மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஆசிரியர் தேஜ்பால் மீது பாலியல் புகார்: தெகல்கா பெண் நிர்வாகியிடம் கோவா போலீஸ் விசாரணை
- மணிப்பூரில் குண்டு வெடித்தது
- திருப்பதி கோவிலில் இன்று வன போஜன உற்சவம்: 5 ஆயிரம் பக்தர்களுக்கு விருந்து
- ஹெலன் புயல் தாக்குதல்: ஆந்திராவில் 15 லட்சம் ஏக்கர் நெற்பயிர் வெள்ளத்தில் மூழ்கியது
- மாணவி கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்டதை மறக்காதீர்கள்: டெல்லியில் நரேந்திரமோடி பிரசாரம்
- சட்டசபை தேர்தல்: மத்தியபிரதேசம், மிசோரமில் நாளை ஓட்டுப்பதிவு
- டெல்லி சட்டசபை தேர்தல்: விஜயகாந்த்–பிரேமலதா 27–ந்தேதி பிரசாரம்
- டீசல் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை: மத்திய மந்திரி வீரப்ப மொய்லி தகவல்
- வீராஜ்பேட்டையில் வாடகை கட்டிடத்தில் தாலுகா அலுவலகம்: பொதுமக்கள் அவதி
- சீட்டு கம்பெனி மோசடியில் உடந்தை: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கைது
- விஷத்தன்மை கொண்டவர்களின் கட்சி பாரதிய ஜனதா: ராஜஸ்தான் கூட்டத்தில் சோனியா தாக்கு
- ஜனாதிபதியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு: ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு ஆதரவு கேட்டார்
- யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி பல்கலை. விடுதியில் தங்கியிருந்த மாணவி மாயம்
- மகாராஷ்டிராவில் குன்பி சேனா கட்சி காங்கிரசில் இணைந்தது
- 1000 கிலோ அணுஆயுதங்களை சுமந்துசெல்லும் தனுஷ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை
- மக்களவை-சட்டமன்ற தேர்தல்களில் தீவிரவாதிகளால் இடையூறு ஏற்படலாம்: பிரதமர் எச்சரிக்கை
- பெண்கள் பாதுகாப்பிற்கு அமைப்புசார் வழிமுறைகளை காணவேண்டும்: பிரதமர்
- பாலியல் பலாத்கார வழக்கு: தெகல்கா ஆசிரியர் தேஜ்பாலிடம் கோவா போலீசார் விசாரணை
- நரேந்திர மோடி மீது தேர்தல் வழக்கு தொடர சுப்ரீம் கோர்ட் அனுமதி
| ஆசிரியர் தேஜ்பால் மீது பாலியல் புகார்: தெகல்கா பெண் நிர்வாகியிடம் கோவா போலீஸ் விசாரணை Posted: 23 Nov 2013 11:07 PM PST தெகல்கா பெண் நிர்வாகியிடம் கோவா போலீசார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். டெல்லியைச் சேர்ந்த தெகல்கா நிறுவனம் டாட்காம் மற்றும் வார இதழ்களை நடத்தி வருகிறது. இதன் நிறுவனர் மற்றும் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது அங்கு பணியாற்றும் பெண் நிருபர் பாலியல் புகார் செய்தார். கோவாவில் தெகல்கா நடத்திய நிகழ்ச்சி அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் கலந்து கொள்ள லிப்டில் சென்றபோது தருண் தேஜ்பால் பெண் நிருபரை 2 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டது. இதையடுத்து தருண் தேஜ்பால் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகினார். |
| Posted: 23 Nov 2013 10:57 PM PST மணிப்பூரில் மியான்மர் எல்லை அருகே உக்ருல் மாவட்டம் உள்ளது. இங்குள்ள புங்கிரிடாஸ் பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. அதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த குண்டு வெடிப்பை தீவிரவாதிகள் நிகழ்த்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் இதற்கு எந்த தீவிரவாத |
| திருப்பதி கோவிலில் இன்று வன போஜன உற்சவம்: 5 ஆயிரம் பக்தர்களுக்கு விருந்து Posted: 23 Nov 2013 10:54 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார விடுமுறையான நேற்றும், இன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. நேற்று தர்ம தரிசனத்துக்கு 14 மணி நேரம் ஆனது. இன்று ஏழுமலையான் கோவில் வனபோஜன உற்சவம் நடந்தது. காலை மலையப்பசாமி |
| ஹெலன் புயல் தாக்குதல்: ஆந்திராவில் 15 லட்சம் ஏக்கர் நெற்பயிர் வெள்ளத்தில் மூழ்கியது Posted: 23 Nov 2013 10:38 PM PST வங்க கடலில் உருவான ஹெலன் புயல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே நேற்று முன்தினம் கரையை நடந்தது. இதையொட்டி ஆந்திராவில் 9 மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. புயல் கரையை கடக்கும் போது ஏராளமான மின் கம்பங்ங்கள் |
| மாணவி கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்டதை மறக்காதீர்கள்: டெல்லியில் நரேந்திரமோடி பிரசாரம் Posted: 23 Nov 2013 10:32 PM PST பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி 5 மாநில சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதாவை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் டெல்லி சட்டசபை தேர்தலில் பிரசாரம் மேற் கொண்டார். மேற்கு டெல்லியில் துவாரகா பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பாரதீய ஜனதாவின் 10 வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். கூட்டத்தில் பாரதீய ஜனதா தொண்டர்கள் தவிர அந்த பகுதியில் வசிக்கும் மக்களும் திரளாக கலந்து கொண்டனர். |
| சட்டசபை தேர்தல்: மத்தியபிரதேசம், மிசோரமில் நாளை ஓட்டுப்பதிவு Posted: 23 Nov 2013 10:23 PM PST டெல்லி, ராஜஸ்தான், சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் சத்தீஷ்கர் மாநிலத்தில் கடந்த 11–ந்தேதியும், 19–ந்தேதியும் 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஷ்கர் மாநிலத்தில் முதல்–மந்திரி ராமன்சிங் தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி |
| டெல்லி சட்டசபை தேர்தல்: விஜயகாந்த்–பிரேமலதா 27–ந்தேதி பிரசாரம் Posted: 23 Nov 2013 08:25 PM PST டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் முதல் முதலாக தே.மு.தி.க. போட்டியிடுகிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் 11 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த தொகுதிகளில் தே.மு.தி.க.வுக்கு ஆதரவு திரட்ட இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் |
| டீசல் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை: மத்திய மந்திரி வீரப்ப மொய்லி தகவல் Posted: 23 Nov 2013 07:37 PM PST பெட்ரோலிய புவிஇயற்பியல் வல்லுனர் சமூகம் சார்பில் நடத்தப்படும் 10-வது பன்னாட்டு பைனியல் மாநாடு மற்றும் கண்காட்சி, கேரள மாநிலம் கொச்சியில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டீசல் விலை ஒவ்வொரு மாதமும் 45 பைசா முதல் 55 பைசா வரை உயர்த்தப்படும் என்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. அந்த திட்டம் தற்போது நடைமுறையிலும் உள்ளது. எனவே டீசல் விலையை மேலும் உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை" என்றார். |
| வீராஜ்பேட்டையில் வாடகை கட்டிடத்தில் தாலுகா அலுவலகம்: பொதுமக்கள் அவதி Posted: 23 Nov 2013 03:34 PM PST வீராஜ்பேட்டையில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் தாலுகா அலுவலகத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள மினி விதான சவுதா கட்டிடம், விரைந்து கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு |
| சீட்டு கம்பெனி மோசடியில் உடந்தை: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கைது Posted: 23 Nov 2013 01:13 PM PST கொல்கத்தாவில் சாரதா குழுமம் சீட்டு கம்பெனி நடத்தி பல கோடி மோசடியில் ஈடுபட்டது. இந்த நிலையில் கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட மறுநாளே திரிணாமுல் காங்கிரஸ் மேல்–சபை எம்.பி. குணால் கோஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். |
| விஷத்தன்மை கொண்டவர்களின் கட்சி பாரதிய ஜனதா: ராஜஸ்தான் கூட்டத்தில் சோனியா தாக்கு Posted: 23 Nov 2013 08:30 AM PST 5 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஆளும் கட்சியான காங்கிரசும், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அவர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தை கணைகளால் தாக்கி வருகின்றனர். |
| ஜனாதிபதியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு: ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு ஆதரவு கேட்டார் Posted: 23 Nov 2013 06:26 AM PST ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி போராட்டம் நடத்தி வருகிறார். அத்துடன் ஒன்றுபட்ட தெலுங்கானாவுக்காக அரசியல் கட்சிகளிடம் ஆதரவும் |
| யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி பல்கலை. விடுதியில் தங்கியிருந்த மாணவி மாயம் Posted: 23 Nov 2013 04:56 AM PST உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அருகே உள்ள பகத்ராபாத்தில் யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி பல்கலைக்கழகம் உள்ளது. டெல்லியைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் இந்த பல்கலைக் கழகத்தில் யோகா அறிவியல் பயின்று வருகிறார். பல்கலைக் கழக விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவியை வியாழக்கிழமை |
| மகாராஷ்டிராவில் குன்பி சேனா கட்சி காங்கிரசில் இணைந்தது Posted: 23 Nov 2013 04:45 AM PST மகாராஷ்டிராவில் குன்பி சமூகத்தினரின் கட்சியான குன்பி சேனா இன்று காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது. தானேயில் இன்று குன்பி சேனா கட்சியின் 13-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் முதல் அமைச்சர் பிருத்விராஜ் சவான், மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் |
| 1000 கிலோ அணுஆயுதங்களை சுமந்துசெல்லும் தனுஷ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை Posted: 23 Nov 2013 03:02 AM PST ஒடிசா மாநிலம் பலசூர் அருகேயுள்ள சண்டிபூர் கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பற்படை கப்பலிலிருந்து இன்று தனுஷ் ஏவுகணை வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த தனுஷ் ஏவுகணை, 500 கிலோ முதல் 1000 கிலோ வரை அணுஆயுதங்களை சுமந்து சென்று வெற்றி இலக்கை மிக துல்லியமாக தாக்கியது. |
| மக்களவை-சட்டமன்ற தேர்தல்களில் தீவிரவாதிகளால் இடையூறு ஏற்படலாம்: பிரதமர் எச்சரிக்கை Posted: 23 Nov 2013 03:00 AM PST மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல்களின்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று பிரதமர் மன்மோகன் சிங் இன்று எச்சரித்துள்ளார். டெல்லியில் காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் |
| பெண்கள் பாதுகாப்பிற்கு அமைப்புசார் வழிமுறைகளை காணவேண்டும்: பிரதமர் Posted: 23 Nov 2013 02:01 AM PST தெகல்கா நிறுவனர் தருண் தேஜ்பால் தனது பதிரிக்கை குழுவை சேர்ந்த ஓர் இளம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டார் என்றும் அவருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று தீவிரவாதம், மதவாதம், நகசலிஸம் உள்ளிட்ட |
| பாலியல் பலாத்கார வழக்கு: தெகல்கா ஆசிரியர் தேஜ்பாலிடம் கோவா போலீசார் விசாரணை Posted: 23 Nov 2013 12:00 AM PST தெகல்கா நிறுவனத்தின் விழா ஒன்று சமீபத்தில் கோவாவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. அப்போது தெகல்கா ஆசிரியர் தருன் தேஜ்பால் லிப்டில் வரும்போது தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் நிருபர் ஒருவர் புகார் கூறினார். தன் மீது குற்றச்சாட்டு கூறப்பட்ட தகவல் அறிந்ததும் தேஜ்பால், தெகல்கா |
| நரேந்திர மோடி மீது தேர்தல் வழக்கு தொடர சுப்ரீம் கோர்ட் அனுமதி Posted: 22 Nov 2013 11:57 PM PST நரேந்திரமோடி மனைவி இருப்பதை மறைத்தாரா என்பது பற்றி தேர்தல் வழக்கு தொடரலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்– மந்திரியுமான நரேந்திரமோடி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். அவர் குஜராத் சட்டசபை தேர்தலில் மணிநகர் தொகுதியில் போட்டியிட்ட போது வேட்பு மனுவில் உண்மைகளை மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கொல்கத்தாவைச் சேர்ந்த தொழில் அதிபர் சுனில் சரோகி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், நரேந்திரமோடி வேட்பு மனுவில் அவருக்கு மனைவி இருப்பதை மறைத்துவிட்டார். நரேந்திரமோடி |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |