Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தில்லி பர்ஸ் தொழிற்சாலையில் தீ: 6 பேர் பலி

Posted: 02 Nov 2013 10:15 AM PDT

மத்திய தில்லி பகுதியில் உள்ள ஷாதிப்பூரில் இயங்கும் பர்ஸ் தொழிற்சாலை ஒன்றில் இன்று ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

57 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Posted: 02 Nov 2013 09:24 AM PDT

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் கடைசிப் போட்டியில் இந்திய அணி 57 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதை அடுத்து, தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

வெளியிலிருந்து வருபவர்கள் யாரும் உதவப் போவதில்லை: பீகார் மக்களுக்கு நிதிஷின் செய்தி

Posted: 02 Nov 2013 09:22 AM PDT

பீகாரில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று பீகாரில் சுற்றுப் பயணம் செய்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கினார்.  இதை மனதில் கொண்டு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசியபோது, "பீகாரிகளைத் தவிர

மோடியின் குணத்தைத் தெரிந்துகொண்டால் தன் பார்வையை லதா மாற்றிக் கொள்வார்: காங்கிரஸ்

Posted: 02 Nov 2013 08:30 AM PDT

மோடியின் இயல்பான முகத்தை தெரிந்துகொண்டால் லதா மங்கேஷ்கர் மோடி குறித்த தனது பார்வையை மாற்றிக் கொள்வார் என்று கூறியுள்ளது மகாராஷ்டிர காங்கிரஸ்.

பாட்னா குண்டுவெடிப்பில் இறந்தவர் குடும்பங்களை மோடி உடனே சந்தித்திருக்க வேண்டும்: சல்மான் குர்ஷித்

Posted: 02 Nov 2013 08:10 AM PDT

பாரதிய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பாட்னாவில் இன்று குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பங்கள சந்தித்து ஆறுதல் கூறினார். அவரின் செயலை விமர்சித்துள்ள வெளியுறவு

நெல்லை அருகே இளைஞர் தலை துண்டித்து கொலை: மறியல், கடையடைப்பு

Posted: 02 Nov 2013 08:01 AM PDT

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரத்தில் இரு பிரிவினரிடையே உருவான மோதலில் இளைஞர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இறந்தவரின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். கடைகள் அடைக்கப்பட்டன.

ஆந்திராவில் ரயில் விபத்து: 10 பேர் பலி

Posted: 02 Nov 2013 07:52 AM PDT

ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயநகரத்தில் போபில்லி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் விபத்துக்கு உள்ளானதில் 10 பேர் வரை பலியானதாக அஞ்சப் படுகிறது.

ரோஹித் சர்மா இரட்டை சதம்: இந்திய அணி 383/6 எடுத்து அசத்தல்

Posted: 02 Nov 2013 05:18 AM PDT

ஆஸ்திரேலிய அணியுடனான தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 383 ரன்

இலங்கையில் இருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேர் நாடு திரும்பினர்

Posted: 02 Nov 2013 04:27 AM PDT

கடந்த அக்.18ம் தேதி இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேர், இன்று நாடு திரும்பினர். காரைக்கால் வந்திறங்கிய அவர்களை கடலோரக் காவல் படை கமாண்டர் உதல் சிங், நாகை மீன்வளத் துறை இணை இயக்குனர்

கடைசி ஒருநாள் போட்டி: சதம் அடித்தார் ரோஹித் சர்மா

Posted: 02 Nov 2013 04:21 AM PDT

ஆஸ்திரேலிய அணியுடனான தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியாவின் ரோஹித் சர்மா சதம் அடித்தார்.

ஒடிசா, ஆந்திர பயணத்தை ரத்து செய்தார் மன்மோகன் சிங்

Posted: 02 Nov 2013 04:15 AM PDT

புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, ஆந்திரப் பிரதேசத்துக்கு இன்று மேற்கொள்ள திட்டமிட்டிருந்த பயணத்தை ரத்து செய்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

அரசு தேர்விற்கான அறிவரங்கம்: வேதியியல் - டால்டனின் கோட்பாடுகள்

Posted: 02 Nov 2013 04:08 AM PDT

தாதுவைத் தூய்மைப்படுத்துதல் என்பது தூள் செய்யப்பட்ட தாதுவிலிருந்து மண் வகை மாசுக்களை நீக்குவதாகும். இம்முறை தாதுவை அடர்பித்தல் அல்லது தாதுவை தூயதாக்குதல்

அமெரிக்கா ஒரு இஸ்லாமிய நாடு: ஒபாமாவின் பாதுகாப்பு ஆலோசகர் கருத்தால் சர்ச்சை

Posted: 02 Nov 2013 03:55 AM PDT

அமெரிக்க ஹோம்லாண்ட் பாதுகாப்பு ஆலோசனை கவுன்சில் துறையின் உறுப்பினர், அமெரிக்காவை ஒரு இஸ்லாமிய நாடு என்று குறிப்பிட்டு டிவிட்டரில் பதிவு செய்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கொளத்தூர்மணி கைது: வைகோ கண்டனம்

Posted: 02 Nov 2013 03:02 AM PDT

சேலத்தில் வருமான வரி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட வழக்கில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டுள்ளதற்கு

பாகிஸ்தான் தலிபான் புதிய தலைவராக காலித் நியமனம்

Posted: 02 Nov 2013 02:42 AM PDT

பாகிஸ்தான் தலிபான் தலைவராக கான் சயித் சாஜ்னா என்ற காலித் நியமனம் செய்ப்பட்டுள்ளார். சனிக்கிழமை இன்று அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதிமுக இணையதளம் சிதைப்பு

Posted: 02 Nov 2013 02:42 AM PDT

அதிமுக அதிகாரப்பூர்வ இணையதளத்தை, பாகிஸ்தானைச் சேர்ந்த இணையதள தாக்காளர்கள் அத்துமீறி நுழைந்து சிதைத்துள்ளனர்.

கோத்தபய ராஜபட்ச இந்தியா வருகை ரத்து?

Posted: 02 Nov 2013 02:32 AM PDT

இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு தமிழக அரசில் கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில் இலங்கையின்

பாட்னா குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆறுதல்: டிவிட்டரில் மோடி தகவல்

Posted: 02 Nov 2013 02:27 AM PDT

பாட்னா சென்ற நரேந்திரமோடி, பாட்னா குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தனது ஆறுதலை தெரிவித்துக் கொண்டதாக டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கோப்பையை வெல்லும் நோக்கில் இந்தியா

Posted: 02 Nov 2013 01:47 AM PDT

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் கோப்பையை வெல்லும் நோக்கில் டாஸ் வென்ற

வெங்காய லாரி டிரைவர், கிளீனரைக் கொன்று லாரியை கடத்திய கும்பல் கைது

Posted: 02 Nov 2013 01:23 AM PDT

உத்திரப் பிரதேசத்திற்கு கடந்த மாதம் வெங்காய மூட்டைகளை ஏற்றி வந்த சரக்கு லாரியைக் கடத்தித் சென்ற ஜன்பூரைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஏற்காடு இடைத்தேர்தல்: ரூ.41 லட்சம் பறிமுதல்

Posted: 02 Nov 2013 12:30 AM PDT

சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று காலை ஏற்காடு தொகுதிக்குட்பட்ட ஆச்சாங்குட்டப்பட்டியில் போலிஸார்

திருக்கோவிலூர் அருகே ரயிலை கவிழ்க்க சதி

Posted: 02 Nov 2013 12:08 AM PDT

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே தண்டாவளத்தில் பழைய ரயில் தண்டவாளங்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி நடைபெற்றுள்ளது

தெலங்கானாவுக்கு எதிர்ப்பு: தீ பந்தங்களுடன் ஆர்ப்பாட்டம்

Posted: 01 Nov 2013 11:27 PM PDT

தனி தெலங்கானாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் தீ பந்தங்கள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலி

Posted: 01 Nov 2013 11:15 PM PDT

அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார். 3 பேர் காயம் அடைந்தனர்.

காமன்வெல்த் மாநாடு: உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்- ப.சிதம்பரம்

Posted: 01 Nov 2013 11:15 PM PDT

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இசைப்பிரியா படுகொலை வீடியோ உண்மையானதுதான்: ப.சிதம்பரம்

Posted: 01 Nov 2013 10:58 PM PDT

இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டதாக சேனல் 4 வெளியிட்ட வீடியோ உண்மையானதுதான் என்று கூறினார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

கோழிக்கோடு விமான நிலையத்தில் 2.5 கிலோ தங்கம் பறிமுதல்

Posted: 01 Nov 2013 10:22 PM PDT

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ரியாத்தில் இருந்து சவூதி ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்க இலாக அதிகாரிகள்

மோடி பிரதமராக வேண்டும்: லதா மங்கேஷ்கர் ஆசை

Posted: 01 Nov 2013 10:18 PM PDT

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று பழம்பெரும் ஹிந்தி பாடகி லதா மங்கேஷ்கர் தனது விருப்பத்தை வெளியிட்டார்.

அமெரிக்க விமானத் தாக்குதல்: பாகிஸ்தானில் தலிபான் இயக்க தலைவர் உயிரிழப்பு

Posted: 01 Nov 2013 10:10 PM PDT

பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் தலிபான் இயக்கத் தலைவர் ஒருவர் உயிரிழந்தார்.

பாட்னாவில் மோடி: குண்டுவெடிப்பில் பலியானவர் குடும்பத்துக்கு ஆறுதல்

Posted: 01 Nov 2013 10:04 PM PDT

பாட்னாவில் நடைபெற்ற மோடியின் பொதுக்கூட்ட நிகழ்வில் குண்டுவெடித்தது. இதில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிப்பதற்காக மோடி இன்று காலை பாட்னா நகருக்கு

இன்று ஆஸி.-இந்தியா கடைசி ஒரு நாள் போட்டி: பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் இருக்கும்?

Posted: 01 Nov 2013 10:02 PM PDT

பெங்களூரில் இன்று இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 7ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி பகல் 1.30க்கு துவங்குகிறது. இதுவரை

விலை அதிகரிப்பு: பட்டாசு விற்பனை மந்தம்

Posted: 01 Nov 2013 09:55 PM PDT

தீபாவளியை ஒட்டி பட்டாசு விற்பனை எப்போதும் சூடுபிடிக்கும். இந்த முறை, பட்டாசு விலை குறைந்த பட்சம் 20% அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. இதனால், பெரும்பாலான கடைகளில் பட்டாசு விற்பனை மந்தமாக இருந்தது. சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 40% அளவுக்கு பட்டாசு விற்பனை குறைந்ததாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

சென்னை மெரினாவில் குடிபோதை ஓட்டுநரின் கார் மோதி 3 பேர் பலி

Posted: 01 Nov 2013 09:48 PM PDT

சென்னை மெரினாவில் லைட் ஹவுஸ் இருக்கும் வானொலி நிலைய பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் மீது குடிபோதை ஓட்டுநரின் கார் மோதி 2 பேர் பலியாயினர்.

நரேந்திர மோடி இன்று பாட்னா பயணம்

Posted: 01 Nov 2013 09:34 PM PDT

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று பாட்னாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். பாட்னாவில் அவருடைய பிரசாரக் கூட்டத்தின் போது குண்டுகள் வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் ஆறுதல் கூறச் செல்கிறார். இதை அடுத்து

கும்பகோணம் பட்டாசு ஆலை விபத்து: உரிமையாளரின் தாய் கைது

Posted: 01 Nov 2013 09:31 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை நேற்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்; 15 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து

சிவகங்கை அருகே இருசக்கர வாகனத்தில் பேருந்து மோதி தம்பதி பலி

Posted: 01 Nov 2013 09:27 PM PDT

சிவகங்கை அருகே இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானதில் தம்பதி பலியாயினர்.

ஏற்காடு: ரூ. 41 லட்சம் பறிமுதல்

Posted: 01 Nov 2013 09:05 PM PDT

சேலம் மாவட்டம் ஏற்காடு இடைத் தேர்தலை ஒட்டி, பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஆச்சாங்குட்டப்பட்டியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ராம.சிதம்பரம் என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வந்த ரூ.41 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி-வேன் மோதல்: 4 பேர் பலி

Posted: 01 Nov 2013 08:59 PM PDT

ஸ்ரீபெரும்புதூர் அருகே தேதிய நெடுஞ்சாலையில் முன்புறம் சென்ற லாரி மீது கோழிகளை ஏற்றிச் சென்ற வேன் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாயின

சேலத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: கொளத்தூர் மணி கைது

Posted: 01 Nov 2013 07:46 PM PDT

சேலத்தில் வருமான வரி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட வழக்கில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று முதல் "தினமணி சினிமா” - தனிப் பக்கம்!

