Tamil Star |
- ஈபிள் கோபுரத்திற்கு மர்ம மனிதன் அச்சுறுத்தல்
- அமெரிக்க ராணுவத்தின் முதல் சீக்கிய வீரருக்கு உயர் பதவி
- அரசின் பலவீனமான கொள்கைகளால் அத்துமீறும் சீனா, பாகிஸ்தான்
- மீனவர்களை காப்பாற்றிய ஜெயலலிதா
- Android 4.4 KitKat இயங்குதளத்தின் படங்கள் வெளியாகின
- மக்களின் நம்பிக்கையை வீணடிக்கும் முறையில் நடந்து கொள்ளக்கூடாது! – மன்னார் ஆயர்
- யானையிடமிருந்து தப்பி ஆற்றில் பாய்ந்த இளைஞர் முதலையிடம் அகப்பட்டார்
- காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம்
- தீவிரவாதி பக்ரூதின் தானாக சரணடைந்தாரா?
- வெற்றிகரமாக கரையை கடந்த பைலின் புயல்
| ஈபிள் கோபுரத்திற்கு மர்ம மனிதன் அச்சுறுத்தல் Posted: 13 Oct 2013 11:08 PM PDT பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உலகப்புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்திற்கு நேற்று பிற்பகலில் மர்ம நபர் மிரட்டல் விடுத்ததாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன்காரணமாக சுற்றுலாப்பயணிகளுக்கு பார்வையிட பிற்பகல் 3 மணிமுதல் அனுமதி வழங்கப்பவில்லை. மாலை 5.30 மணி வரை அனுமதி வழங்கப்படவில்லை என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். |
| அமெரிக்க ராணுவத்தின் முதல் சீக்கிய வீரருக்கு உயர் பதவி Posted: 13 Oct 2013 11:03 PM PDT டெல்லியில் பிறந்த சீக்கியரான சிம்ரன்ப்ரீத் லம்பா கடந்த 2006 ஆம் ஆண்டில் தனது மேல்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். 2009 ஆம் ஆண்டு தொழிற்துறையில் பொறியியற்கல்வி முடித்தவுடன் அந்நாட்டு ராணுவத்தில் சேருவதற்கான விண்ணப்பத்தை லம்பா அளித்தார். சீக்கிய மத கோட்பாடுகளான அவரது தலைப் பாகை, நீண்ட தலைமுடி மற்றும் தாடி போன்றவை குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் ஒன்பது மாதம் ஆலோசனை செய்து அதன்பின்னர் லம்பாவைத் தேர்ந்தெடுத்தனர். அந்த வருடமே மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பயின்ற இரண்டு […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| அரசின் பலவீனமான கொள்கைகளால் அத்துமீறும் சீனா, பாகிஸ்தான் Posted: 13 Oct 2013 10:58 PM PDT மத்திய அரசின் பலவீனமான கொள்கைகளாலேயே சீனாவும் பாகிஸ்தானும் மீண்டும் மீண்டும் நம் நாட்டில் அத்துமீறுகின்றன என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் ஜி பாகவத் கூறியுள்ளார். ஆண்டுதோறும் விஜயதசமி அன்று அந்த அமைப்பின் தலைமையகமான நாகபுரியில் அமைப்பின் தலைவர் விஜயதசமி பேருரை நிகழ்த்துவது வழக்கம். இந்த வருட விஜயதசமி பேருரையில் தற்போதைய தலைவர் மோகன் ஜி பாகவத், நாட்டின் பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கைகள் குறித்துக் கூறினார். மோசமான கொள்கைகளால் நம் நாட்டில் ஊடுருவலும், ஆக்கிரமிப்புகளும் நடக்கின்றன. இந்திய […] |
| மீனவர்களை காப்பாற்றிய ஜெயலலிதா Posted: 13 Oct 2013 10:52 PM PDT பைலின் புயலால் ஒடிசாவில் சிக்கித் தவிர்த்த தமிழகத்தை சேர்ந்த 18 மீனவர்களும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் தூத்தூர், ஏழுதேசம்சின்னத்துறை, இரையுமன்துறை, மேல்மிடாலம் மற்றும் கோடிமுனை பகுதிகளைச் சார்ந்த 18 தமிழக மீனவர்கள், அவர்களது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளில் கடந்த 22.9.2013 முதல் ஒடிசா மாநில கடற்பகுதியிலிருந்து ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். வங்கக்கடலில் உருவான பைலின் புயல், ஒடிசா மாநிலம் பாரதீப் மற்றும் கோபால்பூர் பகுதியில் கரையை கடக்கவிருப்பதை அறிந்த […] |
| Android 4.4 KitKat இயங்குதளத்தின் படங்கள் வெளியாகின Posted: 13 Oct 2013 06:06 AM PDT கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தி குறுகிய காலத்தில் பிரபல்யம் அடைந்த இயங்குதளம் அன்ரொயிட் ஆகும். தற்போது இதன் புதிய பதிப்பான Android 4.4 KitKat அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் இதன் பயனரை் இடைமுகம்(User Interface) தொடர்பான சில படங்கள்(Screen Shots) வெளியிடப்பட்டுள்ளன. இவ் இயங்குதளத்தினைக் கொண்ட முதல் சாதனமாக Google Nexus 5 வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மக்களின் நம்பிக்கையை வீணடிக்கும் முறையில் நடந்து கொள்ளக்கூடாது! – மன்னார் ஆயர் Posted: 13 Oct 2013 01:07 AM PDT அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் ஒரு சிலர் கலந்து கொள்ளாமை கவலை தருவதும் கண்டிக்கத்தக்கதுமான விடயமாகும். மக்களின் நம்பிக்கைகளை வீணடிக்கும் முறையில் அவர்கள் நடந்து கொள்ளக்கூடாது என்று மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் தெரிவித்தார். வடக்கு மாகாண அமைச்சர்கள் பதவிப்பிரமாண வைபவம் கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் சம்பிரதாய பூர்வமாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்ற போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு சில கட்சிகளும் அதன் […] |
| யானையிடமிருந்து தப்பி ஆற்றில் பாய்ந்த இளைஞர் முதலையிடம் அகப்பட்டார் Posted: 13 Oct 2013 12:56 AM PDT யானையின் தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொள்ளும் முகமாக ஆற்றில் பாய்ந்த இளைஞர் ஒருவரை முதலை கடித்துக் குதறியுள்ளது. கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உறுகாமம், மஞ்சாடிச்சோலை காட்டுப்பகுதியில் உள்ள சிப்பிமடு ஆற்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பி.செல்வகுமார் (வயது 27) என்ற இளைஞரையே முதலை இவ்வாறு கடித்துக்குதறியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இந்த இளைஞர் தனது மாட்டுப் பட்டிக்குச் சென்று பால் கறந்துகொண்டிருந்தபோது, அங்கு வந்த காட்டு யானை ஒன்று இவரை துரத்த ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், யானையின் தாக்குதலிருந்து […] |
| காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம் Posted: 13 Oct 2013 12:45 AM PDT காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம்' என மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சென்னை, மறைமலை நகரில் 12-10-2013 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழக மீனவர்களைக் காப்பாற்றுக:- தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. அவர்களைக் காப்பாற்ற வேண்டிய மத்திய அரசோ, மெத்தனம் காட்டுகிறது. […] |
| தீவிரவாதி பக்ரூதின் தானாக சரணடைந்தாரா? Posted: 13 Oct 2013 12:31 AM PDT தீவிரவாதி பொலிஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டது குறித்து தற்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இந்து முன்னணி தலைவர் வெள்ளையப்பன், பாஜக தலைவர் ஆடிட்டர் ரமேஷ், வேலூர் டாக்டர் அரவிந்த் ரெட்டி, மதுரையில் பால்காரர் சுரேஷ் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலைகளில் தீவிரவாதிகள் பொலிஸ் பக்ருதீன் மற்றும் அவரது கூட்டாளிகள் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அவர்களை பிடித்துக் கொடுத்தால் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. மேலும் அவர்களை சுட்டுப் பிடிக்கவும் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| வெற்றிகரமாக கரையை கடந்த பைலின் புயல் Posted: 13 Oct 2013 12:26 AM PDT கடந்த 5 நாட்களாக இந்தியாவை அச்சுறுத்தி வந்த பைலின் புயல் பெரும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படுத்தாமல் நேற்று கரையை கடந்துள்ளது. பைலின் புயலினால் பெரும் ஆபத்து என்று கடந்த 5 நாட்களாக வானிலை ஆய்வு மையமும் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையமும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் பைலின் புயல் நேற்றிரவு 7.55 மணிக்கு ஒடிசா மாநிலம் கோபால்பூர் பாரதீப் துறைமுகம் இடையே கரையைக் கடந்துள்ளது. அப்போது 200 முதல் 220 கிலோ மீற்றர் […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |