செய்திகள்
- கல் முருகன்!
- ராகு-கேது தோஷம் போக்கும் தலம்!
- திருவாதிரை நட்சத்திர நாயகன்
- வியர்வை சிந்தும் வேலவனை பார்க்க வேண்டுமா?
- சர்க்கரை நோய் சந்தேகங்கள்
- நடக்கும் போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே
- ஆம்னியோடிக் ப்ளூயிட் எம்போலிசம் - Amniotic fluid embolism
- ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?
- புடலங்காய் மிளகூட்டல்!
- இந்தியர்கள் விரும்பும் சாம்சங் மற்றும் நோக்கியா
- மழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு...
- டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது
- ராஜ்அருண் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
- ஈழத்தின் அவலம் - ஆன்மிகப்பின்னணி !!
- சபதம்!
- ஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது; இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- முன்னெச்சரிக்கை
- ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
- அறிமுகம் - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ரசிகன்!
- # படித்ததில் பிடித்தது #
- சென்ரியு
- எனக்கு மிகவும் பிடித்த மக்கள் திலகத்தின் 10 படங்கள்-1950-1960
- அறம் செய்ய விரும்பு..
- 'சிவாஜி என்ற மாநடிகர்'
- சேமிப்பு உங்கள் முதல் செலவு
- சபதம்!
- குழந்தைகளின் தினம்!
- தெரிஞ்சுக்கோங்க! - மம்மா நீ எங்கே இருக்கே?
- யார் இவர்?
- பி.சுசீலாவுக்கு இன்று 78வது பிறந்த நாள்
- சொன்ன சொல்லை மறந்திடலாமோ? :)
- சனிக்கோள்: நாசா வெளியிட்டது புதிய படம் !
- அறிமுகம்
- மும்பையை காப்பாத்துங்க... திரைத்துறையினரிடம் போலீசார் உருக்கம்
- ஊழல்வாதிகளின் கழுத்தில் பாறாங்கல்லை கட்டி கடலில் தூக்கி எறிய வேண்டும்: போப் பிரான்சிஸ்
- புதுச்சேரியில் புயல் கூண்டு ஏற்றம்
| இந்திய குழந்தைகள் நாள் - நவம்பர் 14 Posted: 13 Nov 2013 02:31 PM PST இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவராக இருந்ததால் குழந்தைகள் அவரை நேரு மாமா என்று அழைத்தனர். எனவே அவரது நினைவாகவும் அவரது விருப்பத்தின் பேரிலும் அவரது பிறந்த நாளான நவம்பர் 14 இந்தியக் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. உலகின் பல்வேறு அமைப்புக்களும் நாடுகளும் வெவ்வேறு நாட்களில் குழந்தைகள் நாளை கொண்டாடுகின்றன. |
| Posted: 13 Nov 2013 01:58 PM PST பெங்பெங் பெங்பெங்னு ஒரு பெங்குவின் அண்டார்டிக்காவுல இருந்துச்சாம். பெங்பெங்அநியாத்துக்கு வால்தனம் பண்ணுமாம். ஒரு நாள் அதோட அம்மாவுக்கு தெரியாம ஒரு பெரிய பனிக்கட்டில சறுக்கிக்கிட்டு கடல்ல நீச்சலடிக்கப் போயிடுச்சாம். அந்தநேரம் பாத்து ஒரு பயங்கரமான புயல் வீசுச்சாம். "அய்யோ புயல்… அய்யய்யோ புயல்"னு கத்துச்சாம். அதோட சத்தம் யாருக்குமே கேக்கல. புயல், பனிக்கட்டியை அப்படியே தூக்கிக்கிட்டு ரொம்பதூரம் போயிடுச்சாம். புயலுக்குள்ள மாட்டிக்கிட்ட பெங்பெங், அப்படியே மயக்கம்போட்டு பனிக்கட்டி மேல விழுந்துடுச்சு. ரொம்ப ... |
| மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் படை காவலர் உடலுக்கு ஆட்சியர் அஞ்சலி Posted: 13 Nov 2013 01:56 PM PST சத்தீஸ்கர் மாநிலத்தில் மவோயிஸ்டுகள் தாக்குதலில் கொல்லப்பட்ட குமரி மாவட்டத்தைச் சேர்ந்த, மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவலர் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் புதன்கிழமை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள கம்பிளார் பகுதியைச் சேர்ந்த வர்க்கீஸ் மகன் கிளைமன்ட் ஜோசப் ராஜ் (42). இவர் கடந்த 20 ஆண்டுகளாக மத்திய ரிசர்வ் போலீஸில் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திங்கள்கிழமை ... |
| Posted: 13 Nov 2013 01:53 PM PST செந்தமிழ்க் கடவுள் சேயோன் முருகனின் பெயரில் அமைந்த மூவெழுத்துக்குமே தனிச்சிறப்பு உண்டு. அது, மூன்றும் தமிழின் மூவினங்களில் அமைந்தவை என்பதுதான். (மு-மெல்லினம், ரு-இடையினம், கா-வல்லினம்) * வடநாடுகளில் முருகனை கார்த்திக் என்றே அழைக்கிறார்கள். அங்கே வேழமுகன், வேலவனின் தம்பியாகக் கருதப்படுகிறார். அங்குள்ள கதைகளின்படி பிள்ளையாருக்கு இரு மனைவியர் உண்டு. முருகன் பிரம்மச்சாரியாக கூறப்படுகிறார். * சுப்பையா, சுப்பராயலு, சுப்புடு, சுப்பண்ணா என்றெல்லாம் முருகனை அழைக்கிறார்கள் ஆந்திர, கர்னாடக மக்கள். * ... |
| Posted: 13 Nov 2013 01:52 PM PST சுமார் இருநூறு வருடங்களுக்கு முந்தைய ஒரு நாளின் பனிமூடிய விடிதயற்காலை நேரம். சிந்தை முழுக்க சிவபாலனை நிறை(னை)த்தபடி நடந்து கொண்டிருந்தார் அந்த பக்தர். "ணங்' என்று காலில் இடித்தது ஒரு கல். "ஆ' என்று அலறுவதற்கு பதில், "ஆறுமுகா' எனச் சொன்னார். மறுகணம் கல் இருந்த இடத்தில் கந்தனின் திருமுகம் தெரிய, சட்டென்று விழித்து எழுந்தார். ஆம். அத்தனையும் கனவு! வேலவனைக் கண்ட வியப்போடு, கல்லாகத் தோன்றிய கந்தன் எங்கே இருக்கிறான் எனத் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் சேர்ந்துகொள்ள, இரவு முழுக்க வேல்முருகனை நினைத்தபடி ... |
| ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Posted: 13 Nov 2013 01:50 PM PST மேற்குத் தொடர்ச்சி மலையில், குற்றாலம் பகுதியில் கைக்கெட்டான் கொம்பு என்ற சிகரத்திலிருந்து உற்பத்தியாகி வரும் அழகிய ஆறு, கரும்பால் நதி. தற்போது கருப்பா நதி என அழைக்கப்படும் அதன் கரையில் அமைந்துள்ள கவின்மிகு தலம், கடையநல்லூர். ஆதியில் அர்ஜுனபுரம், இந்திரபுரி என்றெல்லாம் இது வழங்கப்பட்டது. கருப்பா நதியின் கரையில் அமைந்துள்ள பகுதிகள் காளகேதாரவனம் எனப்பட்டன. அதன் ஒரு பகுதி வில்வவனமாகக் காட்சியளித்தது. அங்கு சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளி அருள்பாலிக்கும் இறைவன் கடைகாளீஸ்வரர். காளகேதாரநாதர் என்றும் ... |
| Posted: 13 Nov 2013 01:49 PM PST இருபத்து ஏழு நட்சத்திரங்களுள் அதி உன்னதமானதாகவும் சிவபிரானுக்கு உரியதாகவும் போற்றப்படுவது திருவாதிரை நட்சத்திரம். சிவனுக்கு உரிய நித்ய பிரதோஷ நேரத்திலும், திருவாதிரை நட்சத்திர நாளிலும் ஈசன் அபயகரத்துடன் பெருங்கருணை கொண்டு ஆருத்ரா நட்சத்திர மண்டலத்தை உலா வருவார். எனவே அசுரர்கள் இம்மண்டலத்தில் நுழைய அஞ்சுவர். தேவர்கள், அசுரர்களால் துன்புறுத்தப்படும்போது அரக்கர்களால் அண்ட முடியாத இப்புனிதமான திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுவர். ரத்தினம்போல் ஜொலிக்கும் இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையாக ... |
| வியர்வை சிந்தும் வேலவனை பார்க்க வேண்டுமா? Posted: 13 Nov 2013 01:48 PM PST நீலம் நெய்தல் நிலவி(ம்) மலரும் சுனை நீடிய சேலும் ஆலும் கழனி(வ்) வளம் மல்கிய சிக்கலுள் வேலஒண்கண்ணியினாளை ஒர்பாகன், வெண்ணெய்ப்பிரான், பாலவண்ணன், கழல் ஏத்த, நம் பாவம் பறையுமே. - திருஞானசம்பந்தர் சிவபெருமான் தன் பேரருளை வாரி வழங்கும் பொருட்டு எழுந்தருளியுள்ள கோயில்களுள் பலவகையாலும் மேம்பட்ட சீரும் சிறப்பும் பொலியத் திகழ்வது சிக்கல். பெருமைகள் பல பெற்ற எம்பெருமான் ஆட்சி செய்யும் தலம் என்றாலும், அவரே மகிழும் வண்ணம் ஒரு நிகழ்வு இத்தலத்தில் காலம்காலமாக நிகழ்ந்து வருகிறது. அது என்ன என்பதைப் ... |
| Posted: 13 Nov 2013 01:45 PM PST சர்க்கரை நோய் பரம்பரை வியாதியா? ஆம். பெற்றோர் இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்தால், குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு 80 சதவீதம் உண்டு. பெற்றோரில் ஒருவருக்கு இருந்தால் 50 சதவீத வாய்ப்பு உண்டு. பெற்றோருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்ட வயதில் இருந்து 5 முதல் 10 ஆண்டுகள் முன்பாகவே குழந்தைகளுக்கு வந்து விடுகிறது. சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன? அதிக சிறுநீர்ப் போக்கு. அதிக தாகம் மற்றும் பசி. மூன்று மாதங்களில் முன்பு இருந்த எடையில் இருந்து 10 சதவீதம் வரை, உடல் எடை இழப்பு. ஆறாத புண், அதிக தூக்கம், ... |
| நடக்கும் போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே Posted: 13 Nov 2013 01:43 PM PST நம்மில் பலர் நடக்கும் போது மொபைல் போனைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும், எஸ்.எம்.எஸ். அனுப்ப டெக்ஸ்ட் அமைப்பதனையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது எவ்வளவு ஆபத்தானது என்று நியூயார்க் நகரில் இயங்கும் ஸ்டோனி புரூக் என்னும் அமெரிக்க பல்கலைக் கழகம் ஆய்வு நடத்தியது. 20 வயது இளைஞர்களாக 33 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்விற்கு உட்படுத்தியது. மொபைல் போன்களைப் பயன்படுத்துவதில் திறமைசாலிகளாய் இருக்கும் ஆண், பெண்க@ள தேர்ந்தெடுக்கப்பட்டனர். 30 அடி தூரத்தில் உள்ள ஓர் இடத்தை இலக்காகக் கொண்டு முதலில் ... |
| ஆம்னியோடிக் ப்ளூயிட் எம்போலிசம் - Amniotic fluid embolism Posted: 13 Nov 2013 01:42 PM PST பிரசவத்தின் போது கர்ப்பப்பையில் அல்லது ரத்தக்குழாய்களில் காயம் ஏற்பட்டாலோ, குழந்தையை சுற்றியுள்ள "ஆம்னியோடிக் ' எனப்படும் திரவம் அல்லது குழந்தையின் செல்கள், மொக்கோனியம் போன்றவை ரத்தத்தின் வழியே தாயின் நுரையீரலுக்கும், உடலின் பிறபகுதிகளுக்கும் சென்றுவிடும். அதைத்தான் ஆம்னியோடிக் ப்ளூயிட் எம்போலிசம் என்பர். அப்படி செல்வதால் மூச்சுத் திணறல், உடலில் ரத்தம் கட்டுதல் போன்ற பல பிரச்னைகளை ஏற்படும். இதுபோன்ற சமயங்களில் உடனடியாக தீவிர சிகிச்சை அவசியம். இல்லையெனில் உயிருக்கே ஆபத்தாகிவிடும். இதற்கு ... |
| ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு? Posted: 13 Nov 2013 01:38 PM PST அதாவது நீங்கள் சிகரெட் பிடித்த 3வது நிமிடமே அதில் உள்ள நிகோட்டின் எனப்படும் பொருள், மூளைக்குச் சென்று, "டோபமைன்' என்பதை சுரக்கச் செய்கிறது. இது உற்சாகத்தை தரக்கூடிய பொருள். உதாரணமாக நாம் நல்ல உணவு உண்ணும்போதோ அல்லது நமக்குப் பிடித்த நண்பர்களுடன் இருக்கும்போதோ நமக்கு ஏற்படும் உணர்வுக்குக் காரணம் இதே "டோபமைன்'தான். ஆனால் சிகரெட் பிடிக்கும்போது எவ்வளவு எளிதில் இந்த டோபமைன் உருவாகிறதோ அவ்வளவு வேகமாகவே இது குறைந்துவிடும். அதனால்தான் அடுத்தடுத்து என்று புகைபிடிக்கத் துவங்கி, எளிதில் அதற்கு அடிமையாகிவிடுகின்றனர். இதைத் ... |
| Posted: 13 Nov 2013 01:36 PM PST தேவையான பொருட்கள்: புடலங்காய் - 250 கிராம், மிளகு - ஆறு, தேங்காய் துருவல் - ஒரு கப், சீரகம்- ஒரு தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - ஒன்று, வேக வைத்த பாசிப் பருப்பு - ஒரு கப், கடுகு - அரை தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: புடலங்காயை பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். மிளகு, தேங்காய் துருவல் மற்றும் சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை, சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, மிக்சியில் அரைத்து, வேக வைத்த புடலங்காயுடன் கலந்து, ... |
| இந்தியர்கள் விரும்பும் சாம்சங் மற்றும் நோக்கியா Posted: 13 Nov 2013 01:33 PM PST இந்தியாவில், மக்கள் அதிகம் விரும்புவது சாம்சங் மற்றும் நோக்கியா மொபைல் போன்களே என டி.ஆர். ஏ. Trust Research Advisory (TRA) எனப்படும் நிறுவனத்தின் ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. சென்ற ஆண்டுகளில், முதல் இடத்திலிருந்த நோக்கியா வினை, தற்போது சாம்சங் கைப்பற்றியுள்ளது. இந்த வகையில், பிளாக்பெரி 52 ஆவது இடத்தைக் கொண்டுள்ளது. சாம்சங் மொபைல் போன் தேர்வில் முதல் இடத்தைப் பிடித்திருந்தாலும், நுகர்வோருக்கான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் சந்தையில் இதன் இடம் 54 ஆவது இடம் ஆகும். கடந்த மூன்று ஆண்டுகளாக, தொலைபேசி ... |
| மழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... Posted: 13 Nov 2013 01:31 PM PST மழையை விரும்பாதோர், ரசிக்காதோர் யாரும் இருக்க முடியாது. ஆனால், மாநகரப் போக்குவரத்து நெரிசலில், மேடு பள்ளமான சாலையில் வாகனம் ஓட்டுவதே சிரமம் என்ற நிலையில், மழை நேரத்தில், கூடுதல் அசவுகரியங் களும், விபத்து அபாயமும் சேர்ந்து கொள்கின்றன. மழை நேரத்தில், வாகனம் ஓட்டும்போது, பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்... மழை பெய்ய தொடங்கும், முதல் சில மணி நேரங்கள், வாகன ஓட்டிகளுக்கு மிகவும் ஆபத்தானவை. சாதாரண நாட்களில், என்ஜின் ஆயில், கிரீஸ் ஆகியவை சாலையில் சிந்தி, படிந்திருக்கும். அதனுடன், ... |
| டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது Posted: 13 Nov 2013 01:06 PM PST லக்னோ : டீ விற்பனையாளர், நாட்டின் பிரதமராக முடியாது என்ற சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளரின் கருத்து, அக்கட்சியிலேயே பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லி, மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் மற்றும் விரைவில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி, மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி சுமத்தி வரும் அர்த்தமற்ற ... |
| ராஜ்அருண் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! Posted: 13 Nov 2013 10:39 AM PST இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்பு நண்பர் ராஜ்அருண் அவர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்! |
| ஈழத்தின் அவலம் - ஆன்மிகப்பின்னணி !! Posted: 13 Nov 2013 09:37 AM PST ஈழம் தொடர்பாக எனக்கும் நோவுகள் உண்டு ! பல நாட்கள் பிரார்தித்திருக்கிறேன் பிரார்தித்தும் வருகிறேன் ஆனாலும் இப்பிரச்சினையின் அடிப்படை ஒன்று உண்டு ! அது ஈழமே முதல் மனிதனின் பூமி ! எனவே ஒட்டுமொத்த மனித இனத்தின் பாவங்கள் அதனை பிடித்து வாட்டுகிறது முதல் மனிதனான ஆதாம் தேவர்களை விட உயர்ந்தவனாக கடவுளால் தேவலோகத்தில் படைக்கப்பட்டு தேவர்கள் அனைவரும் அவருக்கு பணிவிடை செய்யும்படியாக கடவுளால் பணிக்கப்பட்டார் ! அதனை ஏற்றுக்கொள்ள மனமில்லாத தேவர்களில் சிலர் ஆதாமின் நிமித்தமாகவே கடவுளை எதிர்த்து அசுரர்களாக ... |
| Posted: 13 Nov 2013 09:15 AM PST சின்னப்பட்டி கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்குக் குழந்தை குட்டி ஏதுமில்லை. மனைவி மட்டுமே இருந்தாள். அவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வர். இப்படித்தான் ஒருநாள் அவர்களிடையே வாய்ச்சண்டை ஏற்பட்டது. பெரிய காரணம் ஏதுமில்லை. வீட்டுக் கதவை யார் மூடுவது என்பதில் நீயா, நானா? என்று சண்டை போட்டுக் கொண்டனர். அன்று இரவு, அந்த விவசாயி சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். கதவு தாழிடப்படாமல் இருந்ததால், வேகமாக வீசிய காற்றினால், கதவு திறந்து கொண்டது. கதவை யார் மூடுவது என்ற பிரச்னை அவர்களிடையே ... |
| ஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது; இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ Posted: 13 Nov 2013 09:03 AM PST இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப் பட்டது. உலக தமிழ் பேரமைப்பு சார்பில் கடந்த 8-ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விழா கடந்த 10-ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று காலை 500க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் நினைவு முற்றம் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவர் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக கூறி வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறையினரால் ... |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 13 Nov 2013 08:51 AM PST NO more time for love throwing myself into my careers right now plz regret the rumours guys.......... - --------------------------------- >Nayanthara Kurian |
| Posted: 13 Nov 2013 07:44 AM PST முன்னெச்சரிக்கை! நாம் நம்முடைய அன்றாட செயல்களில், நிகழ்ச்சிகளில் ஒரு சிலருடைய செய்கைகளால் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம்.. அதுபோன்ற சூழ்நிலைகளில் எவ்வாறு நடந்துகொண்டால் மறுபடியும் ஏமாறுவதை தவிர்க்கலாம் என்று சிந்தித்து முன்னெச்சரிக்கையாக செயல்படுவோம். அதனை நம்முடன் பழகுவோருடன் பகிர்ந்துகொண்டிருப்போம். இந்த பதிவின் மூலம் நம் ஈகரை நண்பர்கள் அனைவரும் பயன்படும் வகையில் நாம் ஒவ்வொருவரும் பின்பற்றும் ஒருசில முன்னெச்சரிக்கை செய்கைகளையும் பகிர்ந்துகொள்ளலாமே என்பது எனது ஆவல். ஒன்றொன்றாய் சேர்த்தால் ... |
| ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! Posted: 13 Nov 2013 07:42 AM PST ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! வாயுள்ள பிள்ளை வழிதேடிக் காணும் அவசர ஊர்தி ! நம்பினோர் கைவிடப்பட்டார் நிதி நிறுவனம் ! முடிவு என்பது தொடக்கம் ஆகும் போர் ! உள்ளங்கை நெல்லிக்கனி போல இந்தியா சிங்களன் உறவு ! கெட்ட வேலி பயிரை மேயும் காவலர் ! சட்டியிலிருந்தால்தானே அகப்பையில் வரும் முட்டாள் ! பிறரை நேசிப்பது சரி முதலில் நேசி உன்னை ! புறங்கூறுவோனிடம் எச்சரிக்கை அரசியல்வாதி ! தவிப்பில் மகன் இறந்ததும் தெரிந்தது அப்பன் அருமை ! இயல்பாய் ... |
| அறிமுகம் - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ரசிகன்! Posted: 13 Nov 2013 07:33 AM PST ஈகரை தமிழ் களஞ்சியம் - இணைய தளத்திற்கு நன்றி . உங்களின் அன்பான வரவேற்பிற்கும் நன்றி என்னடைய பெயர் S .வினோத் . பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணி புரியும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர ரசிகன் .மக்கள் திலகத்தை நேரில் பல முறை சந்திக்கும் வாய்ப்பை பெற்றவன் . அவருடைய படங்கள் எல்லாமே சிறப்பு அம்சங்கள் உள்ள காவியங்கள் . அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . அன்புடன் வினோத் |
| Posted: 13 Nov 2013 07:32 AM PST # படித்ததில் பிடித்தது # (சிரிக்காமல் படிக்கவும்) அன்பே, நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப்பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். "அலுவலகத்தில் இருக்கிறேன், நீல்கிரீஸில் சாயங்காலம் சந்திக்கலாம்" என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன். சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்து அமர்ந்த உனது தகப்பனை பார்த்தபோது "எருமை மாட்டிற்கு மான்குட்டி எப்படி பிறந்தது?" என்ற பழைய கவிதை நினைவிற்கு வந்தது. மான்குட்டி ... |
| Posted: 13 Nov 2013 07:30 AM PST கடும் போட்டி சினிமா - டாஸ்மாக் வசூல் |
| எனக்கு மிகவும் பிடித்த மக்கள் திலகத்தின் 10 படங்கள்-1950-1960 Posted: 13 Nov 2013 07:04 AM PST எனக்கு மிகவும் பிடித்த மக்கள் திலகத்தின் 10 படங்கள்-1950-1960 நாடோடி மன்னன் மதுரை வீரன் குலேபகாவலி தாய்க்கு பின் தாரம் புதுமை பித்தன் மகாதேவி சர்வதிகாரி மர்மயோகி அலிபாபாவும் 40 திருடர்களும் என் தங்கை |
| Posted: 13 Nov 2013 06:20 AM PST HOW many of you remember this??? அறம் செய்ய விரும்பு.. ஆறுவது சினம் இயல்வது கரவேல் ஈவது விலக்கேல் உடையது விளம்பேல் ஊக்கமது கைவிடேல் எண் எழுத்து இகழேல் ஏற்பது இகழ்ச்சி ஐயமிட்டு உண் ஒப்புரவு ஒழுகு ஓதுவது ஒழியேல் ஒளவியம் பேசேல் |
| Posted: 13 Nov 2013 06:19 AM PST 'சிவாஜி என்ற மாநடிகர்' தொடர்-1 ஈகரையில் என்னை அன்புடன் வரவேற்ற அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி! புது அறிமுகமான நான் ஈகரையில் நடிகர் திலகத்தின் ஒவ்வொரு படங்களைப் பற்றியும் அனைவரும் அறியும் வண்ணம் ஒரு நெடுந்தொடர் ஆரம்பித்துள்ளேன். 'சிவாஜி என்ற மாநடிகர்' என்று இத்தொடருக்குப் பெயர் இட்டுள்ளேன். தங்கள் மேலான ஆதரவையும், கருத்துக்களையும் எதிர்நோக்குகிறேன். அனைவருக்கும் என் நன்றி! 'பராசக்தி 'வெளி வந்த நாள்: 17-10-1952 மூலக்கதை: எம்.எஸ். பாலசுந்தரம் திரைக்கதை, வசனம்: கலைஞர் ... |
| Posted: 13 Nov 2013 05:08 AM PST காசு சேமிப்பது பலருக்கும் கடினமான காரியம். செலவைக் குறைப்பதுதான் சேமிப்பின் முதல் படி. வருவாயைப் பெருக்குவது இரண்டாம் படி. செலவு செய்வது எளிது. நுகர்வு உடனடி மகிழ்ச்சி அளிப்பதால் செலவு நம்மை ஈர்க்கிறது. ஆக, செலவைக் கட்டுப்படுத்துவதுதான் சேமிப்பின் முதல் படி. ஒரு எளிய வழியைப் பயன்படுத்திப் பார்க்கலாம். அன்றாடம் வரவு -செலவு கணக்கு எழுதுவது. இதில் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று, நம் வீட்டில் உள்ள அனைவரும் இதில் ஈடுபடுவதால், குடும்பப் பொருளாதாரம் எல்லாருக்கும் தெரிய வரும். அதனால், அவரவரின் செலவுகள் ... |
| Posted: 13 Nov 2013 04:43 AM PST சின்னப்பட்டி கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்குக் குழந்தை குட்டி ஏதுமில்லை. மனைவி மட்டுமே இருந்தாள். அவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வர். இப்படித்தான் ஒருநாள் அவர்களிடையே வாய்ச்சண்டை ஏற்பட்டது. பெரிய காரணம் ஏதுமில்லை. வீட்டுக் கதவை யார் மூடுவது என்பதில் நீயா, நானா? என்று சண்டை போட்டுக் கொண்டனர். அன்று இரவு, அந்த விவசாயி சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். கதவு தாழிடப்படாமல் இருந்ததால், வேகமாக வீசிய காற்றினால், கதவு திறந்து கொண்டது. கதவை யார் மூடுவது என்ற பிரச்னை ... |
| Posted: 13 Nov 2013 03:46 AM PST நவம்பர் 20ம் தேதி அனைத்துலக குழந்தைகள் நாளாக ஐக்கிய நாடுகளும், யுனிசெப் அமைப்பானது கடந்த 1954 டிசம்பர் 14ம் தேதி முதல் கொண்டாட ஆரம்பித்துள்ளது. உலகம் முழுக்க இருக்கற குழந்தைகளுக்கிடையில் புரிந்துணர்வையும், பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அத்துடன் ஜூன் முதல் தேதியும் பன்னாட்டுக் குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. அப்படியிருந்தும் நாம் மட்டும் ஏன் நவம்பர் 14ம் தேதியை குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறோம் தெரியுமா குட்டீஸ்... அதுக்கு முழுக்க, முழுக்க நம்ம ... |
| தெரிஞ்சுக்கோங்க! - மம்மா நீ எங்கே இருக்கே? Posted: 13 Nov 2013 03:43 AM PST வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| Posted: 13 Nov 2013 03:37 AM PST அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ... |
| பி.சுசீலாவுக்கு இன்று 78வது பிறந்த நாள் Posted: 13 Nov 2013 03:35 AM PST இசைக்குயில் பி.சுசீலாவுக்கு இன்று (நவம்பர் 13) 78வது பிறந்த நாள். அவரைப் பற்றிய சில நினைவுகள்... ஆந்திரமாநிலம் விஜயநகரம் அருகில் உள்ள புலம்பாக்கத்தில் 1935ம் ஆண்டு நவம்பர் 13ந் தேதி பிறந்தார். அப்பா முந்தாராவ் அந்த பகுதியில் புகழ்பெற்ற வழக்கறிஞர், அம்மா கவுத்தாரம் வங்கி அதிகாரி. செல்வாக்குள்ள குடும்பதில் பிறந்த சுசீலாவுக்கு 5 சகோதரிகள், 3 சகோதரிகள். உடன் பிறந்தவர்கள் படித்து அரசு வேலைக்கு செல்லும்போது சுசீலாவுக்கு மட்டும் பாட்டு மீது காதல். ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாராம் வெங்கடசாமி ... |
| Posted: 13 Nov 2013 03:22 AM PST மற்றும் ஒரு பழைய அருமையான பாடல் |
| சனிக்கோள்: நாசா வெளியிட்டது புதிய படம் ! Posted: 13 Nov 2013 03:10 AM PST வாஷிங்டன்: சனி கோள் குறித்து, இதுவரை காணப்படாத காட்சிகள் கொண்ட ஒரு புதிய படத்தை அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா வெளியிட்டுள்ளது. இதில், அதன் உப கிரகங்களான 7 சந்திரன்கள் மற்றும் வளையங்கள், பூமி, வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகியவை காணப்படுகின்றன. நாசாவின், காசினி விண்கலம் அனுப்பி உள்ள, சனிக்கோள் குறித்த 141 படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து காசினி விண்கல குழுவைச் சேர்ந்த கரோலின் பெற்கோ கூறுகையில், '. காசினி விண்கலத்தில் இருந்து கிடைத்துள்ள படங்கள் வியக்கத்தக்கவையாக உள்ளன,' என்று ... |
| Posted: 13 Nov 2013 02:52 AM PST கடந்த 2,3 வருடஙகளா கத்தான் கணினியில் உள்ள விஷயங்களை பார்கிறேன். இதில் எனக்கு அனுபவம் கிடையாது . தவறு இருந்தால் மன்னிக்கவும். உங்களுடன் இணைந்ததுக்கு மகிழ்ச்சி. |
| மும்பையை காப்பாத்துங்க... திரைத்துறையினரிடம் போலீசார் உருக்கம் Posted: 13 Nov 2013 01:14 AM PST மும்பை : 'மும்பையில், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளதற்கு, பாலிவுட் சினிமாக்களில் காட்டப்படும், ஆபாச, அதிரடிக் காட்சிகளே காரணம்' என, காவல் துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது போன்ற குற்றங்களை தடுக்க, சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடிக்க வேண்டாம் என, பாலிவுட் நடிகர்களிடம், மும்பை போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மகாராஷ்டிராவில், முதல்வர், பிருத்விராஜ் சவான் தலைமையிலான, காங்., ஆட்சி செய்து வருகிறது. நாட்டின் வர்த்தக தலைநகர் எனப்படும், மும்பையில், குற்றங்களின் எண்ணிக்கை, ... |
| ஊழல்வாதிகளின் கழுத்தில் பாறாங்கல்லை கட்டி கடலில் தூக்கி எறிய வேண்டும்: போப் பிரான்சிஸ் Posted: 13 Nov 2013 01:13 AM PST தலைமை போப் ஆக பதவியேற்ற நாளில் இருந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வரும் போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் வாடிகன் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களிடையே தோன்றி சொற்பொழிவு ஆற்றினார். வாடிகன் அரண்மனை மற்றும் கத்தோலிக்க தேவாலயங்களில் பெருகி வரும் ஊழல்களை பற்றி விமர்சிக்கும் வகையில் அவர் பேசியதாவது:- பைபிளின் புதிய ஏற்பாட்டில் உள்ள லூக்கா அத்தியாயத்தில் ஏமாற்றுவேலை இருக்கும் இடத்தில் கடவுளின் தூய ஆவி இருக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே தான், ஏமாற்றுக் காரர்களை பூமியில் விட்டுவைப்பதைக் ... |
| புதுச்சேரியில் புயல் கூண்டு ஏற்றம் Posted: 13 Nov 2013 01:04 AM PST புதுச்சேரி : (13-11-13) - வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. - தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்துள்ளதால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார். நவம்பர் 14ம் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், நவம்பர் 15ம் தேதி சென்னையில் கனமழை பெய்யும் எனவும், ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |