Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


குன்றத்தூரில் காதல் திருமண தகராறில் டிரைவர் நடுரோட்டில் வெட்டிக்கொலை 4 பேர் கைது

Posted: 08 Oct 2013 02:02 PM PDT

பூந்தமல்லி

குன்றத்தூரில் காதல் திருமண தகராறில் டிரைவரை வெட்டிக்கொலை செய்ததாக அவரது மனைவியின் அண்ணன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

டிரைவர்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் (வயது 50). இவரது மனைவி ராணி(43). இவர்களுக்கு குமார்(28), மணியரசன்(25) என 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் குன்றத்தூர், பல்லாவரம் மெயின்ரோடு, மணஞ்சேரி பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

தனியார் மயமாக்க எதிர்ப்பு: சென்னை விமான நிலைய தொழிலாளர்கள் போராட்டம் தனியார் நிறுவன அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு

Posted: 08 Oct 2013 01:58 PM PDT

ஆலந்தூர்

சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து விமான நிலைய ஊழியர்கள் நேற்று கறுப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். அப்போது விமான நிலையத்தை பார்க்க வந்த தனியார் நிறுவன அதிகாரிகளை ஊழியர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊழியர்கள் போராட்டம்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் கொல்கத்தா, ஜெய்ப்பூர், அகமதாபாத், கவுகாத்தி, லக்னோ ஆகிய 6 விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. தனியார்மயம் ஆக்குவதற்கு விமான நிலைய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடுமையான சூறைகாற்று வீசியதால் அந்தமான் சென்ற விமானம் சென்னைக்கு திரும்பி வந்தது

Posted: 08 Oct 2013 12:48 PM PDT

ஆலந்தூர்

சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் இருந்து நேற்று காலை அந்தமானுக்கு விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இதில் 167 பயணிகள் பயணம் செய்தனர். நேற்று நண்பகல் அந்தமான் விமானநிலையத்திற்கு சென்றபோது, கடுமையான சூறைகாற்று வீசி, வானிலை மோசமாக இருந்தது.

இதனால் விமானம் தரை இறங்க முடியவில்லை. இதனால் வானத்தில் அரைமணி நேரம் விமானம் வட்டமிட்டது. வானிலை சீரடையவில்லை. எனவே, அருகில் உள்ள தாய்லாந்து தலைநகர் பாங்காக் விமானநிலையத்தில் விமானத்தை நிறுத்தி வைத்தனர். தொடர்ந்து அந்தமானில் வானிலை சீரடையவில்லை.

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: மரிய ஷரபோவா திடீர் விலகல்

Posted: 08 Oct 2013 12:28 PM PDT

இஸ்தான்புல்,

உலக தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. பெண்கள் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான மொத்தம் ரூ.37 கோடி பரிசுத்தொகை கொண்ட 43–வது பெண்கள் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் வருகிற 22–ந்தேதி முதல் 27–ந்தேதி வரை துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற உள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியை ஏற்க என்.சீனிவாசனுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

Posted: 08 Oct 2013 12:26 PM PDT

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியை ஏற்க என்.சீனிவாசனுக்கு, சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

கிளம்பிய சூதாட்ட புயல்

நியூசிலாந்து–வங்காளதேசம் மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

Posted: 08 Oct 2013 12:23 PM PDT

சிட்டகாங்,

நியூசிலாந்து– வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் இன்று தொடங்குகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்

2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக பிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்தியா ஏ–வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகள் மோதும் கடைசி பயிற்சி டெஸ்ட் இன்று தொடக்கம் ஷேவாக், கம்பீர் அசத்துவார்களா?

Posted: 08 Oct 2013 12:18 PM PDT

ஹூப்ளி,

இந்தியா ஏ–வெஸ்ட் இண்டீஸ் ஏ கிரிக்கெட் அணிகள் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) கர்நாடக மாநிலம் ஹூப்ளில் இன்று தொடங்குகிறது. 0–1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கும் புஜாரா தலைமையிலான இந்திய ஏ அணி இதில் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.

உலக பில்லியர்ட்ஸ் போட்டி: பின்வாங்கினார் பங்கஜ் அத்வானி

Posted: 08 Oct 2013 12:08 PM PDT

புதுடெல்லி,

பில்லியர்ட்ஸ் விளையாட்டில் சக்ரவர்த்தியாக திகழும் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி கடந்த ஆண்டு உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்து வீரர் மைக் ரஸ்செலை தோற்கடித்து பட்டம் வென்று அசத்தினார்.

இரண்டாவது காலாண்டில் 4.5 சதவீதம் சரிவு பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு ரூ.8.08 லட்சம் கோடியாக குறைந்தது

Posted: 08 Oct 2013 11:06 AM PDT

மும்பை

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை–செப்டம்பர்) 44 பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு முந்தைய காலாண்டைக் காட்டிலும் 4.5 சதவீதம் சரிவடைந்து ரூ.8.08 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. 2010 டிசம்பர் மாதத்திற்கு பிறகு சொத்துமதிப்பு தற்போதுதான் இந்த அளவிற்கு சரிவடைந்துள்ளது.

பங்கு, கடன் சந்தைகள்

புத்தூரில் தீவிரவாதிகளை தீரத்துடன் போராடி கைது செய்த 20 போலீசாருக்கு தலா ரூ.5 லட்சம்-பதவி உயர்வு காயம் அடைந்த இன்ஸ்பெக்டருக்கு ரூ.15 லட்சம்: ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 08 Oct 2013 11:05 AM PDT

சென்னை,

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சிறப்பு புலனாய்வுக்குழு



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™