Daily Thanthi |
- ஆனந்த்–கார்ல்சென் இடையிலான உலக சதுரங்க போட்டி: 2–வது சுற்றும் டிராவில் முடிந்தது
- இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக டோனிக்கு சான்றிதழ் அளித்தவர், தெண்டுல்கர் சரத்பவார் தகவல்
- காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து ரோச், பொல்லார்ட் விலகல்
- உலக டூர் டென்னிஸ்: பெடரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார், நடால்
- ரஞ்சி கிரிக்கெட் தமிழ்நாடு–மத்திய பிரதேசம் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது
- 18 சட்டசபை தொகுதிகளில் 143 பேர் போட்டி சத்தீஷ்கார் மாநிலத்தில் இன்று முதல்கட்ட ஓட்டுப்பதிவு நக்சலைட்டுகள் மிரட்டலால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
- ஆனந்த்–கார்ல்சென் இடையிலான உலக சதுரங்க போட்டி
- பிரபஞ்ச அழகியாக வெனிசூலா அழகி கேபிரிலா தேர்வு இந்திய அழகி முதல் 10 இடங்களுக்குள்தான் வர முடிந்தது
- 19-வது இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் விழா
- உலகின் மிக அதிகாரமிக்க சீக்கியர், மன்மோகன் சிங்; சீக்கிய டைரியில் தகவல்
| ஆனந்த்–கார்ல்சென் இடையிலான உலக சதுரங்க போட்டி: 2–வது சுற்றும் டிராவில் முடிந்தது Posted: 10 Nov 2013 11:32 AM PST சென்னை, ஆனந்த்–கார்ல்சென் இடையிலான உலக சதுரங்க போட்டியின் 2–வது சுற்றும் 'டிரா'வில் முடிந்தது. சதுரங்க திருவிழா 5 முறை சாம்பியன் இந்தியாவின் விசுவநாதன் ஆனந்த், உலகின் 'நம்பர் ஒன்' வீரர் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் இடையிலான உலக சதுரங்க (செஸ்) சாம்பியன்ஸ்ஷிப் போட்டி சென்னையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நேற்று முன்தினம் தொடங்கியது. தமிழக அரசின் முழுமையான ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டி 12 சுற்றுகளை கொண்டது. வெற்றிக்கு ஒரு புள்ளியும், தோல்விக்கு அரைபுள்ளியும் வழங்கப்படும். யார் முதலில் 6.5 புள்ளியை தொடுகிறார்களோ அவருக்கு உலக சாம்பியன் மகுடத்துடன், ரூ.8.4 கோடி பரிசுத்தொகையும் கிடைக்கும். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய முதல் சுற்று ஆட்டம் 16–வது காய் நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இந்த நிலையில் ஆனந்த்–கார்ல்சென் இடையிலான 2–வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. ஆனந்த் வெள்ளை நிற காயுடனும், கார்ல்சென் கறுப்பு நிற காயுடனும் களம் இறங்கினர். வெள்ளை நிற காயுடன்... செஸ் விதிப்படி வெள்ளை நிற காயை கொண்டவர் தான் முதலில் காயை நகர்த்த வேண்டும். இதன்படி 'மண்ணின் மைந்தன்' ஆனந்த் முதலில் ராஜா (கிங்) முன்வரிசையில் இருந்த சிப்பாயை (பான்) இரண்டு கட்டம் நகர்த்தி ஆட்டத்தை தொடங்கினார். ஆனந்துக்கு பிடித்த முறையில் ஆட்டம் தொடரும் என்று நினைத்த நேரத்தில் ஆனந்தே எதிர்பார்க்காத வகையில் கார்ல்சென், 'காரகன்' முறை என்று அழைக்கப்படும் மந்திரிக்கு (பிஷப்) முன் இருந்த சிப்பாயை ஒரே ஒரு கட்டம் நகர்த்தி ஆடினார். கார்ல்சென், காரகன் முறையை எப்போதாவது தான் பயன்படுத்துவார். கடைசியாக 2011–ம்ஆண்டில் இந்த பாணியை கடைபிடித்தார். அது மட்டுமின்றி இவர்கள் இருவரும் இதற்கு முன்பு நேருக்கு நேர் மோதிய 63 ஆட்டங்களில் காரகன் முறையில் ஒரு தடவை கூட ஆட்டத்தை தொடங்கியது கிடையாது. இப்படி சுவாரஸ்யமான அம்சத்துடன் 'காரகன்–சைரவன்' என்கிற முறையில் ஆட்டம் தொடர்ந்தது. 