Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


முன்னாள் ஜனாதிபதி கென்னடியின் படுகொலையில் புதிய திருப்பம்

Posted: 12 Nov 2013 12:07 AM PST

ken

kenஅமெரிக்காவின் 38–வது ஜனாதிபதி ஆக இருந்தவர் ஜான் எப் கென்னடி. ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் கடந்த 1961 முதல் 1963ம் ஆண்டு வரை பதவி வகித்தார். 1963–ம் ஆண்டு நவம்பர் 22–ந்தேதி தனது 46–வது வயதில் டெக்காஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் மனைவி ஜாக்குலினுடன் காரில் செல்லும்போது சுட்டுக் கொல்லப்பட்டடார்.

அவர் இறந்து 50 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் ஜான் எப்.கென்னடியின் உயிரை பறித்த 'மர்ம தோட்டா' தொடர்பான திடுக்கிடும் தகவலை அவருக்கு முதலுதவி அளித்த தாதிஒருவர் தற்போது வெளியிட்டுள்ளார்.

அப்போது 28 வயது இளநங்கையாக இருந்த பைலிஸ் ஹால் என்ற அந்த தாதிக்கு தற்போது 78 வயது ஆகிறது.

லண்டனில் இருந்து வெளியாகும் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பைலிஸ் ஹால் கூறியுள்ளதாவது:-

தலையில் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜான் எப்.கென்னடியின் தலையை தூக்கி பிடித்தபடி அவரது சுவாசம் சீரடைவதற்கான முதலுதவியை நான் செய்தேன்.

அப்போது ஒரு விசித்திரமான காட்சியை நான் பார்த்தேன். துப்பாக்கி குண்டுகளால் காயமடைந்த பலருக்கு நான் சிகிச்சை அளித்துள்ளேன். ஆனால், அன்று கண்டது போன்றதொரு காட்சியை நான் இதுவரை பார்த்ததே இல்லை.

அவரது காதுக்கும், தோள்பட்டைக்கும் இடையே கூர்மையான ஒரு விசித்திர தோட்டாவை நான் பார்த்தேன். அந்த தோட்டா சுமார் 1 1/2 அங்குல நீளம் இருந்தது.

சாதரணமாக துப்பாக்கியில் இருந்து வெடித்து சீறிப்பாயும் தோட்டாக்களின் முனை மழுங்கிப்போய் இருக்கும். ஆனால், அந்த தோட்டாவின் முனை மட்டும் கூர்மை மழுங்காமல் இருந்தது. எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மேலும், துப்பாக்கியின் குழலில் இருந்து வெளியேறும் வேகத்தில் தோட்டாவின் வெளிப்பகுதிகளில் சிராய்ப்பு (தேய்வது) அறிகுறி தென்படும். அதுவும் அந்த தோட்டாவில் தென்படவில்லை.

எந்தவகை துப்பாக்கியில் இருந்து அந்த தோட்டா வெளியே வந்தது என்ற அறிகுறிகளை அந்த தோட்டாவை பரிசோதித்து கண்டுபிடிக்க இயலாத நிலையில் அது இருந்தது.

ஜான் எப்.கென்னடி படுகொலை தொடர்பான விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட தோட்டாக்களில் இருந்து அது மிகவும் வித்தியாசமாக தோற்றமளித்தது.

அந்த தோட்டாவும் அறுவை சிகிச்சை மூலம் அவரது உடலில் இருந்து அகற்றப்பட்டது. ஆனால், கடைசி வரை அந்த 'மர்ம தோட்டா' நீதிமன்ற விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படவே இல்லை என்று தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடை விதிக்க நடவடிக்கை

Posted: 11 Nov 2013 11:55 PM PST

அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது நம்பிக்கை இல்லாத அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு அமெரிக்க அரசை வலியுறுத்தி வருகின்றனர். அணுசக்திக் கொள்கை தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து ஈரானின் மீது நம்பிக்கை இல்லாத அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியுடன் பேச்சுவார்த்தை […]

ஓரினச் சேர்க்கையாளருடன் உடலுறவு கொண்டார் ஒபாமா! தோழியின் பரபரப்பு பேட்டி (வீடியோ இணைப்பு)

Posted: 11 Nov 2013 11:49 PM PST

obama_001.w245

obama_001.w245அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது மாணவ பருவத்தில் கொக்கைன் மற்றும் ஓரினச் சேர்க்கையில் அதிக நாட்டம் கொண்டிருந்தார் என அவரது பள்ளி தோழி மியா மேரி போப் என்பவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது,

பள்ளியில் படிக்கும் போது தன்னை ஒரு வெளிநாட்டு மாணவனாக வெளிப்படுத்துவதில் ஒபாமா அதிக ஆர்வம் காட்டினார்.

அவருக்கு பெண்கள் மீது அதிகமான ஈடுபாடு இருந்தது கிடையாது. மாறாக, தன்னை விட அதிக வயதுடைய வெள்ளை இன ஓரினச் சேர்க்கையாளர்களிடம் அதிக தொடர்பு வைத்திருந்தார்.

அப்போதெல்லாம், கொக்கைன் பழக்கமும் ஒபாமாவுக்கு இருந்தது. வயதான வெள்ளை இன ஓரினச் சேர்க்கையாளர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதன் மூலம் அவரிடம் தாராளமாக கொக்கைன் நடமாடுவதை என்னால் பின்நாட்களில் அறிந்துக் கொள்ள முடிந்ததென தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மும்பை தாக்குதல் ரகசியம்: யார் அந்த ஹனி பீ?

Posted: 11 Nov 2013 11:23 PM PST

மும்பையில் நடைபெற்ற தொடர் தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு முழுமையாக உதவியுள்ளது அம்பலமாகியுள்ளது. மும்பையில் நடந்த தொடர் தீவிரவாத தாக்குதலில் தீவிரவாத தடுப்பு படை தலைவர் ஹேமந்த் கர்கரே உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரத்தை நிறைவேற்றியது லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள், இவர்களுக்கு உதவியது பாகிஸ் தான் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு என்று இப்போது தெரியவந்துள்ளது. இதைவிட அதிர்ச்சியான தகவல், ஐஎஸ்ஐக்கு தாக்குதல் தொடர்பாக சதி திட்டத்தில் உதவியது 'ஹனி பீ' […]

மங்கள்யான் ராக்கெட்டில் கோளாறு!

Posted: 11 Nov 2013 11:15 PM PST

மங்கள்யான் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையை 1,00,000 கிலோமீட்டராக அதிகரிக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. செவ்வாய் கிரத்தை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை மங்கள்யான் விண்கலத்தை இந்தியா விண்ணில் செலுத்தியது. இதை நேரடியாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப முடியாது. முதலில் விண்கலத்தை பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும். பின்னர் அதன் வேகத்தையும் உயரத்தையும் படிப்படியாக அதிகரிக்க வேண்டும். உரிய அளவு வேகம் கிடைத்தவுடன் அதை செவ்வாய் கிரகத்தை நோக்கி அதிவேகத்தில் திசை திருப்ப (‘slingshot’) […]

This posting includes an audio/video/photo media file: Download Now

டெல்லியில் 2வது முறையாக மீண்டும் நிலநடுக்கம்

Posted: 11 Nov 2013 11:09 PM PST

தலைநகர் டெல்லியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று பின்னிரவு 12.41 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1 புள்ளிகளாக பதிவானது. இந்நிலையில், தொடர்ந்து 2 வது முறையாக சரியாக ஒருமணி நேரம் கழித்து பின்னிரவு 1.41 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.3 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. மிதமான இந்த இரு நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் முதலிட

Posted: 11 Nov 2013 11:03 PM PST

இந்தியாவில் உடல் உறுப்புகள் தானம் வழங்குவதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவில் இந்த ஆண்டில் இதுவரை 1 லட்சத்து 18 ஆயிரத்து 533 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் தமிழகத்தில் 67, 757 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் சிக்கி தமிழகத்தில் மட்டும் 16,175 பேர் பலியாகியுள்ளனர். சாலை விபத்துகளில் இறப்போரின் சதவிகிதம் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகம். அவ்வாறு இறப்பவர்களின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்படுகின்றன. சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு […]

கதவையே திறக்காமல் மனுஷன் எப்படி காருக்குள்ள போனாரு?.

Posted: 11 Nov 2013 07:19 AM PST

car_door_001.w100

car_door_001.w100

This posting includes an audio/video/photo media file: Download Now

சச்சின் தெண்டுல்கரே சிறந்த ஆட்டக்காரர் : வார்னே

Posted: 11 Nov 2013 06:46 AM PST

20-shane-warne-300

20-shane-warne-300கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் தனது 200–வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுகிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மும்பையில் வருகிற 14–ந்தேதி தொடங்கும் 2–வது டெஸ்ட் அவரது கடைசி டெஸ்ட் ஆகும்.

199 டெஸ்டில் விளையாடியுள்ள தெண்டுல்கருக்கு மும்பை போட்டி 200–வது டெஸ்ட் ஆகும்.

இந்த நிலையில் தெண்டுல்கரை ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷான் வார்னே பாராட்டியுள்ளார். எனது தலைமுறையில் தெண்டுல்கர்தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

எனது கிரிக்கெட் சகாப்தத்தில் தெண்டுல்கர்தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன். அவரது கடைசி டெஸ்ட் போட்டியை பார்ப்பதற்காக மும்பை செல்கிறேன்.

அனைத்து பவுலர்களுக்கு எதிராக எல்லா விதமான ஆடுகளத்திலும் சிறப்பாக ஆடக்கூடியவர் தெண்டுல்கர். அவரை போன்ற வியக்கத்தக்க பேட்ஸ்மேனை பார்த்தது இல்லை. இன்னொரு தெண்டுல்கரை இனி பார்க்க இயலாது. நான் பயிற்சி அளிக்கும் இளம் வீரர்களுக்கு அவரை தான் முன்னிறுத்தி ஆலோசனை வழங்குவேன். ஏனென்றால் பல்வேறு உலக சாதனைகளை புரிந்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் வார்னே அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்களில் 2–வது இடத்தில் உள்ளார். அவர் 145 டெஸ்டில் விளையாடி 708 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

இதேபோல உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான லாராவும் தெண்டுல்கரை பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது:–

கிரிக்கெட்டின் பல்வேறு சாதனைகளை தெண்டுல்கர் புரிந்துள்ளார். குத்துச்சண்டையில் முகமது அலி, கூடைப்பந்தில் மைக்கேல் ஜான்சன் எப்படியோ அதுபோல கிரிக்கெட்டில் சச்சின். கிரிக்கெட் என்றாலே அனைவரும் சச்சினை பற்றி தான் பேசுகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

லாராவும் தெண்டுல்கரின் கடைசி டெஸ்ட் போட்டியை நேரில் பார்க்கிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மும்பை கான்திவிலி மைதானத்திற்கு சச்சின் பெயர் : கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

Posted: 11 Nov 2013 06:37 AM PST

sachin

sachinகிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகள் படைத்த சச்சின் தனது 200-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியின் முடிவில், சச்சினுக்கு பிரமாண்ட பிரிவுபசார விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சச்சன் டெண்டுல்கரை கவுரவப்படுத்தி சிறப்பிக்கும் வகையில் மும்பையில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. மும்பை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த விழா, ஆடல்-பாடல் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் விமரிசையாக நடைபெற்றது. விழாவில் மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் திரையுலக பிரபலங்கள், இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். சச்சின் தனது மனைவி அஞ்சலியுடன் பங்கேற்றார். அப்போது, சச்சினின் கிரிக்கெட் சாதனைகளை கவுரவிக்கும் வகையில், மும்பையில் உள்ள கான்திவிலி மைதானத்துக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் முறைப்படி அறிவித்தது. சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டியில், தங்க நாணயத்தில் டாஸ் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.  டெஸ்ட் போட்டி நடைபெறும் 5 நாட்களிலும் சச்சின் படத்துடன் 5 வண்ணத்தில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™