மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஒடிசாவில் ரூ. 2400 கோடி சொத்துக்கள் நாசம்: பாய்லின் புயல் தாக்கியதில் 90 லட்சம் பேர் பாதிப்பு
- பைலின் புயலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு
- ராஜஸ்தானில் 4 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்த 30 வயது உறவினருக்கு தர்ம அடி
- பைலின் புயலில் சிக்கிய பனாமா நாட்டுக் கப்பலை காணவில்லை: உயிர் காக்கும் படகில் ஊழியர்கள் கண்டுபிடிப்பு
- ஒடிசாவில் பெரும் உயிர் சேதத்தை தவிர்க்க உதவிய அனைவருக்கும் நன்றி: முதல்வர் நவீன் பட்நாய்க்
- அதி வேக ’பைலின்’ புயலுக்கு 90 லட்சம் மக்கள் பாதிப்பு, பெருமளவில் வீடுகள், பயிர்கள் சேதம்
- மத்தியப் பிரதேசத்தில் நவராத்திரி வி்ழா கூட்ட நெரிசலில் சிக்கி 70 பேர் பலி
| ஒடிசாவில் ரூ. 2400 கோடி சொத்துக்கள் நாசம்: பாய்லின் புயல் தாக்கியதில் 90 லட்சம் பேர் பாதிப்பு Posted: 13 Oct 2013 10:20 PM PDT வங்கக் கடலில் உருவான பாய்லின் புயல் கடந்த சனிக்கிழமை இரவு ஒடிசா மாநிலம் கோபால் பூருக்கு அருகில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. மிக பலத்த மழை பெய்தது. பாய்லின் புயல் வரலாறு காணாத அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டதால் ஒடிசா மாநில அரசு எல்லாவித |
| பைலின் புயலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு Posted: 13 Oct 2013 08:16 AM PDT வங்கக்கடலில் உருவான பைலின் என்கிற அதி வேகப்புயல் ஒடிசா மற்றும் ஆந்திரப்பிரதேச கடல் பகுதிகளை நேற்றிரவு தாக்கியது. ஒடிசா கோபால்பூரை மையமாகக்கொண்டு 220 கி.மீ. வேகம் வரை வீசிய இந்த புயலுக்கு ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் கஞ்சம் மாவட்டத்தில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. |
| ராஜஸ்தானில் 4 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்த 30 வயது உறவினருக்கு தர்ம அடி Posted: 13 Oct 2013 08:16 AM PDT ராஜஸ்தானில் உள்ள சவானி ராமசந்திரபுராவில் தாத்தா பாட்டியுடன் வசித்துவந்த 4 வயது சிறுமியை அவரது உறவினர் ரஞ்சித் வால்மிகி என்பவர் நேற்று அழைத்துசென்றுள்ளான். 4 குழந்தைக்கு தகப்பனான 30 வயது ரஞ்சித் வால்மிகி அந்த சிறுமிக்கு சாக்லேட் வாங்கிக்கொடுத்து |
| Posted: 13 Oct 2013 05:25 AM PDT வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான பைலின் புயல் ஓடிஸா மாநிலத்தில் நேற்று கரையைக் கடந்தது. இந்தப் புயல் கரையை நெருங்கியபோது கடும் சூறாவளி வீசியது. இந்தப் புயலில் சிக்கிய பனாமா நாட்டு சரக்குக் கப்பலொன்று கடலில் மூழ்கியிருக்ககூடும் என்று அஞ்சப்படுகின்றது. |
| ஒடிசாவில் பெரும் உயிர் சேதத்தை தவிர்க்க உதவிய அனைவருக்கும் நன்றி: முதல்வர் நவீன் பட்நாய்க் Posted: 13 Oct 2013 04:05 AM PDT ஒடிசா மாநிலம் கோபால்பூரை 220 கி.மீ. வேகம் வரை தாக்கிய அதிகவேக பைலின் புயலுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். 12 மாவட்டங்களை சேர்ந்த 14 514 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கனமழையால் 5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயரிடப்பட்டிருந்த ரூ. 2400 கோடி மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளது. |
| அதி வேக ’பைலின்’ புயலுக்கு 90 லட்சம் மக்கள் பாதிப்பு, பெருமளவில் வீடுகள், பயிர்கள் சேதம் Posted: 13 Oct 2013 02:56 AM PDT வங்கக்கடலில் உருவான அதிவேக புயலான பைலின் நேற்று இரவு 10 மணிக்கு மேல் ஒடிசாவின் கோபால்பூர் வழியாக கரையை கடந்தது. மணிக்கு 220 கி.மீ. வேகம் வரை சுமார் 6 மணி நேரத்திற்கு வீசிய இந்த பைலின் புயலுக்கு 90 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2.1/2 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. |
| மத்தியப் பிரதேசத்தில் நவராத்திரி வி்ழா கூட்ட நெரிசலில் சிக்கி 70 பேர் பலி Posted: 13 Oct 2013 01:57 AM PDT மத்தியப் பிரதேச மாநில தட்டியா மாவட்டத்தின் ரத்னாகர் பகுதியில் மந்துளா தேவி கோவில் உள்ளது. இங்கு நவராத்திரி பூஜை நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக நடைபெறும். இவ்விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |