ஈகரை தமிழ் களஞ்சியம் |
- Mega Kermq 3D மென்பொருளில் ஒரு நவீன முபரிமாண விளையாட்டு செய்வோம் (இலகு முறை)
- தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மீண்டும் காண
- ஜெயா டிவி இணைய தளத்தை முடக்கிய பாகிஸ்தான் ஹாக்கர்கள்
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
- இசைபிரியா வீடியோ போலியானதாம் - இலங்கை சொல்கிறது!
- அம்மா உணவகங்களில் இன்று காலை உணவுடன் இனிப்பு
- உபயோகமான செய்தி
- வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,
- இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
- தமிழில் சாதி நூல்கள் (19, 20 ஆம் நூற்றாண்டு)
- இந்திய மொழிகளின் முதல் நூல்கள் !
- ட்யூஷன் வைக்காட்டா கிட்னி ஃபெயிலியர் ஆயிடும்...!
- தூய தமிழ் தந்த பரிதிமாற் கலைஞர் நினைவு நாள் இன்று. வணங்குவோம் வாருங்கள்!
- "படிக்காமலேயே 104 டிகிரி வாங்கியிருக்கும் தலைவருக்கு வாழ்த்துகள்
- புலிகள் மறு உருவாக்கத்தில் உலகச் சாதனை! - சாதித்த தமிழர்
- நல்வாழ்த்துக்கள் என்றென்றும்.....
- உலக பக்கவாத தினம்
- வேலன்:-வீடியோ ப்ளிக்-video flick
| Mega Kermq 3D மென்பொருளில் ஒரு நவீன முபரிமாண விளையாட்டு செய்வோம் (இலகு முறை) Posted: 02 Nov 2013 01:15 PM PDT நாங்கள் இந்தத் தீபாவளிநாளில் ஒரு பொழுதுபோக்கு அம்சத்தை பிரயோசனமாக செலவளிப்போமா/ அதாவது 3d game ஒன்றை உருவாக்குவோம். மிக ஆறுதலாக தெளிவாக இதை தெரிந்து அறிந்து கற்றுக்கொள்வோம். இதற்குக் கம்ப்யூட்டர் பாஷை ஒன்றும் படித்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்ன முக்கிய விடயம் என்றால் நானும் இப்போதுதான் பழகத் தொடங்கியுள்ளேன் அதனால் நான் கற்பிக்க வரவில்லை கூட்டாகச் சேர்ந்து உருவாக்குவோம் அறிவாற்றலை பரிமாறிக்கொள்வோம் முதலில் 1. Google Sketchup 8 ஐ தரவிறக்கிக் கொள்ளுங்கள் அதன்மூலம் பல 3D model களை ... |
| தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மீண்டும் காண Posted: 02 Nov 2013 11:32 AM PDT http://www.techsatish.net/ என்ற இணைய தளத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. வேறு நேரங்களில் பார்க்க விரும்புபவர்களும், மீண்டும் காண விரும்புபவர்களும் கண்டு பயன் பெறலாம். |
| ஜெயா டிவி இணைய தளத்தை முடக்கிய பாகிஸ்தான் ஹாக்கர்கள் Posted: 02 Nov 2013 11:30 AM PDT ஜெயா டிவி இணைய தளத்தை முடக்கிய பாகிஸ்தான் ஹாக்கர்கள் நேற்று இரவிலிருந்து ஜெயா டிவியின் அதிகாரபூர்வமான இணைய தளங்களை பாகிஸ்தானிலிருந்து செயல்படும் கும்பல் ஓன்று முடக்கியுள்ளது இதில் ஜெயா டிவியின் ஆறு இணைய தளங்களும் அ தி மு க வின் அதிகாரபூர்வமான இணைய தளமும் முடக்கப்பட்டுள்ளது இணையதளங்கள் இதுவரையிலும் அவர்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளது |
| ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி Posted: 02 Nov 2013 10:34 AM PDT பெங்களூரு : 7வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. ஆறு போட்டிகளின் முடிவில், தொடர் 2-2 என சமநிலை வகித்தது. ஏழாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று நடந்தது. "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் ... |
| இசைபிரியா வீடியோ போலியானதாம் - இலங்கை சொல்கிறது! Posted: 02 Nov 2013 10:28 AM PDT இசைபிரியா கொலை செய்யப்படுவதற்கு முன்பு இராணுவத்தினரால் இழுத்துச் செல்லப்பட்டதாக சேனல்-4 வெளியிட்ட வீடியோ போலியானது என்று இலங்கை கூறியுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இசைபிரியா, இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது கொல்லப்பட்டதாக இலங்கை அரசு இதுவரை கூறி வந்தது. ஆனால், அவரை ராணுவ வீரர்கள் பிடித்து இழுத்துச் சென்ற வீடியோ பதிவை சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டது. இதன்மூலம் இலங்கை அரசின் போர்க்குற்றத்திற்கு தற்போது புதிய ஆதாரம் கிடைத்திருப்பதால், அந்நாட்டில் காமன்வெல்த் மாநாடு ... |
| அம்மா உணவகங்களில் இன்று காலை உணவுடன் இனிப்பு Posted: 02 Nov 2013 10:17 AM PDT தீபாவளி பண்டிகையையொட்டி சனிக்கிழமை (நவம்பர் 2) அம்மா உணவகங்களில் காலை உணவுடன் இனிப்பு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. - இது குறித்து சென்னை மாநகராட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது: - தீபாவளியை முன்னிட்டு சனிக்கிழமை சென்னை மாநகராட்சியில் உள்ள 200 அம்மா உணவகங்களும் வழக்கம் போல் செயல்படும். தீபாவளி பண்டிகையையொட்டி 200 அம்மா உணவகங்களிலும் காலை சிற்றுண்டி சாப்பிட வரும் பொதுமக்களுக்கு சிற்றுண்டியுடன் இனிப்பு வழங்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் ... |
| Posted: 02 Nov 2013 09:50 AM PDT உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்.... ஒருநாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்..... ======================================== நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான, ~~~பாஸ்போர்ட் ~~~ஓட்டுனர் உரிமம், ~~~பாண் கார்டு, ~~~வோட்டர் ஐடி, ~~~ரேஷன் கார்டு, ~~~வங்கி பாஸ்புக், ~~~ஏ. டி. எம் கார்டு முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள தபால் பெட்டியில் போட்டு விடவும். அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும். உதவும் மனப்பான்மை கொண்ட, நல்ல உள்ளங்கள் ... |
| வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,, Posted: 02 Nov 2013 08:45 AM PDT ![]() |
| Posted: 02 Nov 2013 08:42 AM PDT தீபாவளி நல்வாழ்த்துக்கள் ದೀಪಾವಳಿ ಹಬ್ಬದ ಶುಭಾಷಯಗಳು దీపావళి శుభాకా౦క్షలు ദീപാവലി ആശംസകള് शुभ दिवाली /दिवाळीच्या हार्दिक शुभेच्छा દીવાળી મુબારક শুভ দীপাবলীর প্রীতি ও শুভেচ্ছা ଦୀପାବଳିର ଅନେକ ଶୁଭେଛା शुभ दिपावली की मंगलमय शुभ-कामना ਤੁਹਾਨੂੰ ਦਿਵਾਲੀ ਦੀਆਂ ਬਹੁਤ ਬਹੁਤ ਵਧਾਈਆਂ ਹੋਣ Deepavali Greetings |
| தமிழில் சாதி நூல்கள் (19, 20 ஆம் நூற்றாண்டு) Posted: 02 Nov 2013 07:57 AM PDT `சாதியம் என்பது இந்தியச் சமூக அமைப்பில் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலவி வருகின்ற வாழ்க்கை முறையாகும். இந்தியச் சமூக அமைப்பில் சாதிகள் தோன்றிய காலம் எது என்று வரையறுப்பது ஆய்வாளர்களிடம் விவாதப் பொருளாகவே உள்ளது. தொழில் பிரிவினையே சாதிகளாக மாறி வந்தன என்றும், நான்கு வர்ணங்களே சிதைந்து சாதிகளாயின என்றும், நிலவுடை மைக் காலகட்டமே சாதிகளின் தோற்றத்திற்கு காரணம் என்றும் பல்வேறு கருத்துகள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றன. ஆயினும் உற்பத்தி உறவுகளுடன் தொடர்புடைய சாதியம், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ... |
| இந்திய மொழிகளின் முதல் நூல்கள் ! Posted: 02 Nov 2013 05:18 AM PDT இந்திய மொழிகளின் முதல் நூல்கள் விவரம்: மொழி நூல் நூற்றாண்டு வகை [/tr][tr]தமிழ் தொல்காப்பியம் கி.மு. 4 இலக்கணம் ஹிந்திசரப்பா (சித்தர்) இன் தோகாகோச கி.பி. 7-8 இலக்கியம் பெங்காலி சர்யாபதா கி.பி. 8-12 இலக்கியம் அஸ்ஸாமிஸ் சர்யபதா புத்த சித்தாச்சாரியார்கள் இயற்றியது. கி.பி. 8-12பாடல்கள் கன்னடம் கவிராஜ மார்க்கம் கி.பி. 9 இலக்கணம் காஷ்மீரி அபிநவகுப்தரின் தந்ரசார கி.பி. 1015 இலக்கியம்ஸிந்தி சரணர்களின் காகூன் கி.பி. 1050-1350 இலக்கியம் தெலுங்கு நன்னய பட்டரின் பாரதம் கி.பி. 11 தழுவல் இலக்கியம் மராத்தி ... |
| ட்யூஷன் வைக்காட்டா கிட்னி ஃபெயிலியர் ஆயிடும்...! Posted: 02 Nov 2013 01:25 AM PDT - காய்கறிக் கடையில வேலை பார்த்தவரை, உன் பட்டாசுக் கடையில் வேலைக்கு வைத்தாயே... எப்படி வேலை செய்கிறார்? - அதை ஏன் கேட்கிறே? பழைய ஞாபகத்துலே, பட்டாசில் தண்ணீர் தெளித்து விடுகிறார்! - -ஜோ.ஜெயக்குமார், - --------------------------------------------- - அவரை போலி டாக்டர்னு எதை வைத்துச் சொல்றீங்க? - கிட்னி ஃபெயில் ஆயிடுச்சுன்னு சொன்னா, "ஏன் ட்யூஷன் வைக்கலியா?'ன்னு கேட்கிறாரே? - -பர்வீன் யூனுஸ், - -------------------------------------- - ஏன், அவனை "தீயா வேலை செய்யாதே குமாருன்னு' ... |
| தூய தமிழ் தந்த பரிதிமாற் கலைஞர் நினைவு நாள் இன்று. வணங்குவோம் வாருங்கள்! Posted: 02 Nov 2013 12:20 AM PDT பரிதிமாற் கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், ஜூலை 6, 1870 - நவம்பர் 2, 1903) ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றிவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரியர் என்று அழைக்கப்பட்ட ... |
| "படிக்காமலேயே 104 டிகிரி வாங்கியிருக்கும் தலைவருக்கு வாழ்த்துகள் Posted: 01 Nov 2013 11:02 PM PDT தலைவருக்கு ஜுரம் வந்ததால, தொண்டர்கள் தொல்லை தாங்கலே! - ஏன், என்னாச்சு? - "படிக்காமலேயே 104 டிகிரி வாங்கியிருக்கும் தலைவருக்கு வாழ்த்துகள்'ன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டாங்க! - -என்.தீபன், - ----------------------------------------------- - என் பையன் குண்டுசட்டியில குதிரை ஓட்டறான்..! - அதிசயமா இருக்குதே! என் பையனுக்கும் அதைக் கத்துக்குடுக்கச் சொல்லுங்க சார்... - -வி.சகிதா முருகன், - --------------------------------------------------- - கல்யாண மண்டபத்துல செருப்பு திருடி மாட்டிக்கிட்டா,.. - எப்படி ... |
| புலிகள் மறு உருவாக்கத்தில் உலகச் சாதனை! - சாதித்த தமிழர் Posted: 01 Nov 2013 09:58 PM PDT உலகிலேயே முதல்முறையாக மத்தியப் பிரதேசம் விந்திய மலைத் தொடரின் பன்னா வனத்தில் முற்றிலுமாக அழிந்துப்போன புலிகள் இனத்தை மீண்டும் உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர் விஞ்ஞானிகள் மற்றும் வன அதிகாரிகள். இந்த சாதனைக்கு சொந்தக்காரர்களில் குறிப்பிடத்தக்கவர் ஒரு தமிழர் என்பது கூடுதல் பெருமை. கடந்த நூற்றாண்டில் உலகில் சுமார் ஒரு லட்சம் புலிகள் இருந்தன. அதில் இந்தியாவில் இருந்தவை சுமார் 60 ஆயிரம். இன்று உலகில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 3500-ஐ தாண்டாது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் இருக்கும் ... |
| நல்வாழ்த்துக்கள் என்றென்றும்..... Posted: 01 Nov 2013 09:54 PM PDT புத்தாடை இனிப்போடு பட்டாசு வெடியோடு மனமகிழ் தீபவொளி மனையெங்கும் ஒளிவீச தீமை, வறுமை நிலமதில் எந்நாளும் வாராது ... மனிதம் தழைக்க கொண்டாடுவோம் இனிதாக தீபவொளித் திருநாளை! நல்வாழ்த்துக்கள் என்றென்றும்..... அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம் .See More ![]() |
| Posted: 01 Nov 2013 07:23 PM PDT உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 5 சதவீதம் அதிகமாக உள்ளது சென்னை அரசு பொது மருத்துவமனை முதல்வர் டாக்டர் கனகசபை தெரிவித்தார். உலக பக்கவாத தினம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சென்னை அரசு பொது மருத்துவமனை முதல்வர் டாக்டர் கனகசபை பேசியது: உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 25 சதவீதம் அதிகமாக உள்ளது. எனவே ரத்தத்தில் அதிக கொழுப்பு இருப்பவர்களும் உடல் பருமனாக ... |
| வேலன்:-வீடியோ ப்ளிக்-video flick Posted: 01 Nov 2013 06:26 PM PDT வீடியோ மற்றும் புகைப்படங்களை கையாள்வதற்கு சிறந்த தாக இந்த வீடியோ ப்ளிக் சாப்ட்வேர் பயன்படுகின்றது. நம்மிடம் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.32 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதன் கீழ்புறம் கீழ்கண்ட டேப்புகள் கொடுத்துள்ளார்கள். இதில் Share,Edit,Create என மூன்று காலங்கள் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

