மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பெங்களூர் குண்டு வெடிப்பில் தவறாக கைது செய்யப்பட்ட 3 தமிழர்களுக்கு ரூ.2 லட்சம் நஷ்டஈடு
- மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- ரசீது கொடுக்காமல் நிதி பெற்றதாக புகார்: போட்டியில் இருந்து விலக ஆம் ஆத்மி வேட்பாளர் விருப்பம்
- 5 ஆண்டு சிறை தண்டனை பெற்றால் தேர்தலில் போட்டியிட குற்றவாளிகளுக்கு தடை: தேர்தல் கமிஷன் பரிந்துரை
- அரபு நாட்டில் இருந்து செல்போன் கவரில் மறைத்து தங்கம் கடத்திய வாலிபர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது
- ஆந்திராவில் 4 மாவட்டத்துக்கு எச்சரிக்கை: ஹெலன் புயல் இன்று தாக்கும்
- ரத்தக்கறை படிந்த கை பேச்சால் சர்ச்சை: நரேந்திர மோடிக்கு தேர்தல் கமிஷன் கண்டனம்
- வயதானவர்களுக்கான ஓய்வூதியம் 10 மடங்கு உயர்த்தப்படுகிறது: மத்திய அரசு முடிவு
- சோலார் பேனல் மோசடி: சரிதாவுடன் உல்லாசமாக இருந்த காங். மந்திரிகள், போலீஸ் அதிகாரி - பிஜு ராதாகிருஷ்ணன் வக்கீல் பேட்டி
- சபரிமலைக்கு வரும் பக்தர்கள் தங்கும் அறை கட்டணம் 5 மடங்காக உயர்வு
- ஆந்திர மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெகன்மோகன் ரெட்டி 28–ந்தேதி முதல் யாத்திரை
- ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் குறைந்த மெஜாரிட்டியுடன் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும்: கருத்து கணிப்பில் தகவல்
- திருப்பதி கோவிலில் தரிசனத்துக்கு 18 மணி நேரம் ஆகிறது: 60 ஆயிரம் பக்தர்கள் காத்திருப்பு
- பிரதமர் பதவிக்கு போட்டியிடுவேன்: முலாயம்சிங் யாதவ் அறிவிப்பு
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அப்துல்கலாம் குணம் அடைந்து வீடு திரும்பினார்
- சர்க்கரை இறக்குமதிக்கு தடை விதிக்கக்கோரி டெல்லியில் டிசம்பர் 12-ந்தேதி கரும்பு விவசாயிகள் பேரணி-ஆர்ப்பாட்டம்
- காங்கிரஸ் கட்சி நாட்டை சாப்பிடும் கரையான்: நரேந்திர மோடி கடும் தாக்கு
- மராட்டியத்தில் இலவச மருத்துவ திட்டம்: சோனியாகாந்தி தொடங்கி வைத்தார்
- 2ஜி ஸ்பெக்ட்ரம்: பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையை திருப்பி அனுப்ப வேண்டும் - சபாநாயகருக்கு டி.ஆர்.பாலு கடிதம்
- தென் மாநிலங்களில் தீவிரவாதிகள் ஊடுருவும் அபாயம்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை
| பெங்களூர் குண்டு வெடிப்பில் தவறாக கைது செய்யப்பட்ட 3 தமிழர்களுக்கு ரூ.2 லட்சம் நஷ்டஈடு Posted: 21 Nov 2013 11:26 PM PST பெங்களூர் குண்டுவெடிப்பில் தவறாக கைதான 3 தமிழர்களுக்கு ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. பெங்களூர் மல்லேசுவரத்தில் பாரதீய ஜனதா அலுவலகம் அருகே கடந்த ஏப்ரல் மாதம் 17–ந்தேதி குண்டு வெடித்தது. குண்டு வெடித்த இடத்தில் தமிழ்நாடு பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிள் கிடந்தது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய கர்நாடக போலீசார் தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பாவிகளான பீர்முகைதீன், சதாம்உசேன், தென்காசி ஹனீபா ஆகியோரை பிடித்துக் சென்றனர். |
| மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 21 Nov 2013 11:26 PM PST குஜராத்தில் 2012–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட நரேந்திரமோடி முழுமையான வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. மோடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அந்த மனுவை |
| ரசீது கொடுக்காமல் நிதி பெற்றதாக புகார்: போட்டியில் இருந்து விலக ஆம் ஆத்மி வேட்பாளர் விருப்பம் Posted: 21 Nov 2013 10:25 PM PST டெல்லி மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 4–ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 810 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் 17 பேரே பெண் வேட்பாளர்கள் ஆவார்கள். டெல்லி தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி அடுத்தடுத்து சோதனைகளை சந்தித்து வருகிறது. |
| 5 ஆண்டு சிறை தண்டனை பெற்றால் தேர்தலில் போட்டியிட குற்றவாளிகளுக்கு தடை: தேர்தல் கமிஷன் பரிந்துரை Posted: 21 Nov 2013 10:13 PM PST கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை தேர்தலில் போட்டியிட தடை விதித்து உத்தரவிட கோரி பொதுநல அமைப்பு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதற்கு பதில் அளிக்கும் படி தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்பி இருந்தது. அதை ஏற்று தேர்தல் கமிஷன் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறி இருப்பதாவது:– |
| Posted: 21 Nov 2013 10:01 PM PST அரபு நாட்டில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக தங்கக் கட்டிகளை ஒருவர் கடத்தி வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சுங்க அதிகாரிகள் விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துபாயில் இருந்து திருவனந்தபுரம் |
| ஆந்திராவில் 4 மாவட்டத்துக்கு எச்சரிக்கை: ஹெலன் புயல் இன்று தாக்கும் Posted: 21 Nov 2013 09:56 PM PST மத்திய வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. அதற்கு 'ஹெலன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆந்திராவை நோக்கி நகர்ந்து வரும் 'ஹெலன்' புயல் நேற்று மாலை மசூலி பட்டினத்தில் இருந்து கிழக்கு தென்கிழக்கில் 240 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது. இன்று அது மேலும் நெருங்கி உள்ளது. இன்று காலை நிலவரப்படி ஆந்திரா மாநிலம் மசூலிபட்டினத்தில் இருந்து 160 கிலோ மீட்டர் கிழக்கில் 'ஹெலன்' புயல் உள்ளது. |
| ரத்தக்கறை படிந்த கை பேச்சால் சர்ச்சை: நரேந்திர மோடிக்கு தேர்தல் கமிஷன் கண்டனம் Posted: 21 Nov 2013 09:24 PM PST பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்– மந்திரியுமான நரேந்திர மோடி சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ''காங்கிரஸ் கட்சியின் சின்னம் ரத்தக்கறை படிந்த கை ஆக உள்ளது'' என்று விமர்சனம் செய்து பேசினார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தேர்தல் கமிஷனிலும் மோடியின் பேச்சு பற்றி காங்கிரஸ் சார்பில் புகார் |
| வயதானவர்களுக்கான ஓய்வூதியம் 10 மடங்கு உயர்த்தப்படுகிறது: மத்திய அரசு முடிவு Posted: 21 Nov 2013 09:12 PM PST வயதானவர்களுக்கு மத்திய அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 80 வயது வரை உள்ளவர்களுக்கு மாதந்தோறும் ரூ.200 ஓய்வூதியம் கொடுக்கப்படுகிறது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தலா ரூ.500 மாத ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. சமீப காலமாக இந்தியாவில் வயதானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து விட்டது. மேலும் அவர்கள் வாழ்க்கையை கடும் சவால்களுக்கிடையே நகர்த்த வேண்டியதுள்ளது. |
| Posted: 21 Nov 2013 09:02 PM PST கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடி வழக்கில் தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன், அவரது 2–வது மனைவி சரிதா நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடியில் கேரள ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசின் மந்திரிகள் சிலருக்கும், மத்திய மந்திரி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த |
| சபரிமலைக்கு வரும் பக்தர்கள் தங்கும் அறை கட்டணம் 5 மடங்காக உயர்வு Posted: 21 Nov 2013 08:58 PM PST கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை விழா தொடங்கி நடந்து வருகிறது. அய்யப்பனை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். பெரும்பாலும் மாலை |
| ஆந்திர மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெகன்மோகன் ரெட்டி 28–ந்தேதி முதல் யாத்திரை Posted: 21 Nov 2013 08:58 PM PST ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவரது கட்சி ஆந்திராவில் போராட்டங்கள் நடத்தியது. அதோடு ஜெகன்மோகன் ரெட்டி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு மாநில முதல்– மந்திரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யும் போது அதற்கு எதிராக வாக்களிக்கும் படி அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு |
| Posted: 21 Nov 2013 08:49 PM PST ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா குறைந்த மெஜாரிட்டியில் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்–மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதற்கு முன் அங்கு விஜயராஜே சிந்தியா தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்தது. கடந்த தேர்தலில் பாரதீய ஜனதா தோற்றதால் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. |
| திருப்பதி கோவிலில் தரிசனத்துக்கு 18 மணி நேரம் ஆகிறது: 60 ஆயிரம் பக்தர்கள் காத்திருப்பு Posted: 21 Nov 2013 08:11 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 48 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அதன் பிறகும் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு காத்து இருக்கிறார்கள். வைகுண்டம் 2–வது கியூ காம்ளக்சில் 16 கம்பார்ட்மெண்டுகள் நிரம்பி வழிந்தது. தர்மதரிசனத்துக்கு 18 மணி நேரம் ஆகிறது. பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் 7 காம்பார்ட்மெண்டில் காத்து இருந்தனர். இவர்களுக்கு |
| பிரதமர் பதவிக்கு போட்டியிடுவேன்: முலாயம்சிங் யாதவ் அறிவிப்பு Posted: 21 Nov 2013 07:56 PM PST சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் நேற்று பரேலி நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:– பா.ஜ.க. சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நரேந்திர மோடி, காங்கிரஸ் சார்பில் முன்னிலைப்படுத்தப்படும் ராகுல் இருவருமே பிரிவினை சக்திகளாகத்தான் உள்ளனர். அவர்களுக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு நிச்சமயாக தனிப்பெரும் பான்மை கிடைக்காது. இதனால் 3–வது அணியே |
| மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அப்துல்கலாம் குணம் அடைந்து வீடு திரும்பினார் Posted: 21 Nov 2013 07:50 PM PST முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சமீபத்தில் வீட்டில் தவறி விழுந்தார். இதில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் புதுடெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு சில தினங்களாக கடுமையான காய்ச்சலும் இருந்தது. டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். அதை தொடர்ந்து அப்துல்கலாம் பூரணமாக குணம் அடைந்தார். இதையடுத்து நேற்று இரவு ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்ஜார்ஜ்' செய்யப்பட்டார். |
| Posted: 21 Nov 2013 07:40 PM PST அகில இந்திய கரும்பு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ஏ.கணேசமூர்த்தி எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. மு.அப்பாவு, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் பொன்னையன், கிரி, அஜீதன் மற்றும் அஜய் சிங் தியாகி, டெல்லி மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்து கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். |
| காங்கிரஸ் கட்சி நாட்டை சாப்பிடும் கரையான்: நரேந்திர மோடி கடும் தாக்கு Posted: 21 Nov 2013 04:37 PM PST உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளரும், குஜராத் மாநில முதல்-மந்திரியுமான நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது |
| மராட்டியத்தில் இலவச மருத்துவ திட்டம்: சோனியாகாந்தி தொடங்கி வைத்தார் Posted: 21 Nov 2013 04:23 PM PST "ராஜீவ் காந்தி ஜீவந்தயே ஆரோக்கிய யோஜனா" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 2 கோடியே 11 லட்சம் ஏழைகள் பயன்பெறுவார்கள். இந்த திட்ட தொடக்க விழா நாக்பூரில் நேற்று மாலை நடைபெற்றது. முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் |
| Posted: 21 Nov 2013 02:00 PM PST 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தி கடந்த ஏப்ரல் மாதம் வரைவு அறிக்கையை வெளியிட்டது. அதில் பிரதமர் மற்றும் அப்போதைய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஆகியோருக்கு இதில் தொடர்பில்லை, ஆ.ராசா தான் முழு காரணம் என்று கூறப்பட்டிருந்தது |
| தென் மாநிலங்களில் தீவிரவாதிகள் ஊடுருவும் அபாயம்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை Posted: 21 Nov 2013 12:22 PM PST டெல்லியில், அனைத்து மாநில போலீஸ் உயர் அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. மூடிய அறைக்குள் நடைபெற்ற அக்கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, மும்பை தாக்குதலின்போது தீவிரவாதிகள் அரபிக்கடல் வழியாக மும்பையில் ஊடுருவியது |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |