மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சி.பி.ஐ. கூண்டுகிளி அல்ல: மத்திய மந்திரி ப.சிதம்பரம் மறுப்பு
- விசாரிக்காமல் கைது செய்யக் கூடாது: அனைத்து குற்றங்களுக்கும் எப்.ஐ.ஆர். அவசியம்- சுப்ரீம் கோர்ட்
- விசாரணையை சந்திக்க தயார்: அரவிந்த் கெஜ்ரிவால்
- 19–ந்தேதி 2–வது கட்ட தேர்தல்: சத்தீஷ்கரில் இன்று சோனியா பிரசாரம்
- டெல்லி போல் ஐதராபாத் நிர்வாகம் இருக்க வேண்டும்: காங். மந்திரிகள் நிபந்தனை
- மத்திய பிரதேசத்தில் முதல்– மந்திரியை எதிர்க்க பலமான வேட்பாளர் இல்லை: காங்கிரஸ் அதிருப்தி
- மத்தியில் காங்கிரஸ் ஆட்சி முடிவதற்குள் தெலுங்கானா அமைக்கப்படும்: திக்விஜய்சிங் பேட்டி
- நள்ளிரவில் டெல்லியில் 4 முறை நிலநடுக்கம்: கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் பீதி
- திருப்பதி கோவிலுக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு வைகுண்ட ஏகாதசி முதல் வழங்கப்படுகிறது
- டெல்லி சட்டசபை தேர்தல்: முதல்–மந்திரி ஷீலா தீட்சித்தை எதிர்த்து தே.மு.தி.க. போட்டி
- இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையரிடம் தி.மு.க. மனு
- வைகோ மனுவை ஏற்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு நோட்டீசு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- கேரளாவில் கதகளி - களறிபயட்டு கலைகளை கண்டுகளித்த சார்லஸ் தம்பதியர்
- டெல்லி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து '3-டி' பிரசார ரதம்
- டெல்லியில் 2வது முறையாக மீண்டும் நிலநடுக்கம்
- ஒடிசாவில் உருளைக்கிழங்கை தொடர்ந்து விண்ணைத் தொடும் உப்பு விலை - கிலோ ரூ.60க்கு விற்பனை
- டெல்லியில் நிலநடுக்கம்
- டெல்லி தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு - புதுடெல்லி தொகுதியில் ஷீலா தீட்சித் போட்டி
- ஊழலில் கொள்ளையடித்த கருப்புப் பணத்தை வைத்து தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் முயற்சி: பா.ஜ.க. பகிரங்க குற்றச்சாட்டு
- துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகை
| சி.பி.ஐ. கூண்டுகிளி அல்ல: மத்திய மந்திரி ப.சிதம்பரம் மறுப்பு Posted: 11 Nov 2013 11:50 PM PST சி.பி.ஐ.யின் 50–வது ஆண்டு விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இன்று பங்கேற்ற மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் சி.பி.ஐ. கூண்டு கிளி என்று விமர்சிக்கப்படுவதை திட்டவட்டமாக மறுத்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது |
| விசாரிக்காமல் கைது செய்யக் கூடாது: அனைத்து குற்றங்களுக்கும் எப்.ஐ.ஆர். அவசியம்- சுப்ரீம் கோர்ட் Posted: 11 Nov 2013 11:46 PM PST அனைத்து குற்றங்களுக்கும் எப்.ஐ.ஆர். பதிவு செய்வது அவசியம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் கடந்த 2008–ம் ஆண்டு 6 வயது குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக தந்தை போலீசில் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய லஞ்சம் கேட்டனர். இதையடுத்து காவல்துறை சீர்திருத்தம் தொடர்பாக சுப்ரீம் கோட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது எப்.ஐ.ஆர். பதிவு செய்வதன் அவசியம் பற்றி சுப்ரீம் கோர்ட்டு புதிய அதிரடி உத்தரவுகள் பிறப்பித்தது. அதன் விவரம் வருமாறு:– ஒவ்வொரு குற்றத்துக்கும் எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை மிகவும் அவசியம். குற்றங்களின் தன்மையைப் பொறுத்து எப்.ஐ.ஆர். பதிவு |
| விசாரணையை சந்திக்க தயார்: அரவிந்த் கெஜ்ரிவால் Posted: 11 Nov 2013 11:06 PM PST 'ஆம் ஆத்மி' கட்சிக்கு வெளிநாட்டு பணம் வந்தது பற்றி மத்திய அரசு விசாரணையை சந்திக்க தயார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசத்துடன் கூறினார். சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் 'ஆம் ஆத்மி' என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார். டெல்லி சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியால் பல தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு |
| 19–ந்தேதி 2–வது கட்ட தேர்தல்: சத்தீஷ்கரில் இன்று சோனியா பிரசாரம் Posted: 11 Nov 2013 10:58 PM PST காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று சத்தீஷ்கர் மாநிலத்தில் 2–வது கட்ட பிரசாரம் மேற்கொள்கிறார். 5 மாநில சட்டசபை தேர்தலில் சத்தீஷ்கர் மாநிலத்தில் மட்டும் மாவோயிஸ்டுகள் மிரட்டல் காரணமாக 2 கட்டமாக நடத்தப்படுகிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு முதல் கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. இதில் தண்டே வாடா பகுதியில் நக்சலைட்டுகள் தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் பலியானார். மங்னார் பகுதியில் 8 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் |
| டெல்லி போல் ஐதராபாத் நிர்வாகம் இருக்க வேண்டும்: காங். மந்திரிகள் நிபந்தனை Posted: 11 Nov 2013 10:15 PM PST ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தெலுங்கானா அமைப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மேலிடக்குழு செய்து வருகிறது. இது குறித்த கருத்துகளை அறிய ஆந்திராவைச் சேர்ந்த அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. டெல்லியில் இன்று இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் அந்தோணி குழுவை சந்தித்த ஆந்திர மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மத்திய மந்திரிகள் பல்லம்ராஜு, காவூரி சாம்ப சிவராவ், சிரஞ்சீவி, புரந்தரேஸ்வரி, சி.டி. சீலம், கோட்டா சூரிய பிரகாஷ் ரெட்டி ஆகியோர் |
| மத்திய பிரதேசத்தில் முதல்– மந்திரியை எதிர்க்க பலமான வேட்பாளர் இல்லை: காங்கிரஸ் அதிருப்தி Posted: 11 Nov 2013 10:10 PM PST மத்திய பிரதேசத்தில் முதல்– மந்திரியை எதிர்க்க பலமான வேட்பாளர் இல்லை என்று காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளது. பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வரும் மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு வருகிற 25–ந்தேதி தேர்தல் நடக்கிறது. முதல்– மந்திரி சிவராஜ்சிங் சவுகான், புத்னி மற்றும் விதிஷா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிகளில் அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சாதாரண வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளனர். இது காங்கிரசாரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. புத்னி தொகுதியில் மகேந்திரசிங் சவுகான் என்பவரும், விதிஷா தொகுதியில் ஷாசங்க் பார்க்வா என்பவரும் காங்கிரஸ் |
| மத்தியில் காங்கிரஸ் ஆட்சி முடிவதற்குள் தெலுங்கானா அமைக்கப்படும்: திக்விஜய்சிங் பேட்டி Posted: 11 Nov 2013 10:03 PM PST ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் முடிவில் காங்கிரஸ் பின்வாங்காது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் உறுதியாக கூறிவந்தார். இந்த நிலையில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– தெலுங்கானா மாநில மசோதா வருகிற பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன்பின் மத்திய மந்திரிசபை மூலம் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். |
| நள்ளிரவில் டெல்லியில் 4 முறை நிலநடுக்கம்: கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் பீதி Posted: 11 Nov 2013 09:35 PM PST டெல்லியில் நள்ளிரவில் 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். டெல்லியில் நள்ளிரவு 12.41 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது மக்கள் வீடுகளில் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தனர். நில அதிர்வு 3 முதல் 4 வினாடிகளே நீடித்தது. |
| Posted: 11 Nov 2013 09:06 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த புரட்டாசி மாத பிரமோற்சவத்தின் போது பாத யாத்திரையாக வந்த பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை நிரந்தரமாக நடைமுறைப்படுத்த நேற்று நடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது குறித்து அறங்காவலர் குழு தலைவர் கனிமுரி பாபி ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:– |
| டெல்லி சட்டசபை தேர்தல்: முதல்–மந்திரி ஷீலா தீட்சித்தை எதிர்த்து தே.மு.தி.க. போட்டி Posted: 11 Nov 2013 08:46 PM PST டெல்லி சட்டசபை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றுவோம் என்று பா.ஜனதா சவால் விட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியும் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என்று கூறி வருகிறது. நாங்கள் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என்று காங்கிரஸ் தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். தே.மு.தி.க.வும் இந்த முறை டெல்லி தேர்தலில் கால் பதித்துள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் தே. |
| இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையரிடம் தி.மு.க. மனு Posted: 11 Nov 2013 08:13 PM PST இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் தி.மு.க சார்பாக மனு கொடுக்கப்பட்டது. இது குறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- புதுடெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத்திடம் தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு நேற்று |
| வைகோ மனுவை ஏற்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு நோட்டீசு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 11 Nov 2013 07:31 PM PST தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இயக்கலாம் என்ற டெல்லி பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ம.தி.மு.க. தலைவர் வைகோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கு நோட்டீசு அனுப்பு உத்தரவிட்டு உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக நடந்த வழக்கை இறுதிக்கட்டமாக விசாரித்த டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு |
| கேரளாவில் கதகளி - களறிபயட்டு கலைகளை கண்டுகளித்த சார்லஸ் தம்பதியர் Posted: 11 Nov 2013 02:57 PM PST கேரள மாநிலம், கொச்சி அருகே தேவாரா என்ற இடத்தில் பழங்கால கேரள கலைகளை விவரிக்கும் அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் பழைமை வாய்ந்த மரம், கல் மற்றும் செம்பினால் செய்த கலை பொருட்களும், நகைகள், அணிகலன்கள், இசை |
| டெல்லி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து '3-டி' பிரசார ரதம் Posted: 11 Nov 2013 02:20 PM PST டெல்லி சட்டசபைக்கு டிசம்பர் மாதம் 4ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை எதிர்த்து பா.ஜ.க. முதல் மந்திரி வேட்பாளராக விஜேந்தர் குப்தா போட்டியிடுகிறார். இதுவரை 62 தொகுதிகளில் போட்டியிம் வேட்பாளர்களின் பட்டியலை |
| டெல்லியில் 2வது முறையாக மீண்டும் நிலநடுக்கம் Posted: 11 Nov 2013 01:51 PM PST தலைநகர் டெல்லியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று பின்னிரவு 12.41 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1 புள்ளிகளாக பதிவானது. இந்நிலையில், தொடர்ந்து 2 வது முறையாக சரியாக ஒருமணி நேரம் |
| ஒடிசாவில் உருளைக்கிழங்கை தொடர்ந்து விண்ணைத் தொடும் உப்பு விலை - கிலோ ரூ.60க்கு விற்பனை Posted: 11 Nov 2013 01:15 PM PST ஒடிசா மாநிலத்தில் கடந்த மாதம் ஒரு கிலோ 12 ரூபாய் என்ற விலையில் கிடைத்து வந்த உருளைக் கிழங்கு தற்போது 50 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. இந்நிலையில், கடுமையான உப்பு பஞ்சம் ஏற்பட போவதாக ஒடிசாவில் |
| Posted: 11 Nov 2013 12:47 PM PST தலைநகர் டெல்லியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று பின்னிரவு 12.41 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1 புள்ளிகளாக |
| Posted: 11 Nov 2013 11:52 AM PST 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ், பா.ஜ.க., ஆம் ஆத்மி கட்சி ஆகியவற்றுக்குள் நேரடி போட்டி நிலவுகிறது. இது தவிர, விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க சார்பிலும் |
| Posted: 11 Nov 2013 11:29 AM PST ஊழலில் கொள்ளையடித்த கருப்புப் பணத்தை வைத்து தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது என பா.ஜ.க. பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. பா.ஜ.க.வின் ராஜஸ்தான் மாநில முதல் மந்திரி வேட்பாளராக |
| துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகை Posted: 11 Nov 2013 10:59 AM PST துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். மாலை 5 மணியளவில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்துசேரும் அவர் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |