Daily Thanthi |
- உலக சிக்கன நாள்
- சத்தீஷ்கார் மாநில முதல்கட்ட தேர்தல் நக்சலைட்டுகள் மிரட்டலையும் மீறி 67 சதவீத ஓட்டுப்பதிவு
- 5 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட டெலிபோன் பெண் ஆபரேட்டர் கோர்ட்டில் வாக்குமூலம்
- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல்
- எதிர்க்கட்சிகள் போராட்டம் விளைவு; வங்காளதேச மந்திரிகள் ராஜினாமா
- ஜனாதிபதி பதவி விலக மறுப்பு; மாலத்தீவில் முன்னாள் அதிபர் நஷீத் ஆதரவாளர்கள் போராட்டம்
- சத்தீஷ்கார் தேர்தல்
- ரசிகர்கள் அன்பில் நெகிழ்ந்தேன்; தமிழ் படத்தில் நடிக்க ஆசை:இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன்
- மும்பையில், 7 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி
- இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் தலைமை தேர்தல் ஆணையரிடம் தி.மு.க. மனு
| Posted: 11 Nov 2013 09:22 AM PST |
| சத்தீஷ்கார் மாநில முதல்கட்ட தேர்தல் நக்சலைட்டுகள் மிரட்டலையும் மீறி 67 சதவீத ஓட்டுப்பதிவு Posted: 11 Nov 2013 09:19 AM PST ராய்ப்பூர் சத்தீஷ்கார் மாநிலத்தில் நடந்த முதல்கட்ட தேர்தலில் நக்சலைட்டுகள் மிரட்டலையும் மீறி 67 சதவீத ஓட்டுப்பதிவு நடந்தது. நக்சலைட்டுகள் தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் பலியானார். 10–க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. முதல்கட்ட தேர்தல் சத்தீஷ்கார் மாநில சட்டமன்றத்துக்கு முதல்கட்ட தேர்தல் நடந்தது. மாவோயிஸ்டுகள் நிறைந்த பகுதிகள் இருப்பதால் இங்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று நக்சலைட்டுகள் மிரட்டல் விடுத்திருந்தனர். 90 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்தில் 18 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. எஞ்சிய 72 தொகுதிகளுக்கு 19–ந் தேதி தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் நடந்த 18 தொகுதிகளும் மாவோயிஸ்டுகள் தாக்குதலுக்குள்ளாகும் பாஸ்தார் பிராந்தியம் மற்றும் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ளன.
இந்த 18 தொகுதிகளுக்கு மொத்தம் 4,142 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 1,517 வாக்குச்சாவடிகள் பிரச்சினைக்குரிய பகுதிகள், 1,311 வாக்குச்சாவடிகள் மிகவும் பிரச்சினைக்குரிய பகுதிகளும் ஆகும். மாவோயிஸ்டுகள் பகுதி என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. மத்திய அரசு அனுப்பிய 56,200 போலீசாரும், 40 ஆயிரம் துணை ராணுவத்தினரும், ஆயிரக்கணக்கான மாநில போலீசாரும் இந்த பாதுகாப்பில் ஈடுபட்டனர். பாஸ்தார் மாவட்டத்தில் மே மாதம் மாவோயிஸ்டுகள் மிகப்பெரிய தாக்குதல் நடத்திய ஜிராம் பள்ளத்தாக்கு அடைக்கப்பட்டது. ஆதரவாளர்கள் மோதல் பாஸ்தார் மாவட்டத்தில் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பினர் மீதும் அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே வடக்கு பாஸ்தார் பகுதியில் உள்ள கான்கெர் மாவட்டத்தில் ஒரு வெடிகுண்டு மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது. அதனை கண்டுபிடித்த போலீஸ்காரர் வெடிகுண்டை பர்லாகோட் என்ற கிராமத்திற்கு கொண்டு சென்று அதனை வெடிக்கச் செய்தார். போலீஸ்காரர் படுகாயம் அப்போது எதிர்பாராதவிதமாக அந்த போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார். ராய்ப்பூரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓட்டுப்பதிவை சீர்குலைக்க மாவோயிஸ்டுகள் இதேபோல 10–க்கும் மேற்பட்ட இடங்களில் வெடிகுண்டுகளை வைத்திருந்தனர். அவற்றை போலீசார் கண்டுபிடித்து அப்புறப்படுத்தினார்கள். இதில் பிஜப்பூர் மாவட்டத்தில் முர்கினார் என்ற இடத்தில் இருந்து 10 கிலோ வெடிமருந்து கொண்ட ஒரு பைப் வெடிகுண்டும் அடங்கும் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டிபன்பாக்ஸ் குண்டு மங்னார் பகுதியில் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது 8 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. நாராயண்பூர் மாவட்டத்தில் ஓர்ச்சா என்ற இடத்தில் ஒரு டிபன் பாக்ஸ் குண்டும், கான்கெர் மாவட்டத்தில் ஒரு வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. துர்காபூர், சிதாராம் ஆகிய மிகவும் பிரச்சினைக்குரிய பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்துச் சென்றனர். அவர்களை மாவோயிஸ்டுகள் வழிமறித்து வாக்குப்பதிவு எந்திரங்களை பறித்துச் சென்றனர். மாவோயிஸ்டுகளின் எதிர்ப்பு காரணமாக அந்த அதிகாரிகள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல முடியாததால் அந்த 2 வாக்குசாவடிகளிலும் ஓட்டுப்பதிவு நடைபெறவில்லை. போலீஸ்காரர் பலி தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள சில வாக்குச்சாவடிகளின் அருகே மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. 2 இடங்களில் நக்சலைட்டுகள் மிரட்டல் காரணமாக வாக்குச்சாவடிகள் மாற்றப்பட்டன. தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள கதேகல்யாண் பகுதியில் ஓட்டுப்பதிவு முடிவடைந்த பின்னர் தேர்தல் அதிகாரிகள் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் அவர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் மத்திய ஆயுதப்படை போலீஸ்காரர் பி.ஜோசப் என்பவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த 18 தொகுதிகளிலும் மதியம் 1 மணி வரை 40 சதவீத ஓட்டுகள் பதிவானது. நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட 13 தொகுதிகளில் மதியம் 3 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிவடைந்தது. மற்ற 5 தொகுதிகளில் மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தது. இறுதியில் 67 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக இணை தேர்தல் அதிகாரி டி.டி.சிங் தெரிவித்தார். 3–வது முறையாக ஆட்சி 3–வது முறையாக ஆட்சியை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படும் முதல்–மந்திரி ராமன்சிங் மற்றும் 3 மந்திரிகளின் விதி இந்த முதல்கட்ட தேர்தலில் தான் அடங்கி உள்ளது. சில தொகுதிகளில் மே மாதம் காங்கிரஸ் ஊர்வலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்தவர்களின் உறவினர்களும் களத்தில் உள்ளனர். பாஸ்தார் பகுதி உள்பட மாநிலத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த சட்டமன்ற தேர்தலைவிட அதிக இடங்களில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெறும் என்று முதல்–மந்திரி ராமன்சிங் கூறினார். image: category:Tagging:News Group Category: |
| 5 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட டெலிபோன் பெண் ஆபரேட்டர் கோர்ட்டில் வாக்குமூலம் Posted: 11 Nov 2013 09:03 AM PST மும்பை, மும்பை சக்தி மில் வளாகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் பத்திரிகை பெண் புகைப்பட நிபுணர் 5 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டார். இந்த புகாரை தொடர்ந்து அதே பகுதியில் 18 வயது டெலிபோன் பெண் ஆபரேட்டர் ஒருவரையும் 5 பேர் கும்பல் கொடூரமாக கற்பழித்த சம்பவம் வெளியானது. டெலிபோன் ஆபரேட்டர் கற்பழிப்பு வழக்கில் முகமது சேக், முகமது காசிம், சலீம் அன்சாரி, விஜய் ஜாதவ் மற்றும் ஒரு இளம் குற்றவாளியை கைது செய்தனர். அவர்கள் மீது செசன்சு கோர்ட்டில் 362 பக்க குற்றச்சாட்டு பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவரது வாக்குமூலம் நிறைவு பெற்றது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணிடம் குறுக்கு விசாரணை நடத்த காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று அவரது வக்கீல் கடந்த மாதம் கோர்ட்டில் முறையிட்டார். இந்த குறுக்கு விசாரணையின் போது குற்றவாளிகளை கோர்ட்டு வளாகத்தில் வைத்து அடிக்கவும் பாதிக்கப்பட்ட பெண் நீதிபதியை முறையிட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. image: category:Tagging:News Group Category: |
| காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் Posted: 11 Nov 2013 08:58 AM PST புதுடெல்லி, காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்து உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் காவிரி நீரை தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்கள் பகிர்ந்து கொள்வது தொடர்பான இறுதித் தீர்ப்பை காவிரி நடுவர் மன்றம் 2007–ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிட்டது. நீண்ட காலமாக தொடர்ந்து வரும் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட்டு கூறி இருந்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்த வசதியாக இதனை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடுமாறு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இடைக்கால ஏற்பாடு ஆனால் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளபடி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை கமிட்டி ஆகியவற்றை அமைப்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்ததால், இடைக்கால ஏற்பாடாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலர் அலோக் ராவத் தலைமையில் காவரி மேற்பார்வை குழு அமைக்கப்பட்டது. இந்த மேற்பார்வை குழு பலமுறை கூடி பிரச்சினையை விவாதித்து உள்ளது. கடந்த 9.11.2013 அன்று டெல்லியில் இந்த குழுவின் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு 26 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடும் கோரிக்கை தவிர, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை உடனடியான அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழக அரசின் சார்பில் வற்புறுத்தப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– 2007–ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை அளிக்கையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை அமைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. தமிழகத்தில் விரைவில் விவசாய பணிகள் துவங்க இருக்கின்றன. உத்தரவிடவேண்டும் எனவே, அடுத்த மாதத்தின் இறுதி வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்கும்படி மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. image: category:News Group Category: |
| எதிர்க்கட்சிகள் போராட்டம் விளைவு; வங்காளதேச மந்திரிகள் ராஜினாமா Posted: 11 Nov 2013 08:44 AM PST டாக்கா, வங்காளதேச மந்திரிகள் திடீரென்று தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். எனவே அனைத்துக்கட்சி மந்திரிசபை அமைக்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் கட்சி இடம்பெறாமல் புறக்கணிக்கும் என தெரிகிறது. எதிர்க்கட்சிகள் போராட்டம் வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தல் நேர்மையாக நடைபெற பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதிலும் முன்னாள் பிரதமரும், முக்கிய எதிர்க்கட்சி தலைவருமான கலிதா ஜியா அரசியல் கட்சியினர் இல்லாத இடைக்கால மந்திரிசபை அமைத்து தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால் பிரதமர் ஹசினா அனைத்துக்கட்சி தலைவர்கள் அடங்கிய மந்திரிசபை அமைக்க முன் வந்தார். ஹசினாவின் இத்திட்டத்தை கலிதா ஜியாவும், மற்றொரு முக்கிய கட்சியான ஜமாத் இ-இஸ்லாமி கட்சியும் ஏற்கவில்லை. கடந்த 27-ந்தேதி தொடங்கி 3 கட்டமாக போராட்டம் நடத்தி வருகின்றன. தற்போது 84 மணி நேர முழு அடைப்பை நடத்தி வருகிறார்கள். அதில் ஏற்பட்ட வன்முறையில் 2 பேர் செத்தனர். இந்த போராட்டங்களில் இதுவரையில் மொத்தம் 26 பேர் உயிர் இழந்து விட்டனர். மந்திரிகள் ராஜினாமா இந்நிலையில் வங்காளதேச மந்திரிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்து பிரதமர் ஹசினாவிடம் கடிதம் கொடுத்தனர். இதுபற்றி பிரதமரின் செயலாளர் அபுல் கலாம் ஆசாத் கூறுகையில், 'மந்திரிகள் மற்றும் மாநில மந்திரிகள் தங்கள் ராஜினாமா கடிதங்களை இன்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தின் போது பிரதமர் ஹசினாவிடம் கொடுத்தார்கள்' என்றார். ஆனால் அனைத்து மந்திரிகளும் விலகினார்களா? என்பதை அவர் உறுதி செய்யவில்லை. மேலும் அவர் கூறும் போது, 'சில மந்திரிகளின் ராஜினாமா ஏற்கப்படவில்லை. இவர்கள் அனைத்துகட்சி மந்திரிசபையில் இடம்பெறலாம். மற்ற மந்திரிகளின் ராஜினாமா கடிதங்கள் ஜனாதிபதி மாளிகைக்கு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது' என்று தெரிவித்தார். கலிதா ஜியா நிலை என்ன? எனவே தேர்தலை சுமூகமாக நடத்த வசதியாக அனைத்துக்கட்சி தலைவர்கள் அடங்கிய மந்திரிசபை விரைவில் ஏற்படுத்தப்படும் என தெரிகிறது. இந்த நடவடிக்கையால் கலிதா ஜியா சமாதானம் அடைய வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. அநேகமாக அவர் அனைத்துக்கட்சி மந்திரிசபையில் சேராமல் இருக்கலாம் அல்லது தேர்தலையே புறக்கணிக்க முடிவு செய்யலாம் என்று கூறப்படுகிறது. image: category:Tagging:News Group Category: |
| ஜனாதிபதி பதவி விலக மறுப்பு; மாலத்தீவில் முன்னாள் அதிபர் நஷீத் ஆதரவாளர்கள் போராட்டம் Posted: 11 Nov 2013 08:39 AM PST மாலே, மாலத்தீவு நாட்டில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் நீடிக்கிறது. இறுதி கட்டமாக வேட்பாளர்களான முன்னாள் அதிபர் முகமது நஷீத், அப்துல்லா யாமீன் இடையே வருகிற 16-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்க இருக்கிறது. ஆனால் தற்போது ஜனாதிபதியாக இருக்கும் வாஷீத் பதவிக்காலம் இன்றுடன் (11-ந்தேதி) முடிவடைந்தது. எனவே ஓட்டுபதிவு முடியும் வரையில், பாராளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட நஷீத் கட்சியை சேர்ந்த ஒருவரை தற்காலிக அதிபராக பதவி ஏற்க வேண்டும் என அந்த கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் வாஷித் பதவி விலக மாட்டேன் என மறுத்ததுடன், புதிய அதிபர் பதவி ஏற்கும் வரையில் நீடிப்பேன் என்று உறுதியாக கூறி விட்டார். இதனால் நஷீத் ஆதரவாளர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று தலைநகர் மாலேயில் வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்தினர். போலீசாரை நோக்கி கற்களை வீசினர். தடுப்புகளை அடித்து நொறுக்கினர். இதை அடுத்து போலீசார் மிளகு ஸ்பிரேயரை அடித்து கூட்டத்தை கலைத்தனர். இதற்கிடையே அதிபர் வாஷித் விசைப்படகில் தனது மனைவி மற்றும் சிலருடன் பலத்த பாதுகாப்புடன் மாலேயை விட்டு புறப்பட்டு சென்றதாக ஒரு தகவல் கூறுகிறது. image: category:Tagging:News Group Category: |
| Posted: 11 Nov 2013 08:26 AM PST |
| ரசிகர்கள் அன்பில் நெகிழ்ந்தேன்; தமிழ் படத்தில் நடிக்க ஆசை:இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் Posted: 11 Nov 2013 08:16 AM PST சென்னை, தமிழ் ரசிகர்களின் அன்பில் நெகிழ்ந்து போனேன். விரைவில் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் கூறினார். ரூ.203 கோடி வசூல் ராகேஷ் ரோஷன் டைரக்டு செய்து, அவருடைய மகன் ஹிருத்திக் ரோஷன் கதாநாயகனாக நடித்த இந்தி படம், கிரிஷ்-3. இந்த படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.203 கோடி வசூல் செய்து இருக்கிறது. கிரிஷ்-3 படம் சென்னை உள்பட பல இடங்களில் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.தமிழ் ரசிகர்களை சந்திப்பதற்காக ஹிருத்திக் ரோஷனும், அவருடைய தந்தை ராகேஷ் ரோஷனும் சென்னை வந்தார்கள். இருவரும் சத்யம் தியேட்டரில் ரசிகர்கள் முன்பு தோன்றினார்கள். ஹிருத்திக் ரோஷனை நேரில் பார்ப்பதற்காக ரசிகர்கள்-ரசிகைகள் கூட்டம் அலைமோதியது. அன்பில் நெகிழ்ந்தேன் ரசிகர்கள் மத்தியில், ஹிருத்திக் ரோஷன் பேசியதாவது:- உங்கள் அன்பை நேரில் பார்த்து நெகிழ்ந்து போனேன். நீங்கள் என் மீது காட்டிய பாசத்தில் எனக்கு மூச்சு திணறி விட்டது. மனசெல்லாம் நிறைந்து இருக்கிறது. பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை. இதுபோன்ற அன்பை உலகில் நான் எங்கும் பார்த்ததில்லை.இவ்வாறு ஹிருத்திக் ரோஷன் பேசினார். பேட்டி அதன்பிறகு ஹிருத்திக் ரோஷன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஹிருத்திக் ரோஷன் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கும் நீங்கள் சூப்பர் ஹீரோயின் என்று யாரை சொல்வீர்கள்? பதில்:- என் அம்மா, மனைவி, சகோதரி ஆகிய மூன்று பேரும் சூப்பர் ஹீரோயின்கள்தான். கேள்வி:- சாருக்கான் தனது படங்களில் தமிழ் நடிகர்களை நடிக்க வைக்கிறார். தமிழ் வசனங்களை பேசுகிறார். அதுபோல் நீங்களும் உங்கள் படங்களில் தமிழ் நடிகர்களை நடிக்க வைப்பீர்களா, தமிழ் வசனங்களை பேசுவீர்களா? பதில்:- என் அடுத்த படத்தில் நிச்சயமாக தமிழ் நடிகர்களை நடிக்க வைப்பேன். தமிழ் வசனங்களை என் படங்களில் பயன்படுத்துவேன். தமிழில் நடிக்க ஆசை கேள்வி:- தமிழ் ரசிகர்கள் மீது அன்பு கொண்ட நீங்கள் தமிழ் படத்தில் நடிப்பீர்களா? பதில்:- நேரடி தமிழ் படம் ஒன்றில் என்னை நடிக்க அழைத்தால், நிச்சயமாக நடிப்பேன். அது, என் அடுத்த படமாக கூட இருக்கலாம். தமிழ் படங்களில் நடிக்க நான் ஆசையாக இருக்கிறேன். மேற்கண்டவாறு ஹிருத்திக் ரோஷன் பதில் அளித்தார்.பேட்டியின்போது, கிரிஷ்-3 படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்ட வினியோகஸ்தர் சிபு, ஒளிப்பதிவாளர் திரு ஆகிய இருவரும் உடன் இருந்தார்கள். image: category:Tagging:News Group Category: |
| Posted: 11 Nov 2013 08:10 AM PST மும்பை, விக்ரோலியில், 7 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலியானார்கள். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். தீ விபத்து மும்பை விக்ரோலி மேற்கு, பார்க்சைடு, சித்தார்த் நகர் பகுதியில் குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள 2–ம் எண் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் மொத்தம் 102 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் கட்டிடத்தின் தரைதளத்தில் உள்ள மின்சார மீட்டர் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. மின்வயரில் பற்றி எரிந்த தீ சிறிது நேரத்தில் அறை முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரியத்தொடங்கியது. இதனால் அங்கிருந்த மின்சார மீட்டர் பெட்டிகள் பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறின. அதிகாலை நேரம் என்பதால் தீ விபத்து ஏற்பட்டது தெரியாமல் அங்கு வசிப்பவர்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
இந்தநிலையில், கட்டிடத்தில் உள்ள வீடுகளுக்கு மின்இணைப்புக்காக பொருத்தப்பட்டுள்ள வயர்கள் வழியாக 7–வது மாடி வரையிலும் தீ பரவியது. அப்போது தான் வெப்பதாக்கத்தின் காரணமாக வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். கட்டிடத்தை சூழ்ந்து தீ மளமளவென எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறித்துடித்தனர். உடனே அவர்கள், உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அலறி அடித்துக்கொண்டு மாடிப்படிகள் வழியாக கீழே இறங்கினார்கள். மேலும் குழந்தைகள் மற்றும் முதியோர்களை அவசர, அவசரமாக வெளியேற்றினார்கள். அப்போது கட்டிடத்தின் 7–வது மாடியில் உள்ள வீட்டில் வசித்து வந்த பூர்ணிமா(58) என்பவர் தனது குடும்பத்தினருடன் தீயில் சிக்கிக்கொண்டார். அந்நேரம் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால் வெளியே தப்பிக்க வழி தெரியாமல் வீட்டிற்குள் பூர்ணிமாவின் குடும்பத்தினர் அங்கும், இங்குமாக ஓடினார்கள். கடைசி வரையிலும் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. 4 பேர் பலி தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் 10 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ராட்சத ஏணியில் நின்றபடி கட்டிடத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக கடுமையாக போராடினார்கள். சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர். அதிகாலை 6 மணிக்கு பிறகே தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. பின்னர் அவர்கள் பூர்ணிமாவின் குடும்பத்தினரை மீட்பதற்காக மாடியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது பூர்ணிமா மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த கவுதம் சில்வன்(55), விஷால்(29), அனுஸயா சார்துல்(5) ஆகிய 4 பேர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். அவர்களின் உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜவாடி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் புகைமூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி கிடந்த சித்தாந்த் சித்தாந்த் கவய், ரேகா கவய், நிர்வான் கவய், சுபாஷ் கவய் ஆகிய 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சாலைமறியல் இந்நிலையில் தீப்பிடித்த போது வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தபோது தீக்காயம் அடைந்த குணாஜி யாதவ்(67), விகாஷ் கவுதம் சில்வன்(29), சிதேஷ் படேகர்(23), வனிதா அம்போலே(45), பால கிருஷ்ணன் அம்பேரேகர்(45), ராகுள் இங்களே(31) ஆகிய 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டிடத்தில் முறையாக மின்இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததே தீ விபத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் தீத்தடுப்பு சாதனங்களும் கட்டிடத்தில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே கட்டிட காண்டிராக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்த கட்டிடத்தில் வசித்து வருபவர்கள் அங்குள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்கள். சம்பவம் குறித்து விக்ரோலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். image: category:Tagging:News Group Category: |
| இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் தலைமை தேர்தல் ஆணையரிடம் தி.மு.க. மனு Posted: 11 Nov 2013 08:03 AM PST புதுடெல்லி, இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் தி.மு.க சார்பாக மனு கொடுக்கப்பட்டது. இது குறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– புதுடெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத்திடம் தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு மனு கொடுத்தார். தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட மனுவின் விவரம் வருமாறு:– புகார் மனு ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் டிசம்பர் 4–ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றுவதற்காக தமிழகத்தில் உள்ள ஆளும் அ.தி.மு.க.வினர் 52 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு ஒன்றை அறிவித்துள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களும், அ.தி.மு.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநில அரசின் பல்வேறு வாரியங்களின் தலைவர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை பின்னர் 61 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதியதாக நியமிக்கப்பட்ட மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சரும் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின்போது அரசு வாகனங்களை பயன்படுத்தக்கூடாது, அரசு விருந்தினர் விடுதியில் தங்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ள போதிலும், அமைச்சர்களும், வாரியத்தலைவர்களும் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். அனைத்து மாநில அமைச்சர்களும் ஏற்காடு தொகுதியில் தற்போது முகாமிட்டுள்ளனர். எனவே, தேர்தல் பிரசாரத்தின் போது அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள வாரியங்களின் தலைவர்களும் தங்களது அதிகார நிலையை மேற்கொள்வதற்கு தடைவிதித்து அதற்கு உரிய தகுந்த விதிமுறைகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையரிடம் கொடுத்துள்ள மற்றொரு மனுவில் கூறியிருப்பதாவது:– விதிமீறல்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சிகளால் நடத்தப்படும் அம்மா உணவகங்களில் ஜெயலலிதாவின் படமும், அம்மா உணவகம் என்ற பெயரும் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி வளாகத்தில் உள்ள இந்த உணவகத்தில் இன்னமும் முதல்–அமைச்சரின் படமும், பெயரும் அகற்றப்படவில்லை. 5.10.2013 அன்று ஏற்காடு தொகுதிக்குட்பட்ட தும்பல், பாப்பநாயக்கன்பட்டி, வெள்ளாளபட்டி ஆகிய கிராமங்களில் முதல்வர் படங்கள் பொறிக்கப்பட்ட அரசின் இலவச சைக்கிள்கள், மடிக்கணிகள் மாவட்ட நிர்வாகத்தால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. 25.10.2013 அன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆணையை மீறி அரசு கட்டிக்கொடுத்துள்ள 'பசுமை வீடுகளில்' முதல்வரின் படங்கள் அகற்றப்படவில்லை. கட்சியின் சின்னம் மேற்கூறிய விதிமீறல்கள் தவிர, ஏற்காடு தொகுதி உள்பட மாநிலம் முழுவதும் ஓடும் அரசு பேருந்துகளில் முதல்–அமைச்சரின் படத்தை போட்டு தேர்தல் சம போட்டிவாய்ப்பை அரசு போக்குவரத்து கழகங்கள் குலைத்துவருகின்றன. மேலும் இந்த பேருந்துகளின் அனைத்து பக்கங்களிலும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் இரண்டு பெரிய அளவில் வரையப்பட்டுள்ளன. ஒரு கட்சி அதன் சின்னம் வழியாக அடையாளம் காணப்படுவதால், தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலானோர், கிராமப்புறங்களில் வசிக்கும் அப்பாவிகள் என்பதால், கட்சியையும், வேட்பாளர்களையும் சின்னத்தை வைத்து அடையாளம் காண்கின்றனர். எனவே அரசு விஞ்ஞான ரீதியிலும், துடுக்குத்தனமாகவும் அரசு பேருந்துகளில் கட்சி சின்னத்தை வரைந்து அதன் மூலம் மக்கள் மனங்களில் தங்களது கட்சி சின்னத்தை பிரபலப்படுத்த முயல்கிறது. இதுதவிர, அரசால் விநியோகிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களிலும், இந்த சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இரட்டை இலையை முடக்க வேண்டும் கட்சியையும், வேட்பாளர்களையும் தெரிவு செய்வதில் சின்னங்களுக்கு பெரும் பாத்திரம் உண்டு. அதுபோலவே அனைத்து கட்சிகளுக்கும் சமமான போட்டி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, அரசியல் தலைவர்கள், முதல்–அமைச்சர் ஆகியோர் படங்களைப் போடுவது குறித்து தேர்தல் ஆணையம் விதிகளை வகுத்துள்ளது. இது சின்னங்களுக்கும் பொருந்த வேண்டும். அதிகாரத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அதன் சின்னத்தை அரசின் சின்னமாக காட்ட ஒப்புதல் பெறும்போது, அக்கட்சியான அ.தி.மு.க. அதன் பதிவு செய்யப்பட்ட இரட்டை இலை சின்னத்தை கைவிடத்தயாராக இருக்க வேண்டும். இந்த கொள்கை மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின்படியும், அ.தி.மு.க.வின் சின்னத்தை ரத்து செய்தோ, தற்காலிகமாக நிறுத்திவைத்தோ மற்றொரு சின்னத்தை ஒதுக்கலாம். எனவே தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் ஒதுக்குதல்) ஆணை 1968 இந்திய அரசியல் சட்டத்தின் 364–வது பிரிவு ஆகியவற்றின் படி, அ.தி.மு.க. வளர்ச்சிக்காக அரசு பணம் தவறாகவும், முறைகேடாகவும் பயன்படுத்தப்படுவதை தடுக்க அ.தி.மு.க. அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவோ அல்லது தற்காலிகமாக நிறுத்திவைக்கவோ செய்வதுடன் இரட்டை இலை சின்னத்தையும் முடக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். உச்சநீதிமன்றத்தில் சேலம் மாவட்ட ஆட்சியரின் நம்பகத்தன்மை குறித்து ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதால், மாவட்ட தேர்தல் அதிகாரியாக உள்ள அவரை உடனடியாக நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் தொகுதியில் முகாமிட்டுள்ள தமிழக அமைச்சர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேறும்படி உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. image: category:Tagging:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

பலத்த பாதுகாப்பு
67 சதவீதம் ஓட்டுப்பதிவு
அலறி அடித்து ஓட்டம்