Daily Thanthi |
- ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிட மாற்றம்
- உலக சதுரங்க போட்டி: ஆனந்துக்கு மீண்டும் ஏமாற்றம் 8–வது சுற்றும் டிராவில் முடிந்தது
- ஆஸ்திரேலியா–இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை தொடக்கம்
- முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கொச்சி சென்றனர்
- தெண்டுல்கருக்கு பளிங்கு சிலை
- 20 ஓவர் கிரிக்கெட் தென்ஆப்பிரிக்கா–பாகிஸ்தான் இன்று மோதல்
- சென்னை ஓபன் சதுரங்கம்: சந்தோஷ் வெற்றி
- ஆன்மீக சிந்தனை (20-11-2013)
- கன்னித்தீவு (20-11-2013)
- ஆண்டியார் (20-11-2013)
| ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிட மாற்றம் Posted: 19 Nov 2013 11:51 AM PST சென்னை கடலூர் சப்–கலெக்டர் ஆர்.லலிதா சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) பணியிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இந்த பணியிடத்தில் பணியாற்றி வந்த டி.என்.வெங்கடேஷ் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது. image: category:Tagging:News Group Category: |
| உலக சதுரங்க போட்டி: ஆனந்துக்கு மீண்டும் ஏமாற்றம் 8–வது சுற்றும் டிராவில் முடிந்தது Posted: 19 Nov 2013 11:15 AM PST சென்னை, சென்னையில் நடந்து வரும் கார்ல்செனுக்கு எதிரான உலக சதுரங்க போட்டியில் இன்னும் ஒரு வெற்றியை பெறாத ஆனந்த்துக்கு 8–வது சுற்றும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் டிரா ஆனது. உலக சதுரங்கம் நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் (இந்தியா), உலகின் 'நம்பர் ஒன்' வீரர் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) இடையிலான உலக சதுரங்க போட்டி (செஸ்) சென்னையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. தமிழக அரசின் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டி 12 சுற்றுகளை கொண்டது. முதலில் 6.5 புள்ளியை எட்டும் வீரருக்கு உலக சாம்பியன் பட்டம் வழங்கப்படும். இந்த நிலையில் ஆனந்த்–கார்ல்சென் இடையிலான 8–வது சுற்று போட்டி நேற்று நடந்தது. ஆனந்த் கறுப்பு நிற காயுடனும், கார்ல்சென் வெள்ளை நிற காயுடனும் களம் இறங்கினர். ஆனந்துக்கு பிடித்தமான 'ரய் லோபஸ்' முறையை கையில் எடுத்த கார்ல்சென் ராஜாவுக்கு முன்னால் இருந்த சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்தி ஆட்டத்தை ஆரம்பித்தார். ஆனந்தும் அதே போல் ராஜாவுக்கு முன்னால் இருந்த சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்தினார். டிரா ஆனது 'இனி வெற்றிகளே அவசியம் இல்லை; டிரா செய்தாலே போதும்' என்ற மனநிலையில் இருக்கும் கார்ல்சென் அதன் அடிப்படையிலேயே தனது யுக்தியை கடைபிடித்தார். 4–வது நகர்த்தலில் இருந்து சிப்பாய், குதிரை, மந்திரி ஆகியவற்றை மாற்றி மாற்றி வெட்டினார்கள். 25–வது மற்றும் 28–வது நகர்த்தல்களில் இருவரும் தங்களது ராணியை விட்டுக்கொடுத்தனர். அதன் பிறகு இருவரிடமும் சக்தி வாய்ந்த காய்கள் எதுவும் இல்லை. தலா 7 சிப்பாய்கள் மற்றும் ராஜா மட்டுமே எஞ்சி இருந்தன. எதிராளியை விட ஆனந்த் அதிக நேரம் யோசித்து காய்களை நகர்த்திய போதிலும், கார்ல்செனை ஒன்றும் செய்ய முடியவில்லை. 33–வது நகர்த்தலில் இருவரும் பரஸ்பரம் டிரா செய்ய சம்மதித்தனர். 75 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த ஆட்டத்தை ஆனந்த் மீண்டும் டிரா செய்தது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக அமைந்தது. பட்டத்தை நெருங்கும் கார்ல்சென் 8 சுற்று முடிவில் கார்ல்சென் 2 வெற்றி உள்பட 5 புள்ளிகளுடனும், ஆனந்த் 3 புள்ளிகளுடன் இருக்கிறார்கள். தற்போதைய சூழலில் 22 வயதான கார்ல்சென் உலக சாம்பியன் பட்டத்தை நெருங்கி விட்டார் என்றே சொல்லலாம். எஞ்சிய 4 சுற்றில் அவர் மூன்றை டிரா செய்தாலே போதும். நார்வே நாட்டை சேர்ந்த எந்த வீரரும் இதுவரை உலக சதுரங்க பட்டத்தை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் உள்ளூர் நாயகன் ஆனந்த் உலக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்றால் எஞ்சிய போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அடுத்து வரும் ஆட்டங்களில், சரிவில் இருந்து மீண்டு ஆட்டத்தின் போக்கை மாற்ற முயற்சிப்பேன் என்று நிருபர்களிடம் கூறிய ஆனந்த், கார்ல்சென் முதலில் ராஜாவுக்கு முன்பு இருந்த சிப்பாயை நகர்த்தியதில் தாம் ஆச்சரியப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். இன்று ஓய்வு நாளாகும். நாளை 9–வது சுற்று ஆட்டத்தை ஆனந்த் வெள்ளை நிற காயுடன் தொடங்குவார். image: category:Tagging: |
| ஆஸ்திரேலியா–இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை தொடக்கம் Posted: 19 Nov 2013 11:11 AM PST பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா–இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் திருவிழா நாளை தொடங்குகிறது. ஆஷஸ் தொடர் 'ஆஷஸ்' என்பது இங்கிலாந்து–ஆஸ்திரேலியா அணிகள் இடையே நூற்றாண்டு காலத்திற்கு மேலாக நடந்து வரும் பாரம்பரியமிக்க டெஸ்ட் கிரிக்கெட் தொடராகும். களம் இறங்கி விட்டால், இரு அணி வீரர்களும் யுத்த களத்தில் நிற்பது போல் கடுமையாக மோதி சீண்டிக் கொள்வார்கள். இதனால் டெஸ்ட் அரங்கில் சிறப்பு மிக்க போட்டிகளில் ஒன்றாக ஆஷஸ் தொடர் கருதப்படுகிறது. பொதுவாக ஆஷஸ் தொடர் 18 மற்றும் 30 மாதங்கள் இடைவெளியில் இரு நாடுகளிலும் மாறி மாறி நடைபெறும். ஆனால் இந்த முறை சரியாக மூன்று மாதங்கள் இடைவெளியில் ஆஸ்திரேலிய மண்ணில் நாளை தொடங்கப்போகிறது. 2015–ம் ஆண்டு தொடக்கத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அரங்கேற இருப்பதால், அதை கருத்தில் கொண்டு முன்கூட்டியே ஆஷஸ் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி ஆஸ்திரேலியா–இங்கிலாந்து இடையே 5 போட்டி கொண்ட ஆஷஸ் தொடரில் முதலாவது டெஸ்ட் பிரிஸ்பேனில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இங்கிலாந்தின் ராஜ்ஜியம் சில ஆண்டுகளாக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் இங்கிலாந்து அணி 2009–ம் ஆண்டில் 2–1 என்ற கணக்கிலும் 2010–11–ம் ஆண்டில் 3–1 என்ற கணக்கில், மூன்று மாதங்களுக்கு முன்பு 3–0 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரை கைப்பற்றியது. இந்த தடவையும் ஆஷஸ் தொடரை வென்றால் 123 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1890–ம் ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் தொடரை தொடர்ந்து 4 முறை கைப்பற்றிய பெருமையை இங்கிலாந்து தட்டிச் செல்லும். அதற்கு தான் அலஸ்டயர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி குறி வைத்துள்ளது. அதே சமயம் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா ஆயத்தமாகி வருகிறது. முதுகுவலி காயத்தில் இருந்து மீண்டு விட்ட மைக்கேல் கிளார்க், கேப்டனாக ஆஷஸ் கோப்பையை இதுவரை ருசித்ததில்லை. தனது கனவை நிறைவேற்ற அவருக்கு இதுவே கடைசி வாய்ப்பாக கூட இருக்கலாம். இந்திய ஒரு நாள் தொடரில் அசத்திய 31 வயதான ஜார்ஜ் பெய்லி டெஸ்டில் அறிமுகம் ஆகிறார். தசைப்பிடிப்பால் அவதிப்படும் ஆல்–ரவுண்டர் ஷேன் வாட்சன் உடல்தகுதி பெற்று விடுவார் என்று தெரிகிறது. 'ஒரு பேட்டிங் குழுவாக நீண்ட நேரம் பேட் செய்ய வேண்டும். குறிப்பாக முதல் இரு டெஸ்டில் இதை செய்ய வேண்டும். அதன் பிறகு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை பார்ப்போம். இது தான் எங்களது முக்கியமான இலக்குகளில் ஒன்று' என்று ஷேன் வாட்சன் குறிப்பிட்டார். பிராட் விவகாரம் கடந்த ஜூலை–ஆகஸ்டு மாதங்களில் இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் தொடர் நடந்த போது இங்கிலாந்து அணியின் ஆல்–ரவுண்டர் ஸ்டூவர்ட் பிராட் கேட்ச் ஆன போதிலும், நடுவர் விரலை உயர்த்தவில்லை என்ற ஒரே காரணத்திற்காக வெளியேற மறுத்து தொடர்ந்து விளையாடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பிராட் எங்கள் நாட்டிற்கு வரும்போது அவரை எங்களது ரசிகர்கள் அழ வைப்பார்கள் என்று ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லீமான் பகிரங்கமாக கூறினார். அவர் பற்ற வைத்த இந்த நெருப்பு நிச்சயம் இந்த தொடரில் பற்றி எரியும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. முதலாவது டெஸ்ட் நடக்கும் பிரிஸ்பேன் ஆடுகளம், வேகப்பந்து வீச்சுக்கு உகந்தது. கடந்த 25 ஆண்டுகளாக இங்கு ஆஸ்திரேலிய அணி தோல்வியே சந்தித்ததில்லை. இது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான அம்சமாக காணப்பட்டாலும், இங்கிலாந்து மிகவும் வலுவாக திகழ்வதால், அந்த பெருமையை தக்கவைத்துக் கொள்ள ஆஸ்திரேலிய கடுமையாக போராட வேண்டி இருக்கும். புதிய முறை கடந்த ஆஷஸ் தொடரின் போது நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்.) செய்யும் முறையில் சில தவறான தீர்ப்புகள் வழங்கப்பட்டன. என்றாலும் இந்த தொடரிலும் டி.ஆர்.எஸ். முறை தொடருகிறது. ஆனால் அதற்கு வலு சேர்க்கும் விதமாகவும், பரிசோதனை முயற்சியாகவும் 'ரியல்டைம் ஸ்னிக்கோ மீட்டர்' என்ற தொழில்நுட்பம் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. இது சந்தேகத்திற்குரிய கேட்ச் விஷயத்தில் நடுவர்களுக்கு மேலும் பல வழிகளில் உதவிகரமாக இருக்கும். தரவரிசை எப்படி? உலக தரவரிசையில் 116 புள்ளிகளுடன் 3–வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை 4–0 என்ற கணக்கில் தனதாக்கினால், இந்தியாவை (119 புள்ளி) பின்னுக்கு தள்ளிவிட்டு 2–வது இடத்தை பிடித்து விடும். அதே சமயம் 101 புள்ளிகளுடன் 5–வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை 4–0 என்ற கணக்கிலோ அல்லது அதை விட சிறப்பாக வென்றாலோ தரவரிசையில் 3–வது இடத்தை பிடிக்கலாம். மாறாக தொடரை டிரா செய்தால் 4–வது இடத்தை பெறும். இவ்விரு அணிகளும் இதுவரை 331 டெஸ்டில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் ஆஸ்திரேலியா 133 டெஸ்டிலும், இங்கிலாந்து 105 டெஸ்டிலும் வெற்றி பெற்றன. 93 போட்டி டிரா ஆனது. ஆஷஸ் தொடரை இரு அணியும் தலா 31 முறை வீதம் வென்றுள்ளன. வீரர்கள் விவரம் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:– ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், கிறிஸ் ரோஜர்ஸ், மைக்கேல் கிளார்க் (கேப்டன்), ஷேன் வாட்சன், ஸ்டீவன் சுமித், ஜார்ஜ் பெய்லி, பிராட் ஹேடின், ஜேம்ஸ் பவுல்க்னெர், ரையான் ஹாரிஸ், நாதன் லயன், மிட்செல் ஜான்சன் அல்லது பீட்டர் சிடில். இங்கிலாந்து: அலஸ்டயர் குக் (கேப்டன்), ஜோ ரூட், ஜோனதன் டிராட், கெவின் பீட்டர்சன், இயான் பெல், மேத் பிரையர், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன், ஸ்வான், கிறிஸ் டிரம்லெட் அல்லது ஸ்டீவன் பின். இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டாஸ் போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 'ஆஷஸ்' உருவான கதை 1882–ம் ஆண்டு லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை தோற்கடித்தது. இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலியா பதிவு செய்த முதல் வெற்றி இது தான். அப்போது இங்கிலாந்தை சேர்ந்த 'தி ஸ்போர்ட்டிங் டைம்ஸ்' என்ற பத்திரிகை இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில் 'இங்கிலாந்து கிரிக்கெட் செத்து விட்டது. அதன் உடலை எரித்து சாம்பலை (ஆஷஸ்) ஆஸ்திரேலியா எடுத்துச் செல்கிறது' என்று எழுதப்பட்டிருந்தது. அதன் பிறகு 1882–83–ம் ஆண்டு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்ற போது, இழந்த ஆஷசை மீண்டும் இங்கிலாந்து கொண்டு வருமா? என்று அந்த பத்திரிகை கேள்வி எழுப்பியது. அப்போதைய இங்கிலாந்து கேப்டன் இவோ பிலிக், இங்கிலாந்து கிரிக்கெட்டின் சாம்பலை (ஆஷஸ்) திரும்ப கொண்டு வருவோம் என்று சவால் விடுத்தார். அதன்படியே 3 டெஸ்டில் 2–ல் இங்கிலாந்து வென்ற போது, மெல்போர்னில் கூடியிருந்த சில பெண்கள் இவோ பிலிக்கிடம், கலைநயத்துடன் செய்யப்பட்ட சிறிய ஜாடியை நினைவு பரிசாக அளித்தனர். அதற்குள் ஸ்டம்பின் மீது வைக்கப்படும் பெய்ல்சை எரித்து அதன் சாம்பல் வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. இப்படி தான் 'ஆஷஸ்' பெயர் உருவானது. அதன் பிறகு இங்கிலாந்து–ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 'ஆஷஸ்' பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. இவான் பிலிக் இறந்த பிறகு அந்த சிறிய ஜாடி 1927–ம் ஆண்டு மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. அது இப்போது லண்டன் எம்.சி.சி. அருங்காட்சியகத்தில் உள்ளது. இதன் மாதிரி கோப்பை, வெற்றி பெறும் அணியின் கேப்டனிடம் வழங்கப்படுகிறது. 'பீட்டர்சன் 100' தென்ஆப்பிரிக்காவில் பிறந்தவரான 33 வயதான கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 99 டெஸ்டில் விளையாடி 23 சதத்துடன் 7,887 ரன்கள் குவித்துள்ள அவருக்கு, பிரிஸ்பேன் போட்டி 100–வது டெஸ்டாகும். இந்த மைல்கல்லை எட்டும் 10–வது இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் ஆவார். பீட்டர்சன் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் 2016–ம் ஆண்டு வரை தொடர்ந்து விளையாட விரும்புவதாக தெரிவித்தார். 2015–ம் ஆண்டு உலக கோப்பையை வெல்ல வேண்டும், தான் பிறந்த நாடான தென்ஆப்பிரிக்க மண்ணில் சதம் அடிக்க வேண்டும், டெஸ்டில் 10 ஆயிரம் ரன்களை எட்ட வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் கூறினார். 'பீட்டர்சன் திமிரு பிடித்தவர், அவரது அணியை சேர்ந்தவர்களுக்கே அவரை பிடிக்காது' என்று ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தி குறித்து கேட்ட போது, 'தென்ஆப்பிரிக்காவில் இருந்து இங்கிலாந்தில் குடியேறிய நான் உண்மையிலேயே சில போராட்டங்களை சந்திக்க வேண்டி இருந்தது. எனது லட்சியத்தை அடைய ஒருமித்த மனதுடன் பயணிக்க வேண்டி இருந்தது. என்னை 'கர்வமிக்கவர்' என்று மக்கள் நினைத்தால் அதில் நான் ஒன்றும் செய்ய முடியாது. பிரபலமான பல விளையாட்டு வீரர்கள் சிறந்த முடிவுக்காக போராடும் போது அது மாதிரி கொஞ்சம் நடந்து கொள்வது சகஜம் தான். என்னை பொறுத்தரை அதை 'தன்னம்பிக்கை' என்கிறேன். நீங்கள் (ஊடகம்) திமிரு என்கிறீர்கள்' என்றார். image: category: |
| முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கொச்சி சென்றனர் Posted: 19 Nov 2013 11:07 AM PST கொச்சி, டெஸ்ட் தொடர் நிறைவடைந்த நிலையில் அடுத்து இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி கொச்சியில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. பிற்பகல் 1.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. இதையொட்டி இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நேற்று மதியம் கொச்சிக்கு சென்றனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு கேரள பாரம்பரிய முறைப்படி மோகினியாட்டம், கதகளி நடனத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு அணி வீரர்களும் இன்று பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். இந்த ஸ்டேடியத்தின் பெவிலியனுக்கு ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. அதனை கேப்டன் டோனி திறந்து வைக்கிறார். image: category:Tagging: |
| Posted: 19 Nov 2013 11:04 AM PST இந்திய கிரிக்கெட்டின் சாதனை சிகரம் சச்சின் தெண்டுல்கருக்கு பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் உள்ள அதர்வாலியா என்ற கிராமத்தில் ஆளுயர சிலை திறக்கப்பட்டு உள்ளது. பளிங்குகல்லால் ஆன இந்த சிலை 'போஜ்புரி' நடிகர் மனோஜ்திவாரியின் ஏற்பாட்டின் பேரில் அங்கு நிறுவப்பட்டிருக்கிறது. இதனை மாவட்ட நீதிபதி அர்விந்த் குமார் சிங் திறந்து வைத்தார். கிரிக்கெட்டின் கடவுளுக்கு இது நாங்கள் செய்யும் சிறிய கைமாறு என்று மனோஜ் திவாரி குறிப்பிட்டார். இதற்கிடையே, தொடர்ந்து வாழ்த்து மழையில் நனைந்து வரும் தெண்டுல்கருக்கு, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. image: category:Tagging: |
| 20 ஓவர் கிரிக்கெட் தென்ஆப்பிரிக்கா–பாகிஸ்தான் இன்று மோதல் Posted: 19 Nov 2013 11:00 AM PST இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளது. பாகிஸ்தான்–தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஜோகனஸ்பர்க்கில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. இதற்கிடையே காயம் காரணமாக பாகிஸ்தான் ஆல்–ரவுண்டர்கள் சோயிப் மாலிக், அப்துல் ரசாக் ஆகியோர் தென்ஆப்பிரிக்க தொடரில் இருந்து விலகி, உடனடியாக தாயகம் திரும்புகிறார்கள். image: category:Tagging: |
| சென்னை ஓபன் சதுரங்கம்: சந்தோஷ் வெற்றி Posted: 19 Nov 2013 10:54 AM PST சென்னை கிராண்ட் மாஸ்டர் சர்வதேச ஓபன் சதுரங்க போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 6–வது சுற்றில் இந்திய வீரர் விதித் சந்தோஷ், சக நாட்டவர் லலித் பாபுவை தோற்கடித்தார். மற்றொரு இந்திய வீரர் வி.ஆர்.அரவிந்த் சிதம்பரம் 47–வது நகர்த்தலில் அர்மேனிய வீரர் டெர்–சஹக்யான் சாம்வேலுக்கு அதிர்ச்சி அளித்தார். 6 சுற்று முடிவில் விதித் சந்தோஷ், ரஷியாவின் மோஜாரோவ் மிகைல் தலா 5.5 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறார்கள். image: category:Tagging: |
| Posted: 19 Nov 2013 10:42 AM PST Daily Thanthi Special Term:Daily Thanthi Image Special Anmikasinthanai: ![]() |
| Posted: 19 Nov 2013 10:41 AM PST Daily Thanthi Image Special: ![]() Daily Thanthi Special Term: |
| Posted: 19 Nov 2013 10:40 AM PST Daily Thanthi Special Term:Daily Thanthi Image Special Andiyar: ![]() |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


