Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


வெளிப்படையானதும், சுதந்திரமானதுமான விசாரணையை நடத்த வேண்டும் : அதை வலியுறுத்தவே இலங்கைக்கு செல்கிறேன் – டேவிட் கமரோன்

Posted: 07 Nov 2013 08:29 PM PST

David-cameron-uk-tamils-450x252

David-cameron-uk-tamils-450x252சிறிலங்காவில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கொமன்வெல்த் உச்சி மாநாட்டில், வலியுறுத்தப் போவதாக, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் உறுதியளித்துள்ளார்.

பிரித்தானிய தமிழ் சமூகத்திடம் அவர் இந்த உறுதிமொழியை நேற்று வழங்கியதாக, ஏஎவ்பி, றொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சிறிலங்காவில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வலியுறுத்தும் தமிழ்ச் சமூகப் பிரதிநிதிகளை பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோன் நேற்று சந்தித்துப் பேசினார். போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் மோசமான போர்க்குற்றங்கள் மற்றும் பாலியல் வன்முறைகள், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக எவரும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுகின்றனர்.

ஆயிரக்கணக்கானவர்கள் இன்னமும், காணாமற்போன தமது உறவுகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

நான் அங்குள்ள மாற்றங்களை பார்க்க வேண்டும். கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதால் அதைச் செய்ய முடியும் என்று நம்பவில்லை.

அதைச் செய்வதற்கு சரியான வழி அங்கு செல்வதே.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக வெளிப்படையானதும், சுதந்திரமானதுமான விசாரணையை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவிடம் கோரவுள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானிய பிரதமர் செயலக பெண் பேச்சாளர்,

"குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று நாம் தொடர்ச்சியாக கோரி வருகிறோம். இன்று வரை அது நடக்கவில்லை.

சுதந்திரமான விசாரணைகள் ஏதும் நடத்தப்படாத நிலையில், ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டேவிட் கமரோன் நம்புகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

காலனித்துவத்தை பேணும் நோக்கம் கொண்ட‌ பொதுநலவாயத்திலிருந்து இலங்கை விலக வேண்டும் – ஜே.வி.பி

Posted: 07 Nov 2013 08:13 PM PST

jvp-sri-lanka

jvp-sri-lankaபொதுநலவாயத்தின் நோக்கம் தொடர்ந்தும் காலனித்துவத்தை பேணுவதாக இருப்பதனால் இலங்கை பொதுநலவாயத்திலிருந்து விலக வேண்டுமென  மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) நேற்று வியாழக்கிழமை கூறியுள்ளது.

இலங்கை இறமையுள்ள நாடு இந்த அமைப்பில் இருப்பது இந்த கூட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் அதன் தலைமைத்துவத்தை பெரிதாகப் பேசுவதும் இலங்கை இன்னும் காலனியாக இருப்பதை காட்டுகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கூறினார்.

ராணியே எப்போதும் பொதுநலவாயத்தின் தலைவராக இருப்பார் மாநாட்டின் தலைமைத்துவம் முக்கியமானதல்ல சகல அதிகாரங்களும் இராணியிடமே உள்ளது என அவர் கூறினார்.

பிரித்தானிய நிர்வாகம் ஊவா வெல்லஸவில் படுகொலைகளை செய்து 195 வருடங்களின் பின்னர் இந்த மாநாட்டை இங்கு நடத்துவது முரணகையாக உள்ளது.  சுதந்திரத்துக்காக போராடியதற்காக 1918 இல் பிக்குகள் உட்பட பல தேசாபிமானிகள் கொல்லப்பட்டனர் என அவர் கூறினார்.

பொதுநலவாயத்தின் தலைமைத்துவத்துக்கு உண்மையான அர்த்தமுள்ள தலைமை உண்டாக ராணி அதன் தலைமைத்துவத்திலிருந்து விலக வேண்டும் அப்போதுதான் குறைந்தபட்சம் நாடுகள் மீண்டும் காலனித்துவத்தின் கீழ் செல்ல மாட்டாது என அவர் கூறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இவங்களுக்கும் ஒரு அடிமை சிக்கிட்டாங்களாம்…. அதான் இவ்வளவு குஷி….

Posted: 07 Nov 2013 05:43 AM PST

baby_play_001.w245

baby_play_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

நம்மட உலகநாயகன் எப்போ கஞ்சா சாமியாரா மாறுவாருனு தெரியுமா?…

Posted: 07 Nov 2013 05:33 AM PST

kamal_comedy_001.w245

kamal_comedy_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

சொந்த காசுல சூனியம் வைக்கிறது என்பது இது தான் போல!…

Posted: 07 Nov 2013 05:28 AM PST

fire_zone_001.w245

fire_zone_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கையின் தேசிய கொடி எரிப்பு; நாம் தமிழர் கட்சியின் 30பேர் கைது

Posted: 07 Nov 2013 05:18 AM PST

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்றும் மத்திய அரசை கண்டித்தும் வலியுறுத்தி இலங்கையின் தேசிய கொடியை எரித்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 30பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மதுரை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 10.50 மணிக்கு மாவட்ட செயலாளர் செந்தில் தலைமையில் 30பேர் கொண்ட குழுவினர் மதுரை விமான நிலையத்தை அடைய முற்பட்டனர். பெருங்குடி […]

200வது விக்கெட்டை கைப்பற்றிய சச்சின்

Posted: 07 Nov 2013 05:16 AM PST

இந்திய கிரிக்கெட்டின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச போட்டியில் 200வது விக்கெட் கைப்பற்றினார். கிரிக்கெட்டின் சகாப்தமான டெண்டுல்கர் கடந்த ஆண்டு ஒருநாள் போட்டியில் ஓய்வு பெற்றார். டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வந்தார்.  இதற்கிடையே தனது 200வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேற்கிந்திய தீவுகளுக்கெதிராக தற்போது நடைபெறும் டெஸ்ட் தொடர் அவரது பிரிவுபச்சார டெஸ்ட் தொடர் ஆகும். கொல்கத்தா டெஸ்ட் அவருக்கு 199வது போட்டியாகும்.  நேற்றைய ஆட்டத்தில் டெண்டுல்கர் பந்துவீச அணித்தலைவர் டோனி […]

நடுவரின் தவறான முடிவா? சச்சின் ஆட்டமிழப்பில் சர்ச்சை

Posted: 07 Nov 2013 05:11 AM PST

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ஓட்டங்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் 16 ஓட்டங்களுடனும், தவான் 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு ஷிகர் தவான்(23) […]

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கை அரசின் ஏற்பாடுகளுக்கு பொதுநலவாய அமைப்பின் செயலகம் எதிர்ப்பு

Posted: 07 Nov 2013 05:05 AM PST

கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளும் அரச தலைவர்களை தனித்தனியாக அழைத்துச் செல்லும் ஏற்பாடுகளுக்கு பொதுநலவாய அமைப்பின் செயலகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள வரும் அரச தலைவர்களை தாமரை தடாகத்தில் (நெலும் பொக்குண) இருந்து பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல இலங்கை அரசாங்கம் விலை உயர்ந்த பென்ஸ் கார்களை இறக்குமதி செய்துள்ளது. தலைவர்கள் தலா ஒரு பென்ஸ் காரில் ஏற்றப்பட்டு அந்த வாகனங்களுக்கு பின்னாலும் முன்னாலும் […]

காதலியின் ஆபாச புகைப்படங்களை முகநூலில் வெளியிட்ட காதலன்

Posted: 07 Nov 2013 04:59 AM PST

காதலியோடு உல்லாசமாக இருந்த புகைப்படங்களை முகநூலில் (பேஸ்புக்) வெளியிட்ட காதலனை கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார். யாழ். கொழும்புத்துறைப் பகுதியைச் சேர்ந்த இந்த காதல் ஜோடி தற்போது காதல் முறிவடைந்து பிரிந்துள்ளது. இந்நிலையில் காதலன் காதலியின் ஆபாச புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் நாளை (08) வெள்ளிக்கிழமை […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™