மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பெங்களூர் மைதானத்தில் நரேந்திர மோடியை வரவேற்று கட்– அவுட் வைத்த எடியூரப்பா
- டெல்லியில் கம்யூனிஸ்டு தலைவர்களுடன் ஜெகன்மோகன்ரெட்டி சந்திப்பு
- 6 லட்சம் பேர் ஆன்லைனில் பதிவு: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்
- காஷ்மீர் விடுதலை இயக்க தலைவர் கிலானிக்கு வீட்டுக்காவல்: பேரணியில் பங்கேற்க தடை
- பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை: பா.ஜனதா திட்டவட்ட அறிவிப்பு
- பெங்களூரில் இன்று மோடி பொதுக்கூட்டம்: 2 லட்சம் பா.ஜ.க.வினர் குவிகின்றனர் - எடியூரப்பாவுடன் சந்திப்பா?
- 'திருடர்கள் கட்சி': ராகுல் விமர்சனத்தை எதிர்த்து தேர்தல் கமிஷனிடம் பா.ஜ.க. புகார்
- டெல்லி சட்டசபை தேர்தல்: சொத்து கணக்கை வெளியிட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்
- முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதி
- பார்ட்னரிடம் ரூ.21.8 லட்சம் மோசடி செய்துவிட்டு டெல்லியில் தலைமறைவாக இருந்த ஆப்கான் வாலிபர் கைது
- உலகப் புகழ்பெற்ற சோனிபூர் கால்நடை கண்காட்சி இன்று தொடங்கியது
- ‘ரத்தக் கறை படிந்த கை’: மோடி பதில் அளிக்க மேலும் 4 நாட்கள் அவகாசம் அளித்தது தேர்தல் ஆணையம்
- சத்தீஸ்கர் மாநில இயற்கை வளங்களை பா.ஜனதா திருடிவிட்டது: ராகுல் காந்தி தாக்கு
- ஒருங்கிணைந்த ஆந்திராவுக்காக டெல்லியில் ஆதரவு திரட்டுகிறார் ஜெகன் மோகன் ரெட்டி
- சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு
- டெல்லியில் முதல்வர் ஷீலா தீட்சித்தை எதிர்த்து போட்டியிடும் கெஜ்ரிவால் இன்று வேட்புமனு தாக்கல்
- டெல்லி–காஷ்மீரில் மீண்டும் நிலநடுக்கம்
- தீ எச்சரிக்கை கருவி ஒலித்ததால் 100 பயணிகளுடன் அவசரமாக டெல்லியில் தரை இறங்கிய விமானம்
- தேர்தல் கமிஷன் நோட்டீசுக்கு ஒருவார அவகாசம் கேட்கும் பா.ஜனதா
| பெங்களூர் மைதானத்தில் நரேந்திர மோடியை வரவேற்று கட்– அவுட் வைத்த எடியூரப்பா Posted: 16 Nov 2013 10:39 PM PST பெங்களூர் மைதானத்தில் நரேந்திர மோடியை வரவேற்று எடியூரப்பா கட்– அவுட் வைத்தார். கர்நாடக முன்னாள் முதல்– மந்திரி எடியூரப்பா பாரதீய ஜனதாவில் இருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். சட்டசபை தேர்தலில் அவரது கட்சி படுதோல்வியை தழுவியது. ஓட்டுக்களை பிரித்ததன் மூலம் பாரதீய ஜனதாவும் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதனால் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. கட்சி எடுபடாமல் போனதால் தேர்தலுக்குப் பின் தனது கட்சியை பாரதீய ஜனதாவுடன் இணைக்க தூது விட்டார். ஆனால் பாரதீய |
| டெல்லியில் கம்யூனிஸ்டு தலைவர்களுடன் ஜெகன்மோகன்ரெட்டி சந்திப்பு Posted: 16 Nov 2013 10:17 PM PST ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதி மக்கள் 1½ மாதத்துக்கும் மேலாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தினார்கள். மாநில பிரிவினைக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கானா மசோதா வருகிற பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் அறிவித்துள்ளார். |
| 6 லட்சம் பேர் ஆன்லைனில் பதிவு: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் Posted: 16 Nov 2013 10:10 PM PST சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. முதல் நாள் பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. நேற்று மலையாள மாதத்தின்படி கார்த்திகை 1–ம் தேதி ஆகும். இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் |
| காஷ்மீர் விடுதலை இயக்க தலைவர் கிலானிக்கு வீட்டுக்காவல்: பேரணியில் பங்கேற்க தடை Posted: 16 Nov 2013 08:30 PM PST காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த கலவரத்தை அடுத்து அங்கு செல்ல அரசியல் தலைவர்களுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. காஷ்மீர் விடுதலை இயக்க தலைவர் சைய்தஅலிஷா கிலானி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்தார். 18 நாட்களுக்கு முன் அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் பாரமுல்லா மாவட்டம் பல்கலான் கிராமத்தில் பேரணியில் கலந்து கொள்ள கிலானி திட்டமிட்டு இருந்தார். |
| பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை: பா.ஜனதா திட்டவட்ட அறிவிப்பு Posted: 16 Nov 2013 04:19 PM PST இளம் பெண்ணை கண்காணிக்க உத்தரவிட்ட விவகாரத்தில், அமித்ஷாவுக்கு எதிரான குற்றச்சாட்டை நிராகரித்த பா.ஜனதா, பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்து உள்ளது |
| Posted: 16 Nov 2013 02:57 PM PST கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரில் இன்று நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பேசுகிறார். இதற்காக பெங்களூர் அரண்மனை திடலில் 3200 சதுரடியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூர் நகரம் முழுவதும் மோடியின் பிரமாண்ட கட் அவுட்களும் |
| 'திருடர்கள் கட்சி': ராகுல் விமர்சனத்தை எதிர்த்து தேர்தல் கமிஷனிடம் பா.ஜ.க. புகார் Posted: 16 Nov 2013 11:42 AM PST சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்த காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பா.ஜ.க.வை திருடர்கள் கட்சி என்று கடுமையாக தாக்கி பேசினார். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள இயற்கை வளங்களை எல்லாம் ஆளும் பா.ஜ.க.வினர் சுரண்டி கொள்ளையடித்து |
| டெல்லி சட்டசபை தேர்தல்: சொத்து கணக்கை வெளியிட்டார் அரவிந்த் கெஜ்ரிவால் Posted: 16 Nov 2013 11:24 AM PST டெல்லி சட்டசபைக்கு வரும் டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 70 தொகுதிகளுக்கான இந்த தேர்தலின் வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை எதிர்த்து போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் |
| முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதி Posted: 16 Nov 2013 10:47 AM PST முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்(82) டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி ராஜாஜி மார்க் வீட்டில் தங்கியிருந்த அவர் காய்ச்சலால் சோர்வடைந்து காணப்பட்டார். இதனையடுத்து, அவரது உதவியாளர்கள் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் |
| பார்ட்னரிடம் ரூ.21.8 லட்சம் மோசடி செய்துவிட்டு டெல்லியில் தலைமறைவாக இருந்த ஆப்கான் வாலிபர் கைது Posted: 16 Nov 2013 07:50 AM PST ஆப்கானிஸ்தானில் பாட்னரிடம் ரூ.21.8 லட்சம் மோசடி செய்துவிட்டு இந்தியாவிற்கு தப்பி வந்த வாலிபர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானின் காந்தகார் நகரில் அப்துல் கனி (30) மற்றும் பஷீர் அகமது ஆகியோர் சேர்ந்து ஆயத்த ஆடை தொழிற்சாலை நடத்தி வந்தனர். அப்போது தொழிலில் முதலீடு செய்வதற்காக அகமது கொடுத்த ரூ.21.80 லட்சத்தை |
| உலகப் புகழ்பெற்ற சோனிபூர் கால்நடை கண்காட்சி இன்று தொடங்கியது Posted: 16 Nov 2013 07:17 AM PST பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நவம்பர் மாத பவுர்ணமித் திருநாளில் கங்கை நதிக் கரையில் நடைபெறும் சோனிபூர் வணிக மேளா இன்று தொடங்கியது. ஒரு மாதம் நடைபெறும் இந்த விற்பனை சந்தையில் யானைகள், குதிரைகள் மற்றும் கால்நடைகள் விற்பனை செய்யப்படும். பேரரசர் சந்திரகுப்த மவுரியர் காலத்தில் யானைகள் மற்றும் குதிரைகளை கங்கை நதி |
| ‘ரத்தக் கறை படிந்த கை’: மோடி பதில் அளிக்க மேலும் 4 நாட்கள் அவகாசம் அளித்தது தேர்தல் ஆணையம் Posted: 16 Nov 2013 04:07 AM PST சத்தீஸ்கரில் கடந்த வாரம் பிரச்சாரம் செய்த பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ரத்தக்கறை படிந்த கைலிருந்து சத்தீஸ்கரை காப்பாற்ற தாமரைக்கு வாக்களியுங்கள் என்று கூறினார். காங்கிரஸ் கட்சியின் சின்னமாக கை இருப்பதால், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் புகார் அளித்தது. |
| சத்தீஸ்கர் மாநில இயற்கை வளங்களை பா.ஜனதா திருடிவிட்டது: ராகுல் காந்தி தாக்கு Posted: 16 Nov 2013 03:56 AM PST சத்தீஸ்கர் மாநிலத்தில் 19-ம் தேதி நடைபெற உள்ள 2ம் கட்ட தேர்தலுக்காக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். மாவோயிஸ்டுகளால் கடந்த மே மாதம் கொல்லப்பட்ட மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் பட்டேலின் தொகுதியான கார்சியாவில் இன்று ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது |
| ஒருங்கிணைந்த ஆந்திராவுக்காக டெல்லியில் ஆதரவு திரட்டுகிறார் ஜெகன் மோகன் ரெட்டி Posted: 16 Nov 2013 03:28 AM PST ஆந்திரப் பிரதேசத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான சட்ட மசோதாவையும் வரும் டிசம்பர் மாத குளிர்கால கூட்டத்தொடரில் அரசு கொண்டு வரவுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதி அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. சமீபத்தில் தெலுங்கானா |
| சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு Posted: 16 Nov 2013 02:52 AM PST கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகளை ஏற்படுத்தி நாட்டிற்கு பெருமை தேடித்தந்தவர் சச்சின் டெண்டுல்கர். 24 ஆண்டுகாலம் இந்திய அணிக்காக விளையாடிய அவர் தனது 200-வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் இன்று ஓய்வு பெற்றார். இந்நிலையில், விளையாட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் மன்மோகன்சிங் பரிந்துரை செய்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். |
| டெல்லியில் முதல்வர் ஷீலா தீட்சித்தை எதிர்த்து போட்டியிடும் கெஜ்ரிவால் இன்று வேட்புமனு தாக்கல் Posted: 16 Nov 2013 02:06 AM PST டெல்லியில் வரும் டிசம்பர் 4-ம் தேதி சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. இதையொட்டி காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் சமூக சேவகராக இருந்து அரசியல்வாதியாக மாறியுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் |
| டெல்லி–காஷ்மீரில் மீண்டும் நிலநடுக்கம் Posted: 16 Nov 2013 01:30 AM PST டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில நாட்களுக்கு முன் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 12.41 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.41 மணி வரை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். இது ரிக்டர் அளவில் 3.1 என இருந்தது. எனவே சேதம் இல்லை. தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் வீடுகள் லேசாக |
| தீ எச்சரிக்கை கருவி ஒலித்ததால் 100 பயணிகளுடன் அவசரமாக டெல்லியில் தரை இறங்கிய விமானம் Posted: 15 Nov 2013 11:55 PM PST டெல்லியில் இருந்து இன்று காலை 100 பயணிகளுடன் 'ஏர்பஸ்–320' விமானம் மும்பை புறப்பட்டுச் சென்றது. வழியில் விமானத்தில் தீ எச்சரிக்கை கருவி ஒலித்ததால் அந்த விமானம் மீண்டும் டெல்லிக்கு திரும்பி வந்து அவசரமாக தரை இறங்கியது. இந்த விமானத்தில் முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்கும் இருந்தார். பயணிகள் அனைவரும் அவசரமாக இறக்கப்பட்டு வேறு விமானத்தில் மும்பை அனுப்பி வைக்கப்பட்டனர். 40 நிமிடம் தாமதமாக வி.கே.சிங்கும் |
| தேர்தல் கமிஷன் நோட்டீசுக்கு ஒருவார அவகாசம் கேட்கும் பா.ஜனதா Posted: 15 Nov 2013 11:52 PM PST பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ராஜஸ்தானில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில், காங்கிரசின் கை சின்னம் பற்றி குறிப்பிடுகையில் அது கொலைகார கை, ரத்தக்கறை படித்த கை என்று விமர்சித்தார். இதுபற்றி தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார் செய்தது. இதையடுத்து நரேந்திர மோடியிடம் விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் இதற்கு பதில் அளிக்க |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |