Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இலங்கை காமன்வெல்த் மாநாடு: மொரீஷியஸ் நாடு புறக்கணிப்பு

Posted:

போர்ட் லூயிஸ்: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை, மொரீஷியஸ் நாடு புறக்கணித்துள்ளது.இலங்கையில், வரும், 15ம் தேதி, காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் மாநாடு துவங்குகிறது. இலங்கையில் நடக்கும், மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி, கனடா நாட்டு பிரதமர், ஸ்டீபன் ஹார்பர், இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளார். தமிழக தலைவர்களின் வற்புறுத்தலால், பிரதமர் மன்மோகன் சிங்கும், இந்த மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துள்ளார். இந்த வரிசையில் தற்போது, மொரீஷியஸ் நாடும் சேர்ந்துள்ளது. இது குறித்து, மொரீஷியஸ் பிரதமர் நவின் சந்திர ராம்கூலம், அந்நாட்டு ...

சுப்ரீம் கோர்ட் நீதிபதி மானபங்கம் செய்ததாக பெண் வழக்கறிஞர் புகார்

Posted:

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி வகித்த ஒருவர், ஓட்டல் அறையில் தன்னை, மானபங்கம் செய்ததாக, பெண் வழக்கறிஞர், பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுகுறித்து விசாரிக்க, மூன்று பேர் அடங்கிய குழுவை, தலைமை நீதிபதி, சதாசிவம் அமைத்துள்ளார்.கோல்கட்டாவில் உள்ள, 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஜுடீசியல் சயின்ஸ்' கல்வி நிலையத்தில், சட்டத்தில் பட்டப்படிப்பு இறுதித் தேர்வை முடித்த, பெண் அவர். டில்லியில் உள்ள, சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவரிடம், பயிற்சி பெறுவதற்காக, கல்லூரி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். ஆறு மாதங்கள் பயிற்சி பெற ...

எப்.ஐ.ஆர்., பதிவு செய்வது கட்டாயம்: மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை

Posted:

புதுடில்லி: 'போலீஸ் ஸ்டேஷன்களில் அளிக்கப்படும் புகார்களுக்கு, கட்டாயமாக, முதல் தகவல் அறிக்கையான, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட வேண்டும். எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட்டில், தலைமை நீதிபதி, பி.சதாசிவம், உட்பட, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் அமைப்பு சட்ட, 'பெஞ்ச்' முன், நேற்று, ஒரு முக்கிய வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: போலீஸ் ஸ்டேஷன்களில், புகார் அளிக்கப்பட்டதுமே, அது தொடர்பாக, சம்பந்தபட்ட போலீஸ் அதிகாரிகள், எப்.ஐ.ஆர்., பதிவு ...

காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் 27ம் தேதி தீர்ப்பு: ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆஜராக உத்தரவு

Posted:

புதுச்சேரி : தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில், வரும், 27ம் தேதி, தீர்ப்பு வழங்கப்படுகிறது. புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி இதை அறிவித்துள்ளார். "குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் உட்பட, 23 பேரும், அன்று, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும்' உத்தரவிட்டுள்ளார்.காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர், சங்கரராமன், 2004 செப்., 3ல், காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் வளாகத்திலேயே கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை, சுப்ரீ"ம் கோர்ட் உத்தரவுப்படி, 2009 முதல், புதுச்சேரி ...

'காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்காதது ஏன்?'

Posted:

குர்கான்:"காமன்வெல்த் நாடுகள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்காததற்கு, பல காரணங்கள் உண்டு,'' என, மத்திய வெளியுறவு அமைச்சர், சல்மான் குர்ஷித் கூறினார். மத்திய வெளியுறவு அமைச்சரும், காங்., கட்சியை சேர்ந்தவருமான, சல்மான் குர்ஷித் கூறியதாவது: இலங்கையில் நடக்கும், காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில், பிரதமர் பங்கேற்காததற்கு, பல்வேறு காரணங்கள் உண்டு. எங்கள் கட்சியை சேர்ந்த, மத்திய அமைச்சர்கள் சிலர், மாநாட்டில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக சட்டபையிலும், இது தொடர்பாக, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ...

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வலியுறுத்தி தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில் மீண்டும் தீர்மானம்

Posted:

சென்னை: 'தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில், பெயரளவிற்கு கூட, இந்தியா சார்பில், யாரும் கலந்து கொள்ளக் கூடாது' என, மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில், நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழக முதல்வராக, ஜெயலலிதா மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு, 2011, டிசம்பர், 15ம் தேதி, முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்காக, சட்டசபை சிறப்பு கூட்டம் நடந்தது. அதன்பின், இலங்கை பிரச்னைக்காக, நேற்று, சிறப்பு கூட்டம் நடந்தது.மாலை, 6:00 மணிக்கு, கூட்டம் துவங்கியதும், முதல்வர் ...

குர்ஷித்துக்கு எதிராக தி.மு.க., போராட்டம் இப்போது இல்லை: கருணாநிதி திட்டவட்டம்

Posted:

சென்னை : "தி.மு.க.,வினர் போராட்டம், எப்போது, எந்த இடத்தில் என்பது குறித்து, பின்னர் முடிவெடுக்கப்படும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.தி.மு.க., எம்.எல்.ஏ., க்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், சுப.தங்கவேலன், மைதீன்கான், அனிதா ராதாகிருஷ்ணன், ஜெ.அன்பழகன் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டம் காலை, 11:15 மணிக்கு துவங்கி, 12:15 மணிக்கு முடிந்தது. கூட்டம் முடிந்த பின், நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:நம் தமிழ்ச் சொந்தங்கள் இலங்கையில் ...

"அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடுவதா': சி.பி.ஐ.,க்கு அமைச்சர் சிதம்பரம் மிரட்டல்

Posted:

புதுடில்லி : அரசின் கொள்கை முடிவுகளில், விசாரணை அமைப்புகள் தலையிடுவது சரியல்ல,'' என, மத்திய நிதியமைச்சர், சிதம்பரம் கூறினார். சி.பி.ஐ., அமைப்பின், பொன் விழா கொண்டாட்டத்தையொட்டி, டில்லியில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது:மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான, சி.ஏ.ஜி.,யும், மற்ற விசாரணை அமைப்புகளும், தங்களின் வரம்பை மீறி செயல்படுகின்றன. அரசின் கொள்கை முடிவுகளில், விசாரணை அமைப்புகள் தலையிடுவது சரியல்ல. கொள்கை ரீதியாக எடுத்த முடிவுகளை, குற்ற நடவடிக்கையாக மாற்றக் கூடாது. கொள்கை முடிவுகளுக்கு, விசாரணை அமைப்புகள் மதிப்பளிக்க ...

தி.மு.க., வேட்பாளருக்கு டெபாசிட் கிடைக்க கூடாது: அ.தி.மு.க.,வினருக்கு கட்சி தலைமை உத்தரவு

Posted:

'ஏற்காடு சட்டசபை இடைத்தேர்தலில், வெற்றி மட்டும் இலக்கல்ல; எதிர்த்து போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர் உட்பட, அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு, அக்கட்சி தலைமை, உத்தரவு பிறப்பித்து உள்ளது.ஏற்காடு சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பெருமாள், பதிவான ஓட்டுகளில், 58.06 சதவீதம் பெற்று வெற்றி பெற்றார்.அவரது மறைவைத் தொடர்ந்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல், இம்மாதம், 9ம் தேதி துவங்கியது. தி.மு.க., சார்பில், மாறன் ...

அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் ராஜினாமாவா?தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு

Posted:

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க மறுத்து, இலங்கைக்கு வெளியுறவு அமைச்சரை அனுப்பும், மத்திய அரசை கண்டித்து, அ.தி.மு.க., எம்.பி.,க்கள், ராஜினாமா செய்ய உள்ளதாக, நேற்று பரவிய திடீர் தகவலால், அரசியல் வட்டாரமே ஆடிப் போனது.இந்த தகவல், உண்மையா, பொய்யா என்ற விசாரணையில், மத்திய உளவு அமைப்பினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். "இலங்கை தலைநகர், கொழும்புவில் நடக்கும், காமன்வெல்த் நாடுகள் மாநாட்டுக்கு, பிரதமர் செல்வதில்லை; இந்தியாவின் சார்பில், வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்பார்' என, மத்திய அரசு அறிவித்தது. இந்த முடிவை எடுப்பதற்கு முன், தமிழக அரசிடம், எந்த ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™