Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் மீது தி.மு.க., 'திடீர் பாசம்!'

Posted:

தே.மு.தி.க.,வை கூட்டணிக்கு இழுக்க, புது தந்திரத்தை கையில் எடுத்துள்ள, தி.மு.க., தலைமை, தேர்தல் நிதி வசூலிப்பில் திணறி வரும், அக்கட்சி மாவட்ட செயலர்களுக்கு உதவி செய்து, 'பாசம் காட்டி' வளைக்க காய் நகர்த்தி வருகிறது.தே.மு.தி.க., செயற்குழு கூட்டத்தில், லோக்சபா தேர்தல் நிதி வசூலிப்பு தொடர்பாக, மாவட்ட செயலர்களுக்கு, அக்கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்தது. மாதம், 50 லட்சம் ரூபாய் வீதம், மூன்று மாதத்திற்கு, 1.50 கோடி ரூபாய், தேர்தல் நிதியாக வசூலித்து தர வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.கண்காணிப்புக்குழு: இதற்காக, கட்சி தலைமையால் அச்சிடப்பட்ட, ...

தமிழர் நிலை குறித்து குர்ஷித் கப்சிப்: இலங்கை சென்று திரும்பி பாக்., பற்றி பேச்சு

Posted:

புதுடில்லி: இலங்கைக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, நாடு திரும்பியுள்ள, வெளியுறவுத்துறை அமைச்சர், சல்மான் குர்ஷித், இலங்கை நிலவரம் குறித்து எதுவும் கூறாமல், வழக்கம் போல், பாகிஸ்தான் குறித்தே பேசினார்.விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அரசு, அந்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு, அனைத்து துறைகளிலும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்காமல் உள்ளது. போரால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் வீடுகள் கட்டித் தரும் திட்டத்தை கூட, அந்நாடு செய்யவில்லை. நம் இந்திய அரசு தான், அதற்கான முயற்சியில், பல ஆயிரம் கோடி ரூபாய் ...

எரிபொருள் சிக்கனத்துக்காக மெட்ரோ ரயிலில் பயணித்த அமைச்சர்

Posted:

புதுடில்லி:எரிபொருள் பயன்பாட்டில் சிக்கனத்தை கடைபிடிப்பதில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மத்திய பெட்ரோலிய அமைச்சர், வீரப்ப மொய்லி, நேற்று, டில்லி மெட்ரோ ரயிலில் பயணித்தார். ''இனி, வாரம் தோறும், புதன் கிழமைகளில், ரயிலில் பயணித்து, மற்றவர்களுக்கு முன் உதாரணமாக செயல்படுவேன்,'' என, அவர் கூறினார்.இறக்குமதி செலவு:சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவதால், இந்தியாவின், எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும், வெளிநாடுகளில் இருந்து, எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக, 10 லட்சம் கோடி ரூபாயை, மத்திய ...

உத்தரகண்ட் காங்., அரசின் விளம்பர மோகம்: ரூ.22 கோடி வீண் செலவு

Posted:

டேராடூன் : பேய் மழை மற்றும் பெருவெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட உத்தரகண்ட் மாநில அரசு, விளம்பர மோகத்தில், ஏராளமான பணத்தை செலவிடுவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த, நான்கு மாதங்களில், 22 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்துள்ளது.உருக்குலைந்தது:இமயமலை மாநிலங்களில் ஒன்றான உத்தரகண்டில், ஜூன் மாதம் பெய்த பயங்கர மழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில், அந்த மாநிலமே உருக்குலைந்து போனது. 1,000 பேர் இறந்துள்ளதாகவும், லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், ...

ஆந்திராவில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.150

Posted:

புதுடில்லி : ஆந்திர மாநிலத்தில், தெலுங்கானா எதிர்ப்பு போராட்டத்தால், கடும் மின் வெட்டு தொடரும் நிலையில், தற்போது, பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஒரு லிட்டர் பெட்ரோல், 150 ரூபாய்க்கும், டீசல், 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறன.ஆந்திராவில், தெலுங்கானா, ராயலசீமா, கடலோர ஆந்திரா ஆகிய, மூன்று வேறுபட்ட பகுதிகள் உள்ளன. இவை, மூன்றுமே, கலாசார மற்றும் வரலாற்று அடிப்படையில், வேறுபட்ட பகுதிகளாக உள்ளன. இவற்றில், ராயலசீமா, கடலோர ஆந்திரா ஆகிய இரண்டு பகுதிகளும் இணைந்து, 'சீமாந்திரா' என, வழங்கப்படுகின்றன.தெலுங்கானா பிரிவை எதிர்த்து, 13 மாவட்டங்களை ...

அமெரிக்க பொருளாதார நெருக்கடி எதிரொலி: வீரர்களின் இறுதி சடங்குக்கான நிதி ரத்து

Posted:

வாஷிங்டன் : அமெரிக்காவில், பொருளாதார நெருக்கடி காரணமாக, ஆப்கானிஸ்தானில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் இறுதி சடங்குக்கு, நிதியளிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பார்லிமென்டில் போதுமான ஆதரவு கிடைக்காததால், 17 ஆண்டுகளுக்குப் பின், அந்நாட்டில் அரசு நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க பார்லிமென்டில், ஒபாமா, அடுத்த ஆண்டுக்கான, பட்ஜெட் தாக்கல் செய்த போது, எதிர்க் கட்சியினரின் ஆதரவு இல்லாததால், அந்த பட்ஜெட்டை நிறைவேற்ற முடியவில்லை. இதன் காரணமாக அரசுக்கு ஏற்பட்டுள்ள ...

ஐந்து பேரை கொலை செய்ய உதவிய 50 பேர்: பயங்கரவாதிகள் வாக்குமூலத்தில் "திடுக்'

Posted:

வேலூர்: போலீஸ் காவலில் உள்ள பயங்கரவாதிகளிடம் நடக்கும் விசாரணை, "வீடியோ'வில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஐந்து கொலைகளுக்கு உதவிய, 50 பேர் குறித்த விவரம், தற்போது தெரிய வந்துள்ளது.இந்து அமைப்பு தலைவர்கள் கொலை உள்ளிட்ட, பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள், "போலீஸ்' பக்ரூதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை சமீபத்தில், சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.குண்டு காயம் அடைந்த பன்னா இஸ்மாயில், சென்னை மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார். "போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து, ...

தி.மு.க., பொதுச்செயலர் பதவி: ஸ்டாலினுக்கு கருணாநிதி எதிர்ப்பு

Posted:

உடல் நலம் குறைவினால், வீட்டில் ஓய்வு எடுத்து வரும் தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகனின் பதவியை பொருளாளர் ஸ்டாலினுக்கு வழங்குவதற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "அன்பழகனின் பதவியை தொடர்ந்து நீட்டிக்க வைக்கும் தீர்மானத்தை பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி விருப்பம் தெரிவித்துள்ளார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுச்செயலர் அன்பழகனை விட, தலைவர் கருணாநிதி ஒரு வயது இளையவர் என்றாலும், கட்சி ரீதியாக முக்கிய முடிவு எடுக்கும் முன், அன்பழகனிடம் கருணாநிதி ஆலோசனை செய்வது வழக்கம். இருவரும், ...

தமிழகம் வருகிறார் பிரதமர் வேட்பாளர் மோடி: வரும் 18ம் தேதி சென்னையில் முக்கிய சந்திப்பு?

Posted:

பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, வரும், 18ம் தேதி சென்னை வரவுள்ளார். அப்போது, தமிழகத்தில் எந்த கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்வது என்பது குறித்து, அவர், மாநில நிர்வாகிகளோடு விவாதிக்கக் கூடும் என, கூறப்படுகிறது. இதனால், அவருடைய வருகை அரசியல் வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்த செப்டம்பர் 26ம் தேதி, திருச்சியில் நடந்த இளந்தாமரை மாநாட்டில் மோடி பங்கேற்றதால், லட்சக்கணக்கான இளைஞர்கள், அவர் பேச்சைக் கேட்க திரண்டனர். இது தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, பா.ஜ.,வையே ஆச்சரியப் படுத்தியது. இதனால், பா.ஜ., தமிழக அரசியல் கணக்குகளில் ...

ஆதார் விவகாரத்திலும் மத்திய அரசு அடித்தது அந்தர்பல்டி: சுப்ரீம் கோர்ட் வைத்தது ஆப்பு

Posted:

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தால் மட்டுமே, சமையல், காஸ் சிலிண்டர் நேரடி மானியம் பெறுவதற்கு, ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படும், என, மத்திய பெட்ரோலிய அமைச்சர், வீரப்ப மொய்லி கூறியுள்ளார். சமையல் காஸ் சிலிண்டருக்கு, அரசின் மானியம் பெற வேண்டுமானால், ஆதார் அடையாள அட்டை அவசியம் என, மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, 19 மாவட்டங்களில், இந்த திட்டம், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது.சுப்ரீம் கோர்ட் உத்தரவு : இரண்டாம் கட்டமாக, மேலும் பல மாவட்டங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. ஆனால், மானியம் உள்ளிட்ட, அரசின் சேவைகளை பெற, ஆதார் அடையாள ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™