Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சர்ச்சைக்குரிய பேச்சு என புகார்: தேர்தல் கமிஷனுக்கு ராகுல்காந்தி பதில்

Posted: 07 Nov 2013 11:35 PM PST

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசும் போது, உ.பி.கலவரம் பற்றி குறிப்பிட்டார். உ.பி.யில் முசாபர்நகரில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும், இந்தியாவுக்கு எதிராக செயல்பட அங்கு இளைஞர்களை தேர்வு செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.

மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் நரேந்திரமோடி 10 பிரசார கூட்டத்தில் பேசுகிறார்

Posted: 07 Nov 2013 11:28 PM PST

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி 5 மாநில சட்டசபை தேர்தலிலும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ராஜஸ்தான், சத்திஷ்கர் மாநிலங்களில் பிரசாரம் செய்த அவர் அடுத்த கட்டமாக மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இங்கு நரேந்திர மோடியை அழைத்து 10 இடங்களில் பிரசார கூட்டங்களில் பேச வைக்க மாநில பாரதீய ஜனதா திட்டமிட்டுள்ளது.

மங்கள்யான் நீள்வட்ட சுற்றுப்பாதை மேலும் 12 ஆயிரம் கி.மீ. அதிகரிப்பு

Posted: 07 Nov 2013 10:41 PM PST

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியா 'மங்கள்யான்' எனும் விண்கலத்தை ஏவியது. முதல் நாளன்று அது பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் 23,566 கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் இரவு மங்கள்யானின் சுற்றுப் பாதையை அதிகரிக்க செய்யும் பணி தொடங்கியது. அன்றிரவு முதல் கட்டமாக 5 ஆயிரம் கிலோ மீட்டருக்கு சுற்றுப்பாதை அதிகரிக்கப்பட்டது. இதனால் மங்கள்யான் 28,814 கி.மீ. நீள்வட்ட சுற்றுப் பாதைக்கு சென்றது. இதைத்தொடர்ந்து நேற்றிரவு மீண்டும் சுற்றுப் பாதையை அதிகரிக்கும் பணி

ஆந்திராவை பிரிக்கும்போது ஐதராபாத் பாதுகாப்பு நிர்வாகம் கவர்னர் பொறுப்பில் இருக்கும்: மத்திய அரசு முடிவு

Posted: 07 Nov 2013 10:25 PM PST

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கும் ஏற்பாட்டில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தெலுங்கானா மாநிலம் அமைக்கும்போது இரு மாநிலங்களுக்கும் ஐதராபாத் நகரம் 10 ஆண்டுகள் பொது தலைநகராக இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று தெலுங்கானா விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு நேற்று கூடி ஆலோசனை நடத்தியது. மாநில எல்லை பிரச்சினை, நதிநீர் பங்கீடு, மின் பகிர்மாணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தியது.

பஸ் பயணிகள் கூட்டத்தில் கார் புகுந்தது: 3 கல்லூரி மாணவிகள், பேராசிரியர் நசுங்கி சாவு

Posted: 07 Nov 2013 10:18 PM PST

ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ளது ராமவரப்பாடு. இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நேற்று மாலை ஏராளமான பயணிகள் பஸ்சுக்காக காத்து நின்றனர். அப்போது விஜயவாடாவில் இருந்து கன்னவரம் விமான நிலையத்துக்கு வேகமாக சென்ற கார் தாறுமாறாக ஓடி பஸ்சுக்காக காத்து நின்ற பயணிகள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் என்ஜீனியரிங் கல்லூரி மாணவி ஜோதிர்மயி அதே இடத்தில் நசுங்கி பலியானார். 9 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடினடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால்

மத்தியில் 3–வது அணி ஆட்சியை பிடிக்கும்: முலாயம்சிங் யாதவ் நம்பிக்கை

Posted: 07 Nov 2013 10:09 PM PST

மத்தியில் 3–வது அணி ஆட்சியைப் பிடிக்கும் என்று முலாயம்சிங் யாதவ் கூறினார். சமாஜ்வாடி கட்சி மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசை வெளியில் இருந்து ஆதரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் டெல்லியில் நடந்த காங்கிரஸ், பாரதீய ஜனதா அல்லாத 3–வது அணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது.

பான்பராக் போடக்கூடாது: புகை பிடித்தால் அரசு வேலை இல்லை- ராஜஸ்தான் அரசு உத்தரவு

Posted: 07 Nov 2013 10:09 PM PST

ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 1–ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 5–ந்தேதி நடைமுறைக்கு வந்தன. ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளியானது. இதனால் ஆளும் காங்கிரஸ் கட்சி மக்களை கவரும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: கிரண்குமார் ரெட்டி பதவி விலக திட்டமா?

Posted: 07 Nov 2013 10:01 PM PST

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஆனால் தெலுங்கானா அமைப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

பாலக்காடு அருகே 2 கார்கள் மோதிய விபத்தில் 4 பேர் பலி

Posted: 07 Nov 2013 09:28 PM PST

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் திரூரை சேர்ந்தவர் உசைன் (வயது 50). இவர் தனது மனைவி சுதரா (52) மற்றும் மருமகள் சஸ்மி (28) பேரன்கள் சயிம் (3) சபின் (6 மாதம்) ஆகியோருடன் சேரமங்கலம் உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்றார். காரை சுனிர் (27) ஓட்டினார். சேரமங்கலம் சென்று விட்டு நேற்று இரவு 10 மணியளவில் 6 பேரும் திரூர் திரும்பினர். கார் மணப்பாடி என்ற இடத்தில் வந்தபோது எதிரே

போலீஸ் படை போல சி.பி.ஐ. செயல்பட முடியாது: கவுகாத்தி ஐகோர்ட்டு கண்டனம்

Posted: 07 Nov 2013 09:08 PM PST

அசாம் மாநிலத்தை சேர்ந்த நவேந்திரகுமார் என்பவர் மீது சி.பி.ஐ. ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதை எதிர்த்து நவேந்திர குமார் கவுகாத்தி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சி.பி.ஐ.க்கு அத்தகைய அதிகாரம் எதுவும் இல்லை என்று அவர் கூறி இருந்தார்.

சத்தீஸ்கரில் இன்று ராகுல்காந்தி பிரசாரம்: 2 பொதுக்கூட்டங்களில் பேச்சு

Posted: 07 Nov 2013 08:48 PM PST

சத்தீஸ்கர் மாநில சட்ட சபைக்கு வரும் 11, 19–ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் நடை பெறும் தொகுதிகளில் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. ஓட்டுப்பதிவுக்கு ஓரிரு நாட்களே அவகாசம் உள்ள கடைசி நேரத்தில் சத்தீஸ்கரில் தலைவர்கள் முற்றுகையிட்டு போட்டி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா, குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி இருவரும் களத்தில் குதித்ததால் சத்தீஸ்கரில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

டெல்லியின் முக்கிய பகுதியில் மாயாவதிக்கு 3 அரசு பங்களா: மத்திய அரசை ஆதரிப்பதற்கு பரிசு

Posted: 07 Nov 2013 08:30 PM PST

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரிக்கிறது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. இரண்டும் விலகி விட்டதால் இப்போதைக்கு மாயாவதி கட்சியைத்தான் மத்திய அரசு மலை போல நம்பி உள்ளது. மாயாவதி கொடுக்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மத்திய அரசு திரும்ப பெற வைத்தது. அதன் பிறகு மாயாவதி சகோதரரின் ரூ. 400 கோடி பணத்தை முடக்கி வைத்ததில் இருந்து விடுவித்தது.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கலாமா?: தமிழக பா.ஜனதா தலைவர்களுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை

Posted: 07 Nov 2013 07:37 PM PST

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதா? வேண்டாமா? என்பது பற்றி தமிழக பா.ஜனதா தலைவர்களுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார். ஆனால் இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இலங்கை தலைநகர் கொழும்பில் 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இதில், பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்வது பற்றி மத்திய அரசு இன்னும் இறுதி முடிவு

மும்பையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆசாராம் பாபுவின் ஆசிரமம் இடித்து தரைமட்டம்

Posted: 07 Nov 2013 03:44 PM PST

தானே மாவட்டம் விரார் கிழக்கு மும்பை - அகமதாபாத் நெடுஞ்சாலையில் கற்பழிப்பு புகாரில் சிக்கிய பிரபல சாமியார் ஆசாராம் பாபுவின் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் ஆசாராம் பாபுவின் கொள்கையை பின்பற்றுபவர்கள் பஜனைகள்

கோர்ட்டில் இருந்து தப்பி பிடிபட்ட தீவிரவாதி அப்சல் உஸ்மானிக்கு போலீஸ் காவல் நீடிப்பு

Posted: 07 Nov 2013 03:15 PM PST

குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் 2008-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு தொடர்புடைய வழக்கில் நவிமும்பை ஜெயிலில் இந்திய முஜாகிதீன் தீவிரவாதி அப்சல் உஸ்மானி அடைக்கப்பட்டு இருந்தான். கடந்த செப்டம்பர் 20-ந் தேதி அவனை மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தபோது, கோர்ட்டு

பெங்களூரில் ஓடும் பஸ்சில் திடீர் தீ : 25 பயணிகள் உயிர் தப்பினார்கள்

Posted: 07 Nov 2013 03:01 PM PST

கர்நாடக மாநிலம் ஹாசனில் இருந்து பெங்களூர் நோக்கி நேற்று மாலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 25 பயணிகள் இருந்தனர். மாலை 5.15 மணியளவில் யஷ்வந்தபூர் கொரகுண்டேபாளையா சிக்னலில் தும்கூர் ரோட்டில் பஸ் வந்தது. அப்போது திடீரென்று பஸ்சின் முன்பகுதியில் தீப்பிடித்தது

இலங்கை ராணுவத்தின் போர்க்குற்ற ஆவணப்படம் டெல்லியில் திரையிடப்பட்டது

Posted: 07 Nov 2013 10:37 AM PST

ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவம் நிகழ்த்திய போர்க்குற்றங்களை ஆவணப்படமாக தயாரித்த சானல்-4 தொலைக்காட்சி இயக்குனர் கெல்லம் மெக்ரேவின் 'நோ பயர் சோன்' எனும் ஆவணப்படம் நேற்று டெல்லியில் திரையிடப்பட்டது

பழங்குடியினர் முன்னேற்றத்திற்கு காங்கிரஸ் ஒருபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை: மோடி

Posted: 07 Nov 2013 09:08 AM PST

நாட்டிலேயே சத்தீஸ்கர் மாநிலத்தில்தான் நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் இன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். ராமன் சிங் தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வரும் சத்தீஸ்கரில் இன்னும் சில நாட்களில் சட்டசபைக்கு தேர்தல்

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல் குறித்து பா.ஜ.க. பேசத் தவறிவிட்டது: சோனியா காந்தி

Posted: 07 Nov 2013 08:45 AM PST

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் இன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். ராமன் சிங் தலைமையிலான பாரதிய ஜனதா

டி.வி.யிலும் குஜராத்திலும் மட்டுமே மோடியை பார்க்க முடியும்: முலாயம் தாக்கு

Posted: 07 Nov 2013 07:50 AM PST

உத்தர பிரதேச மாநிலம் மெயின்பூரியில் இன்று சமாஜ்வாடி கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், அவரது மகனும் முதல் அமைச்சருமான அகிலேஷ் யாதவ்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™