Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ரோகித் இரட்டை சதம்! சில சுவையான புள்ளிவிவரங்கள்!

Posted: 04 Nov 2013 01:50 PM PST

பெங்களூரில் இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா அசாத்தியமான ஒரு இன்னிங்ஸை ஆடினார். 158 பந்துகளில் 12 பவுண்டரிக 16 சிக்சர்கள் சகிதம் அவர் எடுத்த இரட்டை சதம் கிரிக்கெட் அரங்கில் பெரும் குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னிங்சின் சில புள்ளிவிவரங்கள் இதோ: ரோகித் சர்மாவின் 158 பந்து 209 ரன்கள் இதற்கு முந்தைய 2 இரட்டை சதங்களை விட மெதுவானது! சேவாகின் 219 ரன்கள் 149 பந்துகளில் எடுக்கப்பட்டது. சச்சின் தென் ஆப்பிரிக்காவை வறுத்த 200 ரன்கள் இன்னிங்ஸ் 147 பந்துகளில் வந்தது. ரோகித் அடித்த 16 சிக்சர்கள் ...

ஆரம்பம்(2013)-திரைபடம் தரவிறக்கம் செய்ய...

Posted: 04 Nov 2013 01:48 PM PST

Arrambam (2013) [DVDScr - UNTOUCHED - 900MB] Download Tamil Movie டோரண்ட் தரவிறக்கம் நன்றி-தமிழ்ராக்கர்ஸ்.நெட்

மோடி பிரதமராக வேண்டும்: லதா மங்கேஷ்கர் ஆசை

Posted: 04 Nov 2013 01:44 PM PST

- குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று பழம்பெரும் ஹிந்தி பாடகி லதா மங்கேஷ்கர் தனது விருப்பத்தை வெளியிட்டார். வெள்ளிக்கிழமை புனேவில் லதா மங்கேஷ்கரின் தந்தையார் தினநாத் மங்கேஷ்கரின் நினைவாகக் கட்டப்பட்டுள்ளது சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் துவக்க விழாவில் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய லதா மங்கேஷ்கர், "நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எனது சகோதரரைப் போலத் திகழ்கிறார். அவருக்கு நான் குஜராத்தி பாடல் ...

இந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள்

Posted: 04 Nov 2013 01:24 PM PST

இணையம் சார்ந்த பல்வேறு சேவைகளைத் தந்து வரும் கூகுள் நிறுவனமே, இந்திய இணைய வெளியில் அதிகமாக மக்களைக் கவர்ந்ததாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. TRA (Trust Research Advisory) என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இது அறியக் கிடைத்துள்ளது. இதனை அடுத்து யாஹூ இரண்டா வது இடத்தையும், பேஸ்புக் இணைய தளம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்திய இணையப் பயனாளர் எண்ணிக்கை, புயல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. சென்ற ஜூன் மாதம், பிராட் பேண்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, ஒரு கோடியே 51 லட்சமாக இருந்த நிலையில், ...

எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !

Posted: 04 Nov 2013 01:20 PM PST

அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் தாத்தாவும் பாட்டியும் இந்நேரம் முசிறியில் மூச்சோடு இருந்திருப்பார்கள்! அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் அக்கா அமெரிக்காவிலும் என் அண்ணன் கனடாவிலும் நான் இலண்டனிலும் சொகுசாகப் படித்துக் கொண்டிருப்போம்! என் அப்பாவா நீ இல்லையப்பா நீ நீ நீ எங்கள் அப்பா! எங்கள் என்பது... அக்கா அண்ணன் நான் மட்டும் இல்லை! எங்கள் என்பது... செஞ்சோலை காந்தரூபன் செல்லங்கள் மட்டும் இல்லை! எங்கள் ...

சொர்க்கம் போறேன்!

Posted: 04 Nov 2013 01:18 PM PST

வெகு காலத்துக்கு முன், வீரகேசரி என்னும் பெயருடைய மன்னன் மருத நாட்டை ஆண்டு வந்தான். அவன் எந்த நாட்டை சேர்ந்த முனிவர்களாக இருந்தாலும், அவர்களை தன் நாட்டுக்கு வரவேற்று, அவர்களுக்கு எல்லா வித உதவிகளையும் அரசாங்கத்தின் சார்பில் செய்து வந்தான். ஒருசமயம் ஒரு முனிவர் வீர கேசரியின் நாட்டுக்கு வந்தார். அவர் நாட்டுக்கு வெளியே ஆசிரமம் அமைத்து, தன்னை நாடி வருபவர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார். தன் நாட்டுக்கு எங்கோ தூர தேசத்தில் இருந்து ஒரு முனிவர் வந்ததை அறிந்த மன்னன் வீரகேசரி, முனிவரை சந்திக்க, தன் ...

பெண்ணிடம் பேசியதால் தாக்கப்பட்டவர் பரிதாபமாக பலி

Posted: 04 Nov 2013 01:16 PM PST

நியூசிலாந்தில் ஒரு உணவு விடுதிக்கு அருகே தாக்கப்பட்ட இந்திய வம்சாவளி வாலிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான தருண் அஸ்தானா என்னும் 25 வயது இளைஞர் வசித்துவந்தார். பகுதி நேரமாக ஒரு உணவு விடுதியில் வேலை பார்த்துவந்த இவர், ஆக்லாந்து பல்கலைக்கழகத்தின் தொடக்க பள்ளியில் பயிற்சி ஆசிரியராக இருந்து வந்தார். இந்நிலையில், தருண் அஸ்தானா நேற்று முன்தினம் இரவு உணவு விடுதிக்கு சென்று விட்டு நண்பர்களுடன் ...

தீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது!

Posted: 04 Nov 2013 01:14 PM PST

தீபாவளியை முன்னிட்டு, "டாஸ்மாக்' கடைகளில், 154 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி உள்ளன. தமிழகத்தில், சென்னை மண்டலம், 1,085; கோவை, 954; மதுரை, 1,752; சேலம், 1,336; திருச்சி மண்டலம், 1,711 என, மொத்தம், 6,838 "டாஸ்மாக்' கடைகள் உள்ளன. இந்த கடைகளில், நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய் மதிப்பிற்கு, அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில், மதுபானங்கள் விற்பனையாகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளில், 150 கோடி ரூபாய் மதி"ப்பிலான, மது வகைகள் விற்பனையாகும் என, எதிர்பார்க்கப்பட்டது. ...

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் விளையாட இந்தியா தகுதி

Posted: 04 Nov 2013 01:06 PM PST

இந்திய ஆடவர் ஹாக்கி அணி அடுத்த ஆண்டு நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் நடைபெற உள்ள உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ள அணிகள் பட்டியலில் இணைந்துள்ளது. நெதர்லாந்தில் அடுத்த ஆண்டு உலக கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த ஜூன் மாதம் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் உலக ஹாக்கி லீக் தொடருக்கான அரையிறுதியில் இந்திய அணி 6-வது இடம் பிடித்தது. அதேசமயம் ஆசிய கோப்பை போட்டியில் தோல்வியடைந்ததால் உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற முடியவில்லை. இந்நிலையில், நியூசிலாந்தில் நடைபெற்ற ...

E-Tweets

Posted: 04 Nov 2013 01:02 PM PST

முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!


கார்ப்ரேசன்ல துப்புரவு பண்றவங்களுக்கு ஒரு ரெஸ்பிரேட்டரி மாஸ்க் குடுக்க துப்பில்லாத நாட்டுல LCDடிவிக்கி பொல்யூசன் மாஸ்க் விளம்பரம் ஒரு கேடா?

விரைவில் குளோனிங் முறையில் மனிதன்?

Posted: 04 Nov 2013 09:33 AM PST

விரைவில் குளோனிங் முறையில் மனிதன்? தோல் செல்லில் இருந்து ஸ்டெம்செல் கரு முட்டை ! குளோனிங் முறையில் மனிதனை போலவே மற்றொரு மனிதன், அதாவது மனித உடலில் பல லட்சம் கோடி செல்கள் உள்ளன. இவற்றையோ, நுண்ணுயிர்களையோ மணம், நிறம், குணம் மாறாமல் அப்படியே ஒரு பிரதி எடுப்பதுதான் 'குளோனிங்'. மனிதனின் தோல் செல்லுடன் பெண்ணின் சினைமுட்டையை சேர்த்து ஸ்டெம்செல் கருமுட்டையை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் அபார சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் சிக்கலான ஆபரேஷன்களுக்கு தேவையான ஸ்டெம்செல்களை உருவாக்க முடியும் என்று ...

இஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை

Posted: 04 Nov 2013 08:53 AM PST

அமெரிக்காவை சேர்ந்த ஒரு விளம்பர நிறுவனம், அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் இஸ்லாமிய பெண் ஒருவரை அணைத்தபடி இருக்கும் காட்சியை அதன் விளம்பரத்திற்கு பயன்படுத்தியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் கலிபோர்னியாவை சேர்ந்த ஒரு விளம்பர நிறுவனம், குறட்டை பிரச்சனையால் பாதிக்கபட்டிருப்பவர்களுக்கு உதவும் 'SnoreStop sleep aids' என்னும் பொருளுக்கான விளம்பரத்தில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் இஸ்லாமிய பெண் ஒருவரை அணைத்தபடி இருக்கும் காட்சியை பயன்படுத்தியுள்ளது அந்த விளம்பரத்தில் ...

பூச்சிகளில் வேகமாகப் பறக்க கூடிய பூச்சி எது? - பொது அறிவு வினாக்கள் -

Posted: 04 Nov 2013 08:13 AM PST

- 1) இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் எங்குள்ளது? - 2) பிரமிடுகளின் பிறப்பிடம் எது? - 3) சலீம் அலி என்பவர் எத்துறையில் புகழ் பெற்றவர்? - 4) குதுப்மினாரைக் கட்டியவர் யார்? - 5) தாரிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து எது? - 6) அச்சில் உருவான முதல் நூல் எது? - 7) குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார்? - 8) ஜப்பானியர்களின் மதம் எது? - 9) பூச்சிகளில் வேகமாகப் பறக்க கூடிய பூச்சி எது? - 10) காகமே இல்லாத நாடு எது? - =============================== விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

இந்தியாவின் முதல் பிரதராக யாருக்கு அதிக தகுதி...

Posted: 04 Nov 2013 08:02 AM PST


-

கமல்ஹாசனின் ஆயிரம் கோடி கனவு

Posted: 04 Nov 2013 08:01 AM PST

கனவு காணுங்கள் என்ற அப்துல் கலாமின் வார்த்தைகளை யார் பின்பற்றுகிறார்களோ இல்லையோ, கமல் பின்பற்றுகிறார். அவரின் சமீபத்திய கனவு ஆயிரம் கோடிகள். ஃபிக்கி அமைப்பின் தலைவராக இருக்கும் கமல், சினிமா வருவாயை எந்தெந்த ஊற்றுகளிலிருந்து பெற முடியும் என்பதை தொடர்ந்து யோசித்து வருகிறார். இந்தியாவைவிட பல மடங்கு மக்கள் தொகை குறைந்த அமெரிக்காவில் ஒரு படம் முதல் மூன்றே தினங்களில் ஐநூறு கோடியை வசூலித்து விடுகிறது. ஐம்பது கோடியெல்லாம் சாதாரணம். எனில் இந்நியாவில் மட்டும் ஏன் முடியாது? பதில் எளிமையானது. ...

தீபாவளிக்கு தங்கம் விற்பனை 40 சதவீதம் சரிவு: மக்கள் ஆர்வம் குறைகிறதா?

Posted: 04 Nov 2013 08:01 AM PST

மத்திய அரசின் வரி விதிப்பு கொள்கையால், தீபாவளி தங்கம் விற்பனை, 40 சதவீதம் சரிந்தது. இந்து மத பண்டிகைகளில் முதன்மையானதாக திகழும், தீபாவளிக்கு தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆவலோடு, இல்லத்தரசிகள், மாதம் தோறும், 200 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை, தங்க நகை கடைகளில், பல்வேறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது வழக்கம். தீபாவளி தினத்தன்று, கடைகளுக்கு சென்று, தாங்கள் சேமித்த பணத்திற்கு ஈடாக செய்கூலி, சேதாரம் இல்லாமல், தங்க ஆபரணம் வாங்குவதை ஆர்வமாக கொண்டிருந்தனர். வட மாநிலங்களில் மட்டுமே பிரசித்தி ...

நியூட்டன் சொல்ல மறந்த விதிகள்

Posted: 04 Nov 2013 08:00 AM PST

1. வரிசை விதி- நீங்கள் நிற்கும் வரிசையை மாற்றினால் நீங்கள் விட்டுச் சென்ற வரிசை நீங்கள் இப்போது நிற்கும் வரிசையை விட வேகமாக நகரும். 2. தொலைபேசி விதி நீங்கள் தற்செயலாக பிழையான இலக்கத்தைச் சுழற்றினால் ஒரு போதும் அந்த இலக்கம் வேறு அழைப்பில் இருக்காது. உடனடியாகவே உங்களுக்கு இணைப்புக் கிடைத்துவிடும். 3. இயந்திர பழுதுபார்ப்பு விதி- உங்கள் கைகள் முழுவதும் கிறீஸ் பட்ட பின்னர் உங்கள் முதுகு அரிக்கத் தொடங்கும். 4. தொழிற்சாலை விதி- நீங்கள் தவறவிட்ட எந்தவொரு திருத்தும் கருவியும் எப்போதுமே ...

பலம் எது? பலவீனம் எது? - குழந்தைகள் நீதிக்கதை !

Posted: 04 Nov 2013 07:29 AM PST

ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்து வந்தன. அனைத்து விலங்குகளும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தன. அங்கே வசித்த மயில் மட்டும் எப்போதும் மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளை பார்த்து பொறாமை பட்டுக்கொண்டே இருந்தது. உதாரணத்திற்கு யானையை பார்த்து பெரியதாய் இருக்கிறது என்றும்,மானை பார்த்து வேகமாக ஓடுகிறது என்றும் பொறாமைப்படும். இப்படியிருக்க ஒரு மழைகாலத்தில் அந்த மயில் அழகாக ஆடத்துவங்கியது. அப்போது பாட ஆரம்பித்த மயில் தன் மோசமான குரலை எண்ணி அழத்துவங்கியது.அப்போது அங்கு வந்த மைனா மயிலை ...

தாலி கட்டும் போது தம்பதியர் எப்படி உட்கார வேண்டும்?

Posted: 04 Nov 2013 07:19 AM PST

- இல்வாழ்க்கை சிறப்பாக அமைய ஆணுக்கு இடப்பக்கம்தான் பெண் அமர்ந்திருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அர்த்த நாரீஸ்வரர் அமைப்பை பார்த்தால், இந்த உண்மை விளங்கும். - உடலில் வலது பக்கம் ஆண் ஜவ அணுக்களும், இடது பக்கம் பெண் ஜவ அணுக்களும் இருப்பதாக உடற்கூறு சாஸ்திர நிபுணர்கள் சொல்கிறார்கள். - வலம் என்றால் வெற்றி என்று பொருள். ஒவ்வொறு ஆண் மகனின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் ஒளிந்திருக்கிறாள் என்ற உண்மையும் புலனாகிறது. புகைப்படம் ஜோடியாக எடுக்கும் போதும் மேற்கண்ட விதமே எடுப்பது ...

தாலி சென்டிமென்ட்...!

Posted: 04 Nov 2013 07:13 AM PST

- அன்னைக்குப் பல பெண்களுக்குத் தாலியக் கழட்டுனா மனசு உறுத்தும் - இன்னைக்குப் பல பெண்கள், தூங்கறப்ப உறுத்துச்சுன்னா தாலியக் கழட்டி வச்சிடுறாங்க...! - ------------------------------------ - அப்ப எங்கேயாவது ரோட்டுல ஆக்சிடென்டை பார்த்தா, உடனே ஆம்புலன்சுக்கு போன் போட்டான் - இப்ப எங்கேயாவது ரோட்டுல ஆக்சிடென்டை பார்த்தா, உடனே போட்டோ புடிச்சு பேஸ்புக்ல போடுறான்..! - ---------------------------------- - அன்றைய தமிழர்கள், வீட்டுல இருக்கிற அப்பா அம்மாவுக்கு தெரியாம காதலிச்சாங்க...! - இன்றைய ...

ஆப்பிள் ஐபோன் 5சி, ஐபோன் 5 எஸ் இந்திய விலை

Posted: 04 Nov 2013 07:13 AM PST

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில், தன் ஐபோன் 5சி விலை ரூ. 41,900 என உறுதிப்படுத்தியுள்ளது. இது 16ஜிபி வகைக்கான விலையாகும். 32 ஜிபி வகை ரூ.53,500 என விலையிடப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல், இந்த போன் வர்த்தக ரீதியாக விற்பனைக்கு வந்துள்ளது. அமெரிக்காவில், நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்படாத ஐபோன் 5சி விலை 549 டாலராகும். இன்றைய அந்நியச் செலவாணி மதிப்பில், இதன் இந்திய மதிப்பு ரூ.32,940 என்ற அளவில் தான் இருக்கும். ஆனால், ரூ.36,000 எனக் குறிக்கப்பட்டிருப்பது ஏன் எனத் தெரியவில்லை. வரி சேர்த்தாலும் ...

கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை

Posted: 04 Nov 2013 06:59 AM PST

ஒருநாள் அதிகாலை நேரம். பனி மூட்டம் எங்கும் பரவி புகை மூட்டம் போல் காட்சி அளித்தது. லேசாக தென்றல் வீசிக் கொண்டிருந்தது. பனித்துளிகள் மரங்களின் இலைகளின் மீது படிந்து, நீர் மொட்டுக்களை உருவாக்கிக் கொண்டிருந்தன. ஆனால், ஒரு குளத்தில் இருந்த தாமரை இலை, தன் மீது விழுந்த பனித்துளிகளை சேமித்து வைப்பதில் கடினமாக உழைத்தது. பனித்துளியை சிறிதும் சேதம் ஆகி விடாமல் அவற்றைச் சேமித்து வைப்பதிலேயே தாமரை கண்ணுங் கருத்துமாக இருந்தது. நீருக்குள் இருந்த தவளை ஒன்று தாமரையின் உழைப்பைக் கண்டு ஆச்சரியப்பட்டது. ...

மந்திரப் பூசணிக்காய்

Posted: 04 Nov 2013 06:47 AM PST

வெகுகாலத்துக்கு முன்பு, ஓர் ஊரில் சகோதரர்கள் இருவர் வசித்துவந்தனர். அண்ணன், குறுக்குப்புத்தி உடையவன். தம்பியோ, மிகவும் நல்லவன். எந்த உயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்று நினைப்பவன். இருவரும் தகுந்த வயது வந்ததும், கல்யாணம் செய்துகொண்டனர். அண்ணன், ஒரு பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். தம்பி கல்யாணம் செய்துகொண்டது ஓர் ஏழைப் பெண்ணை. அண்ணன், தன் மனைவியின் பணத்தில் வசதியாக வாழ்ந்தான். தம்பியின் வீட்டில் எப்போதும் கஷ்டம்தான். ஒருமுறை விதைக்கும் பருவம் வந்தது. தம்பியிடம் விதைப்பதற்குக்கூட ...

முட்டாள் கழுதை !

Posted: 04 Nov 2013 06:36 AM PST

ஒரு கிராமத்தில் ஒருவர் உப்பு வியாபாரம் செய்து வந்தார். இவர் பக்கத்து ஊருக்கு சென்று உப்பு விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். உப்பு மூட்டைகளை தான் வளர்த்து வந்த கழுதை மேல் வைத்து அருகிலிருக்கும் ஊர்களுக்கு செல்வார். இவ்வாறு ஒரு முறை கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை கட்டி ஆற்றினை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதகமாக அக்கழுதை ஆற்றில் வழுக்கி விழுந்தது. இதனால் மூட்டையில் இருந்த உப்பு தண்ணீரில் கரைந்தது. முதுகில் இருந்த மூட்டை லேசானதை உணர்ந்த கழுதை இரண்டாவது முறை வியாபாரி உப்பு மூட்டையை ...

ரூபா நோட்டு கதை....

Posted: 04 Nov 2013 06:24 AM PST

ஒரு கிராமத்தில் ஒரு பள்ளி இருந்தது. அந்த பள்ளியில் குமார் எனும் சிறுவன் படித்து வந்தான். ஒருநாள் குமார் சோகமாக இருப்பதை கண்ட ஆசிரியர் அவனிடம் காரணம் கேட்டார். அதற்கு பதிலளித்த குமார் தான் ஒரு தவறு செய்துவிட்டதாகவும், அந்த தவறை காரணமாக காட்டி அவனின் நண்பர்கள் அவனை வெறுத்து ஒதுக்குவதாகவும் கூறினான். செய்த தவறை உணர்ந்த குமார் தன் நண்பர்களை எண்ணி ஏங்குவதை அறிந்துகொண்ட ஆசிரியர் குமாருக்கு உதவி செய்ய நினைத்தார். அடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற ஆசிரியர், ஒரு 50 ரூபாய் நோட்டை கையில் வைத்து இது ...

தங்க நாணய கதை.....

Posted: 04 Nov 2013 06:23 AM PST

ஒரு ஊரில் ராமசாமி என்ற சுயநலமிக்க செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஊருக்கு சென்று திரும்பும் வழியில் 30 தங்க நாணயங்கள் இருந்த பையை தொலைத்துவிட்டார். இதனால் வருத்தமடைந்த செல்வந்தர் தனது நண்பர் குருவிடம் நடந்ததை கூறி புலம்பினார். சில நாட்கள் கழித்து குரு ஊரிலிருந்து திரும்பும்போது வழியில் ஒரு பையில் தங்க நாணயங்கள் இருப்பதை கண்டார். அந்த பை ராமசாமியுடையது என தெரிந்துகொண்ட குரு அதை அவரிடம் கொடுத்தார். குருவிடமிருந்து தங்க நாணயங்களை பெற்றுக்கொண்ட ராமசாமி, இதை வைத்து ஒரு திட்டம் தீட்ட ...

மங்கள்யான் செயற்கைக்கோள் பயணம் பி.எஸ்.எல்.வி., கவுன்ட்-டவுன் துவக்கம்

Posted: 04 Nov 2013 05:35 AM PST

சென்னை:செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்படும், மங்கள்யான் செயற்கைக்கோளை சுமந்து செல்லும், .எஸ்.எல்.வி., சி - 25 ராக்கெட்டுக்கான, 56 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று காலை துவங்கியது. செவ்வாய் கிரகத்தில், உயிரினங்கள் வாழ்வதற்கான சூழ்நிலை உள்ளதா, தண்ணீர் உள்ளதா, என்றும் மேலும், கனிம வளம் குறித்து ஆராய, ஐந்து பிரத்தியேக கருவிகளுடன், மங்கள்யான் செயற்கைக்கோளை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ' உருவாக்கி உள்ளது.மங்கள்யான் செயற்கைக்கோள், நாளை மதியம், 2:38 மணிக்கு, பி.எஸ்.எல்.வி., சி - 25 ...

காதலித்து ஓடிப்போவதை தவிர்க்க குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை போதியுங்கள்: நீதிமன்றம்

Posted: 04 Nov 2013 05:10 AM PST

பக்குவமடையாத வயதில் உருவாகும் காதல் காரணமாக, இளம் ஜோடிகள் ஊரைவிட்டு ஓடிப்போவதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவர்கள் தங்களின் சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதும், சில சமயங்களில் பிரச்சினையில் சிக்கி கொலை செய்யப்படுவதும் உண்டு. நாட்டில் நடைபெறும் கவுரவக் கொலைகள் பெரும்பாலும் காதல் திருமணங்களால்தான் ஏற்படுகின்றன. இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க, தங்கள் குழந்தைகளை பொறுப்புள்ள பிள்ளைகளாக வளர்க்க வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் வசித்த பீகாரை சேர்ந்த ஒரு பெண், ...

கிராமத்து வாடைகள்!

Posted: 04 Nov 2013 04:55 AM PST

அத்தை மகனைப் பார்க்கும்பொழுது வரும் கிராமத்து வெட்கம் சண்டையிட்டுக் கொண்டாலும் சாவில் கலந்துகொள்ளும் உறவுகள் அடைக்காத பெரிய கதவுகள் அணையாத பெருஅடுப்புகள் சாணி தெளித்த வாசல்கள் ஊரைக்கூட்டும் மஞ்சள் நீராட்டு விழாக்கள் நீளமான ஒலிபெருக்கிகள் சூடாக சொம்பில் கறக்கும்பால் காலையில் கூவும் சேவல் பம்பு செட்டில் குளிக்கும் பச்சைக் கிளிகள் மேய்ச்சலுக்காகப் போகும் எருமை மாடுகள் அவை போடும் சாணியில் தட்டப்படும் வறட்டிகள் எரிந்த வறட்டியின் சாம்பலில் பல் தேய்க்கும் ருசி பயிர்களுக்காக சாலையின் ...

பாண்டிய நாடு - திரைவிமர்சனம்

Posted: 04 Nov 2013 04:48 AM PST

இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் படமாக 'ஆரம்பம்' வெளியாக, இரண்டாவது படமாக வெளிவந்துள்ள படம் விஷாலின் தயாரிப்பில், சுசீந்திரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பாண்டிய நாடு'. தொடர்ந்து வெற்றிப் படங்களாக தந்து தன்னை ஒரு முன்னணி இயக்குநராக அடையாளம் காட்டிக் கொண்ட இயக்குநர் சுசீந்திரன் விக்ரம் நடிப்பில் வெளிவந்த 'ராஜபாட்டை' படத்தில் மட்டும் சற்றே சறுக்கினார். இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு அண்மையில் வெளியான 'ஆதலால் காதல் செய்வீர்' என்ற படத்தில் தனது திறனை மீண்டும் நிரூபித்தார். இப்போது, மற்றொரு ...

ரமணியின் கவிதைகள்

Posted: 04 Nov 2013 04:21 AM PST

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

ஆரம்பம் - திரை விமர்சனம்

Posted: 04 Nov 2013 03:33 AM PST

எதிரிகளிடமிருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க வேண்டியது இராணுவம் மற்றும் காவல்துறையின் கடமை. ஆனால் அந்தத் துறையிலேயே ஊழல் நடந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை சொல்லும் படம் 'ஆரம்பம்'. அஜித்துக்குள் இருந்த ஸ்டைலிஷான கதாப்பாத்திரத்தை 'பில்லா' படத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்த விஷ்ணுவர்த்தன், மீண்டும் அஜித்துடன் 'ஆரம்பம்' படத்தின் மூலம் கைகோர்த்து இந்த தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தியிருக்கிறார். இந்த கூட்டணியுடன் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி ஆகியோரும் சேர்ந்து கொண்டால் ...

வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி.

Posted: 04 Nov 2013 03:01 AM PST

மொபைல் போன் உலகில், தொழில் நுட்ப ரீதியாக, நீயா? நானா? என்ற போட்டி தொடங்கிவிட்டது. சாம்சங் நிறுவனத்திற்கும் எல்.ஜி. நிறுவனத்திற்கும் நடக்கும் இந்த போட்டியில் பயன் பெறப் போவது மக்களாகிய நாம் தான். ஏற்கனவே, தானும் ஆப்பிள் நிறுவனத்திற்கு இணையாக ஏதேனும் புதுமையை, மொபைல் போன்களில் புகுத்த வேண்டும் என்ற இலக்குடன், சாம்சங் இயங்கி வருகிறது. அந்த வரிசையில், வளைவான திரையுடன் மொபைல் போன் ஒன்றை வெளியிடுவதாக அறிவித்தது. "கேலக்ஸி ரவுண்ட்' என்ற பெயர் கொண்ட இந்த மொபைல் போன் விரைவில் கிடைக்க இருக்கிறது. ...

தீபாவளி பக்ஷண போடோக்கள் :)

Posted: 04 Nov 2013 02:51 AM PST

எங்க விட்டு தீபாவளி பக்ஷண போடோக்கள் புன்னகை உங்கள் விட்டு பலகாரங்கள் போட்டோவும் போடுங்கள் புன்னகை

இது 'தால் ஹல்வா' வட இந்தியா special புன்னகை

பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து

Posted: 04 Nov 2013 02:28 AM PST

1. பக்க வாத நோய் (Stroke) என்றால் என்ன? மூளை செயல்பட தேவையான சத்து, இதயத்தில் இருந்து ரத்தக் குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது, மூளையின் சில பாகங்கள் செயல் இழப்பதால், நம் உடலின் சில பாகங்கள் செயல் இழக்கின்றன. இதைத் தான் பக்கவாதம் என்கிறோம். இது, இதயத்தில் ஏற்படும் மாரடைப்பு போன்றது தான். இதை மூளை அடைப்பு என்று சொல்லலாம். 2. பக்கவாதத்தில் வகைகள் உண்டா? தற்காலிக பக்கவாதம், தொடர் பக்கவாதம், முற்றுப்பெற்ற பக்கவாதம் என, மூன்று வகைகளாக பிரிக்கலாம். ...

மதுவும் மது சார்ந்த இடமும்!

Posted: 04 Nov 2013 02:17 AM PST

'மதம் ஓா் அபின்' என்றார் மார்க்ஸ். 'மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்' என்றார் வடலூர் வள்ளலார். இறை எதிர்ப்பாளர்கள் இன்றும் என்றும் பயன்படுத்தக்கூடிய வாசகங்களாக மேற்கூறியவை அமைந்தன. அந்த சொற்றொடரை இன்றைய காலகட்டத்தில் புகுந்திருக்கும் புதிய நோயான மதுவை உள்ளடக்கி, மது ஓா் மனநோய், மதுவான பேய் பிடியாது இருக்க வேண்டும்' என்று திருத்தி எழுத வேண்டியது அவசியமாகிறது. மது எனும் அரக்கன் பற்றிய உரையாடல்களும் கவலைகளும் பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பத்திரிகை ஊடகங்களில் மதுவின் ...

அக்கா மாதிரி தோற்றமளிக்க 15 லட்சம் செலவழித்த தங்கச்சி!

Posted: 04 Nov 2013 01:59 AM PST

ஹாலிவுட்டின் பிரபல நடிகை, லிண்ட்சே லோகன். இவரின் தந்தைக்கு, இரண்டு மனைவி. மூத்த மனைவிக்கு பிறந்தவர் தான், லிண்ட்சே. இரண்டாவது மனைவிக்கு, ஆஷ்லி என்ற மகள் உண்டு. இந்த ஆஷ்லிக்கு, 25 வயதாகிறது. இவருக்கு, இளம் வயதில், தன் அக்கா எப்படி தோற்றமளித்தாரோ, அதேபோல் நாமும் தோற்றமளிக்க வேண்டும் என்ற, விசித்திர ஆசை ஏற்பட்டது. உடனடியாக, தன் முகத்தில், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். உதடு, தாடை, கன்னம் ஆகிய பகுதிகளை, தன் அக்கா, லிண்ட்சேவை போல், மாற்றிக் கொண்டார். இதற்காக, 15 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளார். ஆஷ்லி ...

டிரெய்லர் லாரி மீது மினி லாரி மோதல்: விபத்தில் 4 பேர் பரிதாப பலி.

Posted: 04 Nov 2013 01:52 AM PST

ஸ்ரீபெரும்புதூர்:முன்னால் சென்ற டிரெய்லர் லாரி மீது, கோழி ஏற்றி வந்த மினி லாரி மோதியதில், நான்கு பேர் உடல் நசுங்கி இறந்தனர் . கிருஷ்ணகிரி மாவட்டம், நாடார்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார், 23.அவர், கடந்த 1ம் தேதி, இரவு 10 மணிக்கு, ஊத்தங்கரை கல்குவாரியில் இருந்து, பெரிய கருங்கற்களை ஏற்றிய டிரெய்லர் லாரியை, (பதிவு எண். டி.என் 09 பி .எல். 7569 ) ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை, 3:40 மணிக்கு, சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் அருகே அந்த லாரி சென்று ...

இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்!

Posted: 04 Nov 2013 01:52 AM PST

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி 1971–ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஒரு நாள் கிரிக்கெட்டில் இரட்டை செஞ்சுரி 'கட்டாக்கனியே' என்பது தான் ஒரு காலத்தில் அனைத்து தரப்பினரின் வாதமாக இருந்து வந்தது. ஆனால் 20 ஓவர் கிரிக்கெட் அறிமுகம் ஆன பிறகு நிலைமை அப்படியே தலைகீழாக மாறி விட்டது. 'அதிரடி...சரவெடி..' என்ற 20 ஓவர் கிரிக்கெட்டின் 'வேகம்' ஒரு நாள் போட்டியிலும் முழுமையாக ஊடுருவி விட்டது. விளைவு...ஒரு நாள் கிரிக்கெட்டில் முடியாதது என்று சொல்லப்பட்ட இரட்டை சதமும் ஒன்றல்ல...இரண்டல்ல...மூன்று முறை இப்போது ...

முகநூலில் ரசித்தவை!

Posted: 04 Nov 2013 01:36 AM PST

முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™