Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பா.ஜனதா ஆட்சியை தக்க  வைக்குமா?: சதீஷ்கரில் நாளை முதல் கட்ட தேர்தல்

Posted: 09 Nov 2013 10:42 PM PST

சத்தீஷ்கர், டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. சத்தீஷ்கரில் மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் நாளை பாஸ்டர், தண்ட வதே, சுக்மா, பிஜப்பூர், கொண்டகான், கான்கெர், நாராயண்பூர், ராஜ்நன்ட்கான் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள 18 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இடைவிடாமல் ஓட்டுப் பதிவு நடக்கிறது. 90 தொகுதிகளிலும் மொத்தம் 1066

திருப்பதி கோவிலில் இன்று புஷ்ப யாகம்

Posted: 09 Nov 2013 10:40 PM PST

திருப்பதி கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. வார விடுமுறை என்பதால் பக்தர்கள் லட்சத்துக்கும் அதிகமாக குவிந்தனர். தரிசன சவுண்டர், முடி காணிகை, லட்டு கவுண்டர் என அனைத்து பகுதிகளிலும் பக்தர்களின் வரிசை மிக நீளமாக இருந்தது

மோடி அலையால் 4 மாநிலத்தில் தாமரை ஆட்சி மலருமா?

Posted: 09 Nov 2013 10:31 PM PST

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், டெல்லி, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பிறகு நாடு

மாநில பிரிவினையை ஏற்கும்படி காங்கிரஸ் மேலிடம் என்னை மிரட்டவில்லை: கிரண்குமார் ரெட்டி

Posted: 09 Nov 2013 09:42 PM PST

ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்த டெல்லி வருமாறு ஆந்திர முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டிக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் கிரண்குமார் ரெட்டி டெல்லி சென்றார். கட்சியின் ஆந்திர மாநில பொறுப்பாளர் திக்விஜய் சிங்கை சந்தித்து பேசினார். நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை, கிரண்குமார் ரெட்டி

தெலுங்கானா விவகாரத்தில் கிரண்குமார் ரெட்டி நாடகமாடுகிறார்: நடிகை ரோஜா கடும் தாக்கு

Posted: 09 Nov 2013 09:03 PM PST

திருப்பதி கோவிலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மகளிரணி தலைவியும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் அதிகாரிகள் பிரசாதங்களை வழங்கினர். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்

காமன்வெல்த் மாநாடு, கொழும்பில் இன்று தொடங்குகிறது

Posted: 09 Nov 2013 07:41 PM PST

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள காமன்வெல்த் மாநாடு, கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் காலனிகளாக இருந்து, விடுதலை பெற்ற 54 நாடுகளின் கூட்டமைப்பான காமன்வெல்த் அமைப்பின் மாநாடு, இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இலங்கையில் இனப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது, போர் இல்லாத பிரதேசங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்களில்கூட லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். போர்க்குற்றங்கள் அரங்கேற்றப்பட்டன. சர்வதேச சமூகத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவங்களால், காமன்வெல்த் மாநாட்டை கொழும்புவில் நடத்தக்கூடாது என பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பெரும் சர்ச்சையும் உருவானது.

பத்ம விருதுகளிலும் அரசியல்: உறவினர் - நண்பர்களுக்கு விருதுகளை வழங்க பரிந்துரைத்த பிரபலங்கள்

Posted: 09 Nov 2013 02:43 PM PST

கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை வழங்கி வருகிறது. நமது தமிழ்நாட்டில் உள்ள பல கலை வல்லுனர்களுக்கு இன்னும் இவ்விருதுகள் வந்து சேரவில்லை என்ற ஆதங்கம் தமிழர்களிடம்

குடும்பத்தாருடன் விடுமுறையை கழிக்க உலகின் தலை சிறந்த 10 இடங்கள் பட்டியலில் கேரளா தேர்வு

Posted: 09 Nov 2013 11:50 AM PST

உலகின் பிரபல சுற்றுலா தலங்களை வரிசைப்படுத்தும் 'லோன்லி பிளானட்' என்ற சுற்றுலா வழிகாட்டி பிரசுர நிறுவனம் குடும்பத்தினரோடு விடுமுறையை கழிக்க உலகின் தலைசிறந்த 10 இடங்களை

பா.ஜ.க.- காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் மத்தியில் எந்த அரசும் அமைய முடியாது: அத்வானி பேச்சு

Posted: 09 Nov 2013 10:52 AM PST

சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் நாளை (11ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று சத்தீஸ்கர் சுகாதார துறை மந்திரி அமர் அகர்வாலை ஆதரித்து பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி பிலாஸ்பூர் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்

நவ.11 முதல் டிச.4 வரை கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு தேர்தல் கமிஷன் தடை

Posted: 09 Nov 2013 09:35 AM PST

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வரும் 11ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை பல கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்பு முடிவுகள் என்ற பெயரில்

மும்பை தாக்குதலுக்கு டெல்லியில் இருந்து உதவிய பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்

Posted: 09 Nov 2013 08:36 AM PST

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானில் இருந்து வந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக பாகிஸ்தான் ஜமாத் உத் தாவா அமைப்பின் தீவிரவாதி ஹபீஸ் சயீத் மீது இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.

மக்களை தவறாக வழிநடத்துகிறது பா.ஜனதா: மன்மோகன் சிங் தாக்கு

Posted: 09 Nov 2013 08:04 AM PST

சத்தீஸ்கர் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்கிறது. இதையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். இந்நிலையில் ராய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜே.பி.சி. அளித்த 2ஜி விசாரணை அறிக்கையை நிராகரிக்க வேண்டும்: சபாநாயகருக்கு பா.ஜனதா கடிதம்

Posted: 09 Nov 2013 07:44 AM PST

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் (ஜே.பி.சி.) அறிக்கையை சபாநாயகர் மீரா குமார் நிராகரிக்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா, சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

எம்.பி. வீட்டில் இறந்த பெண்ணின் உடல் கேட்பாரின்றி பிணவறையில் காத்திருக்கும் அவலம்

Posted: 09 Nov 2013 06:25 AM PST

உ.பி. மாநிலம் ஜான்பூர் தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தனஞ்செய் சிங்கின் டெல்லி வீட்டில் வேலை பார்த்த ராக்கி என்ற பெண் கடந்த திங்கட்கிழமை மாலை மர்மமான முறையில் மரணமடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராக்கியின் உடலில் காயங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

சி.பி.ஐ. அமைப்பு சட்டப்பூர்வமானதல்ல என்ற கவுகாத்தி ஐகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை

Posted: 09 Nov 2013 03:51 AM PST

சி.பி.ஐ. அமைப்பு சட்டப்பூர்வமானது அல்ல என்று கவுகாத்தி கோர்ட்டு நேற்று முன்தினம் பரபரப்பு தீர்ப்பு வெளியிட்டது. நவேந்திரகுமார் என்பவர் தாக்கல் செய்திருந்த சி.பி.ஐ.க்கு எதிரான வழக்கு கவுகாத்தி ஐகோர்ட்டில் கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வந்தது. அதில்தான் சர்ச்சைக்குரிய இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

கோட்டக்கல்லில் எம்.எல்.ஏ.வுக்கு கத்திக்குத்து

Posted: 09 Nov 2013 02:31 AM PST

கேரள மாநிலம் கோட்டக்கல் அருகே உள்ள குட்டப்புறத்தில் ஆலின்சுவடு பள்ளி வாசல் உள்ளது. கடந்த 2008–ம் ஆண்டு இந்த பள்ளி வாசல் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அப்போது இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் தேர்தலில் போட்டியிட்ட அகமது குட்டி (வயது 56) என்பவருடைய 2 சகோதரர்கள் கொலை செய்யப்பட்டனர்.

பைலின் புயல் பாதித்த ஒடிசா-ஆந்திராவுக்கு தலா ரூ.1000 கோடி இடைக்கால நிவாரணம்: பிரதமர் அறிவிப்பு

Posted: 09 Nov 2013 02:30 AM PST

ஒடிசாவில் கடந்த மாதம் 12-ம் தேதி சக்திவாய்ந்த பைலின் புயல் தாக்கியது. அப்போது ஒடிசா மற்றும் அண்டை மாநிலமான ஆந்திராவின் வடக்கு கடலோர பகுதிகளில் 200 கி.மீ. வேகத்தில் புயல்காற்று வீசியதுடன், கனமழையும் கொட்டித் தீர்த்தது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் மிகப்பெரிய

மோடியை தடுக்க தீவிரவாதிகளுக்கு அரசியல் கட்சிகள் மறைமுக ஆதரவு: வெங்கையா நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு

Posted: 09 Nov 2013 01:39 AM PST

பா.ஜனதா தலைவர் வெங்கையா நாயுடு இன்று ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் மற்றும் அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து கூறியதாவது

5 மாநில தேர்தல் முடிவுகள் வரும் பாராளுமன்ற தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தமுடியாது: அத்வானி

Posted: 09 Nov 2013 01:35 AM PST

சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு வரும் 11-ம் தேதி முதல் டிசம்பர் 4 வரை தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 8-ந்தேதி 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து அடுத்த ஆண்டு பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடக்கவுள்ளது.

கவுகாத்தி கோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அப்பீல்

Posted: 08 Nov 2013 11:29 PM PST

சி.பி.ஐ. அமைப்பு சட்டப்பூர்வமானது அல்ல என்று கவுகாத்தி கோர்ட்டு நேற்று முன்தினம் பரபரப்பு தீர்ப்பு வெளியிட்டது. நவேந்திரகுமார் என்பவர் தாக்கல் செய்திருந்த சி.பி.ஐ.க்கு எதிரான வழக்கு கவுகாத்தி ஐகோர்ட்டில் கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வந்தது. அதில்தான் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கவுகாத்தி ஐகோர்ட்டு தீர்ப்பு காரணமாக சி.பி.ஐ. நடவடிக்கைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கவுகாத்தி கோர்ட்டு உத்தரவுக்கு தடை பெற முடிவு செய்யப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™