Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கோர்ட் வளாகங்களில் 145 அரசு பஸ்கள் துருப்பிடித்து வீணாகும் அவலம்

Posted:

அரசு போக்குவரத்து துறை மெத்தனத்தால், தமிழகத்தில் உள்ள பல கோர்ட்டுகளில், 145 பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால், அரசுக்கு, 26 கோடி ரூபாய் வீணாகும் நிலை உருவாகி உள்ளது.அரசு போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் பஸ்கள், இன்சூரன்ஸ் செய்யப்படாமல் இருப்பதால், விபத்துக்குள்ளானவர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தினர் கேட்கும் இழப்பீட்டு தொகையை, கழகத்தால் தர முடிவதில்லை.அதனால், வழக்கு விசாரணையின் போது, பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிடுகிறது. அதை தவிர்க்க, அரசு போக்குவரத்து கழகத்தினர், எவ்வித மேல்நடவடிக்கையும் எடுப்பதில்லை. கடந்த சில ஆண்டுகளில், ...

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்காததற்கு மழுப்பல்

Posted:

புதுடில்லி:காமன்வெல்த் நாடுகள் மாநாட்டில் பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்து, இலங்கை அதிபர், ராஜபக்சேவுக்கு, பிரதமர், மன்மோகன் சிங், கடிதம் எழுதியுள்ளார். அதே நேரத்தில், ''காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் பங்கேற்காததற்கு, இலங்கை தமிழர் பிரச்னை மட்டும் காரணமல்ல,'' என, மழுப்பலாக, வெளியுறவு அமைச்சர், சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.உள்நாட்டு போரில் அட்டூழியம்:இலங்கையில், காமன்வெல்த் நாடுகளின் மாநாடு, இம்மாதம் 15ல் துவங்கி, 17 வரை நடக்கிறது. இலங்கையில், 2009ல், நடந்த உள்நாட்டு போரின்போது, ஏராளமான அப்பாவி தமிழர்களை, அந்நாட்டு ராணுவம், கொன்று ...

'சுதந்திரத்துக்காக போராடியவர்களை புறக்கணிக்கிறது காங்கிரஸ்': நரேந்திர மோடி ஆவேசம்

Posted:

ஆமதாபாத்: ''நாட்டை துண்டாடி, புவியியல் அமைப்பை மாற்றியது, காங்கிரஸ் தான்; நாங்கள் அல்ல. இதை, பிரதமர், உணர வேண்டும். சுதந்திரத்துக்காக போராடியவர்களை புறக்கணித்து, நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் புகழை மட்டும் பரப்புவதும், காங்கிரஸ் தான்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, ஆவேசமாக பேசினார்.மருத்துவமனை திறப்பு:குஜராத் மாநிலம், கெடா என்ற இடத்தில், சிறுபான்மையினரால் நடத்தப்படும், மருத்துவமனையை திறந்து வைத்து, அம்மாநில முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான, நரேந்திர மோடி, நேற்று பேசியதாவது:சமீபத்தில், தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய, ...

'ஜனசதாப்தி' எக்ஸ்பிரஸ் ரயில்களில் உவ்வே...: கழிவறைகள் சமையலறை ஆனது!

Posted:

கொச்சி: குறைந்த கட்டணத்தில் பயணம் செய்பவர்களுக்கான, 'ஜனசதாப்தி' ரயில்களில் உள்ள சிறிய சமையலறைகள், ரயில் பெட்டிகளில், கழிப்பறையாக இருந்தவை என்ற, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.குறைந்த கட்டணம்:நாட்டின் முன்னணி நகரங்களை இணைக்கும் வகையில், ஜனசதாப்தி என்ற பெயரில், குறைந்த கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின், முன்னும் பின்னும், ரயில் பயணிகளுக்கான, சமையல் அறை உள்ள பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.இந்த சமையல் பெட்டி, பிற ரயில்களில் உள்ளது போல், பெரியதாக, முழுநீளமாக இல்லாமல், சிறிய அளவில் இருந்ததால் சந்தேகம் அடைந்த, கேரளாவைச் சேர்ந்த, ...

தமிழக எல்லையில் குவியும் கேரள மருத்துவ கழிவுகள்

Posted:

கோவை: கேரள மருத்துவக்கழிவுகள், சாக்குகளில் அடைக்கப்பட்டு, லாரிகளில் கடத்தப்பட்டு, தமிழக எல்லையில் கொட்டப்படும், சம்பவம் தொடர்கதையாக உள்ளது.தமிழகத்தின் மேற்குப்பகுதியான கோவை மாவட்டத்திலிருந்து தடாகம், அணைகட்டிவழியாக கேரள மாநிலம் மன்னார்காடு தாலுகாவுக்கு செல்லலாம். அதே போல் மதுக்கரை, வாளையார் வழியாக பாலக்காட்டை அடையலாம். இரண்டு வழிகளும், கோவையிலிருந்து 40 கி.மீ தொலைவில் கேரளாவுக்குள் எளிதாக நுழையும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் மதுக்கரை, வாளையார் மார்க்கத்தில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. மன்னார்காடு மற்றும் பாலக்காடு இரு பகுதிகளிலுமே ...

