Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Posted: 12 Nov 2013 11:58 AM PST

"தங்கம் கண்டுபிடிக்க சுரங்கம் தோண்டிய
நமது வீரர்களை எல்லாம்
மன்னர் சிறையில் அடைத்துவிட்டாராமே?

ஆமாம் அவர்கள் தோண்டிய சுரங்கம்
அரண்மனையின்
தங்க கஜானாவில் போய் முடிந்திருக்கிறது

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Posted: 12 Nov 2013 11:52 AM PST

போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ? அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் ...

மருத்துவ சிரிப்பு வெடி

Posted: 12 Nov 2013 11:40 AM PST

டாக்டர்

உங்கள் கணவர் பூரண ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். தூக்க மாத்திரைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

மனைவி

அவருக்கு எத்தனை மாத்திரை தரவேண்டும்?

டாக்டர்

மாத்திரை அவருக்கல்ல, உங்களுக்கு.

கல்யாண வயசில் ஒரு பிள்ளை!

Posted: 12 Nov 2013 11:19 AM PST

ம ல்லேஸ்வரம் எட்டாவது குறுக்குச் சந்தில் நடைப் பயிற்சியாகப் போய்க்கொண்டு இருந்தேன். கன்னிகாபரமேஸ்வரி கோயிலை நெருங்கிய போது, யாரோ என் முதுகைத்தொட்டதை உணர்ந்து, திரும்பிப் பார்த்தேன். ஒரு பெரியவர், ''நீங்கள் தமிழர்தானே?'' என்று கேட்டார். ''ஆமாம். எப்படிக் கண்டுபிடிச்சீங்க?'' என்று புன்னகைத்தேன். ''உங்களை மூணு நாலு தடவையா கவனிச்சிட்டு வரேன். உங்க முகத்தைப் பார்த்து, நீங்க தமிழராகத்தான் இருக்கணும்னு யூகிச்சேன். உங்க சொந்த ஊர் எது?'' என்று கேட்டார். ''வட ஆற்காடு ஜில்லா வேலூர் எனக்குப் பூர்விகம். ...

ஒரு நிமிடக் கதைகள்

Posted: 12 Nov 2013 11:17 AM PST

ஜனனம்! "பேரன் பிறந்ததை மகிழ்வோடு பதிவுசெய்ய வந்திருக்கேன்" என்று சொல்லியும், எனக்குப் பழக்கமான அந்த அலுவலர், "கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க. இவர் வேலை முடிஞ்சு போனப்புறம் உள்ளே வாங்க!" என்று கண்டிப்பாகச் சொல்லி, என்னைத் துரத்தாத குறையாக அனுப்பிவிட்டார். 'சரிதான்... என் முன்னாடி லஞ்சம் வாங்கக்கூச்சம் போல!' என்று நினைத்தபடி வெளியே வந்தேன். வெளியே நின்றிருந்த ஒருவர், "என்ன சார், டெத் கேஸைப் பதிவு பண்ணப் போனவர் இன்னும் உள்ளேதான் இருக்காரா?" என்று கேட்டதும், என் நெஞ்சில் சாட்டை அடி விழுந்தது. மகிழ்ச்சி ...

மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே?

Posted: 12 Nov 2013 11:07 AM PST

பகவானை ஆராதிப்பதை, ஒரு கடமையாக, சாஸ்திரங்கள் சொல்கின்றன. இறைவனை வழிபடாத நாளெல்லாம் வீணான நாள் என்பர். அதனால், காலையிலோ மாலையிலோ இதற்கென்று, சிறிது நேரம் ஒதுக்கி, இறைவனை வழிபட்டால், சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். ஆனால், பூஜை செய்வதற்கென்று, சில விதிமுறைகள் உண்டு. பூஜையின் போது சந்தனம், குங்குமம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் மற்றும் வெற்றிலை பாக்கும் வைக்க வேண்டும். கடைசியில், கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். இதில், உங்களுக்கு சவுகரிய குறை ஏற்பட்டு, சிலவற்றை பூஜையில் வைக்க முடியா விட்டால், ...

