Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இலங்கை அணி வீரர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர் விடுதலை

Posted: 02 Oct 2013 11:22 PM PDT

லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் முக்கிய சந்தேகநபராக கருதப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது லாகூரில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுபைர் என்ற நாயக் முகமதுவின் விளக்கமறியலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு நீதிமன்றத்தில் வலியுறுத்தியது. இந்தக் கோரிக்கையை லாகூர் உயர்நீதிமன்ற […]

This posting includes an audio/video/photo media file: Download Now

லல்லு பிரசாத்துக்கு இன்று தண்டனை!

Posted: 02 Oct 2013 11:14 PM PDT

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட லல்லுவுக்க இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. பீகார் மாநிலத்தில் ரூ.950 கோடி மாட்டுத்தீவன ஊழல் வழக்கு கடந்த 17 வருடங்களாக 53 பிரிவுகளாக நடக்கிறது. இதில் அந்த மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதள கட்சி தலைவரும், முன்னாள் ரெயில்வே மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் சைபாசா மாவட்ட கருவூலத்தில் மோசடியாக ரூ.37 கோடியே 70 லட்சம் ரூபாய் பெற்ற வழக்கில் ராஞ்சி சிறப்பு சி.பி.ஐ. […]

This posting includes an audio/video/photo media file: Download Now

ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி மக்களை கொல்ல திட்டமிட்ட பிரதம

Posted: 02 Oct 2013 11:03 PM PDT

ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி பழங்குடியின மக்களை கொன்றுவிட இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் திட்டமிட்டது தற்போது தெரியவந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த பிரபல வரலாற்று புத்தக ஆசிரியர் கைல்ஸ் மில்டன். இவர் ஸ்காட்லாந்தின் விக்டவுனின் நடைபெற்று வரும் விக்டவுன் புத்தக விழாவில் கலந்துகொண்டு தனது புதிய புத்தகமான ரஷ்யன் ரூலெட் குறித்து விளம்பரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதில் மிகவும் விருப்பமாக இருந்தார். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

பீகாரில் உலகின் மிகப்பெரிய கோயில் கட்ட ஏற்பாடு

Posted: 02 Oct 2013 10:40 PM PDT

காரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் 405 அடி உயர கோபுரத்துடன் உலகின் மிகப்பெரிய இந்து கோயில் கட்டப்பட உள்ளது. இந்த கட்டுமான பணிக்கான பூமி பூஜை, துர்கா பூஜை தினமான எதிர்வரும்11ம் தேதி நடத்தப்படுகிறது. பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 125 கி.மீட்டர் தூரத்தில் அமையவுள்ள இந்த கோயிலுக்கு விரட் ராமாயண் மந்திர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோயிலை நிர்மாணிக்கும் பணியை செய்து வரும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆச்சார்யா கிஷோர் குனால் கூறியதாவது:- […]

This posting includes an audio/video/photo media file: Download Now

சீனாவை பின் தள்ளும் இந்தியா!

Posted: 02 Oct 2013 10:32 PM PDT

2050ம் ஆண்டுக்குள் 160 கோடி மக்கள் தொகையுடன் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என பிரான்ஸ் நாட்டின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அதே சமயம் 130 கோடி மக்கள் தொகையுடன் சீனா இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை அப்போது உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 970 கோடியாக உயரும் எனவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. கடந்த 200 ஆண்டுகளில் உலக மக்கள்தொகை 7 மடங்கு அதிகரித்து தற்போது 710 கோடியாக உள்ளது. […]

ரஷ்ய ஜனாதிபதியின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை

Posted: 02 Oct 2013 10:28 PM PDT

2014-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போரில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட புகாரில், அமெரிக்கா தாக்குதல் நடத்த தயாரானது.  இந்நிலையில் சிரியா மீதான தாக்குதலை ரஷ்யா தடுத்து நிறுத்தி, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தது.  அரசியல் ரீதியாகவும் ரஷிய தூதரகம் மூலமும் உரிய நடவடிக்கை எடுத்து போர் பதற்றத்தை தணித்தார் விளாதிமீர் புதின்.  இதனை பாராட்டி, உலக நாடுகளிடையேயான ஆன்மீக ஒருமைப்பாடு மற்றும் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான நகரம் கண்டுபிடிப்பு

Posted: 02 Oct 2013 09:32 PM PDT

வடக்கு ஈராக்கின் குர்திஸ்தான் மாகாணத்தில் புதையுண்டு கிடந்த 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான நகரத்தை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். சப் ஆற்றின் வடக்கு கரை பகுதியில் சட்டு காலா என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள ஒரு பாறைக்கு அடியில் தரைமட்டத்தில் இருந்து 32 அடி ஆழத்தில் புதையுண்டு கிடந்த முன்னர் அபு என்று அழைக்கப்பட்ட சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில்தான் மத்திய கிழக்கு நாடுகளில் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

ராமர் பட்டாபிஷேக ஓவியம் – திப்பு சுல்தானின் வாள் லண்டனில் ஏலம்

Posted: 02 Oct 2013 09:23 PM PDT

மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் வாள், ராமரின் பட்டாபிஷேக ஓவியம் உள்ளிட்ட இந்தியாவின் தொன்மை மிக்க கலைப்பொருட்கள் லண்டனில் வரும் 9ம் தேதி ஏலம் விடப்படுகின்றன. இதில் ராமரின் பட்டாபிஷேகத்தை குறிக்கும் ஓவியத்தை கடவுள்களும், தேவர்களும் பங்கேற்பது போன்ற காட்சிகள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியம் 1 கோடி ரூபாயில் இருந்து 1 1/2 கோடி ரூபாய் வரை விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் போர்வாள் 80 லட்சம் ரூபாயில் இருந்து […]

This posting includes an audio/video/photo media file: Download Now

கூட்டமைப்பின் நேற்றைய கூட்டமும் முடிவின்றி முடிந்தது

Posted: 02 Oct 2013 08:59 PM PDT

வட மாகாண சபை அமைச்சர்கள் தெரிவு தொடர்பில் நேற்று (02) இரவு கொழும்பில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டத்தில் எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை. வடக்கு மாகாண முதலமைச்சரின் பதவிப் பிரமாணம் மற்றும் வடமாகாண அமைச்சரவையின் நியமனம் குறித்த தீர்மானத்துக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று கொழும்பில் கூடியது. இக்கூட்டத்தில் பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்ட போதும் இறுதி முடிகள் எதனையும் எடுக்கவில்லை என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இந்தநிலையில் நாளை (04) […]

மட்டக்களப்பில் பணத்திற்கு பதில் பாலியல்!

Posted: 02 Oct 2013 08:54 PM PDT

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுய தொழிலுக்காக நுண்கடன்களை வழங்கும் நிதி நிறுவனங்களின் சில அதிகாரிகள் கடனை செலுத்த தாமதிக்கும் பெண்களிடம் பாலியல் ரீதியாக நடந்து கொள்ள முற்படுவதாக உள்ளுர் தன்னார்வ தொண்டர் அமைப்புகளின் ஓன்றியமான இணையம் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது. சுய தொழிலுக்காக நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள், கடனை வழங்கிவிட்டு கடனை செலுத்த தாமதிக்கும் பெண்களிடம் அந்த நிறுவன அதிகாரிகள் சிலர் பாலியல் ரீதியாக கடனுக்கு பதிலை தருமாறு கோருவதாக இணையத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள பெண்கள் அமைப்புகளினால் இது தொடர்பாக […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™