Daily Thanthi |
- சென்னையில் உலக சதுரங்க போட்டி: 5–வது சுற்றில் ஆனந்த் அதிர்ச்சி தோல்வி
- தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது?
- ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு நர்சு நியமனம்: சி.பி.ஐ. விசாரணை கோரிய மனு தள்ளுபடி
- இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் இறுதி எச்சரிக்கை
- வைகை அணை
- இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமருன்
- நடப்பு 2013–14–ஆம் நிதி ஆண்டில் பொருளாதாரத்தில் 5.5 சதவீத வளர்ச்சி காண முடியும் – ப. சிதம்பரம் நம்பிக்கை
- மேற்கத்திய நாடுகளில் தேவைப்பாடு உயர்வு கைவினை பொருள்கள் ஏற்றுமதி 35% வளர்ச்சி
- ஏப்ரல்–அக்டோபர் மாத காலத்தில் முன்பேர வர்த்தகம் 30% சரிவடைந்தது
- பொருளாதார மந்தநிலை, வட்டி விகிதம் உயர்வால் வங்கிகளின் வாராக்கடன் 38 சதவீதம் அதிகரிப்பு
| சென்னையில் உலக சதுரங்க போட்டி: 5–வது சுற்றில் ஆனந்த் அதிர்ச்சி தோல்வி Posted: 15 Nov 2013 10:43 AM PST சென்னை உலக சதுரங்க போட்டியில் நேற்று நடந்த 5–வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஆனந்த் அதிர்ச்சி தோல்வி கண்டார். உலக சதுரங்க போட்டி நடப்பு சாம்பியன் விசுவநாதன் ஆனந்த் (இந்தியா), உலகின் நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) இடையிலான உலக சதுரங்க போட்டி (செஸ்) சென்னையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. தமிழக அரசின் ஆதரவுடன் நடந்து வரும் இந்த போட்டி 12 சுற்றுகளை கொண்டது. வெற்றிக்கு ஒரு புள்ளியும், டிராவுக்கு அரை புள்ளியும் வழங்கப்படும். முதலில் 6.5 புள்ளியை எட்டும் வீரர் உலக சாம்பியன் பட்டத்துடன் ரூ.8.4 கோடி பரிசுத்தொகையையும் கைப்பற்றுவார். இதில் முதல் இரு சுற்றுகள் விறுவிறுப்பின்றி' 30 நகர்த்தலுக்கு முன்பாகவே டிரா ஆனது. ஆனால் 3–வது மற்றும் 4–வது சுற்றுகளில் கடும் போட்டி நிலவியது. 4–வது சுற்றில் ஆனந்த் மயிரிழையில் தோல்வியில் இருந்து தப்பினார். 5–வது சுற்று ஆட்டம் இந்த நிலையில் 5–வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. கார்ல்சென் வெள்ளை நிற காயுடன் ஆட்டத்தை தொடங்கினார். அவரது ஆட்டம் இங்கிலீஷ் முறையில் இருந்தது. கறுப்பு நிற காயுடன் ஆடிய ஆனந்த் பிரெஞ்ச் முறையிலான ஆட்டத்தை பின்பற்றினார். 5–வது காய் நகர்த்தலில் இருவரும் தலா ஒரு சிப்பாயை கைப்பற்றினார்கள். 10–வது காய் நகர்த்தலில் ஆனந்த் தனது குதிரையை கொடுத்து கார்ல்சென்னின் பிஷப்பை வீழ்த்தினார். அதன் பின்னர் இருவரும் மாறி, மாறி குதிரை, பிஷப், சிப்பாய் ஆகியவற்றை வெட்டி வெளியேற்றினார்கள். 42–வது காய் நகர்த்தலில் கார்ல்சென், ஆனந்தின் ஒரு சிப்பாயை கைப்பற்றி பின்னடைவை ஏற்படுத்தினார். ஆனந்த் தேவையில்லாமல் 49–வது காய் நகர்த்தலில் கார்ல்சென்னின் ராஜாவுக்கு, தனது யானையால் செக் கொடுத்து மேலும் ஒரு சிப்பாயை இழந்தார். ஆனந்த் தோல்வி கார்ல்சென் தனது 'ஏ' சிப்பாயை ராணியாக மாற்ற நகர்த்தினார். தன்னிடமிருந்த ஒரு சிப்பாயை வைத்து ஆட்டத்தை டிரா செய்யலாம் என்று எண்ணிய ஆனந்துக்கு, கார்ல்சென்னின் 'எச்' சிப்பாயை சமாளிக்க முடியவில்லை. இதனால் 58–வது காய் நகர்த்தலில் ஆனந்த் தோல்வியை ஒப்புக்கொண்டார். வெற்றி பெற்ற கார்ல்சென்னுக்கு ஒரு புள்ளி கிடைத்தது. 2008–ம் ஆண்டில் நடந்த ஆம்பர் விரைவு போட்டியில் இங்கிலீஷ் முறையிலான ஆட்டத்தில் கார்ல்சென் ஆனந்தை வீழ்த்தி இருந்தார். தற்போது அதேமுறையில் மீண்டும் வெற்றியை ருசித்துள்ளார். 5–வது சுற்று முடிவில் கார்ல்சென் 3–2 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார். இன்று (சனிக்கிழமை) 6–வது சுற்று ஆட்டம் பிற்பகலில் 3 மணிக்கு தொடங்குகிறது. category:Tagging: |
| தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது? Posted: 15 Nov 2013 10:36 AM PST புதுடெல்லி நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவுக்கு கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் சச்சின் தெண்டுல்கரின் பெயரை பிரதமர் மன்மோகன்சிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு சிபாரிசு செய்து இருக்கிறார். விருது வழங்குவது குறித்து ஜனாதிபதி தான் இறுதி முடிவு எடுப்பார் என்று பிரதமர் அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தெண்டுல்கருக்கு விருது வழங்க மத்திய மந்திரிகள் பலர் ஆதரவாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. குடியரசு தின விழாவில் தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படலாம் என்று தெரிகிறது. image: category:Tagging: |
| ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு நர்சு நியமனம்: சி.பி.ஐ. விசாரணை கோரிய மனு தள்ளுபடி Posted: 15 Nov 2013 10:36 AM PST சென்னை, புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் காலியாக இருந்த 465 நர்சு பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. கடந்த செப்டம்பர் 8–ந்தேதி, சென்னை, புதுச்சேரி, திருச்சி, திருவனந்தபுரம் ஆகிய மையங்களில் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி அடைந்தவர்களின் பட்டியல் செப்டம்பர் 14–ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தமிழரசன் மனு தாக்கல் செய்தார். தேர்வின் நிர்வாகியாக உன்னிகிருஷ்ணன் என்பவர் செயல்பட்ட நிலையில், திருவனந்தபுரம் மையத்தில் இருந்து 330 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் இதில் முறைகேடு இருப்பதால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நர்சு பணி நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து ஜிப்மர் நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், மகாதேவன் ஆகியோர் விசாரித்தனர். திருவனந்தபுரம் மையங்களில் இருந்து 159 பேர் மட்டுமே தேர்வு பெற்றுள்ளதாகக் கூறி, ஜிப்மர் தரப்பில் அதற்கான பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு தமிழரசன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். image: category:Tagging:News Group Category: |
| இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் இறுதி எச்சரிக்கை Posted: 15 Nov 2013 10:33 AM PST புதுடெல்லி இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தல் ஒலிம்பிக் சாசனத்தின் படி நடத்தப்படாததால் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் சஸ்பெண்டு செய்தது. ஊழல் புகாரில் சிக்கிய வீரர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதிமுறையை ஏற்றுக்கொள்ள இந்திய ஒலிம்பிக் சங்கம் மறுத்து வருகிறது. தங்களின் விதிமுறையை பின்பற்ற அடுத்த மாதம் (டிசம்பர்) 10–ந் தேதியை இறுதி கெடுவாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது. category:Tagging: |
| Posted: 15 Nov 2013 10:28 AM PST |
| இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமருன் Posted: 15 Nov 2013 10:20 AM PST |
| Posted: 15 Nov 2013 10:14 AM PST மும்பை நடப்பு 2013–14–ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்தில் 5 முதல் 5.5 சதவீதம் வரை வளர்ச்சி காண முடியும் என நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று நடைபெற்ற பேன்கான்–2013 என்ற வங்கிகளின் எதிர்கால வளர்ச்சி குறித்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார். நிதி ஆதாரம் அவர் மேலும் கூறுகையில், ''நிதி ஆதாரம் நன்றாக உள்ள நிலையிலும் வேண்டுமென்றே கடனை திரும்ப செலுத்த தவறும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது வங்கிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார். வெங்காயம், காய்கறி உள்ளிட்ட உணவு பொருள் மற்றும் எரிபொருள்கள் விலை உயர்வால் அக்டோபர் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு 7 சதவீதமாக உயர்ந்தது. அம்மாதத்தில் சில்லரை விலை பணவீக்கமும் 10.09 தவீதமாக உயர்ந்துள்ளது. ஏழு மாதங்களுக்கு பிறகு இந்த பணவீக்கம் 10 சதவீதத்தை தாண்டியுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி ஏற்கனவே இரண்டு முறை முக்கிய கடன்களுக்கான வட்டியை உயர்த்தியது. டிசம்பர் மாதத்தில் இந்த வட்டிவிகிதம் மேலும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் குறித்து சிதம்பரம் கூறுகையில், ''உணவுபொருள்கள் விலையை கட்டுப்படுத்துவதற்காக முக்கிய கடனிற்கான வட்டியை உயர்த்துவதால் எந்த பலனும் இல்லை''. உணவு தானியங்கள் சப்ளையை அதிகரிப்பதால் மட்டுமே இதற்கு தீர்வு காணமுடியும். இதற்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது. வேளாண் உற்பத்தியை அதிகரித்தல், விநியோகம் மற்றும் சரக்கு போக்குவரத்து வசதியை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பணவீக்கம் அதிகரிப்பு அரசுக்கு ஒரு சவாலாக உள்ளது'' என்று தெரிவித்தார். முன்னேற்ற அறிகுறிகள் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என சில பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தால் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அக்டோபர் மாதத்தில் சரக்குகள் ஏற்றுமதி 13 சதவீதம் அதிகரித்துள்ளது. எட்டு துறைகள் செப்டம்பர் மாதத்தில் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி 8 சதவீதம் அதிகரித்துள்ளது. அம்மாதத்தில் தொழில்துறை உற்பத்தியிலும் 2 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாடுகளால் தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது. எனவே நடப்பு 2013–14–ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 5,600 கோடி டாலராக குறையும் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். சென்ற நிதி ஆண்டில் இது 8,800 கோடி டாலராக இருந்தது. அனுமதி பெறுதல், நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் போன்ற பிரச்சினைகளால் முடங்கி கிடக்கும் திட்டங்களை முடுக்கிவிடும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரூ.3.50 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்துள்ளது. எனவே நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டிலிருந்து நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என ப. சிதம்பரமும், ரகுராம் ராஜனும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். புள்ளிவிவரம் கடந்த 2005–06, 2006–07 மற்றும் 2007–08 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டிலும் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்திற்கும், அதிகமாக இருந்தது. உலக பொருளாதார சீர்குலைவால் 2008–09–ஆம் நிதி ஆண்டில் வளர்ச்சி 6.7 சதவீதமாக குறைந்தது. மத்திய அரசு வழங்கிய பல்வேறு சலுகைகளால் 2009–10–ஆம் நிதி ஆண்டில் 8.4 சதவீதமாகவும், 2010–11–ஆம் நிதி ஆண்டில் 9.3 சதவீதமாகவும் வளர்ச்சி உயர்ந்தது. உலக பொருளாதாரம் இந்நிலையில் உலக பொருளாதார மந்தநிலை, உள்நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் 2011–12–ஆம் நிதி ஆண்டில் 6.2 சதவீதமாகவும், 2012–13–ஆம் நிதி ஆண்டில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5 சதவீதமாகவும் குறைந்தது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி 4.4 சதவீதமாக சரிவடைந்தது. இரண்டாவது காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளி விவரம் இம்மாதம் 29–ந் தேதி வெளியிடப்படுகிறது. category:Tagging: |
| மேற்கத்திய நாடுகளில் தேவைப்பாடு உயர்வு கைவினை பொருள்கள் ஏற்றுமதி 35% வளர்ச்சி Posted: 15 Nov 2013 10:13 AM PST புதுடெல்லி மேற்கத்திய நாடுகளின் தேவைப்பாடு உயர்ந்துள்ளதால் அக்டோபர் மாதத்தில் கைவினை பொருள்கள் ஏற்றுமதி 35 சதவீதம் அதிகரித்து 11.26 கோடி டாலராக உயர்ந்துள்ளது. 2012 அக்டோபர் மாதத்தில் 8.35 கோடி டாலராக இருந்தது. அமெரிக்கா, ஐரோப்பா பாரம்பரிய சந்தைகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஆர்டர்கள் அதிகளவில் வந்துள்ள நிலையில், சீனா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற புதிய சந்தைகளிலும் தேவைப்பாடு அதிகரித்ததால் ஏற்றுமதி அதிகரித்துள்ளது என கைவினை பொருள்கள் ஏற்றுமதி கவுன்சிலின் செயல் இயக்குனர் ராகேஷ் குமார் தெரிவித்தார். நாட்டின் மொத்த கைவினை பொருள்கள் ஏற்றுமதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது. மரத்தாலான பொருள்கள், சால்வைகள், இமிடேஷன் நகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கைவினை பொருள்கள் பட்டியலில் வருகின்றன. நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 7 மாதங்களில் கைவினை பொருள்கள் ஏற்றுமதி 12 சதவீதம் அதிகரித்து 167 கோடி டாலராக உயர்ந்துள்ளது. கைவினை பொருள்கள் ஏற்றுமதி அதிகரிப்பதால் அன்னிய செலாவணி வரத்து அதிகரித்து நாட்டின் பொருளாதாரம் மேம்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்கும் துறைகளில் கைவினை பொருள்கள் துறையும் ஒன்றாகும். இத்துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உள்ளது. கைவினை பொருள்கள் ஏற்றுமதியில் ஜெய்ப்பூர், ஜோத்பூர், சகரான்பூர், மொராதாபாத் ஆகிய பகுதிகள் முக்கிய மையங்களாக உள்ளன. இலக்கு எட்டப்பட்டது கடந்த நிதி ஆண்டில் (2012–13) 330 கோடி டாலருக்கு கைவினை பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவிலும், உள்நாட்டிலும் கடுமையான பொருளாதார மந்த நிலைகளுக்கு மத்தியில் அந்த ஆண்டுக்கான ஏற்றுமதி இலக்கு வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. image: category:Tagging: |
| ஏப்ரல்–அக்டோபர் மாத காலத்தில் முன்பேர வர்த்தகம் 30% சரிவடைந்தது Posted: 15 Nov 2013 10:11 AM PST புதுடெல்லி ஏப்ரல்–அக்டோபர் மாத காலத்தில் முன்பேர சந்தைகளின் வர்த்தகம் 30 சதவீதம் குறைந்து ரூ.71.60 லட்சம் கோடியாக சரிவடைந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தில் ரூ.101.60 லட்சம் கோடியாக இருந்தது. எரிபொருள்கள் முன்பேர வர்த்தகத்தில் அதிகபட்சமாக வேளாண் விளை பொருள்கள் மீதான வர்த்தகம் சரிவடைந்துள்ளது. அடுத்து தங்கம் மற்றும் வெள்ளி, சாதாரண உலோகங்கள், எரிபொருள்கள் மீதான வர்த்தகம் குறைந்துள்ளது. கணக்கீடு செய்ய எடுத்துக் கொண்ட காலத்தில் வேளாண் விளைபொருள்கள் மீதான வர்த்தகம் 36 சதவீதம் சரிந்து ரூ.13.82 லட்சம் கோடியிலிருந்து ரூ.8.82 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி மீதான வர்த்தகம் 31 சதவீதம் குறைந்து ரூ.32.18 லட்சம் கோடியாக சரிவடைந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தில் ரூ.46.49 லட்சம் கோடியாக உயர்ந்திருந்தது. சாதாரண உலோகங்கள் மீதான முன்பேர வர்த்தகம் 30 சதவீதம் குறைந்து ரூ.18.74 லட்சம் கோடியிலிருந்து ரூ.13.12 லட்சம் கோடியாக சரிவடைந்துள்ளது. கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்கள் மீதான முன்பேர வர்த்தகம் 22 சதவீதம் குறைந்து ரூ.22.52 லட்சம் கோடியிலிருந்து ரூ.17.48 லட்சம் கோடியாக சரிவடைந்துள்ளது. எம்.சி.எக்ஸ். தற்போது தேசிய அளவில் 6 சந்தைகளும், பிராந்திய அளவில் 11 சந்தைகளும் மொத்தம் 17 முன்பேர வர்த்தக சந்தைகள் செயல்படுகின்றன. இவை அனைத்தும் எஃப்.எம்.சி. என்று அழைக்கப்படும் முன்பேர வர்த்தகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. முன்பேர வர்த்தக சந்தைகளின் மொத்த வர்த்தகத்தில் எம்.சி.எக்ஸ். சந்தையின் பங்களிப்பு 80 சதவீதமாக உள்ளது. image: category:Tagging: |
| பொருளாதார மந்தநிலை, வட்டி விகிதம் உயர்வால் வங்கிகளின் வாராக்கடன் 38 சதவீதம் அதிகரிப்பு Posted: 15 Nov 2013 10:09 AM PST மும்பை பொருளாதார மந்தநிலை மற்றும் கடனிற்கான வட்டிவிகிதம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள 40 வங்கிகளின் நிகர வாராக்கடன் 38 சதவீதம் அதிகரித்து ரூ.93,109 கோடியிலிருந்து ரூ.1,28,533 கோடியாக உயர்ந்துள்ளது. இந்ந நிதி ஆண்டின் இறுதியில் இது ரூ.1.50 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 14 வங்கிகள் மேற்கண்ட 40 வங்கிகளில் 14 வங்கிகளின் நிகர வாராக் கடன் மட்டும் 50 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. மேலும் பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க், சென்ட்ரல் பேங்க், ஐ.டீ.பீ.ஐ. பேங்க், யூனியன் பேங்க் உள்ளிட்ட முன்னணி பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 30 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் வங்கிகளின் நிகர வாராக்கடன் 2.4 மடங்காக உயர்ந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வங்கிகளின் மொத்த வாராக்கடன் 27 சதவீதம் உயர்ந்து ரூ.1.80 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்த வாராக்கடன் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. பொருளாதார மந்தநிலையால் தனிநபர் செலவிடும் வருவாய் குறைந்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி முக்கிய கடன்களுக்கான வட்டியை உயர்த்தியுள்ளதால், வீடு, வாகன, நிறுவன கடனிற்கான வட்டிவிகிதம் உயர்ந்துள்ளது. இதனால் கார், நுகர்வோர் சாதனங்கள் போன்றவற்றின் விற்பனை குறைந்து நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி குறைந்துள்ளது. நிறுவனங்களின் வட்டிச் செலவினமும் உயர்ந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் வசூலாகாத கடன் அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கி இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளின் மொத்த வசூலாகாத கடனில் 30 பெரிய கணக்குகளின் பங்கு மட்டும் 35 சதவீதமாக உள்ளதாக பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனவே இந்த கடனை வசூலிப்பதில் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். image: category:Tagging: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


