Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


தென்னாபிரிக்கா மாதிரியிலான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க இலங்கை அரசாங்கம் முயற்சி

Posted: 09 Nov 2013 11:02 PM PST

srilanka flg

srilanka flgஇலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தென்னாபிரிக்க மாதிரியிலான தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென்னாபிரிக்காவில் இன முரண்பாடுகளை களைவதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.

உரிமைகள், இருப்பிடங்களை இழத்தல், மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தென்னாபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆராய்ந்து தீர்வு வழங்கியிருந்தது.

இந்த ஆணைக்குழுவின் தலைவராக பேராயர் டெஸ்மன் டுட்டு கடமையாற்றினார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், அபராதம் விதித்தல், நட்டஈடு வழங்குதல், தண்டனை விதித்தல் என பல்வேறு அதிகாரங்கள் இந்த ஆணைக்குழுவிற்கு காணப்பட்டது.

இதேபோன்றதொரு பொறிமுறைமையை உருவாக்கி அதன் மூலம் வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரித்தானிய பிரதமர் வட மாகாண முதலமைச்சரை சந்திக்க உள்ளார்

Posted: 09 Nov 2013 10:53 PM PST

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனை சந்திக்க உள்ளார். எதிர்வரும் 15ம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. யாழ்ப்பாண பொதுநூலக கேட்போர் கூடத்தில் பிரித்தானிய பிரதமருக்கும் வட மாகாண ஆளுனருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளது. வடக்கின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, அரசியல் கைதிகள், மனிதாபிமான நிலைமைகள், இராணுவ பிரசன்னம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற […]

உயிர்களைக்கொடுத்துக் காத்த இலட்சிய நெருப்பை அணையாமல் காக்கவேண்டும்

Posted: 09 Nov 2013 10:43 PM PST

ஆயிரக்கணக்கான போராளிகளும் இலட்சக்கணக்கான தமிழர்களும் தங்கள் உயிரைக்கொடுத்து காத்த இலட்சிய நெருப்பை அணையாமல் காக்க வரலாற்றுப் பாடங்களை நாம் தொடர்ந்து படித்தே ஆகவேண்டும். ஈழத் தமிழர்கள், உலகத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் மட்டுமல்ல; இந்த நூலைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து உலக மக்கள் அனைவரிடமும் கொண்டுசென்று, ஈழப் போராட்டத்தின் இலட்சியத்தை, அவசியத்தை, உண்மையை உணர்ந்து கொள்ளும் படியான வாய்ப்பை நாம் உருவாக்கவேண்டும் என திராவிடர் கழத் தலைவர் கி.வீரமணி அவர்கள் நீந்திக்கடந்த நெருப்பாறு நாவலுக்கு வழங்கிய அணிந்துரையில் […]

இந்தியச் செய்தி உலகின் தலை சிறந்த 10 சுற்றுலா தளங்களின் பட்டியலில் கேரளா

Posted: 09 Nov 2013 10:06 PM PST

உலகின் பிரபல சுற்றுலா தலங்களை வரிசைப்படுத்தும் ‘லோன்லி பிளானட்’ என்ற சுற்றுலா வழிகாட்டி பிரசுர நிறுவனம் குடும்பத்தினரோடு விடுமுறையை கழிக்க உலகின் தலைசிறந்த 10 இடங்களை பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியலில் நியூ யார்க், டென்மார்க், பிரகுவே, ஐஸ்லாந்து, இத்தாலி, ஹவாய் தீவுகளுக்கு அடுத்தபடியாக கேரள மாநிலமும் இடம் பெற்றுள்ளது. பசுமையான இயற்கை சூழலில் அழகிய கடற்கரைகள், நீர் நிலைகள், தேசிய பூங்காக்கள், யானை காப்பகங்கள் போன்றவை இங்கு உள்ளன. மேலும், இந்தியாவின் இதர இடங்களை போல் இல்லாமல் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

பத்ம விருதுகளிலும் அரசியல்: அம்பலமாகும் உண்மை

Posted: 09 Nov 2013 09:54 PM PST

கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை வழங்கி வருகிறது. நமது தமிழ்நாட்டில் உள்ள பல கலை வல்லுனர்களுக்கு இன்னும் இவ்விருதுகள் வந்து சேரவில்லை என்ற ஆதங்கம் தமிழர்களிடம் மேலோங்கி உள்ளது. குறிப்பாக, தமிழர்களின் வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்திருக்கும் பல்லாயிரம் பாடல்களுக்கு இசையமைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு இவ்வளவு காலம் ஆகியும் பத்ம விருது வழங்கப்படவில்லை என்ற ஆதங்கமும், ஆற்றாமையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட அனைத்து தமிழர்களுக்குமே […]

This posting includes an audio/video/photo media file: Download Now

நீங்கள் இப்படி ஒரு உணவைப் பார்த்ததுண்டா ?

Posted: 09 Nov 2013 04:51 AM PST

timthumb (11)

timthumb (11)

This posting includes an audio/video/photo media file: Download Now

காதலுக்கு மொழிகள் தேவையில்லை

Posted: 09 Nov 2013 04:46 AM PST

timthumb (10)

timthumb (10) காதலுக்கு மொழிகள் தேவையில்லை நீங்களே பாருங்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாகற்காயின் மருத்துவக் குணங்கள் பற்றிய சில தகவல்கள்

Posted: 09 Nov 2013 04:36 AM PST

20-1363775186-bittergourd

20-1363775186-bittergourdகசக்கும் காய் என்றாலும் பாகற்காயை சமையலில் சேர்த்துக் கொள்வதில் இருந்தே இதன் முக்கியத்துவம் புரியும். அதிலுள்ள சத்துக்களை பட்டியலிடுவோம்... * அறிவியல் பெயர் மொமோர்டிகா சாரன்டியா. தெற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டவை. தற்போது ஆசியநாடுகள் முழுமையும் பரவலாக விளைகிறது. ஆண்டு முழுவதும் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும். * குறைந்த ஆற்றல் வழங்குபவை பாகற்காய்கள். 100 கிராம் பாகற்காயில் 17 கலோரி ஆற்றலே உடலுக்கு கிடைக்கிறது. * பாகற்காயின் விதைகள் எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள், தாதுஉப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு பொருட்களைக் கொண்டது. * 'பாலிபெப்டைடு-பி' எனப்படும் குறிப்பிடத் தக்க சத்துப்பொருள் பாகற்காயில் காணப்படுகிறது. இதனை தாவரங்களின் 'இன்சுலின்' என்று கருதுகிறார்கள். ஏனெனில் தாவரங்களில் சர்க்கரை மிகுதியாகாமல் கட்டுப்படுத்துவது இதுதான். * உடற்செயலின் போது 'சாரான்டின்' எனும் பொருளை பாலிபெப்டைடு-பி உருவாக்குகிறது. சாரான்டினானது குளு கோசை அதிகம் கிரகித்து சர்ச்கரையின் அளவை உடலில் கட்டுக்குள் வைக்கிறது. எனவே நாம் பாகற்காயை உண்ணுவதால் 'டைப்-2' நீரிழிவில் இருந்து பாதுகாப்பு தருகிறது பாகற்காய். * பாகல் விதையில் சிறப்புமிக்க சத்துப்பொருளான போலேட் உள்ளது. 100 கிராம் பாகற்காயில் 72 மைக்ரோகிராம் போலேட் உள்ளது. இது கருவில் வளரும் குழந்தைக்கு நரம்பு பாதிப்புகள் உருவாகாமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் தாதுவாகும். * சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின்-சி, பாகற்காயில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் பாகல் விதையில் 84 மில்லிகிராம் வைட்டமின்-சி உள்ளது. இயற்கை நோய் எதிர்ப்பு பொருளான இது, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டியடிக்கும். * பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், லுடின், ஸி-சாந்தின் போன்ற புளோவனாய்டுகள் உள்ளன. அத்துடன் வைட்டமின்-ஏ சிறந்த அளவில் உள்ளது. இவை புற்றுநோயை உருவாக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதோடு, வயது மூப்படைவதில் இருந்தும், வியாதிகள் தாக்காதவாறும் காக்கும். * ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் பாகற்காய்க்கு உண்டு. மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை போக்கும். * வைட்டமின்-பி3, வைட்ட மின் பி-5, வைட்டமின்-பி6 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்ற முக்கியத் தாதுக்களும் பாகற்காயில் இருந்து உடலுக்கு கிடைக்கிறது. * பாகற்காய், எச்.ஐ.வி.க்கு எதிரான நோய்த்தடுப்பு சக்தியை வழங்குவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்திய பிரதமரை மாநாட்டிற்கு அழைக்கவில்லை யாழிற்கே அழைத்தேன் – மன்னார் ஆயர்

Posted: 09 Nov 2013 02:45 AM PST

பொதுநலவாய நாடுகளின் கூட்டத்திற்து இந்திய பிரதமரை தான் அழைக்கவில்லை என மன்னார் ஆயர் வண. இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். பொதுநலவாய மாநாட்டில் தலைவர்களின் வருகை பற்றி என்னிடம் அபிப்பிராயம் என்ன என்று கேட்டார்கள். அதற்கு நான் அவர்களுக்கு தெளிவாக கூறியது, போர் காலத்திலே நடந்தேறிய மனித இன படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் மனிதாபிமான சட்ட மீறல்கள் இவற்றை எல்லாம் போரின் போது இலங்கை நாடு செய்து முடித்துவிட்டு நாம் போரை முன்னெடுத்தது பயங்கரவாதிகளை அழிப்பதற்காக என்று […]

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் உரிமை பிரித்தானியாவுக்கு இல்லை: அரசாங்கம்

Posted: 09 Nov 2013 02:20 AM PST

இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் எந்த உரிமையும் பிரித்தானியாவுக்கோ வேறு எந்த நாடுகளுகோ இல்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய சர்வதேச விசாரணை ஒன்றின் அவசியம் குறித்து தனது இலங்கை விஜயத்தின் போது வலியுறுத்தப்படும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்திருந்தமை தொடர்பில் பதிலளிக்கும் போது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை கூறினார். இலங்கை அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு தொடர்பில் […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™