Daily Thanthi |
- கர்நாடக ஜனதா கட்சி தலைவர் எடியூரப்பா
- மைக்கேல் கிளார்க்குக்கு மட்டும் அபராதம் விதித்தது நியாயமற்றது ஷேன் வார்னே சொல்கிறார்
- படம் பார்த்து படம் எடுக்காதீர்கள் ‘‘வாழ்க்கையை பார்த்து படம் எடுங்கள்’’ டைரக்டர்களுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்
- எண்ணெய் நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது சென்செக்ஸ் 180 புள்ளிகள் வீழ்ச்சி
- மேற்கத்திய நாடுகளின் முன்னேற்றத்தால் நடப்பு நிதி ஆண்டில் ஏற்றுமதி இலக்கை காட்டிலும் உயரும்
- அதிக அளவில் ஆர்டர்கள் கிடைத்ததால் இந்தியாவில் கம்ப்யூட்டர்கள் விற்பனை 8 சதவீதம் வளர்ச்சி
- சினிமாவை விட சின்னத்திரை நடிகர்களே அதிகமாக உழைக்கிறார்கள் குற்றாலத்தில் நடிகை ராதிகா பேட்டி
- இந்திய பந்து வீச்சாளர் முகமது ஷமி
- நடிகை ராதா கொடுத்த புகார் கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு தயாரிப்பாளர் மனு
- புயல் ‘லெஹர்’ மிக தீவிரம் அடைந்தது தமிழ்நாட்டில் நாளை சில இடங்களில் மழை பெய்யும்
| கர்நாடக ஜனதா கட்சி தலைவர் எடியூரப்பா Posted: 26 Nov 2013 11:45 AM PST |
| மைக்கேல் கிளார்க்குக்கு மட்டும் அபராதம் விதித்தது நியாயமற்றது ஷேன் வார்னே சொல்கிறார் Posted: 26 Nov 2013 10:34 AM PST சிட்னி, பிரிஸ்பேன் டெஸ்டில் முதலில் வம்புக்கு இழுத்த ஆண்டர்சனை விட்டுவிட்டு மைக்கேல் கிளார்க்கை மட்டும் தண்டித்தது நியாயமற்றது என்று சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே கூறியுள்ளார். கிளார்க்குடன் மோதல் ஆஸ்திரேலியா–இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே கவுரமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்து வருகிறது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 381 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை நொறுக்கியது. 'பரமவைரி' களான இவ்விரு அணிகள் ஆஷஸ் போட்டியில் சந்திக்கும் போதெல்லாமல் உரசல்களுக்கும், வாக்குவாதங்களுக்கும் பஞ்சமிருக்காது. பிரிஸ்பேன் டெஸ்டும் இதற்கு விதிவிலக்கல்ல. கடைசி விக்கெட்டுக்கு இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆடிக் கொண்டிருந்த போது அவருக்கும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது, 'மிட்செல் ஜான்சனின் பந்து வீச்சில் கையை உடைத்துக் கொள்ள தயாராக இருக்கிறாயா?' என்று ஆண்டர்சனை ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கிண்டல் செய்தார். இது ஸ்டம்பில் உள்ள மைக்ரோ போனில் தெளிவாக பதிவாகி இருந்தது. இதையடுத்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கிளார்க்குக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக விதித்தது. இந்த நிலையில் கிளார்க் மீதான நடவடிக்கை ஒருதலைபட்சமானது என்று ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், முதலாவது டெஸ்டில் வர்ணனையாளராக பணியாற்றியவருமான ஷேன் வார்னே குற்றம் சாட்டியுள்ளார்.
'உண்மையில் அந்த டெஸ்டில் நடந்த சம்பவம் வேறு. ஆண்டர்சன், தனது அருகில் நின்ற ஆஸ்திரேலிய பீல்டர் ஜார்ஜ் பெய்லியை பார்த்து உனது முகத்தில் ஒரு குத்து விட விரும்புகிறேன் என்று மிரட்டினார். இதையடுத்து கேப்டனாக சக வீரருக்கு துணை நின்ற கிளார்க், ஆண்டர்சனின் மிரட்டலுக்கு பதிலடி கொடுத்தார். ஆனால் கிளார்க்குக்கு மட்டும் அபராதம் விதித்திருப்பது அவமதிப்புக்குரியது. ஏன் ஆண்டர்சன் சொன்னது உங்களது (நடுவர்கள்) காதில் விழவில்லையா?' என்று வார்னே 'டுவிட்டர்' இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் 'கிளார்க் கூறியதை மட்டும் கவனத்தில் கொண்டு, நடவடிக்கை எடுத்தது துரதிர்ஷ்டவசமானது. ஆண்டர்சன், ஆஸ்திரேலிய வீரர்களை சீண்டியதை நாங்கள் கேட்டோம். என்னை பொறுத்தவரை களத்தில் நடந்ததை களத்திலேயே விட்டு விட வேண்டும். ஆட்டம் முடிந்ததும் அனைவரும் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கிக் கொண்டு களத்தில் நடந்ததை மறந்து விட வேண்டும். ஒரு விளையாட்டு வீரராக சீண்டும் யுக்தியை கையில் எடுக்க முடிவு செய்தால், அதற்குரிய விளைவையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டுமே தவிர புகார் செய்யக்கூடாது' என்றார். ஆஸ்திரேலியா–இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் 2–வது டெஸ்ட் வருகிற 5–ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. image: category: |
| Posted: 26 Nov 2013 09:54 AM PST சென்னை ''படம் பார்த்து படம் எடுக்காதீர்கள். வாழ்க்கையை பார்த்து படம் எடுங்கள்'' என்று டைரக்டர்களுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்தார். வைரமுத்து பேச்சு ஆர்யன் ராஜேஷ், சரண்யாநாக் நடித்து, ஏ.கே.மைக்கேல் என்ற புதுமுக டைரக்டர் இயக்கியுள்ள 'ஈரவெயில்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடந்தது. இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். விழாவில் அவர் கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது:–''இங்கே பேசிய கேயார், வி.சி.குகநாதன், டி.சிவா, ஞானவேல்ராஜா ஆகியோர் என்னையும், என் எழுத்துக்களையும் புகழ்ந்து சொன்னார்கள். மகிழ்ச்சிதான். ஆனால், இதை எனக்கான பெருமையாக எடுத்துக் கொள்ள மாட்டேன். 'ராவணன்' இயக்குனர் மணிரத்னம், 'ராவணன்' படத்தை தமிழிலும், இந்தியிலும் ஒரே நேரத்தில் உருவாக்கினார். இந்தியில், குல்சார் பாட்டெழுதினார். தமிழில், நான் எழுதினேன். இந்தியும், தமிழும் அறிந்தவர்கள் இரண்டு பாடல்களையும் கேட்டார்கள். இந்தி பாடலை விட, தமிழ் பாடல் சிறப்பாக இருக்கிறதே என்று என்னிடம் சொன்னார்கள்.''இருக்கலாம். குல்சார் என்னை விட சிறந்த கவிஞர். ஆனால் தமிழ், இந்தியை விட சிறந்த மொழி. அதனால் இருக்கலாம்'' என்றேன். எனக்கு வரும் பெருமைகளை எல்லாம் தமிழுக்கே காணிக்கை ஆக்குகிறேன். கவிதை உணர்ச்சியின் உச்சம்தான் கவிதை. நாற்பது காட்சிகளில் சொல்வதை நான்கு வரியில் சொல்வதுதான் பாட்டு. ஒருவன் கஞ்சன். அதை எப்படி சொல்வது? 'எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன். நாய்த்தோலில் வடிகட்டிய கஞ்சன்' என்று சொல்லலாம். ஆனால் என் நண்பன் ஒருவன் சொன்னான். ''அவன் மகா கஞ்சன். தேனிலவுக்கு கூட தனியாகத்தான் போய் வந்தான்.'' இப்படி ஒவ்வொரு உணர்ச்சிக்கும் வெளிப்பாட்டு உச்சம் ஒன்று உண்டு. அந்த உத்தியைத்தான் பல பாடல்களில் நான் கையாளுகிறேன்.'ஈரவெயில்' படத்துக்கு டைரக்டர் மைக்கேல் உருக்கமான காதல் கதை ஒன்றை சொன்னார். கும்பகோணம் திருவிழா கூட்டத்தில் ஒரே ஒருமுறை பார்த்த பெண்ணை சென்னையில் தேடி அலைகிறான், ஒரு இளைஞன். அந்த தேடலே இந்த படத்தில் ஒரு பாடல் ஆகிறது. உழைப்பு ''சென்னை என்பது கட்டடக் காடு...இதிலே என் மலர் எந்த மலர்'' என்று அந்த பாடல் தொடங்குகிறது. அந்த பல்லவியின் இறுதியில் அழுத்தமான ஒரு வரியை எழுதியிருக்கிறேன். ''உன்னைக் காணாவிட்டால்–கடற்கரையோரக் காக்கைகள் சாப்பிடக் கண்களைப் பிய்த்து எறிவேன்'' என்று காதலன் பாடுவதாக எழுதியிருக்கிறேன்.பெரிய இயக்குனர்களுக்கு வழங்கும் அதே உழைப்பைத்தான் புதிய இயக்குனர்களுக்கும் வழங்குகிறேன். வேண்டுகோள் இன்று படத்தயாரிப்பு எண்ணிக்கை வளர்ந்துகொண்டே வருகிறது. ஆனால் வெற்றியின் விகிதாசாரம் குறைந்து கொண்டே வருகிறது. திரையரங்குகளில் பார்வையாளர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு சரிகிறது. இயக்குனர்கள் நல்ல கதைகளோடு களம் இறங்கினால்தான் வெற்றி காண முடியும்.படம் பார்த்து படம் எடுக்காதீர்கள். வாழ்க்கையை பார்த்து படம் எடுங்கள். உங்கள் ஊரில், உங்கள் தெருவில், அடுத்த வீட்டில் கற்பனைக்கு சிக்காத ஆயிரம் நிஜ கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. உண்மையுள்ள திரைப்படத்தில் உணர்ச்சி இருக்கும். உணர்ச்சி உள்ள திரைப்படம் வெற்றி பெறும்.''இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார். கேயார் பாடல்களை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார் வெளியிட, டைரக்டர்–தயாரிப்பாளர் வி.சி.குகநாதன் பெற்றுக்கொண்டார்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்கள் டி.சிவா, ஞானவேல்ராஜா, டைரக்டர் சரவணன், பட அதிபர் விஜயமுரளி ஆகியோரும் பேசினார்கள். படத்தின் டைரக்டர் மைக்கேல் வரவேற்று பேசினார். தயாரிப்பாளர் பிரபாகரன் நன்றி கூறினார். image: category:Tagging: |
| எண்ணெய் நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது சென்செக்ஸ் 180 புள்ளிகள் வீழ்ச்சி Posted: 26 Nov 2013 09:44 AM PST மும்பை, முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் பங்கு வியாபாரம் மந்தமாக இருந்தது. செவ்வாய்க்கிழமை அன்று 'சென்செக்ஸ்' 180 புள்ளிகளை இழந்தது. லாப நோக்கம் கருதி... திங்கள்கிழமை அன்று பங்கு வியாபாரத்தில் ஏற்பட்ட எழுச்சியால் பல நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்து இருந்தது. இதனையடுத்து முதலீட்டாளர்கள் இந்நிறுவனங்களின் பங்குகளை லாப நோக்கம் கருதி விற்பனை செய்தனர். ஈரான் மற்றும் வல்லரசு நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தால் திங்களன்று 2 டாலருக்கும் அதிகமாக குறைந்து இருந்த கச்சா எண்ணெய் விலை நேற்று உயர்ந்தது. இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்குமோ என்ற அச்சப்பாட்டால் அன்னிய நிதி நிறுவனங்கள் பங்குகளில் முதலீடு மேற்கொள்ள தயக்கம் காட்டின. நேற்று இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் பங்கு விலை முறையே 4.7 சதவீதம் மற்றும் 2.4 சதவீதம் குறைந்தது. பாரத் பெட்ரோலிய நிறுவன பங்கின் விலை 6.5 சதவீதம் குறைந்தது. மேலும் வங்கி, நுகர்பொருள், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, கோல் இந்தியா, ஐ.டி.சி. உள்ளிட்ட 22 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. வர்த்தகம் முடியும்போது 'சென்செக்ஸ்' 180.06 புள்ளிகள் சரிந்து 20,425.02 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 20,604.27 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 20,390.62 புள்ளிகள் வரையிலும் சென்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிஃப்டி' 56.25 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 6,059.10 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 6,112.70 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 6,047.75 புள்ளிகளுக்கும் சென்றது. image: category: |
| மேற்கத்திய நாடுகளின் முன்னேற்றத்தால் நடப்பு நிதி ஆண்டில் ஏற்றுமதி இலக்கை காட்டிலும் உயரும் Posted: 26 Nov 2013 09:20 AM PST ஐதராபாத், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் முன்னேற்றத்தால், நடப்பு நிதி ஆண்டில் ஏற்றுமதி சுமார் 35,000 கோடி டாலராக உயரும் என இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.ரபீக் அகமத் தெரிவித்தார். இது இந்த நிதி ஆண்டிற்கான இலக்கை (32,500 கோடி டாலர்) காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நவரத்தினங்கள் சர்வதேச பொருளாதார மந்த நிலையால் சென்ற நிதி ஆண்டில் ஏற்றுமதி இலக்கை எட்ட முடியவில்லை. நடப்பு நிதி ஆண்டில் தொடக்கத்தில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், எண்ணெய், மின்னணு மற்றும் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி குறைந்தது. அதே சமயம் ஜவுளி, மருந்து, தோல் பொருள்கள் ஏற்றுமதி வளர்ச்சி அடைந்தது. இந்நிலையில் அமெரிக்க பொருளாதாரத்தில் வளர்ச்சி தென்பட தொடங்கியது. இதனை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும் பொருளாதார மந்த நிலை விலகியது. மேலும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட புதிய சந்தைகளிலும் இந்திய பொருள்களுக்கான தேவைப்பாடு அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் வெளிமதிப்பு சரிவு ஏற்றுமதியாளர்கள் அதிக வருவாய் ஈட்டினர். அடுத்த 3–4 மாதங்கள் வரை ரூபாயின் வெளிமதிப்பு ரூ.64 என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு முன்னுரிமை கடன் அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய நிதியமைச்சகம் மற்றும் பாரத ரிசர்வ் இடையிலான பேச்சு வார்த்தைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு முன்னுரிமை கடன் அந்தஸ்து வழங்கப்பட்டால் ஏற்றுமதி வளர்ச்சிக்கு வலு சேர்க்கும். முன்னுரிமை கடன் அந்தஸ்து முன்னுரிமை கடன் அந்தஸ்து என்பது வங்கிகள் வழங்கும் மொத்த கடனில் 40 சதவீதம் குறிப்பிட்ட துறைகளுக்கு (முன்னுரிமை அந்தஸ்து கொண்ட) கட்டாயமாக வழங்க வேண்டும். விவசாயம், குறு மற்றும் சிறு நிறுவனங்கள், ஏழை மக்களுக்கு வீட்டுகடன், மாணவர்களுக்கு கல்வி கடன், வருவாய் குறைந்த மற்றும் நலிவடைந்த பிரிவுகள் வங்கிகளின் முன்னுரிமை கடன் அந்தஸ்தில் உள்ளன. தற்போது பாரத ரிசர்வ் வங்கி, நடுத்தர உற்பத்தி நிறுவனங்களும் வங்கிகளில் முன்னுரிமை அந்தஸ்து அடிப்படையில் கடன் பெற அனுமதி அளித்துள்ளது. image: category: |
| அதிக அளவில் ஆர்டர்கள் கிடைத்ததால் இந்தியாவில் கம்ப்யூட்டர்கள் விற்பனை 8 சதவீதம் வளர்ச்சி Posted: 26 Nov 2013 09:16 AM PST புதுடெல்லி, நடப்பு 2013–ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (ஜூலை–செப்டம்பர்) இந்தியாவில் கம்ப்யூட்டர்கள் விற்பனை 8 சதவீதம் அதிகரித்து 32 லட்சமாக உயர்ந்துள்ளது. மாநில அரசுகளிடமிருந்து அதிக அளவில் ஆர்டர்கள் கிடைத்ததே இதற்கு காரணமாகும். கார்ட்னர் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வாயிலாக இது தெரிய வந்துள்ளது. சாதாரண கம்ப்யூட்டர்கள் விற்பனை குறைந்துள்ள நிலையில், லேப்டாப் எனப்படும் மடி கணினிகள் விற்பனை 22 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் மொத்த கம்ப்யூட்டர்கள் விற்பனையில் 32.5 சதவீத பங்களிப்புடன் எச்.பி. நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் பங்கு 15.5 சதவீதமாக இருந்தது. ஆக, இதன் பங்கு இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. 13.7 சதவீத பங்களிப்பை கொண்டு லினோவா நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் பங்கு 17 சதவீதமாக இருந்தது. ஆக, இந்நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி குறைந்துள்ளது. பெரிய நிறுவனங்கள் டெல் நிறுவனம் மூன்றாவது இடத்திலும், ஏசர் நிறுவனம் நான்காவது இடத்திலும் உள்ளது. எச்.சி.எல். நிறுவனத்தின் பங்கு 2.8 சதவீதமாகவும், இதர நிறுவனங்களின் பங்கு 28.8 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவில் கம்ப்யூட்டர்கள் விற்பனையில் பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. கம்ப்யூட்டர்களை பொதுமக்களும், நிறுவனங்களும், அரசுகளும் வாங்குகின்றன. கடந்த 2012–ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மொத்த கம்ப்யூட்டர்கள் விற்பனையில் நுகர்வோர்களின் பங்கு 47 சதவீதமாக இருந்தது. இது தற்போது 40 சதவீதமாக குறைந்துள்ளது என கார்ட்னர் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் விஷால் திரிபாதி தெரிவித்துள்ளார். சலுகை திட்டங்கள் மாநில அரசுகளிடமிருந்து அதிக ஆர்டர்கள் கிடைத்ததால் கம்ப்யூட்டர்கள் விற்பனையில் நிறுவனங்கள் மற்றும் அரசுகளின் பங்கு 50 சதவீதத்திலிருந்து 59 சதவீதமாக உயர்ந்துள்ளது. கம்ப்யூட்டர் நிறுவனங்கள் பல்வேறு சலுகை திட்டங்களை வழங்கியுள்ள நிலையிலும், நுகர்வோர் பங்களிப்பு குறைந்துள்ளது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது மூன்றாவது காலாண்டில் கம்ப்யூட்டர் விற்பனை 8.3 சதவீதம் சரிவடைந்துள்ளது. பொருளாதார மந்தநிலையும் பணவீக்கம் அதிகமாக உள்ளதும் இதற்கு முக்கிய காரணமாகும். சென்ற நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5 சதவீதமாக குறைந்தது. இதன் காரணமாக தனிநபர் செலவிடும் வருவாய் குறைந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு 7 சதவீதமாக உயர்ந்தது. சில்லரை விலை பணவீக்கமும் 10 சதவீதத்தை தாண்டி உள்ளது. எனவே, பொதுமக்களின் வருவாயில் பெரும் பகுதி உணவு பொருள்கள் வாங்குவதற்கு செலவாகி விடுகிறது. ரிசர்வ் வங்கி முக்கிய கடனிற்கான வட்டியை உயர்த்தியதையடுத்து கடனிற்கான வட்டி விகிதமும் அதிகமாக உள்ளது. இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டிலிருந்து பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் எனவும், பணவீக்கம் குறையும் எனவும் பல பொருளியல் நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். எனவே, அடுத்த ஆண்டிலிருந்து கம்ப்யூட்டர் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்காவது காலாண்டில்... ரூபாய் மதிப்பு சரிவால் நிறுவனங்கள் கம்ப்யூட்டர் விலையை உயர்த்தியுள்ளன. எனவே, நான்காவது காலாண்டில் (அக்டோபர் – டிசம்பர்) கம்ப்யூட்டர் விற்பனை குறைய வாய்ப்புள்ளது என ஐ.டீ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. image: category: |
| சினிமாவை விட சின்னத்திரை நடிகர்களே அதிகமாக உழைக்கிறார்கள் குற்றாலத்தில் நடிகை ராதிகா பேட்டி Posted: 26 Nov 2013 09:10 AM PST தென்காசி, ''சினிமாவை விட சின்னத்திரை நடிகர்களே அதிகமாக உழைக்கிறார்கள்'' என்று நடிகை ராதிகா சரத்குமார் கூறினார். டி.வி. தொடர் படப்பிடிப்பு நடிகை ராதிகா சரத்குமார் தயாரித்து நடித்து வரும் டி.வி. தொடரான 'வாணி ராணி' சீரியல் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெற்று வருகிறது. குற்றாலம் செட்டியார் பங்களாவில் இன்று படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றது. படப்பிடிப்பின் இடையே நடிகை ராதிகா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– பெண்களிடம் ஆதரவு குற்றாலம் பகுதிகளில் 5 நாட்கள் 'வாணி ராணி' தொடர் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த தொடருக்கு பெண்கள் மத்தியில் அமோக ஆதரவு உள்ளது. பொதுவாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இது போன்ற தொடர்கள் சிறந்த பொழுதுபோக்காக உள்ளது. இந்த தொடர்களை குடும்பத்துடன் பார்க்கும் அளவுக்கு, அன்றாட நிகழ்வுகளை சேர்த்து நாங்கள் படமாக்கி கொடுக்கிறோம். குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இது போன்ற தொடர்களை எடுக்கிறோம். சினிமாவை விட சின்னத்திரை கலைஞர்கள் அனைவரும் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். சினிமாவில் வெறும் 2.30 மணி நேரம் ஓடக்கூடிய அளவுக்கு மட்டுமே காட்சிகள் படமாக்கப்படுகிறது. ஆனால், டி.வி. தொடர் அப்படி அல்ல. தினமும் காட்சியை மக்களுக்கு கொடுத்தாக வேண்டும். எனவே இடைவிடாமல் பணியாற்ற வேண்டி உள்ளது. மதுகுடிக்கும் காட்சி பெரும்பாலான சினிமாக்களில் டாஸ்மாக் கடை காட்சிகளும், அங்கு இளைஞர்கள் அமர்ந்து மது குடிப்பது, ஒரு பெண்ணை கவரலாம் என்று சிந்திப்பது போன்ற காட்சிகளும்தான் உள்ளன. நடைமுறையில் அப்படி ஏதுவும் இல்லை. சமீபத்தில் வெளியான 'சூது கவ்வும்', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' ஆகிய திரைப்படங்கள் எனக்கு பிடித்து இருந்தன. எங்களது நிறுவன தயாரிப்பில் விரைவில் புலிவால் படம் வெளியாக உள்ளது. இது முழுக்க முழுக்க நகைச்சுவை படம். விமல், பிரசன்னா நடிக்கிறார்கள். அதன் பிறகு விக்ரம், பிரபு நடிக்கும் படத்தையும், அதைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தையும் தயாரிக்க இருக்கிறோம். எனது கணவர் சரத்குமார் 2 புதிய படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அரசியலில் அவருக்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இவ்வாறு நடிகை ராதிகா கூறினார். பேட்டியின் போது சமத்துவ மக்கள் கட்சி தென்காசி தொகுதி ஒருங்கிணைப்பாளர் நந்து உடன் இருந்தார். image: category:Tagging:News Group Category: |
| இந்திய பந்து வீச்சாளர் முகமது ஷமி Posted: 26 Nov 2013 08:49 AM PST |
| நடிகை ராதா கொடுத்த புகார் கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு தயாரிப்பாளர் மனு Posted: 26 Nov 2013 08:19 AM PST சென்னை சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல சினிமா படங்களில் கதாநாயாகியாக நடித்துள்ளவர் நடிகை ராதா. இவர், கடந்த 22–ந் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அதில், 'திருவல்லிக்கேணியை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜி.பைசூல் என்பவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் உல்லாசமாக இருந்ததாகவும், அதன் பின்னர் திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகவும், தன்னிடம் இருந்து ரூ.50 லட்சம் மோசடி செய்துள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த புகார் குறித்து வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் விசாரணைக்கு, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் பைசூல் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'நடிகை ராதா பொய் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், வடபழனி அனைத்து மகளிர் போலீசார் என்னை கைது செய்து விடுவார்கள் என்று அஞ்சுகிறேன். எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளார். இந்த மனு நீதிபதி ஆதிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மார்கரேட் சக்கரபாணி ஆஜராகி வாதம் செய்தார். இதையடுத்து மனு மீதான விசாரணையை வருகிற 28–ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்று மனுவுக்கு போலீசார் பதலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். image: category:Tagging:News Group Category: |
| புயல் ‘லெஹர்’ மிக தீவிரம் அடைந்தது தமிழ்நாட்டில் நாளை சில இடங்களில் மழை பெய்யும் Posted: 26 Nov 2013 07:59 AM PST சென்னை ஆந்திரா அருகே கரையை கடக்க உள்ள புயல் லெஹர் மிக தீவிரம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் சில இடங்களில் நாளை மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் மிக தீவிரம் அடைந்துள்ளது மத்திய வங்க கடலில் உருவாகி அந்தமான் அருகே கரையை கடந்த 'லெஹர்' புயல் மீண்டும் வலுப்பெற்று அந்தமான் அருகே இருந்தது. அது இன்று பகலில் மேலும் வலுவடைந்து மிக தீவிர புயலாக மாறி உள்ளது. அந்த புயல் அந்தமானில் இருந்து கிழக்கில் 360 கிலோ மீட்டர் தூரத்திலும், மசூலிப்பட்டினத்தில் இருந்து கிழக்கு தென்கிழக்கில் 990 கிலோ மீட்டர் தூரத்திலும், காக்கிநாடாவில் இருந்து 920 கிலோ மீட்டர் தூரத்திலும், கலிங்கப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கில் 870 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. இந்த புயல் மேற்கு வடமேற்கில் நகர்ந்து வருகிறது. நாளை கரையை கடக்கும் புயல் ஆந்திர மாநிலம் கடற்கரையில் மசூலிப்பட்டினத்திற்கும், கலிங்கப்பட்டினத்திற்கும் இடையே காக்கிநாடா அருகே நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பகலில் கரையை கடக்கும். அப்போது கடல் அலைகள் ஆந்திர கடல் பகுதியில் உயரமாக வரும். காற்றும் பலமாக வீசும். தமிழ்நாட்டில் நாளை (புதன்கிழமை) சில இடங்களில் மழை பெய்யும். இந்த தகவலை சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர மழை அளவு வருமாறு:– மழை அளவு இரணியல் 5 செ.மீ., மேட்டுப்பாளையம் 4 செ.மீ., செங்கோட்டை, தக்கலை தலா 3 செ.மீ., ஆயக்குடி, தென்காசி, குளச்சல், திருச்செந்தூர் தலா 2 செ.மீ., நாகர்கோவில் 1 செ.மீ. மழை பெய்துள்ளது. image: category:Tagging:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

ஆண்டர்சனே காரணம் 