Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மத்திய பிரதேசத்தில் குளத்தில் பூத்திருக்கும் தாமரையை மறையுங்கள்: தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கடிதம்

Posted: 28 Oct 2013 10:53 PM PDT

மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 25–ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு வருகிற 1–ந் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜ.க. கட்சி மொத்தம் உள்ள 230 இடங்களில் 150 முதல் 160 இடங்களை கைப்பற்றி

மணிப்பூரில் குண்டு வெடிப்பு: 4 பேர் காயம்

Posted: 28 Oct 2013 10:33 PM PDT

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இன்று காலை 6 மணிக்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. மார்க்கெட் காம்பளக்ஸ் பகுதியில் பள்ளி அருகே நடந்த இந்த குண்டு வெடிப்பில் 4 பேர் காயம் அடைந்தனர். முதல்–மந்திரி இகோபி

ஆந்திராவில் பலத்த மழை: வெள்ளத்தில் பயிர்கள் அழிந்ததால் 6 விவசாயிகள் தற்கொலை

Posted: 28 Oct 2013 10:22 PM PDT

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திராவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்தது. இதனால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. மாநிலத்தில் 14 மாவட்டங்கள்

உம்மன்சாண்டி மீது கல்வீச்சு: கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு

Posted: 28 Oct 2013 10:14 PM PDT

கேரள மாநிலம் கண்ணூரில் போலீஸ் தடகள வீரர்களுக்கு பாராட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த முதல்–மந்திரி உம்மன்சாண்டியை கண்டித்து கண்ணூர் கலெக்டர் அலுவலம் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கறுப்பு கொடி போராட்டம் நடத்தினர். அப்போது உம்மன்சாண்டியின் கார் மீது கல்வீசப்பட்டது. இதில் காரில் இருந்த உம்மன் சாண்டியின் நெற்றி, தலை, மார்பு பகுதிகளில் கற்கள் பட்டும்,

ஷீலா தீட்சித்துக்கு வெங்காயம் பரிசு: பா.ஜ.க.வினர் கூடையில் அனுப்பினார்கள்

Posted: 28 Oct 2013 09:44 PM PDT

வெங்காயத்துக்கு திடீரென பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் சுமார் ரூ. 100க்கு விற்பனை ஆகிறது. டெல்லி மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த விலை உயர்வு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் டிசம்பர் மாதம் 4–ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் வெங்காயம் விலையை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு பா.ஜ.க. தீவிர போட்டி பிரசாரத்தில் இறங்கியுள்ளது. இதை முறியடிக்க, வெங்காயம் விலையை குறைக்க முதல்–மந்திரி ஷீலாதீட்சித் கடுமையாக போராடி வருகிறார். டெல்லி முழுவதும் 125 மொபைல் வேன்கள் மூலம் அவர் ஒரு கிலோ

ரூ.6 கோடி ஏமாற்றிய வழக்கில் கைதான மோசடி பெண்ணின் ஆடம்பர பங்களாக்கள் போலீசார் விசாரணை

Posted: 28 Oct 2013 09:31 PM PDT

கேரள மாநிலம் எர்ணாகுளம், கொச்சி, திருவனந்தபுரம் போன்ற பகுதிகளில் தனியார் நிறுவனம் நடத்தியவர் கவிதாபிள்ளை (வயது 33). இவரது நிறுவனம் மூலம் ஏராளமானவர்களிடம் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சீட்டு வாங்கி தருவதாக ரூ.6 கோடி வரை பணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் பணம் கொடுத்தவர்களுக்கு மருத்துவ கல்லூரி சீட்டு வாங்கி தராததால் கவிதாபிள்ளை மீது எர்ணாகுளம் போலீசில் பல்வேறு புகார்கள் குவிந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து எர்ணாகுளம் அருகே திருநெல்லியில் தலைமறைவாக இருந்த கவிதா பிள்ளையை கைது

டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த கிரித்பரிக் கமிட்டி பரிந்துரை

Posted: 28 Oct 2013 09:25 PM PDT

டீசல் விற்பனை மூலம் எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிகட்ட மாதந்தோறும் டீசல் விலை லிட்டருக்கு 40 முதல் 50 காசுகள் உயர்த்தப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் விலை நிர்ணயம் குறித்து கிரித்பரிக் கமிட்டி ஆய்வு செய்தது. இது தயாரித்துள்ள அறிக்கையில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை

பாராளுமன்ற தேர்தல்: சுப்பிரமணிய சுவாமி மும்பையில் போட்டி

Posted: 28 Oct 2013 09:24 PM PDT

ஜனதா கட்சியை நடத்தி வந்த சுப்பிரமணியன் சுவாமி கடந்த ஆகஸ்டு மாதம் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அவரை மும்பை வட கிழக்கு பாராளுமன்றத் தொகுதியில் களம் இறக்க பா.ஜ.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். மும்பை வடகிழக்கு தொகுதி சுப்பிரமணியன் சுவாமிக்கு புதிய இடம் அல்ல. அந்த தொகுதியில் அவர் 1977 மற்றும் 1980–ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வென்று 2 தடவை எம்.பி. ஆக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1977–ல் அவர் அங்கு பாரதீய லோக்தளம் என்ற கட்சி சார்பில் போட்டியிட்டு

ஓட்டுப்பதிவு எந்திரத்தில் சேர்க்கப்படும் ‘நோட்டா’ வாக்கு பற்றி தேர்தல் கமிஷன் விளக்கம்

Posted: 28 Oct 2013 08:35 PM PDT

ஓட்டுப்பதிவு எந்திரம் மற்றும் வாக்குச்சீட்டில் சேர்க்க வேண்டிய 'நோட்டா' குறித்த விளக்கத்தை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. கடந்த மாதம் 27-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு, ஓட்டுப்பதிவு எந்திரத்தில் 'நோட்டா' என்று சொல்லப்படும் 'யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை' என்ற பொத்தான் மற்றும் ஓட்டுச்சீட்டில் இது குறித்த விருப்பப் பெட்டியை அச்சிடுமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில், யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் தங்களின் வாக்கினை 'யாருக்கும் அளிக்க வேண்டாம்' என்று ரகசிய வாக்களிப்பின் வழியாக

கல் வீச்சில் காயம் எதிரொலி: உம்மன் சாண்டிக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு

Posted: 28 Oct 2013 03:20 PM PDT

சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசின் மந்திரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கேரள எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

மானநஷ்ட வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத ஷீலா தீட்சித்துக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்

Posted: 28 Oct 2013 03:04 PM PDT

டெல்லி மக்களை ஏமாற்றியவர் என்றும் வில்லி என்றும் வேதாளம் என்றும் தன்னை கூறியதாகவும் டெல்லி பா.ஜ.க. தலைவர் விஜேந்தர் குப்தா மீது டெல்லி முதல் மந்திரி ஷீலா தீட்சித் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

டெல்லி ஆஸ்பத்திரியில் புற்றுநோயாளி பெண் தூக்கிட்டு தற்கொலை

Posted: 28 Oct 2013 12:07 PM PDT

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குரு தேஜ் பகதார் அரசு மருத்துமனை உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள கேண்டீன் அருகே 28 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சடலம் தூக்கில் தொங்குவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

சகாரா நிறுவனத்தின் ரூ. 20 ஆயிரம் கோடி சொத்துக்களை 'செபி'யிடம் ஒப்படைக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted: 28 Oct 2013 11:36 AM PDT

சகாரா ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் சகாரா வீட்டுவசதி முதலீட்டு நிறுவனங்களுக்கு எதிரான நிதி மோசடி வழக்கில் முதலீட்டாளர்களின் பணம் ரூ.17,400 கோடியை மூன்று மாதங்களுக்குள் 15 சதவீத வட்டியுடன் திருப்பித்தருமாறு சகாரா குழுமத்தின் இரண்டு நிறுவனங்களுக்கு உச்ச

டெல்லி அரசு சார்பில் 125 வேன்கள் மூலம் ரூ. 50க்கு வீதி வீதியாக வெங்காயம் விற்பனை

Posted: 28 Oct 2013 10:48 AM PDT

நாடெங்கும் வெங்காயத்தின் விலை கடும் உயர்வை சந்தித்து வரும் நிலையில் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயில் இருந்து 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

ரஷ்யாவுக்கான இந்திய உயர் தூதராக பி.எஸ்.ராகவன் நியமனம்

Posted: 28 Oct 2013 10:38 AM PDT

ரஷ்யாவுக்கான இந்திய உயர் தூதராக பி.எஸ்.ராகவனை மத்திய அரசு நியமித்துள்ளது. 1979-ம் ஆண்டு தொகுப்பை சேர்ந்த ஐ.எப்.எஸ். பட்டதாரியான ராகவன், 1981-82 ஆண்டுகளில் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் இரண்டாம் நிலை செயலாளராக பணியாற்றியவர்.

அருண் ஜேட்லியின் கருத்து பற்றி விசாரிக்க அதிகாரிகளுக்கு நிதிஷ் குமார் உத்தரவு

Posted: 28 Oct 2013 09:11 AM PDT

நேற்று, நரேந்திர மோடி பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதான பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார். அதற்கு முன்னதாக அங்கு 7 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். 83 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அரசின் அலட்சியமே காரணம் என்று பாரதிய ஜனதா நேற்று குறைகூறியது.

மத்திய அரசு எச்சரித்தும் மோடி பொதுக்கூட்டத்தை நிதிஷ் அரசு அலட்சியப்படுத்தியது: அருண் ஜேட்லி

Posted: 28 Oct 2013 09:04 AM PDT

பீகார் மாநில தலைநகர் பாட்னா காந்தி மைதானத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார். அதற்கு முன்னதாக அந்த மைதானத்திலும் அதனை சுற்றியுள்ள 6 இடங்களிலும் நாட்டு வெடி குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பாட்னா சம்பவத்திற்கும் கயா குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருக்கலாம்: புலனாய்வு அமைப்பு சந்தேகம்

Posted: 28 Oct 2013 08:19 AM PDT

பீகார் மாநிலம் பாட்னாவில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்ட அரங்கில் நேற்று நடந்த குண்டுவெடிப்புகளில் 6 பேர் கொல்லப்பட்டனர். 80-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் மதானியின் மகன்கள் சட்டசபை முன் தர்ணா

Posted: 28 Oct 2013 07:46 AM PDT

பெங்களூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நசீர் மதானி கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மதானி பெயர் தவறாக சேர்க்கப்பட்டிருப்பதாக மக்கள் ஜனநாயக கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

நாட்டில் பொதுவான தேசிய மக்கள் தொகை கொள்கையை கடைபிடிக்க ஆர்.எஸ்.எஸ். பரிந்துரை

Posted: 28 Oct 2013 06:31 AM PDT

ஆர்.எஸ்.எஸ். இணைச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொஸ்பேல் சமீபத்தில் ஒவ்வொரு இந்துக்குடும்பமும் 3 குழந்தைகளை பெறவேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், மும்பையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் தடா ஐடேட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மக்கள் தொகை குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு அளித்த பதில் வருமாறு:-


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™