Tamil News | Online Tamil News |
- மந்திரிகள் இலாகா மாற்றத்தில் ஜெ., அதிரடி தொடர்கிறது : அமைச்சர் ராமலிங்கம் பதவி இறக்கம்!
- தமிழகத்தை நெருங்குகிறது இன்னொரு புயல் ?
- அவசரமாக கூடுகிறது தமிழக சட்டசபை: மத்திய அரசுக்கு கண்டனம்?
- சுதந்திர போராட்ட வீரர்களை புறக்கணிப்பதா? மத்திய அரசு மீது நரேந்திர மோடி பாய்ச்சல்
- அத்வானி மீண்டும் ஆதாரங்களுடன் தகவல்: நேரு - படேல் 'லடாய்' உண்மையே!
- மத்திய அரசின் மாதிரி பள்ளி திட்டம்: முதல்வருக்கு கருணாநிதி விளக்கம்
- பாட்னா குண்டுவெடிப்பில் இந்து இளைஞர்கள் கைது
- 'மங்கள்யான்' நிலை நிறுத்தும் முயற்சியில் தொய்வு
- சி.பி.ஐ., மீதான அதிகாரத்தை விலக்கி கொள்ள முடியாது: பிரதமர் மன்மோகன் சிங்
- தொழில்நுட்ப உளவு பிரிவை கலைத்தது ஏன்? :முன்னாள் தளபதி வி.கே.சிங் கேள்வி
| மந்திரிகள் இலாகா மாற்றத்தில் ஜெ., அதிரடி தொடர்கிறது : அமைச்சர் ராமலிங்கம் பதவி இறக்கம்! Posted: சென்னை : தமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது. புதிய அமைச்சர் ஒருவர் பொறுப்பேற்று, 10 நாட்கள் நிறைவு பெறுவதற்குள், மீண்டும் அமைச்சரவையில் இலாகாக்கள், மாற்றி அமைக்கப் பட்டுள்ளன. அமைச்சர் ராமலிங்கத்திற்கு இறக்கமும், மூத்த அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஏற்றமும் கிடைத்துள்ளது.தமிழக முதல்வராக, மூன்றாவது முறையாக, ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு, அவரது அமைச்சரவையில், இடம்பெறும் அமைச்சர்கள், அவ்வப்போது மாற்றப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால், 'எப்போது வேண்டுமானாலும், பதவி பறிபோகலாம்' என, அச்சத்துடனே அமைச்சர்கள் வலம் ... |
| தமிழகத்தை நெருங்குகிறது இன்னொரு புயல் ? Posted: சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றால், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில், தமிழகத்திற்கு, 48 சதவீதம் மழை கிடைக்கும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான, இந்த மழைக் காலத்தில், வங்கக்கடலில் உருவாகும், காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலம் அல்லது புயலின் காரணமாக மழை பொழிவு கிடைக்கும். தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த மாதம், 21ம் தேதி, வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டதாக, சென்னை வானிலை ஆய்வு ... |
| அவசரமாக கூடுகிறது தமிழக சட்டசபை: மத்திய அரசுக்கு கண்டனம்? Posted: 'இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளும்' என, மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழக சட்ட சபை இன்று மாலை, அவசரமாக கூடுகிறது.கடந்த மாதம், 24ம் தேதி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக, இந்த விவகாரத்தில், மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதால், இன்றைய அவசரக் கூட்டத்தில், 'கடுமையான வார்த்தைகள்' அடங்கிய, கண்டன தீர்மானம், மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் எனத் தெரியவந்துள்ளது.பிரதமருக்கு எதிர்ப்பு:இலங்கையில் நடக்கும், காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதற்கு, தமிழகத்தில் ... |
| சுதந்திர போராட்ட வீரர்களை புறக்கணிப்பதா? மத்திய அரசு மீது நரேந்திர மோடி பாய்ச்சல் Posted: ஆமதாபாத் : ''வரலாற்று புகழ் வாய்ந்த பலர், குறிப்பிட்ட குடும்பத்துக்கு தொடர்பில்லாதவர்கள் என்பதற்காக, அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவைகளை, மத்திய அரசு, மறைத்துவிட்டது,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.சுதந்திர போராட்ட வீரர்களும், வரலாற்று சிறப்பு வாய்ந்தவர்களுமான, மவுலான அபுல் கலாம் ஆசாத், ஆச்சார்யா கிருபாளினி ஆகியோரின், 125வது பிறந்த தினத்தையொட்டி, குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான, நரேந்திர மோடி கூறியதாவது:அபுல் கலாம் ஆசாத், ஆச்சார்யா கிருபாளினி ஆகியோர், நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்கள். இவர்கள், ... |
| அத்வானி மீண்டும் ஆதாரங்களுடன் தகவல்: நேரு - படேல் 'லடாய்' உண்மையே! Posted: புதுடில்லி:நாட்டின் முதல் பிரதமர், ஜவகர்லால் நேருவுக்கும், முதல் உள்துறை அமைச்சர், சர்தார் வல்லபாய் படேலுக்கும் இடையே மோதல் இருந்தது என்பதை, மற்றொரு புத்தகத்தை எடுத்துக் காட்டி, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.நாடு சுதந்திரம் அடைந்திருந்த காலகட்டத்தில், பல மாகாணங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில், சர்தார் படேல் மும்முரமாக இறங்கியிருந்தார். அப்போது, ஐதராபாத் நிஜாம், தன் கட்டுப்பாட்டில் உள்ள ஐதராபாத்தை, பாகிஸ்தானுடன் இணைக்க முற்பட்டார். இதை அறிந்த மத்திய அரசு, அமைச்சரவை கூட்டத்தை கூட்டி விவாதித்த போது, ஐதராபாத்திற்கு ... |
| மத்திய அரசின் மாதிரி பள்ளி திட்டம்: முதல்வருக்கு கருணாநிதி விளக்கம் Posted: சென்னை : மத்திய அரசின், 'ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா திட்டம்' தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.அவரது அறிக்கை:தி.மு.க., ஆட்சியில், ஒப்புதல் அளிக்கப்பட்ட, மாதிரிப் பள்ளிகள், 'ராஷ்ட்ரிய மத்யாமிக் சிக்க்ஷா அபியான்' என்ற அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டம் மூலமாக, தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.தற்போது, மத்திய அரசு கொண்டு வருவது, 'ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா திட்டம்.' தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில் துவங்கப்பட்ட திட்டத்தில், தனியாருக்கு வாய்ப்பு தரவில்லை.தற்போது மத்திய அரசு நடைமுறைப்படுத்த ... |
| பாட்னா குண்டுவெடிப்பில் இந்து இளைஞர்கள் கைது Posted: பாட்னா:பாட்னா, தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக, பீகாரில், இந்து மதத்தைச் சேர்ந்த, நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்புடன் தொடர்பு உள்ளதாக, பகீர் தகவல் வெளியாகி உள்ளது.பீகார் மாநிலம் பாட்னாவில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டம், கடந்த மாதம், 27ல், நடந்தது. கூட்டம் துவங்குவதற்கு முன், மைதானத்தை சுற்றி, ஆறு இடங்களிலும், பாட்னா ரயில்வே ஸ்டேஷனிலும், தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இதில், ஆறு பேர், பலியாயினர்.இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, பீகார் மாநில ... |
| 'மங்கள்யான்' நிலை நிறுத்தும் முயற்சியில் தொய்வு Posted: சென்னை: 'மங்கள்யான்' செயற்கைக்கோளை, நான்காவது முறையாக, ஒரு லட்சம் கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்த எடுக்கப்பட்ட முயற்சியில் தொய்வு ஏற்பட்டது. செவ்வாய் கிரகத்தை ஆராயும், "மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்'திட்டத்தின் கீழ், 450 கோடி ரூபாய் மதிப்பில், "மங்கள்யான்' செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில்,"மங்கள்யான்' செயற்கைக்கோள், நவம்பர், 5ம் தேதி, விண்ணில் ஏவப்பட்டது. பெங்களூருவில் உள்ள, "பீன்யா' கட்டுப்பாட்டு மையத்திலிருந்து, "மங்கள்யான்' செயற்கைக்கோளின் நீள்வட்ட பாதையை, பல கட்டங்களாக அதிகரிக்கும் பணி நடந்து ... |
| சி.பி.ஐ., மீதான அதிகாரத்தை விலக்கி கொள்ள முடியாது: பிரதமர் மன்மோகன் சிங் Posted: புதுடில்லி : ""போலீஸ், சி.பி.ஐ., மற்றும் விசாரணை அமைப்புகள் என எல்லாமே, அரசின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கும். எக்காரணம் கொண்டும், சி.பி.ஐ., மீதான, நிர்வாக அதிகார மேற்பார்வையை, மத்திய அரசு விலக்கிக் கொள்ள முடியாது,'' என, பிரதமர், மன்மோகன்சிங் தெரிவித்துள்ளாரள். சி.பி.ஐ., அமைப்பின், 50வது ஆண்டு நிறைவு விழாவுக்காக, டில்லியில், சர்வதேச கருத்தரங்கு நடைபெறுகிறது. விஞ்ஞான் பவனில் நடைபெறும், இந்த மூன்றுநாள் கருத்தரங்கை, பிரதமர், மன்மோகன் சிங், நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:பொதுமக்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட, எந்த அமைப்பாக இருந்தாலும், அதை அரசு, தன் ... |
| தொழில்நுட்ப உளவு பிரிவை கலைத்தது ஏன்? :முன்னாள் தளபதி வி.கே.சிங் கேள்வி Posted: புதுடில்லி: ராணுவத்தில் செயல்பட்டு வந்த, தொழில்நுட்ப உளவு பிரிவை, கலைத்தது கண்டிக்கத்த தக்கது. இதன்மூலம், நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்கள் தான், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,'' என, ராணுவ முன்னாள் தளபதி, வி.கே.சிங் கூறினார்.ராணுவ முன்னாள் தளபதி, வி.கே.சிங் கூறியதாவது: ராணுவ தளபதியாக, நான் இருந்தபோது, 2010ல், ராணுவத்துக்கென, தனியாக, தொழில்நுட்ப உளவுப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, காஷ்மீர் மாநில அரசை சீர்குலைப்பதற்காக, நான் பயன்படுத்தியதாக, தவறான குற்றச்சாட்டை சிலர் கூறினர். ராணுவ தளபதி பதவியிலிருந்து, நான், ஓய்வு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 12,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |