Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'ஆந்திர பவனைவிட்டு வெளியேறுங்கள்!':சந்திரபாபுவுக்கு 'நோட்டீஸ்'

Posted:

தெலுங்கானா மாநிலத்திற்கு எதிராக, டில்லி, ஆந்திர பவனில், காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும், ஆந்திர முன்னாள் முதல்வர், சந்திரபாபு நாயுடு, உடனடியாக இடத்தை காலி செய்ய வேண்டும் என, ஆந்திர மாநில அரசு எச்சரித்துள்ளது. ஆனாலும், 'ஆந்திர பவனை விட்டு வெளியேற மாட்டேன்' என, நாயுடு கூறிவிட்டதால், டில்லி உண்ணாவிரதத்தில், பரபரப்பு முற்றியுள்ளது.டில்லியில் உண்ணாவிரதம்: தெலுங்கானா தனி மாநில கோரிக்கை விவகாரத்தை வைத்து, ஆந்திர அரசியல் களம், அளவுக்கு அதிகமாகவே சூடாகிப்போய் உள்ளது. 'ஆந்திராவை பிரிக்க கூடாது' என, வலியுறுத்தி, ...

லாலுவின் இணைபிரியா உதவியாளர்கள் ராஞ்சி சிறையிலும் உண்மை ஊழியம்

Posted:

பாட்னா : கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பீகார் முன்னாள் முதல்வர், லாலு பிரசாத்திற்கு உதவுவதற்காக, அவரின் மூன்று உதவியாளர்கள், சிறுசிறு குற்றங்களை செய்து, சிறைக்குள் சென்று, தங்கள் தலைவருக்கு உதவி செய்து வருகின்றனர்.பீகார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத்திற்கு, கால்நடை தீவன ஊழல் வழக்கில், ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ஜார்க்கண்ட் மாநில தலைநகர், ராஞ்சியில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அரசியலில் பல கோமாளித்தனங்களை செய்து, தன்னை கிராமப்புறத்து ஆள் போல் காட்டிக் கொள்ளும் லாலு, நீண்டகாலமாக, மூன்று பேரை ...

மாயாவதி மீதான சொத்து குவிப்பு வழக்கு ரத்தாகிறது: காய்நகர்த்த முயற்சிக்கிறது காங்கிரஸ்

Posted:

புதுடில்லி : உத்தர பிரதேச முன்னாள் முதல்வர், மாயாவதி மீதான, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை மூட, சி.பி.ஐ., முடிவு செய்துள்ளதாக நேற்று டில்லியில் தகவல்கள் கசிந்தன. இதன் மூலம், மாயாவதியை, 'தாஜா' செய்து, வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்துக் கொள்வதற்கு காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த விஷயத்தில் அரசை கண்டித்து, 'நாட்டின் உயரிய விசாரணை அமைப்பான, சி.பி.ஐ.,யை, அரசியல் காரணங்களுக்காக, காங்கிரஸ் தலைமையிலான, ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பயன்படுத்தி வருகிறது' என, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.அந்த ...

ஊசி முனையில்...போதை ருசி:நம்மூரு கிராமங்கள் வரையும் வந்துவிட்டது

Posted:

மக்கள் ஆரோக்கியமாக வாழத்தேவையான, வசதிகளையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது, அரசாங்கத்தின் பணி. ஆனால், நமது துரதிருஷ்டம், அரசாங்கமே "டாஸ்மாக்' மதுக்கடைகளை தெருவுக்குத்தெரு திறந்து, கலர் சாராயம் விற்கிறது. ஆண், பெண் வித்தியாசமின்றி காலை முதல் இரவு வரை குடித்தே சாகின்றனர்.பள்ளி, கல்லூரி மாணவர்கள் பணிக்குச் செல்லும் இளைஞர்கள் மட்டுமின்றி, இக்கூட்டத்துடன் பெண்களும் சேர்ந்துவிட்டது, அவலத்தின் உச்சகட்டம். மது பழக்கத்தால் குடும்ப உறவுகள் சீர்கெட்டு, அமைதி இழப்புக்குள்ளாகி தற்கொலைகளும், கொலைகளும் நிகழ்கின்றன. எண்ணற்ற குடும்பங்களில், ...

வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை: மாநில அரசு மீது தொடரும் குற்றச்சாட்டுகள்!

Posted:

கோவை : என்.எச்.,47 விரிவாக்கப் பணி தாமதமாகவும், மாநில அரசு ஆதரவு ஒப்பந்தம் இறுதி செய்யப்படாததே காரணமென்ற புகார் கிளம்பியுள்ளது; இதனால், தமிழகத்தில் மத்திய அரசு செயல்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களுக்கு மாநில அரசின் ஒத்துழைப்பில்லை என்ற வாதம் வலுப்பெற்றுள்ளது.சென்னைக்கு அடுத்து, பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் பெரிய நகரமான கோவை மாநகராட்சி, கட்டமைப்பு வசதிகளில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, சில வசதிகள், இந்த நகருக்குக் கிடைத்தன; ஆனால், தி.மு.க., அரசால் அப்போது அறிவிக்கப்பட்ட காந்திபுரம் மேம்பாலம், மேற்கு ...

பயங்கரவாதி "போலீஸ்' பக்ருதீன் வாக்குமூலம்: போலீசார் அதிர்ச்சி

Posted:

இந்து பிரமுகர்களை கொலை செய்தது குறித்து, "போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் தெரிவித்துள்ள தகவல்கள், போலீசாரையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. "போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரை காவலில் எடுத்து, வேலூரில் ரகசிய இடத்தில், இரண்டு பேரையும் தனித்தனியாக, நான்கு எஸ்.பி.,க்கள், 15 டி.எஸ்.பி.,க்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:இஸ்லாம் மதத்துக்கு எதிரானவர்களை கண்டுபிடித்து, கொலை செய்வது தான், அவர்களுக்கு கூறப்பட்ட கட்டளை. அதற்காக, "ஜிகாத் புனிதப்படை'யை அமைத்து, உறுப்பினர்களை ...

பயங்கரவாதிகளை பிடித்த போலீசாருக்கு சிறப்பு பரிசு, பதவி உயர்வு: முதல்வர் அறிவிப்பு

Posted:

சென்னை:ஆந்திர மாநிலம், புத்தூரில், வீட்டில் பதுங்கியிருந்த, பயங்கரவாதிகளை, உயிரோடு பிடித்த, 20 போலீசாருக்கு, தலா, 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் ஒரு படி பதவி உயர்வு; காயமடைந்த இன்ஸ்பெக்டருக்கு, 15 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.வேலூரில், கடந்த ஜூலை மாதம், இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன், சேலத்தில், பா.ஜ., மாநிலச் செயலர், ஆடிட்டர் ரமேஷ், ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளை பிடிக்க, குற்றப் புலனாய்வுத் துறை தலைமை இயக்குனர் நரேந்திரபால் சிங் தலைமையில், சிறப்பு புலனாய்வுக் குழு ...

ஏற்காடு இடைத்தேர்தலுக்கு ஆதரவு தாருங்கள்: கருணாநிதி கெஞ்சல்

Posted:

சென்னை:ஏற்காடு இடைத்தேர்தலில், ஆதரவுக் கேட்டு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும், தி.மு.க., தலைவர் கருணாநிதி கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.கட்சித் தலைவர்களுக்கு கருணாநிதி எழுதிய கடிதத்தின் விவரம்:டிசம்பர்,4ல் நடக்கும் ஏற்காடு இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட முடிவெடுத்துள்ளோம். ஆளுங்கட்சியான அ.தி.மு.க., தொடர்ந்து தமிழகத்தில் நடத்தி வரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில், இந்த இடைத்தேர்தலில் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து நல்கிடும் உறுதியான ஆதரவோடு போட்டியிடுவது ...

காங்கிரஸ்அ.தி.மு.க., கூட்டணி உருவாகிறதா? ஒரே விழாவில் இரு கட்சி அமைச்சர்களும் பங்கேற்றதால் பரபரப்பு

Posted:

கடந்த அக்., 6ம் தேதி, சிவகங்கையில் நடந்த, மத்திய அரசு விழாவிற்கு, தலைமை தாங்கிய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தோடு, அ.தி.மு.க.,வின் மாநில வேளாண்மை துறை அமைச்சர் தாமோதரனும் கலந்து கொண்டது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான பேச்சு சுற்றி வருகிறது. அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் அமைந்து, கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில், எத்தனையோ அரசு விழாக்களில் சிதம்பரம் பங்கேற்று இருக்கிறார். ஆனால், ஒரு நிகழ்ச்சியில் கூட மாநில அமைச்சர்களோ, அ.தி.மு.க.,வினரோ கலந்து கொண்டதில்லை. முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் தான் சிதம்பரத்தோடு, மாநில அமைச்சர் ஒருவர் பங்கேற்று ...

தே.மு.தி.க.,வை கூட்டணிக்குள் இழுக்க தி.மு.க.,வலை: ஏற்காடு தொகுதியில் போட்டி அறிவிப்பின் பின்னணி

Posted:

ஏற்காடு இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக, தி.மு.க., வெளியிட்டுள்ள அறிவிப்பு, தே.மு.தி.க.,வை கூட்டணிக்குள் இழுக்க, தி.மு.க., செய்யும் தந்திரம் என, கூறப்படுகிறது.இந்த தேர்தலில், போட்டியிடப் போவதில்லை என, தி.மு.க., தலைமை, முன்பு முடிவு செய்திருந்தது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், எதற்காக இடைத் தேர்தலில் இறங்கி, காயப்படுத்திக் கொள்ள வேண்டும் என, அக்கட்சி கருதியது.இந்த விஷயம் தெரிந்து, தே.மு.தி.க., உற்சாகத்துடன், அ.தி.மு.க.,வை எதிர்த்து நிற்க முடிவு செய்தது. எப்படியும், தி.மு.க.,வின் பெரும் பங்கு ஓட்டுக்கள் கிடைத்து விடும் என்பதால், வெற்றி பெற முடியா ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™