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது தீர்மானம்

Posted: 12 Nov 2013 11:06 AM PST

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். அதன்பின்னர் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசுகையில், பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சனம் செய்தார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் காங்கிரஸ் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ...

ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட்

Posted: 12 Nov 2013 11:05 AM PST

கூகுள் நிறுவனத்தின், அடுத்த ஆண்ட்ராய்ட் பதிப்பு 4.4. கிட்கேட் எனப் பெயரிட்டுக் கிடைக்கும் என சில வாரங்களுக்கு முன்னர் எழுதி இருந்தோம். இப்போது அக்டோபர் 31 அன்று, வெளியான, கூகுள் நெக்சஸ் 5 ஸ்மார்ட் போனுடன், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாகியுள்ளது. மேலும், கூகுள் நிறுவனம், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்துத் தகவல்களை வெளியிட்டுள்ளது. கூகுளின் ஆண்ட்ராய்ட் கிட் கேட், அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் இயங்கக் கூடியதாய் இருக்கும். இதன் மூலம், ஆண்ட்ராய்ட் பயன்படுத்த விரும்பும், ...

உலகச் செய்திகள்!

Posted: 12 Nov 2013 10:59 AM PST

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

சிவாஜி வாசுதேவன் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்

Posted: 12 Nov 2013 09:51 AM PST

எனது பெயர் வாசுதேவன். ஊர் பழுப்பு நிலக்கரி புகழ் நெய்வேலி. நான் பரம சிவாஜி ரசிகன். நடிகர் திலகத்தைப் பற்றி நானறிந்தவற்றை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள பிரியப் படுகிறேன். பாரத நாட்டிற்கே உலக அளவில் பெருமை சேர்த்த ஒப்பற்ற உன்னத மாநடிகர் அல்லவோ நடிகர் திலகம்! இணையத்தில் நடிகர் திலகத்தைப் பற்றிய பல பதிவுகள் இட்டுள்ளேன். ஓரளவிற்கு பரிச்சயமானவனும் கூட. ஈகரையில் இணைந்ததற்கு பெருமையும், உவகையும் கொள்கிறேன். தங்கள் மேலான ஆதரவை நாடுகிறேன். நன்றி!

தமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது

Posted: 12 Nov 2013 09:43 AM PST

சென்னை : தமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது. புதிய அமைச்சர் ஒருவர் பொறுப்பேற்று, 10 நாட்கள் நிறைவு பெறுவதற்குள், மீண்டும் அமைச்சரவையில் இலாகாக்கள், மாற்றி அமைக்கப் பட்டுள்ளன. அமைச்சர் ராமலிங்கத்திற்கு இறக்கமும், மூத்த அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஏற்றமும் கிடைத்துள்ளது. தமிழக முதல்வராக, மூன்றாவது முறையாக, ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு, அவரது அமைச்சரவையில், இடம்பெறும் அமைச்சர்கள், அவ்வப்போது மாற்றப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால், 'எப்போது வேண்டுமானாலும், பதவி பறிபோகலாம்' ...

தரவேற்றம்

Posted: 12 Nov 2013 09:12 AM PST

என்னிடம் உள்ள புத்தகங்களை தரவேற்றம் செய்வது எப்படி? தெரிந்தவர்கள் விளக்கவும்.
- தவமணி

300 திரையரங்குகளில் வெளியாகிறது இரண்டாம் உலகம்!

Posted: 12 Nov 2013 09:05 AM PST

\ - ஆர்யா, அனுஷ்காவை வைத்து செல்வராகவன் இயக்கியிருக்கும் மெகா பட்ஜெட் படம் 'இரண்டாம் உலகம்'. இப்படம் தமிழகம் முழுவதும் 22ம் தேதி 300 திரையரங்குகளில் ரிலீஸாகிறது - தமிழகத்தில் வெளியாகும் அதேநாளில்தான் ஆந்திராவிலும் ரிலீஸாகிறது. தெலுங்கில் இப்படம் 'வர்ணா' என்ற பெயரில் வெளியாகிறது. ரசிகர்களுக்கு இப்படம் மிகவும் த்ரில்லான அனுபவமாக படம் இருக்க வேண்டும் என்று திரைக்கதையில் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறாராம் செல்வராகவன்.

வேலன்:-வீடியோ ஸ்மார்ட் ஷோ

Posted: 12 Nov 2013 09:01 AM PST

நமது கணிணியில் புகைப்படங்களை வீடியொ படங்களாக மாற்ற விண்டோஸ் மூவி மேக்கர் பயன்படுத்துவோம்.அதுபோல நம்மிடம் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை முழுநீள வீடியோ படங்களாக மாற்ற இந்த சின்ன் சாப்ட்வேர் பயன்படுகின்றது. 35 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிற்க்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்தது்ம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள இம்போர்ட் கிளிக் செய்திட உங்களுக்கான டிரைவ் தேர்வு செய்து உங்கடைய புகைப்படம் மற்றும் வீடியோவினை தேர்வு செய்யவும். இதில் மேற்புறம் ...

அம்மா சமையல் அற்புதம்..!

Posted: 12 Nov 2013 07:51 AM PST

எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் தொடர்பு உண்டு . எல்லோரும் சமையலில் சேர்க்கும் பொருட்களைத்தான் அம்மாவும் சேர்க்கிறார்கள் என்றாலும் அவர் அன்போடு சமைக்கிறார், பாசத்தோடு சமைக்கிறார், மகிழ்ச்சியோடு சமைக்கிறார், நம் குழந்தை நன்றாக சாப்பிட வேண்டும் , ஆரோக்கியத்தை தர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு சமைக்கிறார்……! -- எல்லோரும் சமைக்கும் போது சுவைக்காக உப்பு சேர்க்கிறார்கள் , அம்மாவோ சமைக்கும் போது உப்போடு , அன்பை சேர்க்கிறார் ,அதனால் குழந்தைக்கு அன்பு சேருகிறது , பாசத்தை சேர்க்கிறார் ...

சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்

Posted: 12 Nov 2013 07:49 AM PST

  (ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன். கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். இவரது வீடு சென்னை பெருங்குடியில் இருக்கிறது. இடப் பெயர்களின் ஆய்வில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் இவர், சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை முதலில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சமர்பித்தார். தனது ஆய்வுகளை முடிப்பதற்காக தன் அரசுப் பணிக்கு 2ஆண்டுகள் விடுமுறை சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.) 1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் ...

"ராமு அடைந்த அதிர்ச்சி "

Posted: 12 Nov 2013 07:42 AM PST

"ராமு அடைந்த அதிர்ச்சி " ஒரு நாள் அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய ராமு, தனது நாய் பக்கத்து வீட்டு முயலை வாயில் கவ்வி ஓடி வருவதைப் பார்த்து திடுக்கிட்டான். நாய் வாயில் சிக்கிய முயல் இறந்து விட்டதை உறுதி செய்த ராமு, பக்கத்து வீட்டாருடன் வீண் வாதத்தை தவிர்க்க விரும்பினான்.  அதற்காக .நாயின் வாயில் இருந்த முயலை பிடுங்கிய ராமு முதலில் அதை குளிக்க வைத்து, பின் யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் பக்கத்து வீட்டு கூண்டில் போட்டு விட்டான். பிறகு மனதில் இப்படி நினைத்துக் கொண்டான், 'அதிக குளிர் ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

Posted: 12 Nov 2013 07:35 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

உதவி - வீட்டில் விளக்கு பூஜை செய்ய விளக்கம் தேவை

Posted: 12 Nov 2013 06:58 AM PST

வணக்கம் ஒரு சிறு உதவி வீட்டில் விளக்கு பூஜை செய்யும் முறை பற்றி அறிந்தவர்கள் கூறவும்

