Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இந்திய விமானத்தின் கழிவறையில் தங்க கட்டிகள் மீட்பு

Posted: 20 Nov 2013 10:44 PM PST

கொல்கத்தா விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு விமானத்தில், நேற்று துப்புரவு பணியாளர்கள் துப்புரவு செய்துகொண்டிருந்தனர். அப்போது, கழிவறையில் 2 பைகள் கிடந்தன. அவற்றில் 24 தங்க கட்டிகள் இருந்தன. அவை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. தலா ஒரு கிலோ எடை கொண்ட இந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.7 கோடி இருக்கும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு யாரும் உரிமை கோரவில்லை. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த சரக்கு விமானம், பாட்னாவிற்கு சென்று வந்தபிறகு […]

பேஸ்புக் மூலம் சிறுமியைக் கொன்ற சிறுவன்

Posted: 20 Nov 2013 10:23 PM PST

பேஸ்புக்கில் 16 வயது சிறுவன் ஒருவன் தொடர்ந்து அனுப்பிய ஆபாச பதிவுகளால் மனமுடைந்த 14 வயது மும்பை சிறுமி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மும்பையின் காந்திவ்லி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் பேஸ்புக் இணையதள பக்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தொடர்ந்து ஆபாச செய்திகளை பதிவு செய்து வந்துள்ளான். இதனால் மனவேதனை அடைந்த அச்சிறுமி இது […]

மீனவர் ஊடுருவல் விவகாரத்தை இந்தியாவுடன் பேசித் தீர்க்க வேண்டும்

Posted: 20 Nov 2013 10:14 PM PST

இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பது தொடர்பான பிரச்சினைக்கு, இலங்கையும் இந்தியாவும் இருபக்கத்துக்கும் திருப்தியான முறையில் தீர்வுகாண்பதை தாம் ஊக்குவிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.தவறான மீன்பிடி முறைகள் பற்றி இலங்கையை எச்சரித்த ஐரோப்பிய ஒன்றியம் சட்டத்தை மீறி இந்தியா மீன்பிடித்தல் பற்றி மௌனம் காப்பது ஏன் என பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.இதுபற்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்ஸ்தானிகர் டேவிட் டேலியிடம் கேட்டபோது இந்த பிரச்சினை இருதரப்பு பிரச்சினையாக இருப்பதால் அந்த […]

அடுத்த ஜெனிவா மாநாடு பயங்கரமானதாக இருக்கும்!

Posted: 20 Nov 2013 10:02 PM PST

வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழு மாநாடு இலங்கையை சர்வதேச விசாரணையென்ற தூக்குமேடையில் நிறுத்தும் மாநாடாகவே அமையப் போகினறது. எனவே டேவிட் கமரூனின் கருத்துக்களை குறைத்து மதிப்பிடலாகாது என கலாநிதி தயான் ஜயதிலக எச்சரித்துள்ளார். இது தொடர்பாக கலாநிதி தயான் ஜயதிலக மேலும் தெரிவித்திருப்பதாவது, பிரிட்டிஷ் பிரதமர் கமரூனின் அச்சுறுத்தலை நாம் குறைத்து மதிப்பிடவோ அல்லது அதனை கணக்கிலெடுக்காது இருக்கவோ கூடாது. அவரது கருத்தில் நவநீதம்பிள்ளையை இணைத்துக் கொண்டு இலங்கைக்கு எதிரான […]

பிரித்தானியா மேற்கொண்ட போர்க்குற்றங்கள் பற்றி இலங்கை வெளிக்கொண்டு வரும்: – மிரட்டுகிறது இலங்கை

Posted: 20 Nov 2013 09:56 PM PST

இலங்கையில் நடைபெற்ற மாநாட்டுக்கு பிரித்தானிய பிரதமர் வந்திருந்த பொழுது நாட்டு சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிக்கவில்லை எனவும், நாம் வழங்கிய மரியாதை அணிவகுப்பையும் அவர் ஏற்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளது இலங்கை அரசு. அத்துடன் தமது நாட்டில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து பிரித்தானிய பிரதமர் பேச முடியாது என தெரிவித்துள்ளதோடு, பிரித்தானியா மேற்கொண்ட போர்க்குற்றங்கள் பற்றி இலங்கை வெளிக்கொண்டு வரும் எனவும் இலங்கை பிரித்தானியாவுக்கு எச்சரிக்கும் தெனியில் அறிக்கை விடுத்துள்ளது. இதற்கு பிரித்தானியாவின் பதில் அதிகாரபூர்வமாக இதுவரை வெளியாகவில்லை என்பது […]

பாப்பரசரை சந்தித்தார் கோட்டாபய ராஜபக்ஷ! – இலங்கை வருமாறு அழைப்பு.

Posted: 20 Nov 2013 09:54 PM PST

பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் எதிர்வரும் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்று ரோமிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் நாவலகே பேர்னாட் குரே தெரிவித்துள்ளார். பாப்பரசரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் புஷ்பா ராஜபக்ஷ ஆகிய இருவரும் நேற்று வத்திக்கான் சென்றிருந்தனர். அவர்கள் நேற்று பாப்பரசரைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதுடன் கொழும்பு வருமாறு அழைப்பு விடுத்ததாக பேர்னாட் குரே மேலும் தெரிவித்தார்.

எல்லாத் தரப்பு நியாயங்களையும் இலங்கை செவிமடுக்க வேண்டும்! – அலிஸ்டயர் பர்ட்.

Posted: 20 Nov 2013 09:52 PM PST

ஏனைய தரப்புக்களின் கருத்துக்களுக்கும் இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டுமென பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார். எல்லா விடயங்களுக்கு நியாயம் கற்பிப்பதனை தவிர்த்து பல்வேறு தரப்பினரதும் கருத்துக்களையும் அரசாங்கம் செவிமடுக்க வேண்டும்.பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பிரித்தானிய பிரதமர் பங்கேற்றமை மிகவும் கடினமானது என்ற போதிலும் அது சரியான தீர்மானமே. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டியது அவசியமானது. பல்வேறு தரப்பினரின் அறிவுறுத்தல்களையும் இலங்கை அரசாங்கம் கேட்டு நடக்க வேண்டும். வெறுமனே […]

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழர்கள் தொடர்பில் கமரூனுக்கு “ஞானம்” பிறந்துள்ளமை வரவேற்கத்தக்கது : – விக்கிரமபாகு

Posted: 20 Nov 2013 09:43 PM PST

யுத்தத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது அதனை தடுத்து நிறுத்தாது இலங்கை அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்க ஊக்குவித்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனுக்கு இன்று திடீரென தமிழர்கள் தொடர்பில் “ஞானம்” பிறந்துள்ளமை வரவேற்கத்தக்கது என நவசமசமாஜக்கட்சியின் தலைவரும் தெஹிவளை கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். மனித உரிமைகள் தொடர்பான கண்காட்சியை நாமே நடத்தினோம். எனவே இதற்காக ஐ.தே.கட்சியின் பிரமுகர்கள் சில பொதுபலசேனாவிடம் மன்னிப்பு கேட்டதென்பது அவர்களது சொந்த விருப்பமாகும். நாம் ஒருபோதும் […]

வரவு – செலவுத் திட்டம் இன்று சமர்பிப்பு

Posted: 20 Nov 2013 09:17 PM PST

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2014 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்சவினால் பாராளுமன்றத்தில் இன்று (21) வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி தனது தலைமையிலான அரசாங்கத்தின் எட்டாவது வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை இன்று பிற்பகல் 1:04 க்கு சமர்ப்பித்து உரையாற்றுவார். 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் செலவினங்களுக்கு 154,252 கோடி 25 இலட்சத்து 18 ஆயிரம் ரூபா ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் புதிய வரிகளும் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக நம்பத்தகுந்த […]

என்னப்பா பொண்ணு இந்த ஓட்டம் ஓடுது? ஏனெண்ணு கொஞ்சம் பாருங்க…

Posted: 20 Nov 2013 07:53 AM PST

news_21069

news_21069ஜப்பானிய பெண் ஒருவர் ராட்சத பல்லியுடன் சவால் விடும் காட்சி ஒன்று தற்போது இணையத்தில் பரபரப்பாகி வருகின்றது. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக படம் பிடிக்கப்பட்ட இக்காட்சியில் சிறு இரையுடன் குறித்த பெண் காத்து இருப்பது போன்றும் இரையை உணவாக்க ராட்சத பல்லி மிக வேகமாக ஓடிவருவது போன்றும் காணப்படுகின்றது. இறுதியில் அங்கிருந்த ஏனைய நபர்களால் பல்லியின் தாக்குதலிலிருந்த குறித்த பெண் காப்பாற்றப்படுகின்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™