மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சீமாந்திர மக்கள் எதிர்ப்பை மீறி தெலுங்கானா மாநிலத்துக்கு ஐதராபாத் தலைநகரம்: மத்திய அரசு முடிவு
- திருச்சூர் அருகே மத்திய சிறையில் காந்தி ஜெயந்தி விருந்து சாப்பிட்ட 42 கைதிகளுக்கு வாந்தி–மயக்கம்
- இந்தியாவிலிருந்து செவ்வாய்க்கு செலுத்தப்படும் விண்கலம்: முதல் கட்ட பணிகள் தொடக்கம்
- போலீஸ் நிலையத்தில் இளம் பெண்ணை கற்பழித்த சப்–இன்ஸ்பெக்டர்
- சித்தூர் அருகே வாகன சோதனையில் லாரி மோதி போலீஸ்காரர் பலி
- திருவனந்தபுரம் அருகே அருவி தடாகத்தில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் பலி
- நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் சந்திரபாபு நாயுடு: பா.ஜனதா கூட்டணியில் தெலுங்கு தேசம் சேருமா?
- நவராத்திரி கொண்டாட்டங்களில் இடம் பெறவிருக்கும் கங்கனம் பாடல்
- அமெரிக்காவின் அரசு அலுவகங்கள் மூடல் நடவடிக்கையால் இந்தியாவில் ஐ.டி. தொழில் பாதிக்குமா?
- ரூ.500 கோடி செலவில் பீகாரில் 405 அடி உயர கோபுரத்துடன் உலகின் மிகப்பெரிய கோயில் கட்ட ஏற்பாடு
- பெட்ரோல் பங்க்களில் சமையல் எரிவாயு விற்கும் திட்டம்: 5ம் தேதி வீரப்ப மொய்லி தொடங்கி வைக்கிறார்
- ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் குண்டு வீச்சில் 5 போலீசார் படுகாயம்: தொடர்ந்து துப்பாக்கி சண்டை நீடிக்கிறது
- மாட்டுத்தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத்துக்கு இன்று தண்டனை அறிவிப்பு
- காந்தி ஜெயந்தியையொட்டி குஜராத் சிறைகளில் இருந்து 285 கைதிகள் விடுதலை
- பாகிஸ்தானில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.95 கோடி ஹெராயின் பறிமுதல்: எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது
- முதலில் கழிவறைகளை கட்டிவிட்டு பிறகு கோயில்களை கட்டுவோம்: இளைஞர்கள் விழாவில் மோடி பேச்சு
- எம்.பி., எம்.எல்.ஏ-க்களை பாதுகாக்கும் அவசரச்சட்டத்தை வாபஸ் பெற்றது மத்திய அரசு
- பீகார்-கங்கை ஆற்றில் படகு விபத்து: 13 பேர் இறந்திருக்க அச்சம்
- தீவிரவாதிகளின் ஊடுருவல் முறியடிப்பு: பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி
- 5–ந்தேதி பிரமோற்சவம்: திருப்பதிக்கு பஸ்களை இயக்க மறுப்பு- தொழிலாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி
| சீமாந்திர மக்கள் எதிர்ப்பை மீறி தெலுங்கானா மாநிலத்துக்கு ஐதராபாத் தலைநகரம்: மத்திய அரசு முடிவு Posted: 02 Oct 2013 11:16 PM PDT ஆந்திராவை தெலுங்கானா மற்றும் சீமாந்திரா என இரு மாநிலங்களாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் உயர்மட்ட குழு இதற்கு ஒப்புதல் வழங்கி கடந்த ஜூலை மாதம் 30–ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது. அடுத்த கட்டமாக மத்திய மந்திரி சபையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதே போல் ஆந்திர சட்ட சபையிலும் தீர்மானம் |
| திருச்சூர் அருகே மத்திய சிறையில் காந்தி ஜெயந்தி விருந்து சாப்பிட்ட 42 கைதிகளுக்கு வாந்தி–மயக்கம் Posted: 02 Oct 2013 10:54 PM PDT கேரள மாநிலம் திருச்சூர் அருகேயுள்ளது விய்யூர். இங்குள்ள மத்திய சிறையில் 700 கைதிகள் உள்ளனர். காந்தி ஜெயந்தியையொட்டி கைதிகள் அனைவருக்கும் நேற்று மதியம் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் விருந்து சாப்பிட்ட கைதிகளில் 42 பேர் திடீரென மயங்கி |
| இந்தியாவிலிருந்து செவ்வாய்க்கு செலுத்தப்படும் விண்கலம்: முதல் கட்ட பணிகள் தொடக்கம் Posted: 02 Oct 2013 10:50 PM PDT இந்தியாவிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் ஒன்று செலுத்தப்பட உள்ளது. 1,350 கிலோ எடையும், செவ்வாய் ஆர்பிட்டர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பைக் கண்காணிக்கும் வசதியும், ஐந்து பிரிவுகளையும் கொண்ட இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் சிறப்பு கொள்கலனில் நேற்று பொருத்தப்பட்டது. இந்த விண்கலம் இன்று சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இன்று மாலை சென்னை வரும் விண்கலம் இங்கு சில பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த விண்கலம் சென்னைக்கு |
| போலீஸ் நிலையத்தில் இளம் பெண்ணை கற்பழித்த சப்–இன்ஸ்பெக்டர் Posted: 02 Oct 2013 10:18 PM PDT பீகார் மாநிலம் காகரியா மாவட்டம் மோர்சாய் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சத்யேந்திர சிங். அந்த பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் காதலனுடன் வீட்டை விட்டு ஓடினார். இதுதொடர்பாக அந்த பெண்ணின் பெற்றோர் மோர்சாய் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகார் தொடர்பாக சப்– இன்ஸ்பெக்டர் சத்யேந்திர சிங் விசாரணை நடத்தி வந்தார். |
| சித்தூர் அருகே வாகன சோதனையில் லாரி மோதி போலீஸ்காரர் பலி Posted: 02 Oct 2013 10:14 PM PDT கேரள மாநிலம் சித்தூர் தாலுகாவில் உள்ள முதலமடை மல்லன்குளம்பு பகுதியைச் சேர்ந்தவர் வி.கே.தாஸ்(வயது 47). அதே பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தாட்சன். இருவரும் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாக பணியாற்றி |
| திருவனந்தபுரம் அருகே அருவி தடாகத்தில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் பலி Posted: 02 Oct 2013 09:56 PM PDT திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் ஏராளமான வெளி மாநில மாணவ–மாணவிகள் தங்கியிருந்து படித்து வருகிறார்கள். நேற்று காந்தி ஜெயந்தியை யொட்டி இந்த கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இந்த கல்லூரி மாணவர்கள் சுற்றுலா |
| நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் சந்திரபாபு நாயுடு: பா.ஜனதா கூட்டணியில் தெலுங்கு தேசம் சேருமா? Posted: 02 Oct 2013 09:20 PM PDT டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் நரேந்திரமோடியுடன் ஒரே மேடையில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டதால், பா.ஜனதா கூட்டணியில் தெலுங்கு தேசம் சேருமா? என்ற எதிர்பார்ப்பு மீண்டும் வலுத்து உள்ளது. பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் சூழ்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரிக்கும் முடிவுக்கு தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு, பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். |
| நவராத்திரி கொண்டாட்டங்களில் இடம் பெறவிருக்கும் கங்கனம் பாடல் Posted: 02 Oct 2013 05:36 PM PDT நவராத்திரி கோலாகலங்கள் நாடெங்கும் உற்சாகத்துடன் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் அதற்கான தாண்டியா நடனப் பயிற்சிகளும் உற்சாகத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாண்டியாவிற்கான பாடல் தேர்வில் இந்த வருடம் இடம் பெற இருப்பவை கொரியாவின் பிரபலமான சையின் கங்கனம் பாடலும் |
| அமெரிக்காவின் அரசு அலுவகங்கள் மூடல் நடவடிக்கையால் இந்தியாவில் ஐ.டி. தொழில் பாதிக்குமா? Posted: 02 Oct 2013 05:08 PM PDT அமெரிக்க அதிபராக ஒபாமா 2–வது தடவை பதவி ஏற்றவுடன் அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டு வந்தார். அதற்கு 'ஒபாமா கேர்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் ஜனநாயக கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு பெருகிவிடும் |
| ரூ.500 கோடி செலவில் பீகாரில் 405 அடி உயர கோபுரத்துடன் உலகின் மிகப்பெரிய கோயில் கட்ட ஏற்பாடு Posted: 02 Oct 2013 02:30 PM PDT பீகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் 405 அடி உயர கோபுரத்துடன் உலகின் மிகப்பெரிய இந்து கோயில் கட்டப்பட உள்ளது. இந்த கட்டுமான பணிக்கான பூமி பூஜை, துர்கா பூஜை தினத்தன்று (11ம் தேதி) நடத்தப்படுகிறது |
| பெட்ரோல் பங்க்களில் சமையல் எரிவாயு விற்கும் திட்டம்: 5ம் தேதி வீரப்ப மொய்லி தொடங்கி வைக்கிறார் Posted: 02 Oct 2013 01:57 PM PDT சமையல் எரிவாயு சிலிண்டர்களை இந்தியாவின் 5 பெருநகரங்களில் உள்ள பெட்ரோல் பங்க்களின் மூலம் விற்பனை செய்யும் புதிய திட்டத்தை மத்திய மந்திரி வீரப்ப மொய்லி பெங்களூரில் நாளை மறுநாள் (5ம் தேதி) தொடங்கி வைக்கிறார் |
| ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் குண்டு வீச்சில் 5 போலீசார் படுகாயம்: தொடர்ந்து துப்பாக்கி சண்டை நீடிக்கிறது Posted: 02 Oct 2013 01:30 PM PDT காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள அஹமத் நகர் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து, விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்தனர் |
| மாட்டுத்தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத்துக்கு இன்று தண்டனை அறிவிப்பு Posted: 02 Oct 2013 11:44 AM PDT பீகார் மாநிலத்தில் ரூ.950 கோடி மாட்டுத்தீவன ஊழல் வழக்கு கடந்த 17 வருடங்களாக 53 பிரிவுகளாக நடக்கிறது. இதில் அந்த மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதள கட்சி தலைவரும், முன்னாள் ரெயில்வே மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் சைபாசா மாவட்ட கருவூலத்தில் மோசடியாக ரூ.37 கோடியே 70 லட்சம் ரூபாய் |
| காந்தி ஜெயந்தியையொட்டி குஜராத் சிறைகளில் இருந்து 285 கைதிகள் விடுதலை Posted: 02 Oct 2013 11:36 AM PDT காந்தி ஜெயந்தியையொட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் இருந்து 285 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக நேற்று குஜராத் மாநில அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், 'ஆயுள் தண்டனை பெற்று சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் 12 ஆண்டு கால தண்டனையை |
| பாகிஸ்தானில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.95 கோடி ஹெராயின் பறிமுதல்: எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது Posted: 02 Oct 2013 11:20 AM PDT பாகிஸ்தானில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.95 கோடி ஹெராயினை பதுக்கி வைத்திருந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் உள்ள கும்பலிடம் |
| முதலில் கழிவறைகளை கட்டிவிட்டு பிறகு கோயில்களை கட்டுவோம்: இளைஞர்கள் விழாவில் மோடி பேச்சு Posted: 02 Oct 2013 10:41 AM PDT முதலில் கழிவறைகளை கட்டிவிட்டு பிறகு கோயில்களை கட்டுவோம் என குஜராத் முதல் மந்திரியும் பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி கூறியுள்ளார். புதுடெல்லியில் இன்று நடைபெற்ற இளைஞர் விழாவில் நரேந்திர மோடி பேசியதாவது |
| எம்.பி., எம்.எல்.ஏ-க்களை பாதுகாக்கும் அவசரச்சட்டத்தை வாபஸ் பெற்றது மத்திய அரசு Posted: 02 Oct 2013 06:49 AM PDT குற்ற வழக்குகளில் 2 ஆண்டுக்கு மேல் சிறைத் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியை உடனே பறிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை மாதம் அதிரடி தீர்ப்பை வெளியிட்டது. இதையடுத்து பல அரசியல் தலைவர்கள் தங்கள் பதவி போய் விடுமே என்ற கலக்கத்தில் உள்ளனர். |
| பீகார்-கங்கை ஆற்றில் படகு விபத்து: 13 பேர் இறந்திருக்க அச்சம் Posted: 02 Oct 2013 05:55 AM PDT பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் வழியாக கங்கை ஆறு பாய்ந்தோடுகிறது. இந்த ஆற்றினை கடந்து பக்கத்து கரைப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சென்று வர மக்கள் நாட்டுப்படகினை பயன்படுத்தி வருகின்றனர். |
| தீவிரவாதிகளின் ஊடுருவல் முறியடிப்பு: பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி Posted: 02 Oct 2013 05:00 AM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்ட அருகே கடந்த வாரம் கெரன் செக்டர் வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றனர். இதை கண்ட எல்லை பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். இதனால் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இருந்தும் அங்கு கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. |
| Posted: 02 Oct 2013 04:19 AM PDT ஆந்திர மாநிலத்தை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியில் 60 நாட்களுக்கும் மேலாக ஸ்டிரைக் நடைபெற்று வருகிறது. அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர் வேலைக்கு செல்லவில்லை. வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது. குறிப்பாக ஆந்திர அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஒட்டு மொத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஆந்திர அரசு பஸ்கள் 60 நாட்களுக்கு மேலாக ஓடவில்லை. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |