ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தீபாவளி கதைகள்
- இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கொடூரமாக கொன்ற பதைபதைப்பு காட்சிகள் ‘சேனல்–4’ நிறுவனம் வெளியிட்டது
- தீபாவளியன்று மட்டும் திறக்கும் சந்நிதி!
- தீபாவளி திருநாளின் பிற சிறப்புகள்!
- தீபாவளி நம்பிக்கைகள்!
- தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்?
- அன்னபூர்ணா ஸ்தோத்திரம்!
- குபேர பகவானுக்கு நாணய வழிபாடு!
- தீபாவளி வழிபாடு செய்யும் முறை!
- எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்?
- ஐப்பசியில் தீபாவளி கொண்டாடுவது ஏன்?
- தீபாவளியின் தோற்றம்!
- இனிப்புக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்து!
- நாடு தோறும் தீப ஒளி!
- திருமணம் செய்து கொள்வது ஏன்?
- சாதியை வைத்து பிழைக்காதீர்கள் - குஷ்பு
- 'மத்திய அரசின் 450 திட்டங்களுக்கு சோனியா காந்தியின் குடும்ப பெயர்!'
- “ஷோல்டரை இறக்குறது சிரமமா இருக்கு!” - விஷால்
- நோபல் வெற்றியாளர்கள் 2013
- அனைவருக்கும் ஈகரையின் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்
- தி.மு.க-வில் சாதி சண்டையா?
- வெளியூரிலிருந்து பெண் எடுப்பதுமில்லை கொடுப்பதுமில்லை!
- மதுரையில் மலேசியப் பைங்களிகள்...
- ஒரு ராத்திரி என்கூட தங்கினா, பிறவிப் பயனை அடைவாய்! - திருவள்ளூரில் ஒரு தில்லாலங்கடி
- சுட்ட கதை - சினிமா விமர்சனம்
- பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே!
- தீபாவளி பண்டிகை: ஆளுநர் உள்பட தலைவர்கள் வாழ்த்து
- தீபாவளி சமயத்துல கட்சி மாறினது தப்பா போச்சு...!
- தீபாவளி வாழ்த்துகள்!
- சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானி இன்று மண்ணில் மலர்ந்த நாள்.
- உறுப்பினர் அறிமுகம் -சுதாசெந்தில்
- மது ! கவிஞர் இரா .இரவி !
- நாயின் வால் - வாழ்க்கை கதை
- இது தடுப்பு ஊசி வெடிங்க…!
- தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ராஜினாமா?
- எங்காத்து தீபாவளி பட்டாசு பாருங்கோ :)
- தீபாவ(லி)ளி?????
- நடிகர் சந்தானம் உள்பட திரைத் துறையினர் வீடுகளில் வருமானவரி சோதனை
- குடிமகன்களும் தீபாவளியுமா 400 கோடியும்
- நான் பத்த வெச்சுட்டா என் பேச்சை நான் பத்த வெச்ச பட்டாசே கேட்காது…
- பாம்பு பட்டாஸ் வெடிக்குமுன் பால் ஊத்துங்க...!!
- மனிதனுக்குள் மிருகம்-மதன் நூலினை டவுன்லோட் செய்ய
- பட்டாஸ் கடையில என்ன சோதனை நடக்கிறது..!!
| Posted: 01 Nov 2013 02:20 PM PDT மராட்டிய மாநிலத்தில் தீபாவளி பண்டிகை வித்தியாசமாக 5 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த 5 தீபாவளிகள் கொண்டாட்டத்துக்கும் பின்னணியில் ஒவ்வொரு கதை இருக்கிறது. 1. தந்திராஸ் மன்னர் ஹிமாவின் மகன் தனது 16 வயதில் அதுவும் திருமணமான 4–வது நாளில் பாம்பு கடித்து இயற்கை எய்துவார் என்று ஜோதிடம் கூறியது. அந்த நாளும் வந்தது. எப்படியாவது தனது கணவர் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த இளவரசனின் புதுமனைவி, பாம்பு வீட்டுக்குள் வந்து விடாதபடி வீடு முழுவதும் தீபங்களை ஏற்றி வைத்தாள். வீட்டு வாசல் மற்றும் ... |
| இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கொடூரமாக கொன்ற பதைபதைப்பு காட்சிகள் ‘சேனல்–4’ நிறுவனம் வெளியிட்டது Posted: 01 Nov 2013 02:15 PM PDT விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவில் பணிபுரிந்த இசைப்பிரியாவை, இலங்கை ராணுவம் கொடூரமாக கொலை செய்த பதை பதைப்பு காட்சிகளை, இங்கிலாந்தின் 'சேனல்–4' நிறுவனம் வெளியிட்டு உள்ளது. சேனல்–4 நிறுவன காட்சிகள் இங்கிலாந்தின் சேனல்–4 என்ற டெலிவிஷன் நிறுவனம், இலங்கை ராணுவத்தின் போர்க்குற்ற நடவடிக்கைகள் குறித்து, அவ்வப்போது பரபரப்பான வீடியோ காட்சிகளை வெளியிட்டு வருகிறது. அந்த நிறுவனம் கடைசியாக வெளியிட்ட வீடியோ தொகுப்பில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை ... |
| தீபாவளியன்று மட்டும் திறக்கும் சந்நிதி! Posted: 01 Nov 2013 02:13 PM PDT திருப்பதியைப் போல காசியிலும் லட்டு விசேஷம். இஙகுள்ள பழமையான அன்னபூரணி அம்மன் கோயிலில் அம்பாள் விக்ரகம் சொக்கத் தங்கத்தால் ஆனது. இவளை தீபாவளி நாளில் மட்டுமே சந்நிதிக்கதவைத் திறந்து முழுமையாகத் தரிசிக்க முடியும். வருடத்தின் மற்ற நாட்களில் கதவின் துவாரம் வழியாக மட்டுமே தரிசிக்கலாம். தீபாவளியன்றும் அதனைத் தொடர்ந்து மறுநாளும் இந்த சந்நிதி இனிப்புவகைகளால் நிரப்பப்படும். வழிபாட்டிற்குப் பின்னர் பக்தர்களுக்கு அதை பிரசாதமாகத் தருவர். தீபாவளிநாளில் லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், அன்னபூரணி ... |
| தீபாவளி திருநாளின் பிற சிறப்புகள்! Posted: 01 Nov 2013 02:12 PM PDT மத்தியப் பிரதேசத்தில் குபேர பூஜை, ராஜஸ்தானில் வேடுவர் வீர விளையாட்டு, சவுராஷ்டிரத்தில் லட்சுமி பூஜை, மகாராஷ்டிரத்தில் தாம்பூலம் போடும் திருநாள், வங்காளத்தில் காளி பூஜை என்று ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. உத்தரபிரதேசம், பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் ராமபிரான் வனவாசம் முடித்து, சீதையை ராவணனிடம் இருந்து மீட்டு அயோத்தி திரும்பிய நாளே தீபாவளி என்ற கதை கூறப்படுகிறது. தென்னிந்தியாவில் தீபாவளி முதல் குறிப்பு காணப்படுவது, சாளுக்ய திரிபுவன மன்னன் காலத்தில் எழுதப்பட்ட ... |
| Posted: 01 Nov 2013 02:11 PM PDT 1. தீபாவளி நாளில்தான் திருப்பாற்கடலில் மகாலட்சுமி அவதரிததாள். அதனால் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. அன்றைய தினம் மாலையில் வீடுகளில் நெய் கொண்டு தீபங்கள் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் அவளது அருள் எளிதல் கிடைத்து செல்வச் செழிப்பு மேலோங்கும் என்கிறார்கள். 2. வட மாநிலங்களில் சில பகுதிகளில் தீபாவளி அன்று ரங்கோலி எனப்படும் வண்ணக் கோலமிட்டு தங்கள் வீட்டு முற்றத்தை அலங்கரிக்கிறார்கள். மஞ்சள், சிவப்பு, காவி ஆகிய மூன்று நிறங்களை கொண்டதாக இந்த கோலம் அமைகிறது. இப்படி ... |
| தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Posted: 01 Nov 2013 02:10 PM PDT கல்விக்கு சரஸ்வதி பூஜை என்றால், செல்வத்திற்கு தீபாவளி எனும் லட்சுமி பூஜை. சரஸ்வதி பூஜை முடிந்து 20 வது நாள் தீபாவளி வருகிறது. வீட்டிற்கு வரும் லட்சுமியை வரவேற்கவே விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். செல்வத்திற்கு கடவுள் லட்சுமி. திருப்பாற்கடலில் அவதரித்தவள். விஷ்ணுவிற்கு மாலை அணிவித்து அவர் மார்பில் இடம் பிடித்தவள். இந்த நிகழ்ச்சிகள் நடந்த நாள் தான் தீபாவளி. எனவே தான் தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்கின்றனர். நெய் தீபங்கள்: தீபாவளி அன்று வீடுகளில் நெய் தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும். இதனால் அகால ... |
| Posted: 01 Nov 2013 02:05 PM PDT அறியாமை இருளகற்றி பேரின்ப ஒளியேற்றும் உன்னதத் திருநாள் தீபாவளி. இந்த நன்னாள் முதற்கொண்டு வறுமையும் பசிப்பிணியும் விலகி, நம் இல்லமும் உள்ளமும் மகிழ்வுற.. அன்று அன்னபூரணியை மனதார வழிபட வேண்டும். இந்த தேவியின் அருளிருந்தால் நம் வீட்டில் அன்னத்துக்கு பஞ்சம் வராது. அன்னையின் அருளைப் பரிபூரணமாகப் பெற உதவும் அற்புதமான ஒரு ஸ்தோத்திரம் உண்டு. நித்யானந்தகரீ வராபயகரீ ஸெளந்தர்யரத்னாகரீ நிர்தூதாகிலகோரபாபநிகரீ ப்ரத்யக்ஷமாகேஸ்வரீ ப்ராலேயாசலவம்ஸபாவகரீ காஸீபுராதீஸ்வரீ பிக்ஷõம்தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஸ்வரீ பொருள் ... |
| குபேர பகவானுக்கு நாணய வழிபாடு! Posted: 01 Nov 2013 02:04 PM PDT தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷம்! குபேர பகவானுக்கு உகந்த எண் 5 என்பதால், ஒரு தட்டில் நம் கை நிறைய 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு, அதைத் தட்டில் இருந்து நம் இரு கைகளாலும் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அப்போது, அளகாபுரி அரசே போற்றி... என்று துவங்கும் குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி வழிபட வேண்டும். 108 போற்றிகளையும் சொல்லி முடிக்கும் ... |
| தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Posted: 01 Nov 2013 02:03 PM PDT அதிகாலை கங்காஸ்நானம், படபடவென வெடித்துச் சிதறும் பட்டாசுகள், நாவில் உமிழ்நீர் ஊறவைக்கும் பலகாரங்கள், பட்சணங்கள் - இவை மட்டுமல்ல; செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர பூஜையும் தீபாவளியின் ஸ்பெஷல் அடையாளம்! இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம். பூஜைக்கான ஏற்பாடுகளை தீபாவளிக்கு முந்தைய நாள் இரவே செய்து முடித்துவிடுவது நல்லது. தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து கங்கா ஸ்நானம் செய்த பிறகு, ... |
| எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Posted: 01 Nov 2013 02:02 PM PDT தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும். அது வெந்நீராக இருப்பது அவசியம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் தனிச்சிறப்பு இருக்கிறது. தீபாவளியன்று நம் வீட்டில் இருக்கும் எண்ணெயில் திருமகளாகிய மகாலட்சுமி வாசம் செய்கிறாள். சாதாரணமாக எண்ணெய் தலையைக் கண்டால் அபசகுனம் என சொல்வோம். ஆனால், தீபாவளி நாளில் எண்ணெயில் லட்சுமி இருப்பதால் செல்வச்செழிப்பு ஏற்படும். சகோதரிகளுக்கு பரிசு: தமிழகத்தில், சிறுவீட்டுப் பொங்கலின் போது, ... |
| ஐப்பசியில் தீபாவளி கொண்டாடுவது ஏன்? Posted: 01 Nov 2013 02:01 PM PDT இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. தராசுக்கு துலாக்கோல் என்று பெயர் உண்டு. தீபாவளி கொண்டாடப்படும் ஐப்பசிக்கு துலா மாதம் என்று பெயர். தராசு எப்படி நடுநிலையாக தன் முள்ளைக் காட்டி நிற்குமோ, அதுபோல தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதம் இல்லாமல்,எவன் இருக்கிறானோ அவனே நீதிமான். அதனாலேயே நீதிமன்றங்களில், நீதியின் சின்னமாக தராசை வைத்திருக்கிறார்கள். தீபாவளி நன்னாள் நீதியை எடுத்துச்சொல்கிறது. பெற்ற ... |
| Posted: 01 Nov 2013 01:59 PM PDT வெளிச்சத்தின் அருமை இருட்டில் தான் தெரியும். இருட்டில் தடுமாறும்போது, எங்கிருந்தாவது ஒளிராதா என தவிக்கிறோம். மனம் கவலையில் மூழ்கி சோகத்தால் இருண்டிருக்கும். அப்போது தீப ஒளி என்னும் நல்வழி தோன்றாதா! அதன் நடுவே நாம் குதூகலத்துடன் இருக்கமாட்டோமா என எண்ணுகிறோம். இதே போன்ற சிக்கல் தீர்க்கதமஸ் என்ற முனிவருக்கும் ஏற்பட்டது. அவர் இருண்ட காட்டில் தனது மனைவி, மக்களுடன் வசித்தார். இருட்டினால் மட்டுமல்ல, துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள், அரக்கர்களாலும் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். எனவே அந்த ... |
| இனிப்புக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்து! Posted: 01 Nov 2013 01:58 PM PDT உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான சர்க்கரை நோயாளிகள் காபி, டீ-யில் தவறாமல் உபயோகப்படுத்துவது 'சுகர்ஃப்ரீ / ஈக்குவல்' (Sugar free/Equal) எனும் வஸ்துவைத்தான். இன்றைக்கு இது அனைத்து ஹோட்டல்கள், வீடுகள் என்று எங்கெங்கும் நீக்கமற தினமும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முன், சர்க்கரைக்கு மாற்றாக உபயோகப்படுத்தப்பட்ட பொருள் 'சாக்ரின்'. அதைப் பயன்படுத்தினால், 'சிறுநீர்ப்பையில் புற்றுநோய் வரலாம்' என்று கருதப்பட்டதால், மெள்ள அந்த இடத்தை 'சுகர்ஃப்ரீ / ஈக்குவல்' பிடித்துக் கொண்டது. சுகர்ஃப்ரீயின் வேதியியல் பெயர் ... |
| Posted: 01 Nov 2013 01:29 PM PDT வடநாட்டில் "தீபாவளி' என்ற பெயருக்கேற்ப ஒவ்வொரு வீட்டிலும் பால்கனி, மாடிப்படி என்று எல்லா இடத்திலும் தீபம் ஏற்றுகின்றனர். தமிழ்நாட்டில் கார்த்திகையின்போது இந்தத் தீப வரிசைகள் இல்லந்தோறும் பிரகாசிக்கின்றன. இந்தியா தவிர, வேறு சில நாடுகளிலும் தீப ஒளிக்கொண்டாட்டம் நடைபெறுகிறது. டிசம்பர் 13ம் தேதி ஸ்வீடனுக்குப் போனால் லூயிஸ் என்ற பெண்ணின் நினைவாக "லூசியா' என்ற திருநாள் மிகவும் உற்சாகத்துடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஸ்வீடனில் இரவின் நேர்ம மிக அதிகமாக இருக்கும். பகலில் சூரிய வெளிச்சம் சில மணி நேரங்களுக்கே ... |
| Posted: 01 Nov 2013 01:27 PM PDT மணம் என்ற சொல்லுக்கு வாசனை என்பது பொருள். இது திருமணம் என்பதனால் மற்ற மணங்கள் எல்லாம் வெறும் மணம் என்று ஆகிவிடும். அனைத்து திருமணங்களும் பெண்கள் பெயரில்தான் வரும். வள்ளி திருமணம், சீதா கல்யாணம், பார்வதி திருமணம், ராதா கல்யாணம், ருக்மணி கல்யாணம், திரௌபதி கல்யாணம் என்று பெண்கள் முன் வைத்தே திருமணங்கள் நடைபெறுகின்றன. பெண்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்? திருமணம் செய்து கொள்வது என்பது மக்களைப் பெறுவதற்கு மட்டுமல்ல. வருகின்ற விருந்தினரைப் பேணுவதற்காகவும்தான் என்கின்றன தமிழ் இலக்கியங்கள். "இருந்தோம்பி ... |
| சாதியை வைத்து பிழைக்காதீர்கள் - குஷ்பு Posted: 01 Nov 2013 01:24 PM PDT அன்று மதியம் தந்தி தொலைக்காட்சியில் அவர் நடத்தும் "அச்சம் தவிர்' படப்பிடிப்பு ரத்தானதால் கொஞ்சம் ரிலாக்ஸ்டாகவே இருந்தார் குஷ்பு. வரவேற்பறையில் 4க்கு 3 சைஸில் கருணாநிதி படம். அதில் நான்கில் ஒரு பங்காக ஸ்டாலின் படம். விளைவுகளைப் பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் தம் மனதுக்கு சரியென்று தோன்றுவதைத் தயங்காமல் பேசுபவர் குஷ்பு. அதனால் பல பிரச்னைகளைச் சந்தித்தவர். ஒரு வரையறுக்கப்பட்ட நேர்காணல் போல் அல்லாமல் இயல்பாக அமைந்த உரையாடலிலிருந்து.... "அச்சம் தவிர்' எப்படி போய்கிட்டிருக்கு? ரொம்ப நல்லா போய்க்கிட்டிருக்கு. ... |
| 'மத்திய அரசின் 450 திட்டங்களுக்கு சோனியா காந்தியின் குடும்ப பெயர்!' Posted: 01 Nov 2013 01:20 PM PDT சென்னை: மத்திய அரசின் 450 திட்டங்களுக்கு சோனியா காந்தியின் கணவர் ராஜீவ் காந்தி, மாமியார் இந்திரா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் தாத்தா ஜவஹர்லால் நேரு உள்ளிட்டோர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதாக பா.ஜனதா மூத்த தலைவர் வெங்கையா நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு 'இந்திரா காந்தி' பெயரை சூட்ட முடிவு செய்துள்ளனர். இதுபோன்று மத்திய அரசின் 450 திட்டங்களுக்கு ஒரே குடும்பத்தின் ... |
| “ஷோல்டரை இறக்குறது சிரமமா இருக்கு!” - விஷால் Posted: 01 Nov 2013 01:16 PM PDT ''படம் ரிலீஸ் ஆகும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் எனக்கு அலாரம்தான். வாரா வாரம் அலாரம் சவுண்ட் என்னை விரட்டிட்டே இருக்கு!'' - உற்சாகமாகப் பேசுகிறார் விஷால். '' 'பாண்டிய நாடு' படத்தின் சண்டைக் காட்சிகளில் நடிக்க ரொம்ப சிரமப்பட்டேன். இப்படி ஒரு கேரக்டர்ல நடிப்பது எனக்குப் புதுசு. 'அவன் இவன்'ல பெண் வேடத்துல ஒரு பாட்டுக்கு நடிக்கும்போதுகூட அவ்ளோ கஷ்டப்படலை. என்னடா, இவ்ளோ பில்ட்-அப் கொடுக்கிறேன்னு யோசிக்கிறீங்களா? கதைப்படி, சண்டைக் காட்சிகள்ல நான் ஷோல்டர் விறைக்காம, முஷ்டி முறுக்காம சும்மா ... |
| Posted: 01 Nov 2013 01:09 PM PDT டைனமைட்டைக் கண்டறிந்த ஆல்ஃபிரெட் நோபல், ஒருநாள் செய்தித்தாளைப் பார்த்தபோது, 'டைனமைட்டைக் கண்டறிந்த மரண வியாபாரி மரணம்' என்று தவறான செய்தி வெளியாகி இருந்தது. இதைப் பார்த்து மனம் நொந்துபோன நோபல், தன் பெயர் இவ்வாறு அழைக்கப்படக் கூடாது என்று நினைத்தார். தனது சொத்துகளைப் பயன்படுத்தி, மனிதகுல முன்னேற்றத்துக்குப் பாடுபடும் பல்துறை அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று உயில் எழுதினார். அதன் அடிப்படையில்தான், 1901-ம் ஆண்டிலிருந்து இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் ... |
| அனைவருக்கும் ஈகரையின் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள் Posted: 01 Nov 2013 01:04 PM PDT அனைவருக்கும் ஈகரையின் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்! ஏற்றமிகு வாழ்வு அமையப்பெற்று அனைவரும் வாழ்வின் அனைத்து வறுமைகளும் நீங்கி நிறைவான செல்வத்துடன் , நோய் நோடி இல்லாமல் நலமுடன் வாழ இத்தீபதிருநாளில்வாழ்த்துகிறோம். |
| Posted: 01 Nov 2013 01:03 PM PDT 'திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றிய தி.மு.க. செய லாளர் பாஸ்கர் சுந்தரம், பூண்டி ஒன்றியச் செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் உள்கட்சி தேர்தலில் குழப்பம் விளைவித்ததால், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள்' என்று முரசொலியில் கடந்த 11-ம் தேதி ஓர் அதிரடி அறிவிப்பு. இதைக் கண்டித்து, மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் துரைசாமி உட்பட எட்டு ஒன்றியச் செயலாளர்கள், இரண்டு நகரச் செயலாளர்கள், நான்கு பேரூர் செயலாளர்கள், மூன்று பொதுக்குழு உறுப் பினர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தைத் தலைமைக்கு அனுப்பி அதிரடிக்குப் ... |
| வெளியூரிலிருந்து பெண் எடுப்பதுமில்லை கொடுப்பதுமில்லை! Posted: 01 Nov 2013 01:02 PM PDT ஆணோ, பெண்ணோ கல்யாண வயது வந்து திருமணம் ஆகவில்லை என்றால், "ஏதாவது ஒரு ஊருல உனக்குனு ஒண்ணு பொறந்திருக்கும்' என்பார்கள். ஆனால் இந்த ஊரில் மட்டும் "உனக்குனு எந்தத் தெருவில் பொறந்திருக்கோ' என்றுதான் சொல்வார்கள். காரணம், நூறாண்டுகளுக்கு மேலாக கரூர் அருகே உள்ள பள்ளப்பட்டியில் வெளியூரிலிருந்து பெண் எடுப்பதுமில்லை, பெண் கொடுப்பதுமில்லையாம். "இது எப்படி உங்கள் ஊரில் சாத்தியப்படுகிறது' என்று பள்ளப்பட்டி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் முனவர் ஜானிடம் கேட்டோம். "இந்த வழக்கம் தலைமுறை தலைமுறையாக எங்கள் ஊரில் ... |
| மதுரையில் மலேசியப் பைங்களிகள்... Posted: 01 Nov 2013 01:01 PM PDT தமிழையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பேணிக் காப்பதில் மலேசியத் தமிழர்களுக்கு நிகர் வேறு யாரும் இருக்க முடியாது. அதை நிரூபிக்கும் வகையில் மலேசிய ஆஸ்ட்ரோ வானவில் நிறுவனம், மலேசிய ஆண் பெண் கலைஞர்கள் 20 பேரை தமிழகத்திற்கே அழைத்து வந்து தமிழக நாட்டுப்புறக் கலைகளை, தமிழகக் கலைஞர்களைக் கொண்டே பயிற்சி அளித்திருக்கிறது. சென்னை ஷிர்டி டெலிவிஸ்டாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டின் பேரில் அவர்களுக்கு மதுரையில் இருந்து 35 கிமீ தூரத்திலுள்ள தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கும் கலாச்சார மையமான கடம்பவனம் மற்றும் சமணர்கள் ... |
| ஒரு ராத்திரி என்கூட தங்கினா, பிறவிப் பயனை அடைவாய்! - திருவள்ளூரில் ஒரு தில்லாலங்கடி Posted: 01 Nov 2013 12:55 PM PDT ''திருவள்ளுரில் இருக்கும் ஒரு போலி சாமியார் மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்யும் இளைஞர்களையும் இளம் பெண்களையும் மூளைச்சலவை செய்து, தனது பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்துகிறார். அந்த சாமியாரால் பல இளம்பெண்கள் வாழ்க்கை சீரழிகிறது. எப்படியாவது காப்பாத்துங்க சார்'' - ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66802929) ஒரு பெண் குரல் இப்படி நடுக்கத்துடன் பேசியது. அந்தப் பெண்ணைச் சந்தித்தோம். பெயரை வெளியிட அவர் விரும்பவில்லை. பதற்றத்துடன் பேசினார். ''நான் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்றேன். எனக்கு ... |
| Posted: 01 Nov 2013 12:55 PM PDT மலைவாழ் மக்களின் தலைவரைச் 'சுட்ட கதை!' ராம்கி ரசிகன் பாலாஜியும், வலது காது கேட்காத வெங்கியும் சிரிப்பு போலீஸ்காரர்கள். அவர்கள், பணிக்குச் சேர்ந்த கோரமலை பகுதியின் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த லட்சுமிப்ரியாவைக் காதலிக்கிறார்கள். இந்த நிலையில் மலைவாழ் மக்களின் தலைவர் எம்.எஸ்.பாஸ்கர், மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்படுகிறார். 'அப்பாவைக் கொலை செய்தவனை அழிப்பேன்' என்று சபதமெடுத்துப் புறப்படுகிறார் லட்சுமிப்ரியா. ஒரு திகீர் திருப்பத்தில் அடையாளம் தெரியாத ஒருவரைச் சுட்டுவிடுகிறார் பாலாஜி. எம்.எஸ்.பாஸ்கரைச் ... |
| பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Posted: 01 Nov 2013 12:41 PM PDT புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிறிய பேருந்துகளில் வரையப்பட்டிருக்கும் இலைகள்தான் இப்போதைய அரசியல் ஹாட்! 'அது இரட்டை இலை அல்ல; நான்கு இலைகளைக் கொண்டவை. பசுமையான சூழலைக் குறிக்கிறது' என்று சட்டசபையில் திருவாய் மலர்ந்திருக்கிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. இந்தநிலையில், ஜெயலலிதா தலை மையிலான அ.தி.மு.க. அரசு, பசுமையில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறது என்பதை அறிய சென்னையில் அரசுக் கட்டுப்ப£ட்டில் உள்ள பூங்காக்களுக்கு விசிட் அடித்தோம். தலைமைச் செயலகத்துக்கு ... |
| தீபாவளி பண்டிகை: ஆளுநர் உள்பட தலைவர்கள் வாழ்த்து Posted: 01 Nov 2013 12:35 PM PDT சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி மக்களுக்கு ஆளுநர் உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் ரோசையா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்த தீப ஒளி திருநாள், மக்களின் இதயங்களில் அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தி, அமைதியையும் வளர்ச்சியையும் வளத்தையும் கொடுக்கட்டும் என தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த், மகிழ்ச்சியுடன் குடும்பத்தோடும் சுற்றத்தாரோடும் தீபாவளியைக் கொண்டாட வாழ்த்தியுள்ளார். மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தமது வாழ்த்துச் ... |
| தீபாவளி சமயத்துல கட்சி மாறினது தப்பா போச்சு...! Posted: 01 Nov 2013 11:39 AM PDT - தலைவருக்கு இது தலை தீபாவளி மாதிரி...! - எப்படி சொல்றே? - புது ஜெயில்ல கொண்டாடுறாரே...! - --------------------------------------------------------------- - உங்க வயித்தை ஸ்கேன் பண்ணிப் பார்த்ததுல, கல்லு மாதிரி ஏதோ ஒண்ணு உள்ளே இருக்கே..? - அது என் மனைவி தீபாவளிக்கு செஞ்ச மைசூர்பாகுதான் டாக்டர்...! - ----------------------------- - தலைவர் இப்ப தாவினது ரொம்ப சின்னக்கட்சி போலிருக்கு..! - எப்படி சொல்றே? - கட்சி தாவினதுக்கு கார் கொடுக்காம, வெறும் ஸ்வீட்டும் பட்டாசும் கொடுத்து ... |
| Posted: 01 Nov 2013 11:15 AM PDT உலகத் தமிழ் நட்புகளுக்கு உங்கள் யாழ்பாவாணனின் தீபாவளி வாழ்த்துகள்! |
| சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானி இன்று மண்ணில் மலர்ந்த நாள். Posted: 01 Nov 2013 10:52 AM PDT உறவுகள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஈகரையின் நிறுவுனர் சிவா அண்ணா-வின் புதல்வி ஷிவானிஸ்ரீ இன்று இரவு இந்திய நேரப்படி சுமார் 8.30 மணியளவில் மண்ணில் மலர்ந்துள்ளார் என்பதை எல்லையில்லா மகிழ்ச்சியுடன் அறிவித்துக்கொள்கிறோம். தாயும் சேயும் நலமாக உள்ளனர். உறவுகள் அனைவரும் குழந்தையின் எதிர்காலம் சிறக்க தங்களின் ஆசிர்வாதங்களை அளவிடாமல் அள்ளி வழங்கிட வேண்டுகிறோம். தங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்க சிவா அண்ணாவின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். வாழ்த்துக்கள் அண்ணா. |
| உறுப்பினர் அறிமுகம் -சுதாசெந்தில் Posted: 01 Nov 2013 10:25 AM PDT வணக்கம் ......friends உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. சாண்டில்யனைத் தேடித் தான் ஈகரை வந்தேன். எனக்கு சாண்டில்யன் இந்திரா சவுந்தராஜன் மிகவும் பிடிக்கும். நிற்க......... என்னைப் பற்றி....... ஒரு மகள், என் கணவர், நான் அளவான , அழகான குடும்பம். படிப்பு தமிழ் பி.எட்..... குடும்ப தலைவி. நன்றி friends. |
| Posted: 01 Nov 2013 09:54 AM PDT மது ! கவிஞர் இரா .இரவி ! இரண்டு எழுத்து எதிரி ஆக்கிடும் ஒரு மாதிரி மது ! உன்னை மறந்து உளறிட வைக்கும் மது ! இடமாற்றம் செய்யும் ஆறிலிருந்து ஐந்திற்கு மது ! மெல்லக் கொல்லும் விசம் மேனியைச் சிதைக்கும் மது ! மதிப்பை இழப்பாய் மண்ணில் வீழ்வாய் மது ! வருமானம் அழிக்கும் வேதனை விளைவிக்கும் மது ! உறவுகள் வெறுக்கும் உணர்வுகள் மங்கும் மது ! என்றாவது என்று தொடங்கி என்றும் என்றாகும் மது ! வாழ்நாளைக் குறைக்கும் வழியை மாற்றும் மது ... |
| Posted: 01 Nov 2013 09:49 AM PDT ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருவர் ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது. அடுத்தவன் ... |
| Posted: 01 Nov 2013 09:45 AM PDT - எதுக்காக ஊசி வெடியை மட்டும் தீபாவளி வர்றதுக்கு முன்னாடியே வெடிக்கிறீங்க? - இது 'தடுப்பு ஊசி' வெடிங்க…! - ————————————————————– - அந்த சைக்கிள் கடைக்காரர் சரியான ஏமாற்றுப் பேர்வழின்னு சொல்றியே…ஏன்? - இங்கு சங்கு சக்கரம் நல்ல முறையில் பஞ்சர் பார்க்கப்படும்னு போர்டு போட்டிருக்காரே…! - ————————————————— - ஏன் கபாலி…இந்த தீபாவளிக்கு நீ உன் மாமனார் வீட்டுலயே திருடறதுக்கு பிளான் பண்ணியிருக்கியாமே? - ஆமா ஏட்டய்யா! இது எனக்கு 'தல திருட்டு'…! - ==================================== (படித்ததில் ... |
| Posted: 01 Nov 2013 09:36 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ராஜினாமா? Posted: 01 Nov 2013 09:36 AM PDT சென்னை: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் பதவியை ஜி.கே.வாசன் ராஜினாமா செய்யக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.இலங்கையில் இம்மாதம் 15-ந் தேதி காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பது தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் வலியுறுத்தல்.இம்மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்தும் உள்ளார். இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மத்திய ... |
| எங்காத்து தீபாவளி பட்டாசு பாருங்கோ :) Posted: 01 Nov 2013 08:46 AM PDT அன்பான தீபாவளி வாழ்த்துகள் நண்பர்களே ! |
| Posted: 01 Nov 2013 08:31 AM PDT என்னவளே, அருகே இருப்பவர்கள் எல்லாம் மத்தாப்பும் புது கடையில் துணியும் எடுத்து விட்டார்கள் நம் எப்போ போலாம் என்று நீ கேட்க " போகலாம் எல்லோரும் மருந்த குடிசுட்டுன்னு" நான் கோபமாக சொல்ல " உனக்கு எதுக்கிய பொண்டாட்டி" என் நீ கேட்டு விட்டு தாரை தாரையாய் கண்ணீரை நீ சிந்தி, மூக்கையும் சிந்தி கதவோர ஜன்னலில் தலைசைத்து முக்கலும் முனகலுமாய் ....... நீ அழுது விடுகிறாய் நான் ?????? எனக்கு மட்டும் என்ன ஆசையா ? இப்படி உன்னை அழ வைக்க...... காரணம் சொல்லி தப்பி விடலாம் பணக்காரனாக இருந்திருந்தால்...... சிவகாசியில் ... |
| நடிகர் சந்தானம் உள்பட திரைத் துறையினர் வீடுகளில் வருமானவரி சோதனை Posted: 01 Nov 2013 05:53 AM PDT - காமெடி நடிகர் சந்தானம் மற்றும் சினிமா தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, ஏ.எம்.ரத்னம் வீடுகளிலும், அலுவலகங்களிலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். - ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது. சந்தானம் நடித்த 'ஆல் இன் அல் அழகுராஜா' படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. மேலும் 15 புதுப்படங்களில் நடித்து வருகிறார். - தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி தற்போது விஜய், மோகன்லால் நடிக்கும் 'ஜில்லா' படத்தை தயாரித்து வருகிறார். இப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. - தயாரிப்பாளர் ... |
| குடிமகன்களும் தீபாவளியுமா 400 கோடியும் Posted: 01 Nov 2013 05:50 AM PDT தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,"டாஸ்மாக்' கடைகளில், 12 நாட்களுக்கு தேவையான, மதுபானங்களை இருப்பு வைக்க, உத்தரவிடப்பட்டு உள்ளது. தீபாவளி தினமான, 2ம் தேதி அன்று, ஒரே நாளில், 150 கோடிக்கு,"சரக்கு' விற்பனையாகும் என்றும்,1ம் தேதி முதல், 4ம் தேதி வரையிலான, நான்கு நாட்களில், மொத்தம், 400 கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில், 6,800 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன; நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்பனையாகிறது. டாஸ்மாக் கடைகளில், முன்பு, 90 நாட்களுக்கு ... |
| நான் பத்த வெச்சுட்டா என் பேச்சை நான் பத்த வெச்ச பட்டாசே கேட்காது… Posted: 01 Nov 2013 05:45 AM PDT தலைவர் ஏன் அப்செட்டா இருக்கார்? - எதிர்க்கட்சியை உடைச்ச அவரால, மனைவி செஞ்ச மைசூர்பாகை உடைக்க முடியலியாம்..! - —————————- - வெடி தனியா, திரி தனியா தர்றீங்களே…இது என்ன புது வெடியா..? - ஆமா…இது வாஸ்து வெடி, வாஸ்துப்படி வெடியில திரி இருக்கக் கூடாதாம்…! - ——————————– - என்ன டாக்டர் இது…மருந்துச் சீட்டுல புஸ்வாணம் சரவெடி, சாட்டைன்னு எழுதித் தர்றீங்க? - தீபாவளி நேரமாச்சே! எங்க மெடிகல் ஷாப்புல அப்படியே பட்டாசும் விற்கிறோம்…! - ———————————- - தலைவர் கன்னா பின்னான்னு உளர்றாரா? - ஆமா…ஒரு ... |
| பாம்பு பட்டாஸ் வெடிக்குமுன் பால் ஊத்துங்க...!! Posted: 01 Nov 2013 05:42 AM PDT ![]() |
| மனிதனுக்குள் மிருகம்-மதன் நூலினை டவுன்லோட் செய்ய Posted: 01 Nov 2013 05:41 AM PDT மனிதனுக்குள் மிருகம்-மதன் நூலினை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/88t1qv5xai87dn7/ManithanukulMirugam-Mathan%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| பட்டாஸ் கடையில என்ன சோதனை நடக்கிறது..!! Posted: 01 Nov 2013 05:35 AM PDT - தீபாவளி தத்துவம் - என்னதான் தீபாவளி அன்னிக்கு நடக்குற கிரிக்கெட் மேட்ச்னாலும், 'டாஸ்' போட்டுத்தான் பார்ப்பாங்க, பட்'டாஸ்' போட்டுப் பார்க்க மாட்டாங்க..! - ———————————– - ஸ்பீக்கரு: - தீபாவளிக்கு இத்தனை படங்கள் ரிலீஸ் செய்ய அனுமதித்தும், எங்கள் தலைவரை 'ரிலீஸ் செய்ய' அனுமதிக்காத இந்த அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்..! - —————————————– - தூங்கி எழுந்த தலைவர் ஏன் பசங்க மேல கடுப்பா இருக்கார்? - டென் தௌஸண்ட் வாலா பட்டாசை வெடிச்சு அவரோட பிரதமர் கனவை கலைச்சுட்டாங்களாம்…! - —————————————- - அந்த ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
