Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கருக்கலைப்பிற்கு பின் ஏற்படும் மன அழுத்தத்தை கையாள சில டிப்ஸ்...

Posted: 03 Nov 2013 11:00 AM PST

கருக்கலைப்பு என்பது பரவலாக நடக்கும் ஒன்று தான். கருக்கலைப்பு நடப்பதற்கு பல காரணங்கள் உள்ளது. அது சட்ட விரோதமாகவும் நடைபெறுகிறது; தம்பதிகளின் சம்மதத்தோடும் நடைபெறுகிறது. கருக்கலைத்தல் காயத்தை ஏற்படுத்துமா? காயம் என்றால் அது உடல் ரீதியான காயம் என்றில்லை, அது மன ரீதியான காயமாக கூட இருக்கலாம். கருக்கலைத்தலைப் பற்றி பல வாக்குவாதங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. கருக்கலைப்பு செய்வதால் பெண்களுக்கு மன ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் ...

அர்த்த ராத்திரியில் கொளத்தூர் மணியைக் கைது செய்தது எதேச்சதிகார அடக்குமுறை- வைகோ

Posted: 03 Nov 2013 10:56 AM PST

சென்னை: அர்த்த ராத்திரியில் திராவிடர் விடுதலை இயக்கத்தின் தலைவர் கொளத்தூர் மணியைக் கைது செய்திருப்பது, அதிமுக அரசின் எதேச்சதிகார அடக்குமுறை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை... நவம்பர் 2 அதிகாலை 02.11.2013 அன்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்துர் மணி அவர்களை அவரது இல்லத்தில் காவல்துறையினர் கைது செய்து விடியற்காலை 4 மணிக்கெல்லாம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் உத்தரவைப் பெற்று பொழுது விடிவதற்குள்ளாகவே ...

தலைவரைக் கொன்ற அமெரிக்காவைப் பழிவாங்குவோம்: தாலிபன்கள்

Posted: 03 Nov 2013 10:51 AM PST

நியூயார்க்: ஆளில்லா விமானத் தாக்குதல் மூலம் தங்கள் தலைவரைக் கொன்ற அமெரிக்காவை பழி வாங்குவோம் என மிரட்டல் விடுத்துள்ளது பாகிஸ்தான் தாலிபன் இயக்கம். பாகிஸ்தானின் பழங்குடியின பகுதியான வடக்கு வசிரிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் தெஹ்ரிக்-இ-தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹக்கீமுல்லா மெஹ்சூத் கொல்லப்பட்டான். அவனுடன் அப்துல்லா, தாரிக் மெஹ்சூத் மற்றும் ஹக்கீமுல்லா மெஹ்சூத்தின் மெய்காப்பாளன் ஆகியோரும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலால் பாகிஸ்தான் தாலிபன்கள் கோபம் அடைந்துள்ளதாக ...

6 ஆண்டுகளில் மோசமான டெங்கு காய்ச்சல்

Posted: 03 Nov 2013 10:26 AM PST

புதுடில்லி : கடந்த ஆறு ஆண்டுகளில் டெங்கு மோசமான நோயாக இருக்கிறது.இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக உள்ளது.நாட்டில் அக்டோபர் 28 வரை 55,063 பேர் என பதிவாகியுள்ளது. சுகாதார அமச்சக புள்ளிவிபரப்படி,கடந்த ஆறு ஆண்டுகளில் மோசமான நோயாக டெங்கு இருந்தது டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை 2008 ல் இருந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.கடந்த 2008ல் டெங்கு காய்ச்சலால் 80 பேர் பலியானார்கள்.இது 6 ஆண்டுகளில் 138 ஆக அதிகரித்துள்ளது. அதிகரிப்புக்கு காரணம்: மழை , நகரங்களில் தீவிர செயல்பாடின்மை மற்றும் காரணங்களை ...

செவ்வாய்க்கு இந்தியா செயற்கைகோள் ; புயல் மூலம் அச்சுறுத்தும் வானிலை

Posted: 03 Nov 2013 10:24 AM PST

ஸ்ரீஹரிகோட்டா: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவையும் சேர்த்து பெருமிதப்பட வைக்கும் மங்கள்யான் செயற்கைகோள் வரும் 5ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி,எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளது. ஆனால், தற்போது நிலவும் வானிலை விஞ்ஞானிகளை பயமுறுத்தி வருகிறது. குமரி மாவட்டம் அருகே மையம் கொண்டுள்ள புயல் சற்று வலுவடையும் பட்சத்தில் இந்த விண்வெளி சோதனையை பாதிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ரூ. 450 கோடி செலவில் இந்தியா தனது சொந்த முயற்சியில் உருவாக்கியுள்ளது. மொத்தம் ...

பாண்டிய நாடு-சினிமா விமர்சனம்

Posted: 03 Nov 2013 10:19 AM PST

http://imageshack.us/a/img854/2012/5nfx.jpg (தீர்ப்பு-அடடடடா....என்று ஆச்சரியமூட்டுடும் எழுத்து-இயக்கம் சுசீந்தரனின்பாண்டிய நாடு..ஆகா..ஓகோ...என்று நடிப்பில்அடித்துநொறுக்கும்விஷாலின்பாண்டிய நாடு....) பொதுவாக பழிவாங்கும் கதையுள்ள படம் என்றாலே நம்பகத்தன்மை மறைந்திருக்கும் ஆனால் பாண்டிய நாடு யதார்த்தமான கதையுடன் நம்பகத்தன்மை காட்சிகளுடன் மதுரை கதைக் களத்திற்கே உரிய நிதர்சனத்துடன் விறுவிறுப்பாகவும் விவேகமாகவும் சொல்லப்பட்டுள்ளது எதிர்காலத்தை எண்ணி பயப்படும் சுபாவம் கொண்ட மொபைல் சர்விஸ் கடையில் ...

கிஃப்டுக்கு அடிமையாக்காதீர்கள் !

Posted: 03 Nov 2013 10:18 AM PST

இரண்டு குழந்தையாக இருந்தாலும் சரி, ஒரு குழந்தையாக இருந்தாலும் சரி அந்த வீட்டின் காலை பொழுது மிகவும் பரப்பரப்பாக இருக்கும். குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்புவதற்கு போதும், போதும் என்றாகிவிடும். காலையில் பல் துலக்குவது ஆரம்பித்து, இவினிங் ஹோம் வொர்க் செய்வது அத்தனைக்கும் தொல்லைப்படுத்திவிடுவார்கள். நான் பால் குடிக்க வேண்டும் என்றால் நீ என்னை கடைக்கு கூட்டிட்டு போகவேண்டும் என் நிபந்தனையுடன் தான் அவர்களின் அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்கிறார்கள். இப்படி குழந்தைகள் தங்கள் செய்யும் அத்தனை வேலைக்கும் ...

ஆல் இன் ஆல் அழகுராஜா – மொக்கையின் உச்சம்

Posted: 03 Nov 2013 09:45 AM PST

தீபாவளிப்படங்களில், அஜீத்தின் ஆரம்பத்துக்கு பெரும் சவாலைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா. இயக்குனர் ராஜேஷ் மேல வைச்சிருந்த நம்பிக்கை நமக்கு உச்சத்தில இருந்திச்சு. ஆனா, இந்த படத்தைப் பார்த்து முடிச்சதுக்கப்புறம் 'ஆரம்பம் பிய்ச்சுக்கிட்டு ஓடும்' என தைரியமாகச் சொல்லலாம். "யார் விமர்சனத்தையாவது வாசிச்சிட்டு இந்தப் படத்துக்கு வந்திருக்கக்கூடாதா சர்வேஸ்வரா!" என அழத்தான் முடிஞ்சுது. - நையாண்டி பார்த்த போது, இதைவிட மொக்கையா இனி தமிழ்ல ஏதாவது படம் வருமா? ...

அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்

Posted: 03 Nov 2013 09:45 AM PST

செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர். நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும். இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதிகேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது. ""படு...படுக்கணும்னா ...

அனைவருக்கும் வணக்கம் - கதிரவன்

Posted: 03 Nov 2013 09:44 AM PST

அனைவருக்கும் வணக்கம்.  என் பெயர் மா.கதிரவன். இந்த தளத்திற்கு புதியவன், எனினும் இத்தளத்தின் ரசிகனாக மாறிவிட்டேன்.   இத்தளத்தின் நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம்.   அன்புடன், - கதிரவன்.

குட்டு வெளிப்பட்டது!

Posted: 03 Nov 2013 09:37 AM PST

அரும்பூர் என்னும் கிராமத்தில் தங்கராசு என்ற விவசாயி, விவசாயம் செய்து வந்தார். அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போக, அவர் தன் பிள்ளைகளான ஜெகன், பாலன் இருவரையும் வயலுக்கு வேலை செய்ய அனுப்பினார். இயல்பிலேயே உழைப்பாளியான ஜெகன், வயலில் இறங்கிக் கடுமையாக உழைக்க, சோம்பேறியான அவன் தம்பி பாலன் மரத்தடியில் படுத்து, சுகமாய் தூங்கினான். மாலை மங்கியதும், இருவரும் வீடு திரும்பினர். பாலன் சாமர்த்தியமாக, சிறிது சேற்றை எடுத்து தன் கை, கால்கள், உடைகளில் அப்பிக் கொண்டு, அண்ணனுடன் வீடு திரும்பினான்.வீட்டுக்கு ...

நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் !

Posted: 03 Nov 2013 09:20 AM PST

விஜய வருடம் ஐப்பசி மாதம் முதல் நாளில் சூரியன் நீசமடைந்து துலா ராசிக்கு பிரவேசம். அன்று பவுர்ணமி திதியும், ரேவதி நட்சத்திரமும் கூடிய வெள்ளிக்கிழமை. மிகுந்த சுபிட்சம் காணும் மாதம் இது என்கிறது நாடி. அன்றைய கோள் நிலைகளை ஆராய்ந்திட, நவகிரகங்கள் பின்வரும் அளவில் பரவி ராசி சக்கரத்தில் நிற்பதைக் காணலாம். துலாஸ்தானம் அன்றைய அதிகாலைப்பொழுது காலை 5 மணிக்கு மேல் 5:30க்குள் குளிர்ந்த நீரில் நீராடி, தெய்வீக குறிகளாம் விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு, சிவ பூஜை செய்வதும், வைணவர்கள் திருசூர்ணம், திருமண் ...

மனதால்….

Posted: 03 Nov 2013 09:15 AM PST

- - அன்புத் தாயே! மரணத்தின் கதை கேளாய்… என் திரும(ர)ணக் கதை கேளாய்! வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, உதிரம் சிந்தி உழைத்த உழைப்பெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகி விட்டதம்மா! ஐந்து காசு பெறாதவனுடன் அட்சதை தூவி அனுப்பி வைத்தாய் என்னை அவன் ஆண்பிள்ளை என்றதனால்… அரை லட்சம் சம்பாதித்தும், அடிமை வாழ்வு வாழ்கிறேன் என்பதை நீ அறிவாயோ? மீண்டு வர வழியில்லை மீட்டெடுக்க யாருமில்லை மீளா உலகம் – நீ சென்றதனால்! உயிருள்ள சடலமா உலா வருகிறேன்… மனதால் மரித்து விட்டதனால்! - ———————————- - ...

நல்ல ஆன்ட்ராய்டு போன் வாங்க உதவி தேவை

Posted: 03 Nov 2013 08:20 AM PST

நண்பர்களே நல்ல ஆன்ட்ராய்டு போன் வாங்க விரும்புகிறேன்.
அதில் பிடிஎப், வேர்டு, ஈகரை தகவல்கள் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும்.
சாம்சங்,மைக்ரோமேக்ஸ், இன்டெக்ஸ் கம்பேனிகளில் எந்த மாடல் வாங்கினால் நன்றாக இருக்கும்.
விலை 10,000 க்குள் இருக்க வேண்டும்.
தெரிந்தவர்கள் உதவுங்கள் நண்பர்களே

சதுக்கபூதம்

Posted: 03 Nov 2013 07:58 AM PST

காவிரிபூம்பட்டினம் அருகில் உள்ள சிதைந்த சதுக்கபூதம் சதுக்கபூதம் என்பது பூம்புகார் நகரச் சதுக்கத்தில் இருந்த காவல் தெய்வமென சிலப்பதிகாரம் கூறுகிறது. பெண்களைப் பாதுகாக்கும் இப்பூதமானது, பொய் சொல்பவர்களை பிடித்து தின்பது, அவர்களை கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பது போன்ற தண்டனைகளை வழங்கும். அறம் பிறழ்வோர், கபட சாமியார், தீயோர் போன்றவர்களை கொன்றொழித்து நகரையும், மக்களையும் காக்கும் சக்திபடைத்ததாக சிலப்பதிகாரம் சதுக்கபூதம் பற்றி கூறுகிறது. சதுக்கம் என்பது நகரின் நான்கு வீதிகள் சந்திக்கும் பகுதியாகும். ...

சிசேரியன் மூலம் குழந்தை எப்படி பிறக்கிறது என்று பாருங்கள்..!

Posted: 03 Nov 2013 07:37 AM PST

முருகனை வணங்குவோம்

Posted: 03 Nov 2013 07:31 AM PST

- * தமிழ் தெய்வமான முருகன் கருணை மிக்க ஆறுமுகங்களும், பன்னிரண்டு கரங்களும் கொண்டு அடியார்களுக்கு வாரிவழங்கும் வள்ளலாக விளங்குகிறான். - * வெற்றி வேலை வணங்கியவர்களுக்கு தீவினை அகலும். இதையே, "வேலுண்டு வினையில்லை' என்னும் பழமொழியாக கூறினார்கள். - * ஆறுமுகனை தாங்கும் பேறு பெற்றது மயில். முருகனின் திருவடிகளைச் சுமக்கும் மயிலை வணங்குபவர்களுக்கு பயம் நீங்கும். - * உயிர்களை எமன் பாசக்கயிற்றால் கட்டி இழுப்பான். ஆனால், முருகனின் அடியார்களைக் கண்டால் அஞ்சுவான். - * நம் இதயக்குகையில் முருகன் ...

ஐப்பசி மாத ராசி பலன்கள் !

Posted: 03 Nov 2013 07:15 AM PST

மேஷம்: பொதுவுடைமை சிந்தனையுடைய நீங்கள், அநியாயத்தை தட்டிக் கேட்பதில் வல்லவர்கள். உதவும் குணம் கொண்ட நீங்கள், பலரின் நம்பகத் தன்மையைப் பெற்றிருப்பீர்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். ராசிநாதனான செவ்வாய் 5ல் நிற்பதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். பிள்ளைகளால் அலைச்சல், ...

ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு

Posted: 03 Nov 2013 06:56 AM PST

மாமன்னன் முதல் இராசராச சோழன் காலத்து சோழமண்டல வள நாடுகள் 1. அருண்மொழித் தேவ வளநாடு 2. உய்யக்கொண்டான் வளநாடு 3. இராசராச வளநாடு 4. நித்திவிநோத வளநாடு 5. இராசேந்திர சிங்க வளநாடு 6. இராசாசிரய வளநாடு 7. கேரளாந்தக வளநாடு 8. சத்திரிய சிகாமணி வளநாடு 9. பாண்டிகுலாசனி வளநாடு உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு: இதில் ஆட்சி முறை அமைப்பும், இன்று மாவட்டங்கள் இருப்பது போன்று அன்று எப்படி மண்டலங்களாக ஆட்சிப் பிரிவுகள் இருந்தன என்பதும், ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அலுவலர்களைப் ...

படித்ததில் பிடித்தது :) - நோயாளியைப் பார்க்க செல்லும் போது...

Posted: 03 Nov 2013 06:23 AM PST

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

மூன்று வேலை!

Posted: 03 Nov 2013 06:04 AM PST

ஒன்றும் அறியாதவன் போல, ""ஐயா! நான் செய்ய வேண்டிய முதல் வேலை என்ன?'' என்று கேட்டான். ""கூடத்தில் விலை உயர்ந்த பீங்கான் ஜாடிகள் இரண்டு உள்ளன. ஒன்று பெரியது; இன்னொன்று சிறியது; நீ அந்தப் பெரிய ஜாடியை சிறிய ஜாடிக்குள் வைக்க வேண்டும். இதுதான் நீ செய்ய வேண்டிய முதல் வேலை,'' என்றார் அவர். ""இவ்வளவு எளிய வேலையை வைப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை,'' என்றான் செல்லப்பன். கையில் தடி ஒன்றுடன் கூடத்திற்குள் நுழைந்தான். அந்தத் தடியால் பெரிய ஜாடியை ஓங்கி அடித்தான். அப்படியே அந்த ஜாடி உடைந்து நொறுங்கியது. பதைபதைத்த ...

தங்கச் சிறகு!

Posted: 03 Nov 2013 05:58 AM PST

ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் அரண்மனையை அடுத்துச் சோலை ஒன்று இருந்தது. அதன் நடுவில் பெரிய ஏரி இருந்தது. அந்த ஏரியில் அன்னப் பறவைகள் பல வாழ்ந்து வந்தன. அவற்றிற்குப் பொன்நிறமான சிறகுகள் இருந்தன. அவைகள், அரசனுக்கு ஆண்டு தோறும் தங்கச் சிறகு ஒன்றை அன்பளிப்பாகத் தந்தன. அவற்றிற்கு எந்தத் துன்பமும் ஏற்படாமல் பாதுகாத்து வந்தான் அரசன். ஒருநாள்- முழுமையும் பொன்னிறமான பறவை ஒன்று அந்த ஏரிக்கு வந்தது. அதன் அழகைப் பார்த்து அன்னப் பறவைகள் பொறாமை கொண்டன.""நண்பர்களே! இந்த ஏரியில் சிறிது காலம் ...

எதிர்பார்ப்புகள்!

Posted: 03 Nov 2013 05:56 AM PST

கொடைக்கானல் மலையில், அந்தக் கார், சீரான வேகத்தில், இறங்கிக் கொண்டிருந்தது. சுற்றிலும் தெரிந்த, பசுமை படர்ந்த மலைத்தொடர்களை ரசித்தபடி, பயணம் செய்து கொண்டிருந்த ராகவன், டிரைவரிடம்... ''சுப்பு... வண்டியை, ஒரு ஓரத்தில், ஓரங்கட்டி நிறுத்துப்பா. பாத்ரூம் போய்ட்டு போகலாம்,'' என்றார். கொடைக்கானல் பள்ளி ஒன்றில், ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மகளை பார்த்துவிட்டு, சேலத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார் ராகவன். வண்டியில் இருந்து இறங்கியவர், சிறிது தூரத்தில் தெரியும் பள்ளத்தாக்கை நோக்கி, பெரியவர் ஒருவர் ...

எனக்குத்தான்!

Posted: 03 Nov 2013 05:54 AM PST

ஒரு காட்டில் குரங்கும், மானும் நண்பர்களாக வாழ்ந்தன. குரங்கு பிடிவாத குணம் கொண்டது. சில சமயம் அது சுயநலத்தோடும் நடந்து கொள்ளும். ஆனால், மான் மிகவும் சாது. நற்குணம் கொண்டது. ஒருசமயம் காட்டில் தொடர்ந்து பல நாட்களாக மழை பெய்தது. மழைக்குப் பயந்த குரங்கும், மானும் பாதுகாப்பாக ஒரு குகைக்குள் சென்று வசித்தன. ஒரு வழியாக மழை ஓய்ந்தது. லேசாக வெயில் அடிக்கத் தொடங்கியது. ஆங்காங்கே தேங்கிக் கிடந்த நீர் சற்று வடியத் தொடங்கியது.""குரங்கே, இரண்டு நாட்களாக குகைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறோமே! கொஞ்சம் வெளியே ...

அம்மா !

Posted: 03 Nov 2013 03:26 AM PST

அம்மா ....! தொப்புழ்கொடி உறவு ! தூய்மையான அன்பின் அகராதி விளக்கம் ! அம்மா ..! உன்னத உறவு ! உண்மையில் உதிரம் உறையும் வரை தொடரும் அழகு ! அம்மா ..! உன்னைப் பற்றிய உணர்வு ! உயிர் இருக்கும் வரை உறையாது அந்த நினைவு ! அம்மா ...! உன்னைப் பற்றி சும்மாவேணும் நினைத்தாலும் வருது எப்பொழுதும் புத்துணர்வு ! அம்மா வை பற்றி எத்தனையோ கவிதைகள் நானே எழுதி இருக்கிறேன் ,இருந்தாலும் ஒவ்வொரு முறையும் எழுதும் போதும் ஒரு இன்பம் ,ஒரு புத்துணர்வு பிறக்கத்தான் ...

தீபாவளி ..!

Posted: 03 Nov 2013 03:19 AM PST

தீபாவளி ..! தீயாய் வளி ! தீராத வலி நீல நீள மகளுக்கு ! கரு மேக பெரு மகளின் இரு மாத கற்பம் சிறு பொழுதில் கலைந்திட வரும் வழியில் பல நூறு நீர்த்துளிகள் ! கரும்புகைப் புளி வானில் கரைத்த வானர மழலைகள் ... சிறுதிரை முன்னால் பெருசுகள் அவை ஈன்ற சிறுசுகள் சினிமா தனமாய் ... தீபாவளியின் பொருள் புரியாமல் பொழுதைக் கொல்ல ... அழுது புலம்பினாள் நிலா மகள் உடன் நில மகளும் ! திருந்து மானிடா ! தீபாவளின் பொருள் உணர்ந்து சிறார்களுக்கு உணர்த்து ! சின்னத் திரையையும் வண்ணத் ...

தெரிஞ்சுக்கோங்க! - ஒன்பது நாள் தீபாவளியாம்!

Posted: 03 Nov 2013 01:18 AM PST

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

யார் இவர்?

Posted: 03 Nov 2013 01:14 AM PST

அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ...

கருணைக் கடல் !

Posted: 03 Nov 2013 01:59 AM PDT

முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். இத்தலம், கடலோரத்தில், அலைகள் வீச அமைந்துள்ளதால், 'அலைவா' என்ற பெயரும், இதற்கு உண்டு. முருகப்பெருமான், சூரர்களை வென்று, வாகை சூடிய இடம் இது. இவரது திருவடிகளை, படகிற்கு சமமாக சொல்வர். அதனால் தான், கடற்கரையிலுள்ள செந்தில் முருகனின் திருவடிகளை வணங்கி, வழிபட, பிறவிப் பெருங்கடலை கடக்கலாம் என்ற, நம்பிக்கையுள்ளது. முருகப்பெருமானும், சூரபத்மனும் போரிடும் போது, சூரன், தன், மாயசக்தியால், மாமரமாக மாறினான். முருகன் தன் வேலினால், அம்மரத்தை இரண்டு கூறாகப் பிளந்து, ...

உறுப்பினர் அறிமுகம் -சுதாசெந்தில்

Posted: 03 Nov 2013 01:37 AM PDT

வணக்கம் ......friends

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. சாண்டில்யனைத் தேடித் தான் ஈகரை வந்தேன்.  எனக்கு சாண்டில்யன் இந்திரா சவுந்தராஜன் மிகவும் பிடிக்கும்.

நிற்க......... என்னைப் பற்றி....... ஒரு மகள், என் கணவர், நான்  அளவான , அழகான குடும்பம்.

படிப்பு  தமிழ் பி.எட்..... குடும்ப தலைவி.

நன்றி friends.

எங்காத்து தீபாவளி பட்டாசு பாருங்கோ :)

Posted: 03 Nov 2013 01:35 AM PDT



அன்பான தீபாவளி வாழ்த்துகள் நண்பர்களே ! அன்பு மலர் 

பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள்

Posted: 03 Nov 2013 01:18 AM PDT

-- 1) உலகம் சுற்றிய முதல் தமிழர் எனப்படுபவர் யார்? - 2) மாவீரன் அலெக்சாண்டரின் உயரம் எவ்வளவு? - 3)கடைசி முகலாயப் பேரரசர் யார்? - 4) நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எப்போது பத்மஸ்ரீ விருது பெற்றார்? - 5) 87 - வது வயதில் நோபல் பரிசு பெற்றவர் யார்? - 6) அம்பேத்காரின் சிறு வயதுப் பெயர் என்ன? - 7) நெப்போலியன் தனது எத்தனையாவது வயதில் இத்தாலியை வென்றார்? - 8) மலை எலி என அழைக்கப்படுபவர் யார்? - 9) காமராஜர் எப்போது பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்? - 10) நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் யார்? -------

நம்ம ஊர் ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது!

Posted: 02 Nov 2013 10:57 PM PDT

நம்ம ஊர் ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்... இட்லி: ***** பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச ...

