Tamil Star |
- செவ்வாய் கிரகத்தில் வாழ உங்களுக்கு ஆசையா?
- உலகம் அழியப் போகிறதா? அதற்கான ஆதாரமா இது?
- தரவரிசைப் பட்டியல்! சாதனை படைத்த டிவில்லியர்ஸ், பின்தங்கிய டோனி
- டெஸ்ட் அரங்கில் 100வது வெற்றியை பதிவு செய்தது தென் ஆப்ரிக்கா
- iPhone மற்றும் iPad சாதனங்களுக்கான Avire அன்டி வைரஸ்
- ஜிமெயிலில் Handwriting உள்ளீட்டு வசதியை உருவாக்கிக்கொள்வதற்கு
- இந்தியாவில் தேடப்படும் பயங்கர பெண் குற்றவாளிகள்
- ஒட்டுக்கேட்கும் விவகாரம் ஒபாமாவுக்கு தெரியாது: புலனாய்வுப் பிரிவு
- தயாளு அம்மாளிடம் விசாரணை தொடங்கியது!
- தந்தையை அடித்துக் கொலை செய்த மகன்
| செவ்வாய் கிரகத்தில் வாழ உங்களுக்கு ஆசையா? Posted: 28 Oct 2013 06:05 AM PDT |
| உலகம் அழியப் போகிறதா? அதற்கான ஆதாரமா இது? Posted: 28 Oct 2013 05:53 AM PDT |
| தரவரிசைப் பட்டியல்! சாதனை படைத்த டிவில்லியர்ஸ், பின்தங்கிய டோனி Posted: 28 Oct 2013 05:42 AM PDT டெஸ்ட் போட்டியில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) துபாயில் நேற்று வெளியிட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய தென் ஆப்ரிக்காவின் டிவில்லியர்ஸ் 909 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறினார். இதன்மூலம் 900 அல்லது அதற்கு மேல் புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த 28வது வீரர் என்ற பெருமை பெற்றார். முதலிடத்தில் இருந்த மற்றொரு தென் ஆப்ரிக்க வீரர் ஹசிம் ஆம்லா, 898 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். மூன்றாவது இடத்தில் மேற்கிந்திய […] |
| டெஸ்ட் அரங்கில் 100வது வெற்றியை பதிவு செய்தது தென் ஆப்ரிக்கா Posted: 28 Oct 2013 05:28 AM PDT டெஸ்ட் அரங்கில் 100வது வெற்றியை பதிவு செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அதிகாரி ஹாரூண் லார்கட் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 1889ம் ஆண்டில் போர்ட் எலிசபெத் நகரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி மூலம் தென் ஆப்ரிக்க அணி முதன்முதலில் டெஸ்ட் அரங்கில் காலடி வைத்தது. இதன் பின் 1970ல் தென் ஆப்ரிக்க அரசின் இனவெறி கொள்கையை எதிர்த்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி), சர்வதேச போட்டிகளில் விளையாட தென் ஆப்ரிக்காவுக்கு தடைவிதித்தது. பின்பு […] |
| iPhone மற்றும் iPad சாதனங்களுக்கான Avire அன்டி வைரஸ் Posted: 28 Oct 2013 05:22 AM PDT வைரஸ் பாதுகாப்பு மென்பொருட்களுள் பிரபல்யம் வாய்ந்த Avira அன்டிவைரஸ் மென்பொருள் அப்பிளின் iPhone மற்றும் iPad சாதனங்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. முற்றிலும் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மென்பொருளின் மூலம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வைரஸ்களிலிருந்து iOS சாதனங்களை பாதுகாக்கக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மென்பொருளின் மூலம் கைப்பேசியின் மின்கலத்தின் நிலையினை அறிந்துகொள்ள முடிவதுடன், சேமிப்பு சாதனங்களில் உள்ள வழுக்களை சீரமைத்துக்கொள்ளவும் முடியும். தரவிறக்கச் சுட்டி This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜிமெயிலில் Handwriting உள்ளீட்டு வசதியை உருவாக்கிக்கொள்வதற்கு Posted: 28 Oct 2013 05:16 AM PDT கூகுள் நிறுவனமானது ஜமெயில் மற்றும் கூகுள் டொக்ஸ் ஆகியவற்றிற்கு தட்டச்சு மூலம் மட்டுமின்றி தற்போது கையால் எழுத்தும் எழுத்துக்களை உள்ளீடு (Input) செய்யும் வசதியை தந்துள்ளது. இதன் மூலம் கூகுள் டொக்ஸில் 20 இற்கு மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்தியும், ஜிமெயிலில் 50 இற்கு மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்தியும் உள்ளீடு செய்ய முடியும். இதனை செயற்படுத்துவதற்கு முதலில் ஜிமெயிலினை ஓப்பன் செய்து, தொடர்ந்து செட்டிங்ஸ் செய்வதற்கான ஐகானை கிளிக் செய்யவும். அதில் General பகுதியில் தென்படும் Enable input […] |
| இந்தியாவில் தேடப்படும் பயங்கர பெண் குற்றவாளிகள் Posted: 28 Oct 2013 03:51 AM PDT இந்தியாவில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளிகளில் ஏராளமான பெண்களும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு தலைமறைவாகி உள்ளனர். இந்தப் பெண் குற்றவாளிகள் பல ஆண்டுகளாக பொலிசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தலைமறைவாக இருந்து வருகின்றனர். இத் தலைமறைவு குற்றவாளிகளின் முகவரிகள் இதோ. நிழல் உலக தாதா டைகர் மேனனின் மனைவி ரேஷ்மா மேனன். 1993ம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முதன்மை குற்றவாளிகளில் ஒருவர் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒட்டுக்கேட்கும் விவகாரம் ஒபாமாவுக்கு தெரியாது: புலனாய்வுப் பிரிவு Posted: 28 Oct 2013 03:24 AM PDT
இந்நிலையில் ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உள்பட 35 நாட்டு தலைவர்களின் தொலைபேசி பேச்சுகளை என்எஸ்ஏ ஒட்டு கேட்டதாக ஸ்நோடென் தகவல் வெளியிட்டார். இதனால் ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏஞ்சலாவின் உரையாடல்களை கடந்த 2010ம் ஆண்டில் இருந்து அமெரிக்கா ஒட்டு கேட்கிறது என்றும், இந்த விவகாரம் ஜனாதிபதி ஒபாமாவுக்கு தெரியும் என்றும் ஜேர்மனி பத்திரிகை கூறியிருந்தது. இதுகுறித்து என்எஸ்ஏ செய்தி தொடர்பாளர் வான்னி வின்ஸ் கூறுகையில், ஜேர்மனியின் குற்றச்சாட்டில் உண்மையில்லை. கடந்த 2002ம் ஆண்டு முதலே ஐரோப்பிய நாடுகளின் எலக்ட்ரானிக் ஊடகங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக 2010 முதல் ஜேர்மனியும் கண்காணிக்கப்பட்டது. இதுகுறித்து ஜனாதிபதி ஒபாமாவுக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் தெரியாது. பிரதமர் ஏஞ்சலாவின் டெலிபோன் உரையாடலை ஒட்டு கேட்க அவர் உத்தரவிடவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| தயாளு அம்மாளிடம் விசாரணை தொடங்கியது! Posted: 28 Oct 2013 02:54 AM PDT 2ஜி முறைகேடு தொடர்பாக திமுக. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் சென்னை எழும்பூர் பெரு நகர குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி விசாரணையை தொடங்கியுள்ளார். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி கொடுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த வழக்கில் கலைஞர் தொலைக்காட்சியின் பிரதான பங்குதாரரான தயாளு அம்மாள் நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது. ஆனால் தயாளு […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் Posted: 28 Oct 2013 02:42 AM PDT கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை அருகேயுள்ளது கொடுவாயூர். இங்குள்ள மயிலாடு நாலுசென்டு காலனியைச் சேர்ந்த தொழிலாளி கங்காதரன் நாயர்(வயது 59). இவரது மகன் வினோத்குமார்(24). எந்த வேலைக்கும் செல்லாத வினோத்குமார் அடிக்கடி வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை போடுவார். வழக்கம் போல் நேற்று மாலை 5 மணி அளவில் தனது தந்தையுடன் தகராறு செய்தார். அப்போது கங்காதரன் நாயர் மகனை வாய்க்குவந்தபடி திட்டியதாக தெரிகிறது. இதனால் வினோத்குமார் ஆத்திரமடைந்து வீட்டில் கிடந்த கம்பியை எடுத்து கங்காதரன் நாயரின் தலையில் தாக்கினார். […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




