Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நோவார்டிஸ் - இந்தியாவின் பொறுப்பும் வழக்கும்

Posted: 19 Nov 2013 01:59 PM PST

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு மருந்து நிறுவனம் "நோவார்டிஸ்' . அது, "க்ளீவெக்' என்ற மருந்தைக் கண்டுபிடித்து அதற்கு காப்புரிமை கேட்டு நம் நாட்டிடம் விண்ணப்பித்தது. அதற்கு காப்புரிமை பாதுகாப்பு கிடைக்கத் தகுதியில்லை என்று இந்தியக் காப்புரிமை அலுவலகம் கூறியது. "நோவார்டிஸ்', அறிவுசால் சொத்து மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின்முன், மேல்முறையீட்டினைத் தாக்கல் செய்தது. அதுவும் நிராகரிக்கப்பட்டது. பின்பு உச்சநீதிமன்றம் சென்றது "நோவார்டிஸ்'. நம் உச்சநீதிமன்றமும் "நோவார்டி'சின் வழக்கை ஆணித்தரமாக ...

இதுதான் அரசியல்!

Posted: 19 Nov 2013 01:58 PM PST

தேர்தலில் வெளிப்படைத் தன்மை வந்துவிடக் கூடாது என்பதில் நமது அரசியல்வாதிகள் குறியாக இருக்கிறார்கள். முதன்முறையாக, இந்தியாவில் ஓர் அரசியல் கட்சி தேர்தல் நிதி மற்றும் நன்கொடைகள், யாரால் எவ்வளவு தரப்பட்டது என்பதைத் தனது இணையதளத்தில் வெளியிட முற்பட்டால் அவர்களால் அதை எப்படி சகித்துக்கொள்ள முடியும்?  அரவிந்த் கேஜ்ரிவாலின் "ஆம்ஆத்மி' கட்சிக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வந்திருப்பதாகவும், அது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கு எதிரானது என்றும் ஒருவர் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார். ...

சமையலின் போது செய்யும் 5 தவறுகள்

Posted: 19 Nov 2013 01:54 PM PST

சமையலில் உப்பை அதிகமாக சேர்த்து விடுவதோ, காரத்தை அளவு தெரியாமல் போட்டுவிடுவதோ தவறு அல்ல. அது அப்போதைய சமையல் ருசியை மட்டுமே கெடுக்கும். ஆனால்.. அதையும் விட நமக்கு தவறு என்று தெரியாமல் வெறும் ருசிக்காகவும், அழகுக்காகவும் சில தவறுகளை செய்து விடுகிறோம். அதனால் நமது உடல் ஆரோக்கியமும் பாதிக்கிறது. 1. எந்த உணவு பொருளையும் கழுவாமல் பயன்படுத்தவே கூடாது. உதாரணத்துக்கு சிலர் புளியை தண்ணீர் ஊற்றி கரைப்பார்கள். ஆனால், அதையும் ஒரு முறை தண்ணீர் சேர்த்து அலசி கீழே ஊற்றிவிட்டு, அடுத்து நீர் ஊற்றி கரைத்துக் ...

அடுத்த ஆண்டு 20 அரசு விடுமுறை தினங்கள்

Posted: 19 Nov 2013 01:52 PM PST

அடுத்த காலண்டர் ஆண்டில் (2014) பொங்கல், தீபாவளி பண்டிகைகள் உள்பட 20 நாட்கள் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான பட்டியலை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். அதன் விவரம்: ஜனவரி 1- ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி 14-பொங்கல்-மிலாது நபி ஜனவரி 15- திருவள்ளுவர் தினம் ஜனவரி 16-உழவர் திருநாள் ஜனவரி 26-குடியரசு தினம் மார்ச் 31-தெலுங்கு வருடப் பிறப்பு. ஏப்ரல் 13-மகாவீரர் ஜெயந்தி ஏப்ரல் 14-தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 18-புனித வெள்ளி மே ...

ரியாத்-ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளக்காடான தெருக்கள்

Posted: 19 Nov 2013 01:48 PM PST

ரியாத்: ரியாத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சனிக்கிழமை இரவு கன மழை பெய்தது. சவூதி அரேபியா தலைநகர் ரியாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சனிக்கிழமை இரவு கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் முழங்கால் அளவுக்கு வெள்ள நீர் ஓடியது. மேலும் கன மழையால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. கன மழையையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் மன்னர் சௌத் பல்கலைக்கழகம், இமாம் முகமது பின் சௌத் இஸ்லாமிய பல்கலைக்கழகம் உள்பட 4 பல்கலைக்கழகங்களுக்கு ...

ஒழுகும் சென்னை விமான நிலையம்!

Posted: 19 Nov 2013 01:46 PM PST

சென்னை: வானில் கருமேகங்கள் கூடுவதைக் கண்டாலே, பிளாஸ்டிக் வாளி தேடி ஓட ஆரம்பித்து விடுகிறார்களாம் சென்னை விமான நிலைய ஊழியர்கள். எதற்கு பிளாஸ்டிக் வாளி எனக் கேட்கிறீர்களா...? வேறு எதற்கு மழை பெய்யும் போது தண்ணீர் ஒழுகும் இடங்களில் வைப்பதற்குத் தான். குடிசை போன்ற இடங்களில் தான் மழை நீர் ஒழுகும் இடங்களில் பாத்திரங்களை வைத்து தண்ணீர் கீழே சிந்தாமல் இருக்கப் போராடுவார்கள் என்றால், சர்வதேச விமான நிலையத்திலும் இதே நிலை தான். சமீபத்தில் விஸ்தீகரிக்கப் பட்ட சென்னை விமான நிலையத்தில் தான், மழை நீர் ...

உலக செஸ் 8-வது சுற்று டிரா: ஆனந்துக்கு மேலும் நெருக்குதல்

Posted: 19 Nov 2013 01:42 PM PST

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 8-வது சுற்றும் டிராவில் முடிந்துள்ளதால், நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது. நடப்பு சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 12 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியின் 8-வது சுற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஏற்கெனவே இரண்டு சுற்றுகளில் வென்றுவிட்ட கார்ல்சன், தற்காப்பு ஆட்டத்தை குறிக்கோளாகக் ...

1200 திரையரங்குகளில் 'இரண்டாம் உலகம்'

Posted: 19 Nov 2013 01:41 PM PST

செல்வராகவன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் 'இரண்டாம் உலகம்' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆர்யா, அனுஷ்கா நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'இரண்டாம் உலகம்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.வி.பி சினிமாஸ் இப்படத்தினை தயாரித்திருக்கிறது. மது - ரம்யா ரெண்டு பேரும் இந்த பூமியில் அழகான காதலர்கள். அவர்கள் இருவரும் இன்னொரு உலகில் மருவன் - வர்ணா என்கிற பெயரில் இரண்டு பாத்திரங்களாக சந்திக்கிறார்கள். அவர்கள் எப்படி அந்த ...

இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர்

Posted: 19 Nov 2013 01:40 PM PST

இந்தியாவின் அனைத்து மகளிர் வங்கியின் (பாரதிய மகிளா வங்கி) முதல் கிளையைத் துவக்கிவைத்த பிரதமர் மன்மோகன் சிங், நாட்டில் பாகுபாட்டுக்கு உள்ளாகும் பெண்களின் நிலை கவலைக்குரியதாக உள்ளது என்றார். அனைத்து மகளிர் வங்கியின் முதல் கிளை இந்தியாவின் முன்னாள் பிரதமரான இந்திரா காந்தியின் பிறந்த நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பையில் திறக்கப்பட்டது. இந்த விழாவில் முதல் வங்கியைத் துவக்கிவைத்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், "நாம் பெண் குடியரசுத் தலைவரைப் பெற்றிருந்தோம். இப்போது, பெண் மக்களவைத் தலைவர், ...

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Posted: 19 Nov 2013 01:29 PM PST

போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ? அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் ...

மனசு - ஒரு பக்க கதை

Posted: 19 Nov 2013 11:09 AM PST

ஸாரி டியர், இன்னைக்கும் எனக்கு வேற வேலை இருக்கு. நீங்க முன்னாடி போங்க, நான் பஸ்லயே வந்திடறேன். - கவிதாவின் வார்த்தைகளை கேட்டு ஆச்சரியப்பட்டு போனாள். அவளது தோழி சாந்தி. இந்த ஒரு வாரமாகவே அவளது நடவடிக்கையே சரியில்லை. - ஏய், என்னடி ஆச்சு உனக்கு? நானும் பத்து நாளா கவனிக்கிறேன." நீ ஏதோ ஒரு காரணம் சொல்லி குமாரோட போறதை தவிர்க்கற... அப்படி என்னடி பிரச்சனை உங்களுக்குள்? என்றாள் சாந்தி. - அதில்லடி, எனக்கும் ஆசைதான். ஜாலியா அவனோட போய் காலேஜ்ல இறஙக. ஆனா, நான் அவனோட போகாத நாளெல்லாம் ...

பெர்முடா முக்கோணம் [Bermuda Triangle]

Posted: 19 Nov 2013 11:02 AM PST

இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொன்றும் ஆச்சர்யத்தின் கட்டமைப்பில் சூழப்பட்டது தான், சிலவிசயங்கள் நமக்கு புலப்பட்டலாம், இன்னும் நம்மால் அறிய முடியாத மர்மங்கள் நம் கண் முன்னே ஏராளம் ஏராளம்!, தற்பொழுது அறியமுடியவில்லையே என்பதற்காக அது என்றுமே அறியமுடியாத விசயமாக கருத முடியாது, இன்று நம்மால் வெகு எளிமையாக விளக்கமுடியும் பல விசயங்கள் ஒரு காலத்தில் சாத்தியமேயில்லை என்று பலரால் கைவிடப்பட்டது தான், அதில் இன்றும் விவாத பொருளாக இருப்பது பெர்முடா முக்கோணம்! வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு ...

‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன்

Posted: 19 Nov 2013 10:44 AM PST

அடி மனசோட ஆழத்துல இருக்கிறதை வாய் வரைக்கும் வரவெச்சு உளறிக் கொட்டின பின்னாடி அதை மறைக்க நெனைக்கிறது எவ்ளோ கஷ்டமோ அப்படி ஒரு கஷ்டத்தைத் தான் கருணாநிதியின் பேரனும் நடிகருமான அருள்நிதியின் பேச்சில் காண முடிந்தது. 'வம்சம்', 'உதயன்', 'மெளனகுரு' ஆகிய படங்களுக்குப் பிறகு அருள்நிதி நடிப்பில் ரிலீசாகப் போகும் படம் தான் 'தகராறு'. 'வம்சம்' படத்தில் பிரஸ்மீட்டில் பேசவே நடுங்கிய அருள்நிதி இந்தப் படத்தின் பிரஸ்மீட்டில் பல உண்மைகளையும் புட்டு புட்டு வைத்து வந்திருந்த ரிப்போர்ட்டர்களை நடுங்க வைத்தார். குறிப்பாக ...

நீங்கதானே டாங்கி படை வேண்டும் என்று கேட்டீர்கள்...!

Posted: 19 Nov 2013 10:26 AM PST

- தலைவர் தொகுதி மக்களின் கண்ணீரைத் துடைக்கும் வைப்பர்! வெளிச்சம் காட்டும் ஹெட்லைட்! தீங்கு வராமல் தடுக்கும் பிரேக்..! - பேச்சாளருக்கு 'கார்' கன்பர்ம்...! - >அ,ரியாஸ் - ------------------------------------------------ - நீங்க அனுப்பியுள்ள கதையை ஒருத்தர் ஒரு வருஷத்துக்கு முன்னாடியே அனுப்பியிருக்கிறார்...! - சான்ஸே இல்லை! எப்படி சார் அவரால என் கதையை காப்பி அடிக்க முடியும்..? - >வீ.விஷ்ணுகுமார் - ------------------------------------------------ - மான ரோஷம் இருந்தா போருக்கு வா'ன்னு ...

19000 பதிவுகளைக் கடந்து தொடர்ந்து சீரிய பதிவுகளைத் தந்து கொண்டிருக்கும் கிருஷ்ணம்மாவிற்கு வாழ்த்துகள்!

Posted: 19 Nov 2013 10:19 AM PST

19000 பதிவுகளைக் கடந்து தொடர்ந்து சீரிய பதிவுகளைத் தந்து கொண்டிருக்கும் அன்பு அக்கா கிருஷ்ணம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்!

அப்ப உனக்கு 'அல்வா' நிச்சயம்...!

Posted: 19 Nov 2013 10:06 AM PST

என்ன கபாலி...ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ்ல சேர்ந்துட்டே? - மேல் திருட்டுக்காக ஃபாரீன் பொகலாம்னு இருக்கேன் ஏட்டய்யா...! - ----------------------------------------- - தலைவரே உங்க மனைவிக்கு லேபர் பெயின் எடுத்துருச்சு...! - யாரைப்பார்த்து லேபர்னு சொல்றே..? அவங்க பெரிய மில் ஓனராக்கும்...! - ------------------------------------------- பார்த்தா சாதாரண ஆமை மாதிரி இருக்கு...நட்சத்திர ஆமைன்னு சொல்றே? - சினிமாவுலே நடிச்சிருக்கே...! - ----------------------------------------------- - என்னோட ...

தலைவரே...உங்க செல் நெம்பர் என்ன?

Posted: 19 Nov 2013 10:04 AM PST

- நீதிபதிக்கு பொண்ணை கட்டிக்கொடுத்தது தப்பா போச்சா ஏன்? - அடிக்கடி தள்ளி வச்சுடறாரே...! - ------------------------------------------------- - இவ்வளவு பெரிய தொந்திய வச்சுக்கிட்டு எப்படி ஏட்டய்யா உங்களால ஓடிப்போய் திருடனைப் பிடிக்க முடியும்? - சேச்சே..! நான் ஏன் ஓடணும்? அவங்களே நியாயமா கொண்டு வந்து மாமூலை தந்துட்டுப் போயிடுவாங்க...! - ----------------------------------------------- - தலைவரே...உங்க செல் நெம்பர் என்ன? - யோவ்...பப்ளிக்ல அசிங்கப்படுத்தாதேய்யா...! மொபைல் நெம்பர்னு ...

மேகத்தாயின் மழைக் குஞ்சு…

Posted: 19 Nov 2013 09:41 AM PST

வானமும் கடலும் கூடி கருத்தரித்த மழைக்குஞ்சு, மேக வயிற்றினிலே தவழுகிறாள் காலமும் நேரமும் கூடி வர கர்பவலியில் அலறுகிறாள் அழுகையுடன் இடியாக இடைக்கிடையில் மின்னலாய் வந்து போகும் அவளின் அழகான இடை அழகு பிள்ளைப் பேறு காலம் வந்தவுடன் கறுப்புக்கொடியுடன் சலசலப்பு உலகமெங்கும் மெதுவாய் ஒவ்வொன்றாய் உதிருகின்ற மழைக்குஞ்சு தென்றலுடன் விளையாடும் மேக வயிறும் சூரிய சத்திரசிகிச்சையினால் கிழிக்கப்பட்டு சோவெனக் கொட்டும் குஞ்சுகள் ஒன்றா இரண்டா.. பல கோடிக் குஞ்சுகள் பாரெல்லாம் பரந்தோடும் பாரபட்சமின்றி சிப்பிக்குள் ...

இன்றைய மருத்துவ உலகம்!

Posted: 19 Nov 2013 09:29 AM PST

இன்றைய மருத்துவ உலகம்! ஒவ்வொருக்கும் ஒவ்வொருவிதமான அசெளகாரியங்கள், மனக்கஷ்டங்கள், உடல் உபாதைகள். இவைகளிலிருந்து விடுபட நாம் தேடிச் செல்வது மருந்தகங்கள், மருத்துவமனைகள். அதிலும் தற்பொழுது சூப்பர் ஸ்பெஷாலிட்டி, மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகள் – போன்றவை. அங்கு நமக்கு கிடைப்பது – புதுப்புது பெயர்களைக்கூறி நம்முடைய பயத்தினை அதிகப்படுத்துவதும் தொடர்ச்சியாக பலவிதமான (இரத்தம், மலம், இ.ஜி.சி, திரட்மில், எக்ஸ்ரே, எம் ஆர் ஸ்கேன் போன்ற பெயர்களில்) பரிசோதனைகளும்தான். இவைகளுக்கு நாம் கொடுக்கவேண்டியது ...

விடாமல் பெய்யும் மழை எங்கே?

Posted: 19 Nov 2013 09:04 AM PST

தென்பெண்ணை ஆற்றில் தண்ணீரும் இல்லை!
தேடி பார்க்க வயல்களும் இல்லை!
வளர்ந்து நிற்க்கும் புற்களும் இல்லை!
வந்து மேய்வதற்க்கு மாடுகளும் இல்லை!
களை எடுக்கும் பெண்களுக்கு வேலையும் இல்லை!
கையில் காசு பணமும் இல்லை!
உழவு செய்யும் ஆண்களுக்கு உழைப்பும் இல்லை!
உழைப்பின்றி போக ஊறுகாய்க்கும் வழி இல்லை!
விவசாயி வீட்டில் விதைகள் உண்டு!
விதைத்து அறுவடைசெய்ய வயல்கள் உண்டு!
விடாமல் பெய்ய மழை மட்டும் இல்லை..............

வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,

Posted: 19 Nov 2013 07:45 AM PST



பகைவர்களை அழித்து விட்டேன்!

Posted: 19 Nov 2013 07:31 AM PST

மருதூர் நாட்டை இளங்குமரன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அமைச்சர்களிடம் அவர், "நம் நாட்டை அடுத்துள்ள அரசர்கள் அனைவரும் நமக்கு பகைவர்களாக உள்ளனர். அவர்களை அழிக்க ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்கள்,'' என்று கேட்டார். "அரசே! உங்களைப் போலவே அவர்களும் வலிமை படைத்த அரசர்கள். அவர்களை அழிக்க முயற்சி செய்தால் நமக்குப் பேரழிவுதான் ஏற்படும்,'' என்றார் தலைமை அமைச்சர். "அவர்களை அழிக்க உங்களுக்கு வழி தெரியவில்லை. நானே வழி கண்டுபிடிக்கிறேன்,'' என்றான் இளங்குமரன். சில நாட்கள் சென்றன. தூதர்களை அழைத்த ...

அமெரிக்க நிறுவனம் மூலம் செவ்வாய் கிரகத்தில் குடியேற, ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் !

Posted: 19 Nov 2013 07:17 AM PST

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்து என்டீவர் விண்கலம் மூலம் அமெரிக்காவின் "நாசா' மையம் ஆய்வு நடத்தி வருகிறது.இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தி மார்ஸ் ஒன் பிராஜக்ட் என்ற பதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி, செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாகத் தங்குபவர்கள் அங்கு குடியேறப்படுவார்கள். அவர்கள் பூமிக்குத் திரும்ப முடியாது என் ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளது. இத்திட்டம் வருகிற 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுளளது. அமெரிக்கர்களிடம் ...

மாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !

Posted: 19 Nov 2013 07:14 AM PST

சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பசுக்களை மேய்க்கும் புதிய 'ரோபோ'வை வடிவமைத்துள்ளனர், இந்த ரோபாவால் பசுக்களின் ஆரோக்கியம் மேம்படுவதாகவும், அதனால் பால் உற்பத்தி அதிகரிக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் பலவிதமான 'ரோபோ'வை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இந்த நிலையில், தற்போது மாடுகளை மேய்த்து விட்டு மீண்டும் பத்திரமாக திரும்ப அழைத்து வரும் புதிய 'ரோபோ'வை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தை ...

அழகுக்கு ஆரஞ்சு பழம் !

Posted: 19 Nov 2013 07:10 AM PST

கண்கள் "பளிச்" ஆக ஆரஞ்சு ஜூஸை ஃ‌ப்‌ரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி கண்ணுக்கு மேல் ஒத்தி எடுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படி செய்து வர, கண்கள் "பளிச்" ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது. தலையின் வறட்டுத் தன்மையைப் போக்கி ஜொலி ஜொலிக்க வைக்கிறது ஆரஞ்சு தோல். உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலைபருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா இவை ஒவ்வொன்றும் 100 கிராம் ...

"ஐந்தாவது தூண்' அமைப்பின் செயல்பாடு : மலேசிய ஊழல் தடுப்பு குழு ஆய்வு

Posted: 19 Nov 2013 07:03 AM PST

சென்னை: மலேசிய அரசின் ஊழல் தடுப்பு கமிஷன் அதிகாரிகள் குழு, சென்னையில், "ஐந்தாவது தூண்' அமைப்பின் செயல்பாடு குறித்து, ஆய்வு செய்தது. தமிழகத்தில், "ஐந்தாவது தூண்' என்ற, ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிரான, தன்னார்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில், லஞ்சத்திற்கு எதிரான விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில், "பூஜ்ஜியம்' பொறிக்கப்பட்ட, மாதிரி ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு, மக்களிடையே, வினியோகிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மலேசிய அரசின் ஊழல் தடுப்பு கமிஷன் அதிகாரிகள் குழு, ...

நமக்குள் ஆனந்தம் :)

Posted: 19 Nov 2013 06:55 AM PST

மநுஷ்யனாக பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே, எதற்காக? ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு தான். வெளியிலிருக்கிற வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை, அவற்றை பெறவே அலைகிறான். ஒன்று கிடைத்து விட்டாலும் போதவில்லை. அதனால் வருகிற சுகம் தீர்ந்து போகிறது. இன்னொன்றுக்கு ஆசைப்படுகிறான். அதைத் தேடி ஓடுகிறான். இவனுக்கு சாந்தி என்பதே ஒரு நாளும் இல்லாமலிருக்கிறது.மநுஷ்யன் புறத்தில் ஆனந்தத்தை தேடிக்கொண்டு போவதற்கு காரணம் அவன் உள்ளுக்குள், தானே ஆன்நத ஸ்வரூபமாக இருப்பது தான். இவன்உள்ளக்குள் ...

உத்தமர்தானா சொல்லுங்கள்

Posted: 19 Nov 2013 06:47 AM PST

இந்தியாவின் பிரதமரும், முதல்வர்களும், அமைச்சர்களும், அதிகாரிகளும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாமல், மக்களுக்கு சேவை செய்யும் புனிதப் பசுக்களாக அமைவர் என்ற எண்ணத்தில், இந்தியாவில் அரசியல் சாசனங்கள் உருவாக்கப்பட்டன. காலப் போக்கில் அவர்கள், அனைவரும் பிறழ்ச்சி மனோபாவம் கொண்டவர்களாக, சுயநலப் போக்குடையவர்களாக, மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுபவர்களாக, அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களாக, பதவி ஆசை கொண்டவர்களாக மாறிப் போயினர். மக்கள் நலனைப் புறக்கணித்து, ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதில் ஆர்வம் காட்டினர். ...

சனிக்கிழமைகளிலும் சீரியல் போடுவதின் பின்னணி தகவல் தெரியுமா?

Posted: 19 Nov 2013 06:35 AM PST

சன் டிவியில் சனிக்கிழமையன்றும் சீரியல் ஒளிபரப்புவதற்கான பின்னணியைப் பற்றி ஊடக உலகில் பலரும் பலவிதமாக பேசிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். காது கொடுத்து கேட்ட போது கிடைத்த விசயம் சுவாரஸ்யமானதாகத்தான் இருந்தது. குடும்ப கட்சி ஆட்சியில் இருந்த போது ஒரு படம் விடாமல் வாங்கி குவித்தது சன் டிவி. படத்தயாரிப்பு, விநியோகம் என அடித்து பிடித்து வாங்கி நிறைய பேரின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டது. சேனலுக்கு எதிராக குடும்ப கட்சி கடைவிரித்த உடன் போட்டி கிளம்பியது. இளந்தலைமுறை சேனலின் மூலமாகவும் போட்டி ...

ஆசை... ஆசை...!

Posted: 19 Nov 2013 06:11 AM PST

மரக்கிளையில் அமர்ந்தபடி கூ... கூ... என்று கூவிக் கொண்டிருந்தது அந்தக் குயில். அப்போது அந்தப் பக்கமாக வாத்து ஒன்று வந்து கொண்டிருந்தது. மரக்கிளையில் குயிலின் சத்தத்தைக் கேட்டதும் அண்ணாந்து பார்த்தது வாத்து. தத்தித் தத்தி மரத்தடியின் அருகே சென்றது வாத்து. "இந்தக் குயில் மரத்தின் உச்சிக்கிளையில் அமர்ந்தபடி கூவுகிறதே... நாமும் இதனைப் போன்று இந்த மரத்தின் உச்சிக் கிளையில் ஏறிடவேண்டும்' என்று மனதுக்குள் நினைத்தது.மரக்கிளையில் அமர்ந்திருந்த குயிலோ மரத்தடியில் வாத்து நின்று கொண்டிருப்பதைப் பார்த்தது.""வாத்தே, ...

