Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


தேர்தல் பிரசார மேடையில் நரேந்திர மோடியை கொல்ல சதி: சிமி தீவிரவாதிகள் கைது

Posted: 20 Nov 2013 10:32 PM PST

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை காலிஸ்தான் தீவிரவாதிகளை பயன்படுத்தி படுகொலை செய்ய பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை இந்த மாதம் தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் நரேந்திர மோடியை கொல்ல இந்தியன்

கேரளா அருகே இன்று அதிகாலை இருதரப்பினரிடையே மோதல்: அண்ணன்–தம்பி வெட்டிக்கொலை

Posted: 20 Nov 2013 10:17 PM PST

கேரள மாநிலம் மன்னார் காடு கல்லுக்குழியை சேர்ந்தவர் ஹம்சா (வயது 45). இவரது தம்பி சந்திரன் (40). இருவரும் மர வியாபாரம் செய்து வந்தனர். இன்று அதிகாலை 1 மணிக்கு கல்லுக்குழி பகுதியில் திடீரென்று இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். ஒரு தரப்பை சேர்ந்தவர் மற்றொரு தரப்பினரான ஹம்சா மற்றும் சந்திரனை

பெண் மீது தாக்குதல் எதிரொலி: பாதுகாவலர் இல்லாத ஏ.டி.எம்.கள் மூடப்பட்டன- கர்நாடக அரசு நடவடிக்கை

Posted: 20 Nov 2013 09:55 PM PST

பெங்களூரில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்த வங்கி பெண் அதிகாரியை மர்ம மனிதன் அரிவாளால் வெட்டி பணத்தை பறித்து சென்றான். தலையில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்ததால், அந்த பெண்ணின் ஒரு பக்க உடல் உறுப்புகள் செயல் இழந்து விட்டன. அவரை தாக்கிய மர்ம மனிதனை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தாக்குதல் சம்பவம் நடந்த ஏ.டி.எம்.மில் காவலாளி நியமிக்கப்படவில்லை.

உத்தரபிரதேசத்தில் 30 வேட்பாளர்களை ராகுல் தேர்வு செய்தார்

Posted: 20 Nov 2013 09:36 PM PST

பாராளுமன்றத்துக்கு இன்னும் 4 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள, காங்கிரஸ் கட்சி ராகுல் தலைமையில் தயாராகி வருகிறது. வேட்பாளர்களை தேர்ந்து எடுக்கும் பொறுப்பை ராகுலிடம் சோனியா ஒப்படைத்துள்ளார். இதையடுத்து 534 தொகுதிகளிலும் யார், யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று சில மாதங்களுக்கு முன்பே ராகுல் ஒரு பட்டியல் தயாரித்தார்.

ராம்தேவ் மீது 81 வழக்குகள்: உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை

Posted: 20 Nov 2013 09:28 PM PST

பிரபல யோகா குரு ராம்தேவ் உத்தரகாண்ட் மாநிலத்தில் பதஞ்சலி யோகா பீடம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த பீடம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இது பற்றி விசாரணை நடத்த உத்தரகாண்ட் அரசு உத்தர விட்டது. விசாரணையில் பதஞ்சலி யோகா பீடம் வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வரி ஏய்ப்புக்காக 52 வழக்குகள்

சபரிமலையில் குவியும் பக்தர்கள் வசதிக்காக கூடுதல் மருத்துவ வசதி

Posted: 20 Nov 2013 09:13 PM PST

சபரிமலையில் மண்டல பூஜை நடந்து வருகிறது. நடை திறந்ததே முதலே சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகளவில் காணப்படுகிறது. நேற்று முன்தினம் சபரிமலையில் பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று மழை இல்லை. காலநிலையும்

சோலார் பேனல் மோசடி: கைதான சரிதா நாயருடன் மத்திய, மாநில மந்திரிகள் தொடர்பு - அச்சுதானந்தன் குற்றச்சாட்டு

Posted: 20 Nov 2013 08:52 PM PST

கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பலரிடமும் கோடிக்கணக்கில் பணமோசடி செய்ததாக தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன், அவரது 2–வது மனைவி சரிதா நாயர், டி.வி. நடிகை ஷாலுமேனன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முதல்–மந்திரி உம்மன்சாண்டிக்கும் தொடர்பு இருப்பதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கூறியதை தொடர்ந்து போலீசார்

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றதற்கு எதிராக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

Posted: 20 Nov 2013 08:13 PM PST

இலங்கையில் நடந்த இறுதி போரில் ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர், அங்கு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்றும், அதனால் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு தமிழ் அமைப்புகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தின. ஆனால் இந்திய அரசு சார்பில் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு

பெங்களூர்: ஏ.டி.எம். மையத்தில் வெட்டி சாய்க்கப்பட்ட வங்கி பெண் அதிகாரி உடலின் வலது பாகம் செயல் இழந்தது

Posted: 20 Nov 2013 08:04 PM PST

பெங்களூர் ஜே.சி. ரோடு எல்.ஐ.சி. கட்டிடத்தில் இயங்கி வரும் ஏ.டி.எம். மையத்தில் நேற்று முன்தினம் காலை பணம் எடுக்க சென்ற வங்கி பெண் அதிகாரி ஜோதி உதய் (வயது 37) என்பவரை மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வெட்டி சாய்த்து விட்டு, அவர் வைத்திருந்த பணப்பை, செல்போனை எடுத்துக்கொண்டு சென்று விட்டார். ஏ.டி.எம். கண்காணிப்பு கேமராவில் பதிவான பதைபதைப்பான இந்த காட்சிகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கொடூர தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ஜோதி உதய், கெங்கேரியில் உள்ள

சம்பல் சரணாலயத்திற்கு இடம் பெயரும் பறவைகளின் எண்ணிக்கை குறைகின்றது

Posted: 20 Nov 2013 07:38 PM PST

குளிர்காலம் தொடங்கியதை முன்னிட்டு கான்பூரில் உள்ள சம்பல் வனவிலங்குகள் சரணாலயத்திற்கு வருகை தரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவை சைபீரியாவிலிருந்து இமயமலை வரையிலான பல இடங்களிலிருந்தும் வருவதாக எடவா மாவட்ட வன அலுவலர் மாணிக் சந்திரயாதவ் குறிப்பிட்டார். தேசிய சம்பல் சரணாலயம், அதனை அடுத்துள்ள ஈர நிலப்பகுதிகள் மற்றும் தொடர்ந்துள்ள நீர்ப்பரப்புகள் போன்றவை இடம் பெயரும் இந்தப் பறவைகளைக் கவருவதாகவும் அவர் கூறினார். அக்டோபர் மாதத்

மத அடிப்படையில் ஓட்டு வேட்டை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு

Posted: 20 Nov 2013 07:24 PM PST

டெல்லி சட்டசபை தேர்தலில், சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடுகிறது. அதையொட்டி, அக்கட்சி வெளியிட்ட துண்டு பிரசுரத்தில், தங்களுக்கு முஸ்லிம்கள் ஓட்டு போடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து, முன்னாள் முதல்-மந்திரி மதன்லால் குரானாவின் மகன் ஹரிஷ், தேர்தல் கமிஷனில்

கதிர்வீச்சு பற்றி 24 மணி நேரத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்: அணு மின்நிலையங்களுக்கு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

Posted: 20 Nov 2013 07:12 PM PST

அணுக்கதிர் வீச்சு நேரிட்டால் அதுகுறித்து 24 மணி நேரத்தில் தகவல் தெரிவிக்குமாறு அணுமின் நிலையங்களுக்கு ஒழுங்குமுறை ஆணையம் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் அணுமின் நிலையங்களில் சர்வதேச தரத்துக்கு ஏற்ப உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாட்டில் உள்ள அணுமின்நிலையங்களுக்கு அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் (ஏஇஆர்பி) நேற்று திடீரென ஒரு உத்தரவு

காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்: தேர்தல் கமிஷனிடம் பா.ஜனதா புகார்

Posted: 20 Nov 2013 07:08 PM PST

தேர்தல் நடத்தை விதிமுறைகளை ராகுல் காந்தி தொடர்ந்து மீறி வருவதால் காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் பா.ஜனதா புகார் கூறியுள்ளது. பா.ஜனதா துணைத்தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி தலைமையிலான குழுவினர் நேற்று தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- சத்தீஷ்காரில் கடந்த 16-ந்தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மாநில பா.ஜனதா அரசை 'திருடர்கள் மற்றும்

டிசம்பர் 19-ந்தேதி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்

Posted: 20 Nov 2013 02:48 PM PST

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுத் துறை வங்கி ஊழியர்கள், டிசம்பர் 19-ந்தேதி அன்று நாடு தழுவிய வேலை நிறுத்த எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற வங்கி ஊழியர்கள் சங்க சம்மேளன கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, வங்கி ஊழியர்களின்

பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகள் பூஜ்ஜியமாகிப் போகும்: மாநில கட்சிகளே நாட்டை ஆளும் - மம்தா பானர்ஜி

Posted: 20 Nov 2013 01:25 PM PST

ஒன்றுபட்ட ஆந்திரா கோரிக்கையை பலப்படுத்தும் முயற்சியாக நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று கொல்கத்தா நகருக்கு வந்த அவர் மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை

அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல்வாதி என்று நான் சொன்னதே கிடையாது: அன்னா ஹசாரே

Posted: 20 Nov 2013 12:46 PM PST

ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற தனது தலைமையிலான போராட்டத்துக்காக வசூலித்த பணத்தை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனதாக்கிக்கொண்டார் என்று அன்னா ஹசாரே பேசியதாக ஊடகங்களில்

மோடியை கொல்ல வலை விரித்து காத்திருக்கும் 'நிழல் உலக தாதா' தாவூத் இப்ராகிம்

Posted: 20 Nov 2013 12:26 PM PST

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த மாதம் அவர் பேசிய பொதுக் கூட்டத்தில் இந்திய முஜாகிதீன் தீவிரவாதிகள்

பெண்ணை உளவு பார்த்த விவகாரம்: மத்திய அரசு தகவல் சேகரிக்கிறது - உள்துறை மந்திரி பேட்டி

Posted: 20 Nov 2013 12:17 PM PST

குஜராத் மாநிலத்தில் வசித்து வரும் ஒரு பெண்ணை உளவு பார்க்குமாறு குஜராத் போலீசாருக்கு நரேந்திரமோடிக்கு நெருக்கமான பா.ஜனதா பிரமுகர் அமித்ஷா உத்தரவிட்டதாக ஓர் இணையதளம் பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது

வி.கே.சிங் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதையடுத்து கோர்ட் அவமதிப்பு வழக்கு முடிவுக்கு வந்தது

Posted: 20 Nov 2013 11:33 AM PST

முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் தனது வயது சர்ச்சை பற்றிய வழக்கின் தீர்ப்பை விமர்சித்ததற்காக, அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. ராணுவ தளபதியாக இருந்தபோது, வி.கே.சிங்குக்கும், மத்திய அரசுக்கும் இடையே வி.கே.சிங் வயது தொடர்பாக பிரச்சினை எழுந்தது. வி.கே.சிங், 1950-ம் ஆண்டு பிறந்தவர் என்று கணக்கிட்டு, அவர் கடந்த ஆண்டு ஓய்வு பெற வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால், தான்

சின்னத்தையும் பெயரையும் பல முறை மாற்றிய காங்கிரசின் எண்ணம் மட்டும் மாறவே இல்லை: மோடி

Posted: 20 Nov 2013 10:25 AM PST

மத்திய பிரதேச மாநில தேர்தல் பிரசாரத்திற்காக ஜபல்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™