Posted: 01 Nov 2013 07:37 PM PDT

தினமணி இணையத்தின் சினிமா செய்திகள்- இன்று முதல் தனிப் பக்கமாக உருவாகிறது. தினமணி இணைய வாசகர்களுக்காக சினிமா பகுதி பல்வேறு சுவையான அம்சங்களுடன் தீபாவளித் திருநாளான இன்று முதல் தனிப் பக்கமாக வருகிறது.

தினமணி- தீபாவளி சிறப்புப் பக்கம்

Posted: 01 Nov 2013 07:22 PM PDT

தினமணி- தீபாவளி சிறப்புப் பக்கத்துக்கு வாங்க... உங்க கருத்துகளை பதிவு செய்யுங்க! தினமணி தீபாவளி சிறப்புப் பக்கத்துக்குச் செல்ல...

தமிழகத்தில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு

Posted: 01 Nov 2013 04:25 PM PDT

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மத்தியில் ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயார்!

Posted: 01 Nov 2013 03:48 PM PDT

டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, நாட்டை சீரழிக்கும் மத்திய அரசுக்கு எதிராக வாக்கு எனும் அம்பை எய்த மக்கள் தயாராகி விட்டதாகக் கூறியுள்ளார்.

சுகாதாரத் துறை புதிய அமைச்சராக சி.விஜயபாஸ்கர் பதவியேற்பு

Posted: 01 Nov 2013 03:48 PM PDT

சுகாதாரத் துறையின் புதிய அமைச்சராக சி.விஜயபாஸ்கர், வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சங்கராச்சாரியார்களை சந்தித்தார் அசோக்சிங்கால்

Posted: 01 Nov 2013 03:41 PM PDT

காஞ்சிபுரத்துக்கு வருகை புரிந்த விஸ்வ இந்து பரிஷத்தின் அகில உலகத் தலைவர் அசோக்சிங்கால் சங்கராச்சாரியார்களை சந்தித்து ஆசிபெற்றார்.

இன்று சிவாலயங்களில் கங்கா ஸ்நான சிறப்பு வழிபாடு

Posted: 01 Nov 2013 03:40 PM PDT

காஞ்சிபுரத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட சிவாலயங்களில் தீபாவளியன்று கங்கா ஸ்நான சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.

தீபாவளி: காஞ்சிபுரம் கடைவீதிகளில் மக்கள் கூட்டம்

Posted: 01 Nov 2013 03:39 PM PDT

தீபாவளிப் பண்டிகையையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள கடை வீதிகளில் வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

தீ விபத்தா? தொடர்பு கொள்ள...

Posted: 01 Nov 2013 03:38 PM PDT

தீபாவளிப் பண்டிகையின்போது எதிர்பாராத தீவிபத்துகள் ஏற்பட்டால், தீத்தடுப்பு குழுவினர்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களை தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ளது.

அம்மா உணவகங்களில் இன்று காலை உணவுடன் இனிப்பு

Posted: 01 Nov 2013 03:35 PM PDT

தீபாவளி பண்டிகையையொட்டி சனிக்கிழமை (நவம்பர் 2) அம்மா உணவகங்களில் காலை உணவுடன் இனிப்பு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

பட்டாசு விபத்து: சிகிச்சை அளிக்க அனைத்து மருத்துவமனைகளும் தயார்

Posted: 01 Nov 2013 03:35 PM PDT

தீபாவளி தினத்தன்று பட்டாசு விபத்துகளில் காயமடைவோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சென்னையில் அனைத்து அரசு மருத்துவமனைகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் விடிய விடிய பட்டாசு விற்பனை

Posted: 01 Nov 2013 03:34 PM PDT

தீபாவளியை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மற்றும் தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகளில் வெள்ளிக்கிழமை (நவ.1) இரவு முதல் விடிய விடிய விற்பனை நடைபெற்றது.

ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன் பெண் தர்னா

Posted: 01 Nov 2013 03:33 PM PDT

கணவரை மீட்டுத் தரக் கோரி, ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலம் முன் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

டீசல் விலை உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு

Posted: 01 Nov 2013 03:33 PM PDT

டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டதற்கு தமிழக லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பைக்கில் இருந்து விழுந்த லாரி ஓட்டுநர் சாவு

Posted: 01 Nov 2013 03:32 PM PDT

சாலையில் நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த லாரி ஓட்டுநர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

எத்தனால் பயன்பாட்டை ஊக்குவிக்கக் கோரி நரேந்திர மோடி, ராகுல் காந்திக்கு கடிதம்

Posted: 01 Nov 2013 03:32 PM PDT

எத்தனால் பயன்பாட்டை ஊக்குவிக்க வலியுறுத்தி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

இரட்டை இலை சின்னத்தை முடக்க மனு கொடுத்தவர் சைதை துரைசாமி

Posted: 01 Nov 2013 03:32 PM PDT

தம்மீது மேயர் சைதை துரைசாமி கூறியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறானவை என்று முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

வணிக வரித் துறை அலுவலகங்களில் ஊழல் தடுப்பு போலீஸார் திடீர் சோதனை

Posted: 01 Nov 2013 03:32 PM PDT

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சங்ககிரி சாலையில் உள்ள வணிக வரித் துறை அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

மொரப்பூரில் பெண் அடித்துக் கொலை

Posted: 01 Nov 2013 03:31 PM PDT

மொரப்பூரில் வியாழக்கிழமை இரவு பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

வனச் சுழற்சிக்கு சவால் விடும் களைச் செடிகள்

Posted: 01 Nov 2013 03:31 PM PDT

கிருஷ்ணகிரி மாவட்ட வனப் பகுதிகளில் ஆக்கிரமித்துள்ள களைச் செடிகளால் வனச் சுழற்சிப் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்

Posted: 01 Nov 2013 03:31 PM PDT

ஆத்தூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முதியோர் இல்லத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினர்.

சேலத்தில் குவிந்த மக்கள் கூட்டம்

Posted: 01 Nov 2013 03:30 PM PDT

தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் கடை வீதி, பேருந்து நிலையங்களில் மக்கள் குவிந்தனர்.

ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு

Posted: 01 Nov 2013 03:30 PM PDT

ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மலைவாழ் மக்கள்மேம்பாட்டு நிதி: ஐஎன்டியூசி குற்றசாட்டு

Posted: 01 Nov 2013 03:30 PM PDT

மலைவாழ் மக்கள் மேம்பாட்டுக்காக மத்திய, மாநில அரசுகள் வழங்கிய நிதி இன்னும் முறையாகச் சென்றடையவில்லை என்று தமிழ்நாடு ஐஎன்டியூசி பொதுச்செயலாளர் வீ.கா. நல்லமுத்து குற்றம்சாட்டினார். ஏற்காட்டில் அவர் வெள்ளிக்கிழமை கூறியது:

தீ விபத்துகளைத் தடுக்க தயார் நிலையில் வீரர்கள்

Posted: 01 Nov 2013 03:29 PM PDT

கடலூர் மாவட்டத்தில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஏற்படும் தீ விபத்துகளைத் தடுக்க தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

குடிநீர் வாரிய உதவி பொறியாளர் பணியிடங்கள்: பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு

Posted: 01 Nov 2013 03:29 PM PDT

சென்னை குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சியில் காலியாக உள்ள உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுடன் தீபாவளி கொண்டாடிய அரிமா சங்கத்தினர்

Posted: 01 Nov 2013 03:29 PM PDT

சிதம்பரம் அருகே உள்ள கடவாச்சேரி அரசு நடுநிலைப் பள்ளியில் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்க நிர்வாகிகள் மாணவர்களுடன் வியாழக்கிழமை தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர். பள்ளியில் உள்ள 162 மாணவ, மாணவியர்களுக்கு இனிப்பு மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்

பண்ணை பசுமை கடைகள் மூலம் ரூ.5.81 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

Posted: 01 Nov 2013 03:29 PM PDT

சென்னையில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் இதுவரை ரூ. 5.81 கோடிக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

டிப்பர் லாரி மோதி ஒருவர் சாவு

Posted: 01 Nov 2013 03:29 PM PDT

சிதம்பரத்தில் டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி பைக்கில் சென்றவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

புயல் பாதுகாப்பு மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு

Posted: 01 Nov 2013 03:28 PM PDT

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய இருப்பதால் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் புயல் பாதுகாப்பு மையங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

Posted: 01 Nov 2013 03:28 PM PDT

தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

அறிவியல் கண்காட்சி

Posted: 01 Nov 2013 03:28 PM PDT

சிதம்பரம் கனகசபை நகரில் அமைந்துள்ள ஸ்ரீகுருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

நியமனம்

Posted: 01 Nov 2013 03:27 PM PDT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளராக டாக்டர் பி.வி.பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தீபாவளிப் பண்டிகை: சிதம்பரத்தில் குவிந்த மக்கள்

Posted: 01 Nov 2013 03:27 PM PDT

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஜவுளி மற்றும் பட்டாசு வாங்குவதற்காக சிதம்பரத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சிதம்பரம் நகருக்கு திரண்டதால் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

முதலைகள் நடமாட்ட எச்சரிக்கை:வனத் துறையினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்

Posted: 01 Nov 2013 03:26 PM PDT

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் முதலைகள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தி வனத் துறையினர் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கி அறிவுறுத்தி வருகின்றனர்.

தீவிரவாதிகள் போல் படகில் வந்த 8 பேர் பிடிபட்டனர்

Posted: 01 Nov 2013 03:26 PM PDT

கடலூர் மாவட்டத்தில ஆம்லா ஆபரேசன் என்ற பெயரில் போலீஸார் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர். கடலூர் துறைமுகத்தில் போலீஸார் நடத்திய சோதனையின் போது தீவிரவாதிகள் போல் வந்த 8 பேர் பிடிபட்டனர்.

இந்திய ரயில்களில் தீ விபத்துகளை தடுப்பது சிரமம்

Posted: 01 Nov 2013 03:26 PM PDT

இந்திய ரயில்களில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தடுப்பது சிரமம் என்றும், தீ பரவுவதை எச்சரிக்கும் கருவி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று இந்திய ரயில்வே அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.

நவம்பர் 4 மின் தடை

Posted: 01 Nov 2013 03:25 PM PDT

தீ விபத்தில் வீட்டை இழந்தவருக்கு நிவாரணம்

Posted: 01 Nov 2013 03:24 PM PDT

தீபாவளி பலகாரம் செய்த போது ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டை இழந்த சரோஜா குடும்பத்துக்கு நெய்வேலி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியன் அரசின் நிவாரண உதவிகளை வெள்ளிக்கிழமை வழங்கினார்.

கேபிள் கட்டண நிலுவை ரூ.3 கோடி: அரசு நோட்டீஸ்

Posted: 01 Nov 2013 03:24 PM PDT

அரசுக்கு செலுத்த வேண்டிய கேபிள் கட்டணப் பாக்கியை செலுத்தாத ஆபரேட்டர்களுக்கு அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது.

"தானே' வீடுகளுக்கு சிமென்ட் தட்டுப்பாடு: ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

Posted: 01 Nov 2013 03:24 PM PDT

கடலூர் மாவட்டத்தில் தானே திட்ட வீடுகள் கட்டுவதற்கு சிமென்ட் மூட்டைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பயனாளிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

இலக்கிய மன்ற விழா

Posted: 01 Nov 2013 03:24 PM PDT

சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஜி.தமிழரசன் தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் ஆர்.இளங்கோவன்

காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்த மாணவர்கள் கைது

Posted: 01 Nov 2013 03:23 PM PDT

சென்னையில் காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை வெள்ளிக்கிழமை காலை முற்றுகையிட முயற்சித்த 5 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.

தீபாவளி நேரத்திலும் திறக்கப்படாத ரேஷன் கடை

Posted: 01 Nov 2013 03:23 PM PDT

குறிஞ்சிப்பாடி அருகே தீபாவளி நேரத்திலும் ரேஷன் கடை திறக்கப்படாததால் பொருள்கள் வாங்க முடியாமல் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

தங்கம் பவுனுக்கு ரூ.152 குறைந்தது

Posted: 01 Nov 2013 03:23 PM PDT

ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) பவுனுக்கு ரூ.152 குறைந்துள்ளது. இதனையடுத்து சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ.22,888-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெவ்வேறு இடங்களில் தீ விபத்து:2 குடிசை வீடுகள் எரிந்து சேதம்

Posted: 01 Nov 2013 03:23 PM PDT

கடலூரில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குடிசைகள் எரிந்து சேதமடைந்தன

சுகாதாரத் துறை அதிகாரி தற்கொலை துணை இயக்குநர் மீது நடவடிக்கையெடுக்க கோரிக்கை

Posted: 01 Nov 2013 03:22 PM PDT

மாவட்ட மலேரியா அலுவலர் தற்கொலைக்குக் காரணமாக இருந்ததாகக் கூறி சுகாதார துணை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக்கிடம் தனித்தனியே விசாரணை

Posted: 01 Nov 2013 03:22 PM PDT

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக்கை சிபிசிஐடி போலீஸார் தனித்தனியே விசாரித்து வருகின்றனர்.

இந்திரா காந்தி நினைவு தினம்

Posted: 01 Nov 2013 03:21 PM PDT

விழுப்புரத்தில் நகர காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தீபாவளி: நெரிசலில் திணறியது திருக்கோவிலூர்

Posted: 01 Nov 2013 03:21 PM PDT

தீபாவளியை முன்னிட்டு பொருள்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் திருக்கோவிலூர் நகரில் வெள்ளிக்கிழமை குவிந்தனர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

சாலை சீரமைப்புப் பணிகளை மீண்டும் தொடங்க மாணவர்கள் வலியுறுத்தல்

Posted: 01 Nov 2013 03:20 PM PDT

திருக்கோவிலூர் அருகே இரு துறையினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக தடைபட்டுள்ள சாலை சீரமைப்புப் பணியை மீண்டும் தொடங்க வலியுறுத்தி, மாணவர்கள் திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பட்டா மாற்ற முகாம்: 5,414 பேர் மனு

Posted: 01 Nov 2013 03:20 PM PDT

செஞ்சியில் நடைபெற்ற சிறப்பு விரைவு பட்டா மாற்ற முகாமில் 5,414 பேர் மனு அளித்தனர்.

டிராக்டர் கடன் வட்டியை தள்ளுபடி செய்யக் கோரிக்கை

Posted: 01 Nov 2013 03:20 PM PDT

டிராக்டருக்காக விவசாயிகள்  வாங்கிய கடனுக்கான வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்ய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

"உயர் ரத்த அழுத்தம்: பக்கவாதத்துக்கு வாய்ப்பு அதிகம்'

Posted: 01 Nov 2013 03:19 PM PDT

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 5 சதவீதம் அதிகமாக உள்ளது சென்னை அரசு பொது மருத்துவமனை முதல்வர் டாக்டர் கனகசபை தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்றம் பெறும் மாற்றுத் திறனாளிகள்

Posted: 01 Nov 2013 03:19 PM PDT

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் இருந்தும், மற்றும் பல்வேறு திட்டங்கள் வாயிலாகவும் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

3 மணி நேரம் பழுதாகி நின்ற பேருந்து

Posted: 01 Nov 2013 03:19 PM PDT

சென்னையில் இருந்து வியாழக்கிழமை இரவு திருச்சிக்குச் சென்ற, அரசுப் போக்குவரத்துக் கழக, கும்பகோணம் கோட்ட விரைவுப் பேருந்து விழுப்புரத்தில் பழுதாகி நின்றது. இதனால் 3 மணி நேரம் பயணிகள் தவித்தனர்.

சின்னசேலம் வாரச் சந்தையில் ரூ.35 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

Posted: 01 Nov 2013 03:19 PM PDT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் வாரச் சந்தையில் வெள்ளிக்கிழமை மட்டும் ரூ. 35 லட்சம் மதிப்புள்ள ஆடுகள் விற்பனை

ஏடிஎம் மையங்கள் மூடல்: வாடிக்கையாளர்கள் தவிப்பு

Posted: 01 Nov 2013 03:18 PM PDT

திருக்கோவிலூரில் மூடிக் கிடந்த வங்கி ஏடிஎம் மையங்களால் வெள்ளிக்கிழமை வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்தனர்.

தபால் நிலையங்கள் மீது தாக்குதல்: 4 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

Posted: 01 Nov 2013 03:18 PM PDT

சென்னை தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த 4 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

மதுபானக் கூடங்களுக்கு சீல்மதுபானக் கூடங்களுக்கு சீல்

Posted: 01 Nov 2013 03:18 PM PDT

கள்ளக்குறிச்சியில் வாடகை செலுத்தாத 3 மதுபானக் கூடங்களுக்கு அலுவலர்கள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தார். கள்ளக்குறிச்சி நகரில்  12 மதுபானக் கூடங்கள் உள்ளன. இந்த மதுக்கூடங்களுக்கு நவம்பர் மாத வாடகையாக ரூ.3 லட்சம் செலுத்த வேண்டியிருந்தது.

அம்மா திட்ட முகாமில் 97 மனுக்கள்

Posted: 01 Nov 2013 03:18 PM PDT

சின்னசேலம் அருகேயுள்ள அனுமனந்தல் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "அம்மா' திட்ட முகாமில் 97 மனுக்கள் பெறப்பட்டன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™