தெரிஞ்சுக்கோங்க! -லும்ப்சக்கர் மீன்!

Posted: 19 Nov 2013 06:08 AM PST

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

யார் இவர்?

Posted: 19 Nov 2013 06:00 AM PST

அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ...

பிறந்த தின வாழ்த்துக்கள் , ஹர்ஷித்

Posted: 19 Nov 2013 05:51 AM PST

 


பிறந்த தின வாழ்த்துக்கள் , ஹர்ஷித்    

ரமணியன்

ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது?

Posted: 19 Nov 2013 05:47 AM PST

ஆய்த எழுத்தை உச்சரிக்கும்பொழுது "அக்கன்னா' என்றும், "அக்கேனா' என்றும் உச்சரிக்கிறார்கள். இது தவறானது. குழந்தைகளுக்குத் தமிழிலுள்ள உயிரெழுத்துகளைச் சொல்லிக் கொடுக்கும்போது "அ' என்பதை "ஆனா' என்றும், "ஆ' என்பதை "ஆவன்னா' என்றும் வரிசைப்படுத்தி, "ஒüவன்னா' என்பது ஈறாகச் சொல்லி முடித்துப் பின், ஆய்த எழுத்தை (ஃ) "அக்கன்னா' என்று ஒருவித ஒலிநயத்துடன் சொல்லி முடிப்பதைப் பார்க்கிறோம். எழுத்துகளை விட்டிசைக்காமல் ஓர் இயைபு பட உச்சரிப்பதற்காகவே தனி எழுத்துகளின் பின் கரம், காரம், கான் என்ற சாரியைகளைச் ...

பள்ளியில் டீச்சர்.. கடையில் புரோட்டா மாஸ்டர்!

Posted: 19 Nov 2013 05:46 AM PST

புயலடிக்கும் பொழுதோடு புலர்கிறது விடியல். அலையடிக்கும் மனதோடு தொடர்கிறது அன்றாட வாழ்க்கை. நம்மில் அநேகம் பேரின் யதார்த்தம் இப்படித்தான் நகர்கிறது. செந்தூர் வள்ளியின் குடும்பமும் இதற்கு விதிவிலக்கல்ல. காரைக்குடிக்கு அருகே உள்ள பட்டமங்கலம், பிரபலமான குரு ஸ்தலம் உள்ள ஊர். இங்குள்ள வசந்தம் ஓட்டலுக்கு நாற்பது வருட பாரம்பரியம் உண்டு. பாரம்பரியத்தோடு ஏராளமான வாடிக்கையாளர்களையும் வளைத்துப் போட்டிருக்கிறது இந்த ஓட்டல். அப்படியென்ன இங்கு என்ன விசேஷம் என்கிறீர்களா.. புரோட்டா அறிமுகமான நாளில் இருந்தே ...

சச்சினுக்கு விருது:தேர்தல் கமிஷனிடம் புகார்

Posted: 19 Nov 2013 05:46 AM PST

புதுடில்லி : கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவித்தது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்ட பிரிவு ஆர்வலர் திபாஷிஷ், தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்துள்ளார். சச்சின், காங்கிரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி., அதனால் 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் சமயத்தில் கோடிக்கணக்கான வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து ஓட்டுக்களை பெறுவதற்காக சச்சினுக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
thinamalar

விடியும் பொழுதினில்......

Posted: 19 Nov 2013 05:43 AM PST

வின் மீன்கள் விழி மூடி விடை பெற்றுச் செல்ல உதயம் உச்சி நோக்கி விடிந்த பொழுதினில் கூவி வந்த குயில் செவிக்கு இனிதாகி தளிர் துளிர்த்து மெல்ல விரிந்திட துடிக்கயில் எங்கிருந்து வந்தாயோ? விழி வழி நுழைந்தாயோ? செவி வழி புகுந்தாயோ ? எந்த வழி தெரியவில்லை தேடித் துளாவிப் பிடிக்கையில் நீ ஓடி ஒளிந்து விளையாடி சலித்து நான் திரும்பவே கை கோர்த்து நெருங்கியே பசிக்கு நான் சினுங்கையில் கவிதை படைத்துத் தருவாய் ரசித்தே புசித்தேன் உன் அறுசுவையும் தமிழாய் உன் எண்ணங்களை ...

வாழ்ந்து பார்ப்போம் .....

Posted: 19 Nov 2013 05:38 AM PST

மனத்தில் தளர்வா?? மூச்சை நன்றாக இழுத்து பின் நிதானமாக விடுங்கள் தாய் தகப்பனா ?? முடிந்த வரை பிள்ளைகள் அருகிலேயே இருங்கள் பிள்ளைகள் பேசக் கேளுங்கள் முன்பு நடந்த சந்தோஷ நினைவுகளை பகிருங்கள் புகைப் பட ஆல்பம் பாருங்கள் தூரத்தில் உள்ள நண்பர்களுக்கு கைபேசியில் பேசுங்கள் அருகில் உள்ள நண்பர்கள் பிடித்தமான உறவினர்களை நேரில் சென்று பாருங்கள் கூட இருப்பவர்களோடு பந்து விளையாடுங்கள் கேரம் பல்லாங்குழி கூட விளையாடலாம் விளையாடும் போது மனது லேசாகி சிறு பிள்ளையாகி ...

மாசில்லா அன்பு

Posted: 19 Nov 2013 05:34 AM PST

சிறு சாரலில் சிலிர்க்க ரசித்து நடந்து போகிறேன் அதி மழைக் கூடினாலும் உடல் குளிர நடுங்கினாலும் குடையோடு வந்து விடாதே கூடவே வா விரும்புகிறேன் கால் வலிக்க நடந்தாலும் பட்டினியாய் கிடந்தாலும் மயங்கியே விழுந்தாலும் அறுசுவையில் சமைத்து உணவோடு வந்து விடாதே கவிதை தா எழுந்துவிடுவேன் பள பளக்கும் உடை தேடி பெரும் பொருளில் அணி வாங்கி மயக்க வைக்கும் மாளிகையில் மகிழ வைக்க கனவு காணாதே சிறு மண் கீற்றுக் குடிசையில் இறுக்கி உறங்க ஆசைப்படுகிறேன் பாவமெனப் பெரிதாய் கலங்கி பழி ...

நவம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...

Posted: 19 Nov 2013 05:30 AM PST

18-11-2013-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/7918crv7qyo16di/Kungumam+18-11-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29%5D.pdf 18-11-2013-கம்ப்யூட்டர் மலர் டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/2hcj7sm5jg2acx9/Computermalar-18.11.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 18-11-2013-முத்தாரம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/bhz3d7r3vjq0ddv/Mutharam+18-11-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 15-11-2013-பாலஜோதிடம் ...

Qigong Exercises - உடல் நலத்திற்கான பயிற்சி

Posted: 19 Nov 2013 04:46 AM PST

பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்.

Posted: 19 Nov 2013 04:40 AM PST

பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள். பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும் சொல்லலாம். அது போன்ற போருட்களின் பட்டியலை பார்க்கலாம். வெங்காயம் வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த ...

E-Tweets

Posted: 19 Nov 2013 04:22 AM PST

முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!


கார்ப்ரேசன்ல துப்புரவு பண்றவங்களுக்கு ஒரு ரெஸ்பிரேட்டரி மாஸ்க் குடுக்க துப்பில்லாத நாட்டுல LCDடிவிக்கி பொல்யூசன் மாஸ்க் விளம்பரம் ஒரு கேடா?

நைல்

Posted: 19 Nov 2013 04:12 AM PST

நைல் (அரபி: النيل, அன் நைல்; பண்டைய எகிப்தியம்: இட்டேரு யிஃபி; கோதிக் எகிப்தியம்: P(h)iaro; அம்காரியம்: ዓባይ?, ʿAbbai) வடகிழக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாயும் மிக முக்கியமான ஆறாகும். இது உலகின் மிக நீளமான ஆறு எனவும் கூறப்படுவதுண்டு[3]. 6650 கி.மீ நீளம் கொண்ட இது, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்திரியா, தெற்கு சூடான், சூடான், மற்றும் எகிப்து ஆகிய பதினோரு நாடுகளின் வழியாக பாய்ந்து நடுநிலக் கடலில் கலக்கின்றது[4]. இவற்றில் எகிப்து மற்றும் சூடான் ஆகியவை ...

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Posted: 19 Nov 2013 04:01 AM PST

பெங்களூரு: செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம் மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப உள்ளது. இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி, செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™