3, 4–வது நகர்த்தலில் தலா ஒரு சிப்பாயையும், 9–வது, 10–வது நகர்த்தலில் தலா ஒரு மந்திரியையும் இருவரும் விட்டுக்கொடுத்தனர். முந்தைய சுற்று போல் மந்தமாக ஆடாமல் இருவரும் கொஞ்சம் தாக்குதல் ஆட்டத்தில் இறங்கியதால், ஆட்டத்தின் போக்கு எந்த மாதிரி இருக்கும்? யார் கை ஓங்கும் என்று சதுரங்க பிரியர்கள் ஆவலுடன் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனித்தனர். ராணிக்கு ராணி அடி 11–வது நகர்த்தலில் கார்ல்சென் ஆனந்துக்கு 'செக்' வைத்தார். அதை ஆனந்த் சிப்பாயை நகர்த்தி தற்காத்துக் கொண்டார். இதன் பின்னர் 'அடிக்கு–அடி' என்கிற ரீதியில் இருவரும் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தினர். 15 முதல் 17–வது நகர்த்தலுக்குள் இவர்களிடம் இருந்த அனைத்து குதிரைகளும்(நைட்) காலியாகின. ஆனாலும் ஆனந்துக்கே சிறிது சாதகமான நிலை தென்பட்டது. இந்த சூழலில் கார்ல்சென் இன்னொரு துணிச்சலான யுக்தியை கையாண்டார். 18–வது நகர்த்தலில் அவர் தனது ராணியினால் (குயின்) ஆனந்தின் ராணிக்கும், சிப்பாய்க்கும் ஒரே நேரத்தில் குறி வைத்தார். ராணியை தனது ராணியால் வெட்டாவிட்டால் தனது சிப்பாய் ஒன்றினை இழக்க நேரும் என்பதால் ஆனந்த் ராணிக்கு ராணியை காவு கொடுத்தார். டிரா ஆனது சதுரங்க பலகையில் மிகவும் சக்தி வாய்ந்த காய் ராணி தான். அது இல்லாவிட்டால் அதன் பிறகு ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்துவது கடினம் என்பதை அனைவரும் அறிவர். ராணி வெளியேற்றப்பட்டதும், ஆட்டத்தில் அதிரடி வேகம் தளர்ந்து போனது. கொஞ்சம் ஏமாந்தாலும் தோல்விதான் என்கிற நிலையில், இருவருமே வெற்றிப்படிக்கட்டில் ஏறுவதற்கு எந்த 'ரிஸ்க்'கும் எடுக்க முன்வரவில்லை. 22 முதல் 25 வரை நகர்த்தலில் இருவரும் மாறி மாறி ஒரே மாதிரி காயை வைத்தனர். அதாவது கார்ல்சென் தனது ராஜா மூலமும், ஆனந்த் தனது யானை(ரூக்) மூலமும் ஒரே விதமான நகர்த்தலில் ஈடுபட்டனர். 30–வது காய் நகர்த்தலுக்கு பிறகே 'டிரா' செய்ய முன்வர முடியும் என்பது விதிமுறை என்றாலும், ஒரே நகர்த்தலை தொடர்ந்து மூன்று முறை செய்தாலும் டிரா செய்யலாம். இதனால் 25–வது நகர்த்தலுடன் இருவரும் பரஸ்பர டிரா செய்து கொண்டனர். 1 மணி 19 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் இருவரும் தலா 5 காய்களை வீழ்த்தி இருந்தனர். டிரா ஆனதால் தலா அரை புள்ளி வீதம் பகிர்ந்து வழங்கப்பட்டது. இதுவரை நடந்துள்ள 2 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா ஒரு புள்ளிகளை பெற்றிருக்கிறார்கள். ஓய்வு நாள் இன்று ஓய்வு நாளாகும். நாளை 3–வது சுற்று ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெறும். இதில் ஆனந்த் மீண்டும் கறுப்பு நிற காயுடனும் விளையாடுவார். வருத்தம் தெரிவித்த ஆனந்த் இரண்டாவது சுற்று முடிந்ததும் ஆனந்தும், கார்ல்செனும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது குறைவான நகர்த்தலில் சீக்கிரம் ஆட்டத்தை முடித்ததற்கு மன்னிப்பு கேட்பதாக கூறிய ஆனந்த், எதிர்வரும் ஆட்டங்களில் இன்னும் மேம்பட்ட முறையில் ஆட இருப்பதாக தெரிவித்தார். 22 வயதான கார்ல்சென் கூறுகையில், 'பலம் வாய்ந்த மற்ற வீரர்களால் ஆனந்த் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறார் என்றாலும் அவர் கடினமான வீரர் என்பதில் சந்தேகமில்லை' என்றார். 43 வயதான தமிழகத்தை சேர்ந்த ஆனந்த்தும் கார்ல்செனை பாராட்டினார். 'சில ஆண்டுகளாக கார்ல்சென் ஆடிய போட்டிகளின் முடிவை பார்த்தால் அவர் எந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறார் என்பது தெரியும். இப்போது அவர் தான் எனக்கு சவாலான எதிராளி' என்றார். image: category:Tagging: |
| இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக டோனிக்கு சான்றிதழ் அளித்தவர், தெண்டுல்கர் சரத்பவார் தகவல் Posted: 10 Nov 2013 11:28 AM PST மும்பை, இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் சரத்பவார் தனது இணைய தளத்தில் தெண்டுல்கர் குறித்து எழுதி இருப்பதாவது:– தெண்டுல்கர் சக வீரர்களுக்கும், குறிப்பாக ஜூனியர் வீரர்களுக்கும் உதவுவதை விரும்புபவர். குழுவாக அணியாக விளையாட வைப்பதில் கெட்டிக்காரர். மனிதாபமானம் மிக்கவர். தான் அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காகவே கேப்டன் பதவியை ஏற்க மறுத்தார், தெண்டுல்கர். 2007–ம் ஆண்டில் இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது நானும் லண்டனில் இருந்தேன். என்னை சந்தித்த டிராவிட் கேப்டன் பதவியில் இருந்து விலக விரும்புவதாக என்னிடம் தெரிவித்தார். ஆனால் நான் அப்படி செய்ய வேண்டாம் என்று தெரிவித்தேன். 20 ஓவர் தொடர் மற்றும் உலக கோப்பை போட்டிக்கு ஒரு ஆண்டு இருப்பதை சுட்டிக்காட்டி கேப்டனாக தொடரும் படி கோரினேன். ஆனால் அதற்கு உடன்பட மறுத்த டிராவிட், தெண்டுல்கரை கேப்டனாக்கும் படி யோசனை தெரிவித்தார். நான் தெண்டுல்கரை சந்தித்து கேப்டன் பொறுப்பை ஏற்கும்படி கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் தனக்கு விருப்பமில்லை என்று கூறிவிட்டார். அத்துடன் கேப்டன் பதவியை டோனிக்கு வழங்கும்படி பரிந்துரை செய்தார். டோனி நல்ல விக்கெட் கீப்பர், அவரால் கேப்டன் பதவியை சிறப்பாக கையாள முடியுமா? என்று கேட்டேன். அதற்கு தெண்டுல்கர், டோனி சிறந்த கேப்டனாக விளங்குவார். அதற்கு நான் பொறுப்பு ஏற்கிறேன் என்று கூறினார். இதைத்தொடர்ந்து தான் டோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். அதற்கு ஏற்ப டோனி 20 ஓவர் மற்றும் ஒருநாள் உலக கோப்பையை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததுடன் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் என்பதை நிரூபித்தார். இது தெண்டுல்கரின் தொலைநோக்கு பார்வையால் நடந்தது. தெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருக்கிறார். இருப்பினும் அவர் கிரிக்கெட்டை விட்டு தள்ளி அதிக நாள் இருக்கமாட்டார் என்று நம்புகிறேன். ஓய்வுக்கு பிறகு இளம் வீரர்கள் ஆட்டத்தை அவர் மேம்படுத்துவார். மாஸ்டர் பிளாஸ்டருக்கு எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். image: category: |
| காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து ரோச், பொல்லார்ட் விலகல் Posted: 10 Nov 2013 11:22 AM PST மும்பை, காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து கெமர் ரோச், பொல்லார்ட் ஆகியோர் விலகி உள்ளனர். கடைசி டெஸ்ட் டேரன் சேமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் வருகிற 14–ந் தேதி தொடங்குகிறது. ரோச் நாடு திரும்பினார் இந்த நிலையில் தோள்பட்டை காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் கெமர் ரோச் நாடு திரும்பி இருக்கிறார். சிகிச்சைக்காக அவர் சொந்த நாட்டுக்கு திரும்பி சென்றார். காயம் காரணமாக முதல் டெஸ்டிலும் கெமர் ரோச் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஷனோன்கேபிரியல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் இந்தியா வந்து அணியினருடன் சேருகிறார். கெமர் ரோச் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்டுகள் வீழ்த்தி தர வரிசையில் 14–வது இடத்தில் உள்ளார். இதற்கிடையில் ஆல்–ரவுண்டர் பொல்லார்ட்டும் காயம் அடைந்து இருக்கிறார். இதனால் அவர் கடைசி டெஸ்ட் மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னடைவு ஏற்கனவே முதல் டெஸ்ட் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி சொதப்பிய நிலையில் 2 வீரர்கள் காயம் அடைந்து இருப்பது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது. image: category:Tagging: |
| உலக டூர் டென்னிஸ்: பெடரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார், நடால் Posted: 10 Nov 2013 11:20 AM PST லண்டன், உலக தரவரிசையில் முதல் 8 வீரர்கள் மட்டுமே பங்கேற்ற ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதியில் நம்பர் ஒன் வீரர் ஸ்பெயினின் ரபெல் நடாலும், 7–ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் சந்தித்தனர். இரு முன்னணி தலைகள் மல்லுகட்டியதால் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு இருந்தனர். வழக்கம் போல் ஆதிக்கம் செலுத்திய நடால் 7–5, 6–3 என்ற நேர் செட்டில் பெடரரை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இந்த ஆண்டில் நடாலுக்கு எதிராக ஆடிய 4 ஆட்டங்களிலும் பெடரர் தோல்வியை தழுவியிருப்பது குறுப்பிடத்தக்கது. முதல் முறையாக இந்த பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ள நடால் இறுதி சுற்றில் ஜோகோவிச் (செர்பியா) அல்லது வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) ஆகியோரில் ஒருவரை எதிர்கொள்வார். image: category:Tagging: |
| ரஞ்சி கிரிக்கெட் தமிழ்நாடு–மத்திய பிரதேசம் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது Posted: 10 Nov 2013 11:18 AM PST இந்தூர், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2–வது சுற்றில் தமிழ்நாடு–மத்தியபிரதேச அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. ரஞ்சி கிரிக்கெட் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2–வது சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, மத்திய பிரதேச அணியை எதிர்கொண்டது. தமிழக அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 532 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பத்ரிநாத் 248 ரன்னும், பாபா அபராஜித் 118 ரன்னும் எடுத்தனர். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய மத்திய பிரதேச அணி 3–வது நாள் ஆட்டம் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்து இருந்தது. ஆட்டம் டிரா நேற்று 4–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்சில் 269 ரன்னில் ஆல்–அவுட் ஆகி பாலோ–ஆன் ஆனது. தமிழக அணி தரப்பில் அனுஷிக் ஸ்ரீனிவாஸ் 4 விக்கெட்டும், எல்.பாலாஜி 2 விக்கெட்டும், சாம், அஸ்வின் கிறிஸ்ட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பாலோ–ஆன் ஆகி தொடர்ந்து 2–வது இன்னிங்சை ஆடிய மத்திய பிரதேச அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்தது. இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. மும்பை வெற்றி மும்பை–பஞ்சாப் அணிகள் இடையிலான ஆட்டம் சண்டிகாரில் நடந்தது. முதல் இன்னிங்சில் மும்பை அணி 282 ரன்னும், பஞ்சாப் அணி 155 ரன்னும் எடுத்தன. மும்பை அணி 2–வது இன்னிங்சில் 271 ரன்கள் எடுத்தது. பின்னர் 399 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணி 2–வது இன்னிங்சில் 