டெலி மார்கெட்டிங் கால் தடுப்பது எப்படி

Posted: 12 Nov 2013 06:19 AM PST

 டெலி மார்கெட்டிங் கால் தடுப்பது எப்படி   கல்யாண ஆசை...  பெண் : வணக்கம். ----- பேசுகிறேன். நான் தங்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும் கூறுங்கள்?  இளைஞர் : என்னைக் கல்யாணம் செஞ்சுக்கறியா...? பெண் : ( அதிர்ச்சியுடன்...) சார், நீங்கள் தவறான எண்ணுக்கு அழைத்து விட்டீர்கள் என எண்ணுகிறேன். நம்பரை மறுமுறை சரி பார்த்து அழைக்கவும். நன்றி...  இளைஞர் : இல்லை, நான் சரியாகத் தான் அழைத்திருக்கிறேன். சொல், என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா..?   பெண் : மன்னித்துக் கொள்ளுக்கள் சார், எனக்கு உங்களைத் ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -71)

Posted: 12 Nov 2013 06:01 AM PST

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

புகழ்பெற்ற பெண்மணிகள் - அன்றும் இன்றும்

Posted: 12 Nov 2013 05:48 AM PST

இணையத்தில் இருக்கும் சில தகவல் தளங்களை, Library of Congress என்னும் அமைப்பு தேர்ந்தெடுத்து, வருங்காலத்திற்கு இது அதிகம் பயன்படும் என்ற முத்திரையுடன், தன் சேமிப்பில் பாதுகாத்து வைக்கிறது. (இந்த அமைப்பிற்கும் நம் நாட்டு அரசியல் கட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை.) எதிர்கால சந்ததிகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள் அடங்கிய தளங்கள் இவ்வாறு சேவ் செய்து வைக்கப்படுகின்றன. அவ்வாறு சேவ் செய்து வைக்கப்பட்ட தளம் ஒன்று என் பார்வையில் பட்டது. இந்த தளத்திற்குச் சென்றால், மானிடச் சரித்திரத்தில், அன்றும் ...

நவம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...

Posted: 12 Nov 2013 05:29 AM PST

11-11-2013-வண்ணத்திரை இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/9vnb8ouh7pkf8up/Vannatherai+11.11.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 11-11-2013-கம்ப்யூட்டர் மலர் டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/cg66pupeoiwyc6f/Computermalar11.11.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 8-11-2013-பாலஜோதிடம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/uz1lk055akp7d76/Bala-Jothidam+8.11.13%28OrathanaduKarthik.blogspot.com%29%282%29.pdf 8-11-2013-தினகரன் ...

அபுதாபியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கங்காதரனுக்கு ஆதரவாக லண்டனில் போராட்டம்

Posted: 12 Nov 2013 05:27 AM PST

லண்டன், நவ. 12- ஐக்கிய அரபு குடியரசின் தலைநகர் அபுதாபியில் உள்ள அல் ரபி பள்ளியில் கடந்த 32 வருடங்களாக வேலை பார்த்துக்கொண்டிருப்பவர் இ.கே. கங்காதரன். மலையாளியான இவர் அபுதாபியை சேர்ந்த ஒரு பெண்ணை கற்பழித்து விட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கற்பழிப்பு சம்பவத்தில் நான் ஈடுபடவில்லை என்று ஆரம்பம் முதல் மறுத்து வரும் கங்காதரனுக்கு, மரணதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   இந்நிலையில் அவருக்கு ஆதரவாக இந்தியா மற்றும் பிரிட்டனில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ...

கூடங்குளம் போராட்டம் : அன்றே கணித்த அய்யா வைகுண்டர்?