வாடிக்கையாளர்களை கவர அசைவ ஓட்டல்களில் விலை தள்ளுபடி :கறிக்கோழி விலை சரிவு

Posted:

கறிக்கோழி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், வாடிக்கையாளர்களை கவர, மாநிலத்தின் பல பகுதிகளிலும், அசைவ ஓட்டல்கள், விலை தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. தமிழகத்தில், உடுமலைப்பேட்டை, பல்லடம், பொள்ளாச்சி, திருப்பூர், நாமக்கல் மற்றும் சேலத்தில் செயல்படும், 12,500க்கும் மேற்பட்ட பண்ணைகளில், கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.தீபாவளிக்கு பின், மாநிலம் முழுவதும், கறிக்கோழி விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. கேரளாவிலும், கறிக்கோழிக்கு, ஒரே விதமான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், அங்கு விற்பனைக்கு செல்லும், கறிக்கோழிகளின் அளவு ...

பிஞ்சிலே பழம்: கோவையில் சிறார் குற்றவாளிகள்...: கைவரிசை அதிகரிப்பால் கவலை

Posted:

கோவை:கோவையில் சமீப காலமாக வழிப்பறி, திருட்டு, கோவில் உண்டியல் உடைப்பு உள்ளிட்ட திருட்டு சம்பவங்களில் 18 வயதுக்கு உட்பட்டவர்களின் "கைவரிசை' அதிகமாகியுள்ளது. இதன் மூலம் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மீது, பெற்றோர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று போலீசார் "எச்சரிக்கை' மணி அடித்துள்ளனர்.கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தில், ஏல சீட்டு மோசடி, நிதி நிறுவன மோசடி என்று கோடிக்கணக்கில் பொருளாதார குற்றங்கள் துவங்கி, சைக்கிள் திருட்டு வரை பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. குற்ற சம்பவங்களை தடுக்க தேவையான ரோந்துப் பணி, வாகன சோதனைகளை போலீசார் ...

மகிழ்ந்து பாராட்டி பதவி தருகிறார் முதல்வர்: கருணாநிதி புகார்

Posted:

சென்னை :"என்னை தள்ளுவண்டி என்றும், விஜயகாந்தை தண்ணியிலே இருப்பவர் என்றும், சட்டசபையில் பேசியபோது, அதைக் கண்டித்து நிறுத்தாமல், முதல்வர் ஜெயலலிதா மகிழ்ந்து, பாராட்டினார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டி உள்ளார். சட்டசபையின், ஐந்து நாள் கூட்டத்தொடரில், ஒரு நாள் கூட, தி.மு.க., உறுப்பினர்கள் பேசவில்லையே என்ற கேள்வி தொடர்பாக, கருணாநிதி பதில்:வார இதழ் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையில், கருணாநிதியை தள்ளுவண்டி என்றும், விஜயகாந்த்தை தண்ணியிலே இருப்பவர் என்றும் வளர்மதியோ, செல்லூர் ராஜுவோ சொல்லியிருந்தால், இந்த அளவுக்கு ஆச்சர்யம் உண்டாகி ...

கிரிமினல்கள் வேட்பாளராக போட்டியிட தடை: மக்களை திருப்திபடுத்த சட்ட அமைச்சர் புதுமுடிவு

Posted:

புதுடில்லி: குற்றப் பின்னணி உடையவர்களை, அரசியலில் இருந்து, அடியோடு அகற்றுவதற்கான திட்டத்தை, மத்திய சட்ட அமைச்சர், கபில் சிபல் அறிவித்துள்ளார். ""இது தொடர்பாக, வரைவு மசோதா தயாரித்துள்ளேன். இந்த மசோதா, நடைமுறைப்படுத்தப்பட்டால், கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட, கொடிய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்,'' என, அவர் கூறியுள்ளார்.அரசியலில், குற்றப் பின்னணி உடையவர்களின் ஆதிக்கம், அதிகரித்து வருவதாக, பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், ஜூலை மாதம், வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை, சுப்ரீம் ...

'நான் மலாலா' புத்தகம்:பாக்., தனியார் பள்ளிகளில் தடை

Posted:

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் நாட்டில், பெண் கல்வியை மேம்படுத்த பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவியை தலிபான்கள் சுட்டதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை அளித்து உதவியது.தற்போது அவர், இங்கிலாந்து பர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்.மேலும் மலாலாவின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் மலாலாவின் பெயரும் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது.புத்தகம் வெளியிட விருப்பம்:தலிபான்களிடம் சிக்கி அனுபவ வேதனைகளை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™