3–வது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து இருந்தது. கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 214 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. இதனால் மும்பை அணி 184 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூரத்தில் நடந்த குஜராத்–டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் குஜராத் அணி 320 ரன்னும், டெல்லி அணி 295 ரன்னும் எடுத்தனர். குஜராத் அணி 2–வது இன்னிங்சில் 231 ரன் எடுத்தது. இதனை அடுத்து 2–வது இன்னிங்சை ஆடிய குஜராத் அணி 3–வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 89 ரன் எடுத்து இருந்தது. கடைசி நாளான நேற்று 2–வது இன்னிங்சை தொடர்ந்து ஆடிய குஜராத் அணி 231 ரன்னில் ஆட்டம் இழந்தது. பின்னர் 257 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2–வது இன்னிங்சை ஆடிய டெல்லி அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 100 ரன் எடுத்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. டெல்லி வீரர்கள் கம்பீர் (44 ரன்), ஷேவாக் (15 ரன்) மீண்டும் ஏமாற்றம் அளித்தனர். image: category:Tagging: |
| Posted: 10 Nov 2013 11:16 AM PST ராய்ப்பூர் பதவிக்காலம் முடிவடைய இருக்கும் ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் சத்தீஷ்கார் மாநில சட்டசபைக்கு இன்றும் (திங்கட்கிழமை), வருகிற 19–ந் தேதியும் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு முதல் கட்டமாக பஸ்தார், தண்டேவடா, பிஜாப்பூர், சுக்மா, கொண்டகார், கான்கெர், நாராணன்பூர், ராஜ்நந்த்கோன் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள 18 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் 143 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 10 பேர் பெண்கள். முதல்–மந்திரி ராமன் சிங் ராஜ்நந்த்கோன் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அல்கா முட்லியார் போட்டியிடுகிறார். இவர் நக்சலைட்டுகள் தாக்குதலில் பலியான உதய் முட்லியாரின் மனைவி ஆவார். பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளரும், குஜராத் முதல்–மந்திரியுமான நரேந்திர மோடி, அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களும், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் பிரசாரம் செய்தனர். 4,142 வாக்குச்சாவடிகள் 18 தொகுதிகளிலும் மொத்தம் 29 லட்சத்து 33 ஆயிரத்து 200 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டுப்போடுவதற்காக 4,142 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 1,517 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்ததாகவும், 1,311 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றம் நிறைந்தாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளன. 13 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், மீதம் உள்ள 5 தொகுதிகளில் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையிலும் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகள் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதியில் அமைந்து உள்ளன. பஸ்தார் பகுதியில் 6 மாதங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர்கள் பேரணியில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் மூத்த காங்கிரஸ் தலைவர் வித்யாசரண் சுக்லா, சத்தீஷ்கார் மாநில காங்கிரஸ் தலைவர் நந்த்குமார் பட்டேல், நக்சலைட்டுகளுக்கு எதிராக 'சல்வா ஜுடும்' என்ற அமைப்பை உருவாக்கிய மகேந்திர கர்மா உள்ளிட்ட 27 பேர் பலி ஆனார்கள். அந்த தாக்குதலில் பலியான மகேந்திர கர்மாவின் மனைவி தேவகி கர்மா தண்டேவடா (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார். பலத்த பாதுகாப்பு அந்த பிராந்தியத்தில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் தேர்தல் கமிஷன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருக்கிறது. ஏற்கனவே தேர்தலை புறக்கணிக்குமாறு நக்சலைட்டுகள் மிரட்டல் விடுத்து உள்ளனர். இதனால் வாக்குப்பதிவுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. மாநில போலீசாருடன் 85 ஆயிரம் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வாக்குச்சாவடிகளில் 2,700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. தொலைதூர பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. கண்காணிப்பு தீவிரம் வாக்குப்பதிவின் போது ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றால், அவசர உதவிக்கு தயாராக ராய்ப்பூர் நகரில் மருத்துவ குழுவினருடன் ஹெலிகாப்டர் ஆம்புலன்சுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. சத்தீஷ்காரையொட்டிய மத்திய பிரதேசம், மராட்டியம், ஆந்திரா, ஒடிசா, ஜார்கண்ட், உத்தரபிரதேசம் மாநிலங்களின் எல்லைப்பகுதியிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதால் தேர்தல் அமைதியாக நடைபெறும் என்று நம்புவதாக சத்தீஷ்கார் மாநில டி.ஜி.பி. ராம் நிவாஸ் தெரிவித்தார். நக்சலைட்டுகள் தாக்குதல் இதற்கிடையே, ராஜ்நந்த்கோன் மாவட்டத்தில் பல்டோங்ரி என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு, தேர்தல் பணிக்காக நேற்று பிற்பகல் ஊழியர்களும், பாதுகாப்பு படையினரும் சென்றனர். அந்த கிராமத்தின் அருகே அவர்கள் சென்றபோது, சாலையில் மறைத்து வைத்திருந்த கண்ணிவெடியை நக்சலைட்டுகள் வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்திய–திபெத்திய எல்லை பாதுகாப்பு படை போலீசார் 2 பேர் காயம் அடைந்ததாகவும், உள்ளூர் சுகாதார மையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், அவர்கள் ராஜ்நந்த்கோனுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் சுக்லா தெரிவித்தார். 2–ம் கட்ட தேர்தல் சத்தீஷ்கார் மாநிலத்தில் மீதம் உள்ள 72 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 19–ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. News Category:Hot Topic Icon : News Group Category: |
| ஆனந்த்–கார்ல்சென் இடையிலான உலக சதுரங்க போட்டி Posted: 10 Nov 2013 09:01 AM PST |
| பிரபஞ்ச அழகியாக வெனிசூலா அழகி கேபிரிலா தேர்வு இந்திய அழகி முதல் 10 இடங்களுக்குள்தான் வர முடிந்தது Posted: 10 Nov 2013 08:51 AM PST மாஸ்கோ, மாஸ்கோவில் நடந்த கோலாகலப்போட்டியில் பிரபஞ்ச அழகியாக வெனிசூலா அழகி கேபிரிலா தேர்வு செய்யப்பட்டு, பட்டம் சூட்டப்பட்டார். இந்திய அழகி இதில் முதல் 10–இடங்களுக்குள்தான் வர முடிந்தது. பிரபஞ்ச அழகிப்போட்டி உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிரபஞ்ச அழகி போட்டி ரஷிய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் நடந்தது. இதில் இந்திய அழகி மானசி மொகே (வயது 23) உள்பட உலகின் 86 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர். மூன்று சுற்றுகளாக நடந்த இந்த போட்டியின் இறுதிச்சுற்று நேற்று இரவு மாஸ்கோவில் நடந்தது.
இறுதிச்சுற்றில் பிரபஞ்ச அழகியாக (மிஸ் யுனிவர்ஸ்) வெனிசூலா நாட்டின் 23 வயது மரிய கேபிரிலா இஸ்லர் வெற்றி பெற்று மகுடம் சூட்டப்பட்டார். அவருக்கு 2012–ம் ஆண்டின் பிரபஞ்ச அழகியான அமெரிக்காவின் ஒலிவியா கிரீடம் சூட்டினார். கடந்த 6 பிரபஞ்ச அழகிப்போட்டிகளில் வெனிசூலா அழகி ஒருவர் பட்டம் சூட்டப்பெறுவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. மரிய கேபிரிலா இஸ்லர், வெனிசூலா நாட்டில் உள்ள வாலன்சியா என்ற இடத்தில் 1988–ம் ஆண்டு, ஏப்ரல் 21–ந்தேதி பிறந்தார். ஆனால் மரகே என்ற இடத்தில் வசித்து வருகிறார். நிர்வாகம் மற்றும் சந்தையிடலில் பி.ஏ. பட்டம் பெற்றவர். மாடல் அழகியாக கொடிகட்டிப் பறந்து வருகிறார். அங்கு டி.வி. நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி பிரபலமாகி உள்ளார்.
பிரபஞ்ச அழகிக்கு அடுத்த நிலை அழகிகளாக (ரன்னர்–அப்) ஸ்பெயின் அழகி பேட்ரிசியா ரோட்ரிக்ஸ், ஈக்குவடார் அழகி கான்ஸ்டன்ஸா, பிலிப்பைன்ஸ் அழகி ஏரியல்லா, பிரேசில் அழகி ஜாக்லின் ஆகியோர் வந்தனர். இந்திய அழகி மானசி மொகே முதல் 10 இடங்களுக்குள் தான் இடம் பிடிக்க முடிந்தது. இந்தியா கடைசியாக 2000–ம் ஆண்டில்தான் லாரா தத்தா மூலம் பிரபஞ்ச அழகி பட்டத்தை வெல்ல முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வெனிசூலா அதிபர் வாழ்த்து புதிய பிரபஞ்ச அழகிக்கு வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ வாழ்த்து தெரிவித்து, 'டுவிட்டர்' சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர், ''கேபிரிலாவின் வெற்றி வெனிசூலாவின் வெற்றி. கடவுள் அவரை எப்போதும் வாழ்த்தட்டும்'' என குறிப்பிட்டுள்ளார். வெனிசூலா எதிர்க்கட்சித்தலைவர் ஹென்ரிக் கேப்ரிலசும், கேபிரிலாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், ''இந்த வெற்றிக்காக கேபிரிலாவுக்கு பாராட்டுகள். எப்போதுமே வெனிசூலா பெண்கள் பெருமைக்குரியவர்கள். வெனிசூலா வாழ்க'' என குறிப்பிட்டுள்ளார். image: category:Tagging:News Group Category: |
| 19-வது இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் விழா Posted: 10 Nov 2013 08:45 AM PST |
| உலகின் மிக அதிகாரமிக்க சீக்கியர், மன்மோகன் சிங்; சீக்கிய டைரியில் தகவல் Posted: 10 Nov 2013 08:37 AM PST லண்டன், சமகாலத்திய சீக்கியர்களில் உலகில் மிகவும் அதிகாரமிக்க 100 பேரின் பெயர் பட்டியல் அடங்கிய 'சீக்கியர்-100' என்ற டைரி லண்டனில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் முதலிடம் பிடித்துள்ளார். சிறந்த நன்னடத்தையும், உழைப்பும் கொண்ட மன்மோகன் சிங், உயர்ந்த சிந்தனைகளை கொண்ட அறிஞர் என்று அதில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது. திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவுக்கு 2-வது இடமும், சீக்கியர்களின் தற்போதைய மதத்தலைவர் அகால் தக்ட் சாகிப்புக்கு 3-வது இடமும், பஞ்சாப் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதலுக்கு 4-வது இடமும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கவுர் 13-வது இடத்தையும், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் 28-வது இடத்தையும், மில்கா சிங் 71-வது இடத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. image: category:Tagging:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

வெனிசூலா அழகி
அடுத்த நிலை அழகிகள் 