Posted: 12 Nov 2013 05:21 AM PST

எதிர் காலத்தைக் கணிப்பதில் வல்லவர் யாரென்றால் சட்டென நினைவுக்கு வருபவர் பிரான்ஸ் நாட்டில் பிறந்த நோஸ்ராடாமஸ்.அவர் எதிர் காலம் பற்றி கூறிய தீர்க்க தரிசனங்கள் பல நடந்துள்ளன பல நடந்து கொண்டிருக்கின்றன.அவர் தீர்க்கதரிசனத்தில் உள்ள குறைபாடு என்ன வென்றால் அனைத்து நிகழ்வுகளுமே மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நிகழ்வு நடந்தபின்புதான் அதை உணர முடிகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம்.நோஸ்ராடாமஸ் போல இந்தியாவிலும் பல தீர்க்க தரிசிகள் வாழ்ந்துள்ளனர். அவர்களுள் முக்கியமானவர் தமிழகத்தின் ...

முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?

Posted: 12 Nov 2013 05:19 AM PST

முகநூலில் என்னதான் நீங்க கருத்தா, ஸ்டேட்டஸ் போட்டாலும் அதிக லைக்ஸ் விழ மாட்டேங்குதா? டோன்ட் வொர்ரி! இதோ.. இந்த ஐடியாவை ஃபாலோ பண்ணுங்க, நீங்க போடுற ஒவ்வொரு ஸ்டேட்டஸுக்கும் லைக்ஸ் அள்ளும். ( பி.கு: இது முழுக்க முழுக்க, வளர நினைக்கும் மற்றும் வளர்ந்துவரும் ஃபேஸ்புக் எழுத்தாளர்களுக்கு மட்டுமே பொருந் தும்.) முதல்ல, உங்க ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல களையெடுக்கணும். அதாவது... யார் ஒருவர் எந்த ஸ்டேட்டஸ் போட்டாலும் 500-க்கு குறையாமல் லைக்ஸ் விழுதோ, அந்த ஆட்களை எல்லாம் நம்ம முதல்வர் மாதிரிக் கண்ணை மூடிக்கிட்டு ...

இளைச்சவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு

Posted: 12 Nov 2013 05:18 AM PST

உடல் இளைத்தவன் எள்ளு சாப்பிட்டால் உடல் தேறுவான், உடல் கொழுத்து தொந்தி போட்டவன் கொள்ளு சாப்பிட்டால் உடல் இளைப்பான் என்பதே இதன் பொருள். கொள்ளுக்கு உடலின் ஊளைச்சதை, கொழுப்பை கரைக்கும் ஆற்றல் உண்டு. சீரணத்திற்கு, வயிற்று உபாதைகளுக்கு ஏற்றது எலும்புக்கும் நரம்புக்கும் பலத்தை கொடுக்கும். உடல் பருமனால் அவதிபடுவோர் கொள்ளு சூப், ரசம் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வரலாம். கொள்ளு சூப் சளித்தொல்லையை விரட்டும். பழங்காலத்தில் இது காணம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரு சதாசிவம்

Posted: 12 Nov 2013 05:16 AM PST

இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரு சதாசிவம் அவர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

do not see idiots movie - விஜய் படம் பார்க்க வேண்டாம்

Posted: 12 Nov 2013 05:16 AM PST

நடிகர் விஜய் முட்டாளா? கூகிள் டிரான்ஸ்லேட்டரில் காண்பிக்கிறது do not see idiots movie என்று கூகிள் டிரான்ஸ்லேட்டரில் போட்டு தமிழுக்கு மொழிமாற்றம் செய்ய சொன்னால் "விஜய் படம் பார்க்க வேண்டாம்" என்று காண்பிக்கிறது. http://translate.google.com/ என்பதில் நீங்கள் do not see idiots movie என்று அடித்துவிட்டு அதை தமிழுக்கு டிரான்ஸ்லேட் செய்யுங்கள், என்ன வருகிறது என்று பாருங்கள். கூகிள் டிரான்ஸ்லேஷனில் சஜஷன்ஸ் பகுதியில் நடிகர் விஜய் எதிர்ப்பாளர்கள் யாரோ விளையாடி விட்டார்கள் போலும்!

ஆண்டவா இப்படியும் நடக்குமோ வருங்காலத்தில் "

Posted: 12 Nov 2013 05:02 AM PST

மகள் : அப்பா, எனக்கும் ஒரு பையனுக்கும் காதல்.நான் ஆஸ்திரிலேயாவில் இருக்கேன் ஆனா அவனோ லண்டன் இருக்கான். dating இணைய தளத்லே பார்த்தேன் முகநூல் மூலம் நண்பராக ஆனோம் .whatssup மூலமாக நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருப்போம்.skype  மூலம் அவன் propose பண்ணி இருக்கான். ரெண்டு மாதமாக VIBER மூலம் தொடர்பில் இருக்கிறோம்.அப்பா , உங்கள் ஆசியும் நல்வாழ்த்தும் தேவை . தந்தை.:" அப்படியா ,நிஜமாகவேவா ?குட் ,குட் (good ,good )  twitter இல் கல்யாணம் பண்ணிக்கொண்டு Tango வில் சேட்டைகள் பல செய்து amazon மூலம் குழந்தைகள் பெற்றுக்கொண்டு ...

பூர்வட்டாசனம்

Posted: 12 Nov 2013 04:50 AM PST

  செய்முறை: முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி அமர்ந்து கொள்ளவும். பின்னர் உடலை சற்று பின்புறமாக சாய்த்து கைகளை பின்புறமாக கொண்டு சென்று தரையில் ஊன்றவும். உள்ளங்கை விரல்கள் முதுகை பார்த்தபடி இருக்க வேண்டும். பின்னர் மெதுவாக இரண்டு கால்களை முட்டி வரை மடக்கி கைகளை தரையில் ஊன்றி உடலை மேலே தூக்க வேண்டும். இப்போது உடல் கைகள், கால்கள் பேலன்சாக இருப்பதை போல் இருக்கும். பின்னர் மெதுவாக கைகளை நகற்றாமல் கால்களை முன்னோக்கி படத்தில் உள்ளபடி ஊன்றவும். உடல் எடை முழுவதும் கால்கள் மற்றும் ...

அக்குள் கருமையை போக்க வழிகள்

Posted: 12 Nov 2013 04:49 AM PST

  பெரும்பாலானோரது அக்குள் கருமையாக இருக்கும். அதனால் அவர்கள் வெளியிடங்களுக்கு விருப்பமான ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணியமாட்டார்கள். அப்படியே அணிந்தாலும், கைகளை மேலே தூக்கமாட்டார்கள். ஏனெனில் அக்குள் கருமையாக இருந்தால், அது மிகவும் அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். இத்தகைய அக்குள் கருமையைப் போக்குவதற்கு நிறைய வழிகள் உள்ளன. மூலிகைகள் அனைத்தும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள் தான். இவற்றில் சில பொருட்கள் ஒருசிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துவதால், அக்குளில் பயன்படுத்துவதற்கு முன்னர், இதனை ஒருமுறை கைகளில் ...

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள்

Posted: 12 Nov 2013 04:46 AM PST

அருணாசலம் என அகத்தில் நினைத்தாலே நமக்கு ஞானப் பத்தில் சேர்க்கும் அற்புத மலையே திருவண்ணாமலை. கிரி உருவில் போற்றிய பகவான் ஸ்ரீ இரமண மகரிஷி அருணாசல மலையை நெக்குருவி பாடியுள்ளார். யுகங்கள் எத்தனை புரண்டாலும் அசையாது நிற்கும் ஞான சொரூபமாக விளங்கும் அண்ணாமலை விளங்கிறது. புராண காலம் முதல் கலியுமான இன்று வரை அழைத்து ஆற்றுப்படுத்துகிறது. அருணாசல் மலையைச் சுற்றிச் சுற்றிலும் எட்டு லிங்கள்கள் அமைந்துள்ளன. நடுவே மகாலிங்கள் அமைந்துள்ளன. அக்கினி ஸ்தம்பம் எனும்நெருப்பு மலையாக அண்ணாமலையார் வீற்றிருக்கிறார். ...

அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு,,,,,,,,,

Posted: 12 Nov 2013 04:36 AM PST

தங்களைத் தாங்களே வணங்கிக் கொள்ளும் ஒரு சம்பிரதாயம் கன்னியாகுமரியில் ஒரு சாராரிடம் உள்ளது. தன்னைத்தானே எப்படி வணங்கிக் கொள்வது? கருவறைக்குள் நிலைக்கண்ணாடியை வைத்து அதில் தெரியும் தங்கள் உருவத்தையே வணங்குகிறார்கள். அவர்கள் - அய்யா வழியினர். கன்னியாகுமரி சாஸ்தான் கோவில்விளையில் வாழ்ந்து, சரித்திரமாய் மறைந்த அய்யா வைகுண்டர் கட்டமைத்த தத்துவங்களையும், வாழ்க்கை முறைகளையும் பின்பற்றுவோரே அய்யாவழி மக்கள். மாபெரும் சமூக சீர்திருத்தவாதியாக அடையாளம் காட்டப்படும் வைகுண்டர், திருமாலின் அவதாரமாக கருதி ...

ஆனந்த்– கார்ல்சென் மோதும் உலக செஸ் 3–வது சுற்றில் வெற்றி யாருக்கு?

Posted: 12 Nov 2013 04:21 AM PST

இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்– நார்வே கிராண்ட் மாஸ்டர் மான்கஸ் கார்ல்சென் மோதும் உலக செஸ் சாம்பியன் போட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. 12 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் இரண்டு சுற்று முடிந்துள்ளது. இந்த 2 சுற்றும் டிரா ஆனது. இருவரும் தலா 1 புள்ளியுடன் சமநிலையில் உள்ளார். நேற்றைய ஓய்வு பிறகு இருவரும் மோதும் 3–வது சுற்று இன்று நடக்கிறது. இதில் கார்ல்சென் வெள்ளை நிற காய்களுடனும், ஆனந்த் கறுப்பு நிற காய்களுடனும் விளையாடுவார்கள். முதல் ...

வெந்‌நீர் குடிப்பத‌ன் ந‌ன்மைக‌ள்!

Posted: 12 Nov 2013 03:50 AM PST

சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத்தொல்லையே இருக்காது. அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது. வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது. வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது. நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால். சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகிவிடும். மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு ...

ஹையான் புயல் கோர தாண்டவம்

Posted: 12 Nov 2013 03:30 AM PST

பிலிப்பைன்சில் வரலாறு காணாத புயல்; ஹையான் புயலில் 10,000 பேர் சாவு   பிலிப்பைன்சில் வரலாறு காணாத வகையில் ஹையான் புயல் கோர தாண்டவம் ஆடியதில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காணவில்லை. மேலும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. சாலைகளில் ஆங்காங்கே சடலங்கள் கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் சோகம் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று முன்தினம் 30 ஆண்டுகளாக இல்லாத வகையில் மணிக்கு 275 கி.மீ வேகத்தில் ...

லிங்க தத்துவம்

Posted: 12 Nov 2013 02:43 AM PST

உருவம், அருவம் இரண்டுமே இணைந்த அருவுருவமாக இருக்கிறது லிங்கம். 'வடிவம்' என்ற சொல்லுக்கு மற்றொரு பொருள் 'லிங்கம்' என்பதுதான் உருவ வழிபாட்டில் தொடங்கும் போது, உள்முகப பயணம், உச்சியைத் தொடும்போது,இறைத் தன்மையை உருவமற்ற அருவநிலையில் காண்பதில்தான் முடியும். அளப்பற்றிய ஆற்றலை பன்னெடுங்காலம் தன்னுள் இருத்திக் காத்துவரும் ஆற்றல் கொண்டதுதான் லிங்கம். இக்கருத்து நவீன விஞ்ஞான யுகத்திலும் பொருந்தி வருவதைக் காணமுடிகிறது. ஆமாம், அணுசக்தி மின் நிலைய ரீ ஆக்டர்கள் லிங்க வடிவில்தான் இருக்கின்றன. ஸ்தாவர ...

பெருவுடையாருக்கு பேரபிஷேக வழிபாடு !

Posted: 12 Nov 2013 01:15 AM PST

பெருவுடையாருக்கு பேரபிஷேக வழிபாடு ! தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில், ராஜராஜன் சதய விழா, இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் திருமுறை திருவீதியுலா, பெருவுடையார், பெரியநாயகி திருமேனிகளுக்கு 36ம் ஆண்டாக பேரபிஷேகம், பெருந்தீப வழிபாடு வெகுவிமரிசையாக நடந்தது. இதில், உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று வழிபட்டனர். தஞ்சை பெரியகோவிலை கட்டிய சோழமன்னன் ராஜராஜன் சதய விழா, கடந்த, 10ம் தேதி துவங்கியது. கடந்தாண்டு சதய விழாவில், கோவில் யானை, 63 வயது வெள்ளையம்மாள், கம்பீரமாக பங்கேற்றது. ...

காவல்துறையினரிடம் ஆவணம் இன்றி சிக்கினால் இனி ஒரு SMS போதும்

Posted: 12 Nov 2013 12:45 AM PST

காவல்துறையினரிடம் ஆவணம் இன்றி சிக்கும்போது எஸ்எம்எஸ் மூலம் இனி இன்சூரன்ஸ் பற்றிய முழு தகவலையும் பெறலாம். எல்லா வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் மிக அவசியம். சில சமயங்களில் சர்வீஸ் விடும்போது, வண்டியை கழுவும்போது, ஜெராக்ஸ் எடுக்க மறந்துவிடும்போது வாகனங்களில் இன்சூரன்ஸ் பேப்பரை மீண்டும் எடுத்து வைக்க மறந்துவிடுகிறோம். இதுபோன்ற சமயங்களில் சாலைகளில் போக்குவரத்து காவல்துறையினரிடம் சிக்கினால், தர்மசங்கடமான நிலை ஏற்படும். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) அதிரடி ...

அக்டோபர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...

Posted: 12 Nov 2013 12:35 AM PST

19-10-2013-டைம் பாஸ் விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/d46z80gp63i6cib/TimePass+Vikatan+19.10.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-10-2013-இனிய உதயம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/ml3c9xy02gdgks0/Iniya-Udhayam-1.10.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 20-10-2013-ஜூனியர் விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/cc2q2ir8uh8nbf4/Junior+Vikatan+20.10.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-10-2013- ...

'மங்கள்யான்' கோளாறை சீரமைத்தது இஸ்ரோ

Posted: 12 Nov 2013 12:14 AM PST

'மங்கள்யான்' விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு இன்று அதிகாலை சரி செய்யப்பட்டு விட்டதாக இஸ்ரோ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, செவ்வாய்கிரகத் திட்டம் பற்றிய ஃபேஸ்புக் பக்கத்திலும் காலை 5.10 மணியளவில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மேலும், பூமியில் இருந்து, 100,000 கி.மீ தூரத்திற்கு மங்கள்யான் முன்னேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மங்கள்யான் விண்கலத்தில் நேற்று (திங்கள்கிழமை) சிறு கோளாறு ஏற்பட்டது. புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம், கடந்த 7 ஆம் தேதி ...

உயரப் பறக்கும் கூகுள் ப்ளஸ்

Posted: 12 Nov 2013 12:07 AM PST

இணைய தளம் வழியே சமூக சேவைகளை வழங்குவதில், கூகுள் நிறுவனத்தை அடித்துக் கொள்ள வேறு எந்த நிறுவனத்தாலும் முடியவில்லை. புயல் வேகத்தில் தன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டு, இந்த பூமியில், அனைவரின் வாழ்க்கை தடங்களைப் பதிவு செய்திடும் ஓர் தளமாக, கூகுள் தளம் இயங்கி வருகிறது. இதில் கடந்த சில மாதங்களில், கூகுள் ப்ளஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக, இணையப் பயன்பாட்டை ஆய்வு செய்திடும் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சென்ற 2011 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் சேவை, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™