தமிழ் மருந்துகள் - 1

Posted: 02 Nov 2013 10:49 PM PDT

பேரீச்சம் பழத்தில் இரும்புசத்து அதிகமாகவுள்ளது. எக்காரணம் பற்றி உடல் இளைத்திருந்தாலும் அவர்கள் பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்துக்கொண்டால் மெலிந்த உடல் தேறும், போகக் களைப்பு நீங்கும், தாது விருத்தியும் பலமும் உண்டாகும். 100 எருக்கம்பூக்களை எடுத்து நன்றாய் உலர்த்தி, சாதிக்காய், லவங்கம், சாதிப்பத்திரி வகைக்கு ஒரு தோலா சேர்த்து, பன்னீர் விட்டு அரைத்து குன்றிமணி அளவுள்ள மாத்திரைகளாக செய்துகொண்டு ஒரு நாளைக்கு ஒருவேளை ஒரு மாத்திரையாக சாப்பிட்டுவர தாது விருத்தியாகும். உடல் பலமும் ஏற்படும். ...

சினிமா - தகவல்கள் - தொடர் பதிவு

Posted: 02 Nov 2013 09:57 PM PDT

-
தமிழின் முதல் படம் - மர்மயோகி
-
தமிழின் முதல் சமூகப் படம் - மேனகா
-
தமிழின் முதல் வட்டார மொழிப்படம் - மக்களைப்பெற்ற மகராசி
-
தமிழின்முழு நீள நகைச்சுவைப்படம் - சபாபதி
-
கதாநாயகன் இல்லாத தமிழின் முதல் படம் - ஔவையார்
-
====================================

2013 -ஆங்கில வார/மாதஇதழ்கள் இலவசமாக பதிவிறக்க ..

Posted: 02 Nov 2013 09:55 PM PDT

November2013-BBC GoodFood India Magazine PDF Free Download Link... http://www48.zippyshare.com/v/9737320/file.html November2013-Money Today India Magazine PDF Free Download Link.. http://www27.zippyshare.com/v/87287629/file.html 10November2013-Business Today Magazine PDF Free Download Link http://www1.zippyshare.com/v/48122988/file.html 27October2013-Business Today Magazine PDF Free Download Link.. http://www52.zippyshare.com/v/16018712/file.html October2013-Cinema Spice ...

ஏப்பம் விட்டதுக்காகவா அவரை சிறையில் போட்டுட்டாங்க..?

Posted: 02 Nov 2013 06:05 PM PDT

தலைவர் மேடையில பேசும்போது யாரையும் எழுந்திரிச்சு போக விடாம செய்துட்டாரு…! - அவ்வளவு சிறப்பாவா பேசினாஈரு..? - நீ வேற…சுத்தி மின்வேலி அமைச்சுட்டாரு…! - >ஆர்.கவினடோனி மார்ஷ் - ———————————– - அநியாயமா இருக்கே…ஏப்பம் விட்டதுக்காகவா அவரை சிறையில் போட்டுட்டாங்க..? - அட நீங்க வேற…அவர் பைனான்ஸ் கம்பெனி நடத்தி எல்லாப் பணத்தையும் ஏப்பம் விட்டிருக்கிறார்…! - >சீ.இருளப்பசாமி - —————————————— - ஊருக்குள்ள யாரு எந்த தப்பை செய்தாலும் எங்க தலைவர் அதைப் பார்த்துட்டு சும்மா இருந்துட மாட்டாரு..! - அவ்வளவு ...

பட்டுச்சேலை வாங்கி கொடுத்துக்காகவா கவலைப்படறே..?!

Posted: 02 Nov 2013 06:04 PM PDT

- தலைவர் திங்கிற சோத்துல மண் அள்ளிப் போட்டுட்டாங்கன்னு புலம்புறாரே….என்ன ஆச்சு? - அவரை, ஆத்துல மணல் அள்ளக்கூடாது'ன்னு சொல்லிட்டாங்காளம்…! - >சிக்ஸ் முகம் - ———————————————- - சிறையில் இருக்கிற நம்ம தலைவர் எழுதின புத்தகத்துக்கு அனுமதி தர மறுத்திட்டாங்களாமே…? - பின்னே…சிறையில் இருந்து தப்பிக்க நூறு வழிகள்'னு புத்தகம் எழுதினா யாரு அனுமதி கொடுப்பாங்க…! - >ச.கனி - ————————————– - தீபாவளிக்கு உன் கணவர் பட்டுச்சேலை வாங்கி கொடுத்ததுக்காகவா கவலையா இருக்கே…? - அவர் பட்டுச் சேலை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™