Tamil Star |
- ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா
- பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு இன்று நிறைவு
- CHOGM மாநாட்டில் கலந்து கொண்ட மூவர் வைத்தியசாலையில்
- தமிழர் பிரச்சினை பற்றி விவாதிப்பதற்கே குர்ஷித் இலங்கை விஜயம்
- இனப்படுகொலையில் சொல்லப்படாத கதை! புதிய ஆவணப்படம் வெளியானது
- வாடகை பணத்தை செலுத்த செனல் 4 ஊடகவியலார்கள் உறுதியளிப்பு
- சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கப்பட மாட்டாது: கமரூனின் கோரிக்கையை நிராகரிப்பு
- பாகிஸ்தானில் மாணவர்கள் உயிருடன் எரித்துக் கொலை
- என்னங்க பாஸ்!…இப்படியெல்லாம் சொதப்புறீங்க!…
- iOS 7.0.4 புதிய பதிப்பினை வெளியிட்டது அப்பிள்
| ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா Posted: 16 Nov 2013 11:11 PM PST இந்திய – மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவு அணியை வென்ற பிறகு இந்திய அணி ஐ.சி.சி டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.அடுத்தமாதம் ஜோகன்ஸ்பர்க் மற்றும் டர்பனில் நடக்க உள்ள தென் ஆப்ரிக்க அணியுடனான இரண்டு டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்று விட்டால் ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது |
| பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு இன்று நிறைவு Posted: 16 Nov 2013 10:56 PM PST இலங்கையில் இடம்பெற்று வரும் 23வது பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாடு இன்று (17) பிற்பகல் நிறைவடைகிறது. பொதுநலவாய அமைப்பிற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார். இன்று பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுநலவாய செயலாளர் கமலேஷ் சர்மா கலந்து கொள்ளும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இதன்போது பொதுநலவாய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து அறிவிக்கப்படவுள்ள அதேவேளை அடுத்த பொதுநலவாய மாநாடு நடைபெறும் நாடு குறித்த அறிவிப்புக்களும் […] |
| CHOGM மாநாட்டில் கலந்து கொண்ட மூவர் வைத்தியசாலையில் Posted: 16 Nov 2013 10:32 PM PST பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு பிரஜைகள் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உகண்டா நாட்டைச் சேர்ந்த இரு பிரஜைகள் மலேரியா நோய் காரணமாக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது இவர்கள் சிகிச்சை பெற்று வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர். இதேவேளை பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு அரச அதிகாரி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு விசேட சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். |
| தமிழர் பிரச்சினை பற்றி விவாதிப்பதற்கே குர்ஷித் இலங்கை விஜயம் Posted: 16 Nov 2013 10:13 PM PST தமிழர்களின் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காகவே வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித் இலங்கை சென்று உள்ளார் என்று மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கூறினார். பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், இலங்கையில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளவில்லை. 8 கோடி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர் இந்த முடிவு எடுத்துள்ளார். அதே நேரத்தில் இலங்கை தமிழ் மக்களுக்கு முன்னேற்றம், வளர்ச்சி, பாதுகாப்பு, சமஉரிமை ஆகியவை கிடைக்கச் செய்வதில் மத்திய அரசு அக்கறையுடன் செயல்பட்டு […] |
| இனப்படுகொலையில் சொல்லப்படாத கதை! புதிய ஆவணப்படம் வெளியானது Posted: 16 Nov 2013 06:12 AM PST இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் அரசாங்கம் அறிவித்த போர் தவிர்ப்பு வலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலிலேயே அதிகளவான மக்கள் கொல்லப்பட்டதாக இந்தியாவின் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இலங்கை தமிழர்களின் இனப்படுகொலையில் சொல்லப்படாத கதை என்ற தலைப்பில் அந்த தொலைக்காட்சி புதிய காட்சிகளுடன் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகளிடம் இருந்து விடுபட்டு தாம் அறிவிக்கும் பகுதிக்கு மக்களை வருமாறு கூறிய இராணுவம், அந்த சிறிய பகுதியில் வைத்து அதாவது வீடொன்றில் பூட்டி வைத்து விட்டு நாலா புறமும் தாக்குதல் நடத்தியதாக […] |
| வாடகை பணத்தை செலுத்த செனல் 4 ஊடகவியலார்கள் உறுதியளிப்பு Posted: 16 Nov 2013 04:25 AM PST அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேனின் வாடகை பணத்தை செலுத்த செனல் 4 ஊடகவியலாளர்கள் உறுதியளித்துள்ளனர். செனல் 4 ஊடகவியலாளர்களுக்கு எதிராக கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் குறித்த வேனின் சாரதி கடந்த 14ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தார். கொழும்பில் இருந்து ரயிலில் வவுனியா சென்ற செனல் 4 ஊடகவியலாளர்களுக்கு அநுராதபுரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனால் அநுராதபுரத்தில் இருந்து செனல் 4 ஊடகவியலாளர்கள் வேனில் திருப்பி அனுப்பப்பட்டனர். எனினும் அவர்கள் பயணித்த வேனுக்கான 30,000 ரூபா […] |
| சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கப்பட மாட்டாது: கமரூனின் கோரிக்கையை நிராகரிப்பு Posted: 16 Nov 2013 04:16 AM PST இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்த்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விடுத்துள்ள கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, ´அவ்வாறான விசாரணைக்கு இடமளிக்கப்பட மாட்டாது´ என்று கூறியுள்ளார். இலங்கை மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் சுயாதீன விசாரணையொன்றை நடத்த வேண்டுமென்று பிரித்தானிய பிரதமர் கமரூன் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் அவ்வாறான விசாரணை […] |
| பாகிஸ்தானில் மாணவர்கள் உயிருடன் எரித்துக் கொலை Posted: 16 Nov 2013 04:11 AM PST முஹர்ரம் பண்டிகைகையொட்டி பாகிஸ்தானில் நேற்று பல இடங்களில் நினைவு ஊர்வலங்கள் நடைபெற்றன. ராவல்பிண்டி அருகே உள்ள காரிசன் நகரில் சன்னி பிரிவினர் ஊர்வலமாக சென்றனர். அப்போது ஷியா அரபு பாடசாலை அருகே வந்த போது, சிலர் சன்னி மக்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். இதனை தொடர்ந்து மதரசாவுக்குள் ஆவேசமாக நுழைந்தவர்கள், கண்ணில் பட்டவர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தினர். சிலரை உயிருடன் தீ வைத்தும் எரித்துக் கொன்றனர். இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் 10 பேர் பலியாகினர், […] |
| என்னங்க பாஸ்!…இப்படியெல்லாம் சொதப்புறீங்க!… Posted: 16 Nov 2013 04:02 AM PST |
| iOS 7.0.4 புதிய பதிப்பினை வெளியிட்டது அப்பிள் Posted: 16 Nov 2013 03:59 AM PST அப்பிள் நிறுவனத்தினால் அதன் மொபைல் சாதனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இயங்குதளமே iOS ஆகும். இதன் புதிய பதிப்பான iOS 7 இனை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்த நிலையில் அதில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு மேலும் சில பதிப்புக்களை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது iOS 7.0.4 எனும் புதிய பதிப்பினை மீண்டும் வெளியிட்டுள்ளது. இதில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளதுடன் FaceTime அப்பிளிக்கேஷனும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனை iPhone, iPad மற்றும் iPod Touch […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
