Tamil News | Online Tamil News |
- குஜராத் முதல்வராக 12 ஆண்டுகள் நரேந்திர மோடியின் புதிய சாதனை
- தமிழகத்தில் மின் வினியோகம் பாதிக்குமா?
- அமேதியை பெங்களூரு ஆக்க போகிறாராம் ராகுல்
- "வங்கி கடனை திருப்பி செலுத்த வேண்டாம்': காங்., தலைவர் அதிரடி
- தி.மு.க.,வினருக்கு சுறுசுறுப்பு இல்லை: கருணாநிதி வருத்தம்
- அ.தி.மு.க.,வின் முதல்கட்ட வெற்றி: மிரண்டு போன தி.மு.க., - தே.மு.தி.க.,
- கவர்னரிடம் எட்டு புகார்கள் அளித்த விஜயகாந்த் : மாநாட்டிற்கு அனுமதி வழங்க ரகசிய கோரிக்கை
- பயங்கரவாதிகளுக்கு உதவிய உள்ளூர் பிரமுகர்களுக்கு வலை
- புத்தகங்களில் மறைத்து வைத்துள்ள சித்திக்: பிடிபட்ட பயங்கரவாதி தகவலால் பரபரப்பு
| குஜராத் முதல்வராக 12 ஆண்டுகள் நரேந்திர மோடியின் புதிய சாதனை Posted: ஆமதாபாத்:'தொடர்ச்சியாக, 12 ஆண்டுகள், குஜராத் முதல்வராக பதவி வகித்தவர்' என்ற பெருமையை, நரேந்திர மோடி நேற்று பெற்றுள்ளார். 'நரேந்திர மோடியின் சிறப்பான நிர்வாகத்தால், குஜராத், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில், நாட்டின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது' என, அம்மாநில செய்தித் துறை தெரிவித்துள்ளது.குஜராத் முதல்வராக இருந்த, பா.ஜ., மூத்த தலைவர், கேசுபாய் படேல், 2001ல், பதவி விலகினார். இதையடுத்து, நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக பொறுப்பேற்றார். அன்றிலிருந்து, இப்போது வரை, அவர் தான், முதல்வராக பதவி வகித்து வருகிறார்.குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்று, ... |
| தமிழகத்தில் மின் வினியோகம் பாதிக்குமா? Posted: ஆந்திராவில் நடந்து வரும் கலவரங்களால், தமிழகத்தில், மின் வினியோகம் பாதிக்காது என, தெரிய வந்துள்ளது. ஆந்திர மின் உற்பத்தி கழகத்திற்கு சொந்தமாக, விஜயவாடாவில், டாக்டர் நர்லா டாடா ராவ் அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு, தலா, 210 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட, ஆறு அலகுகள் மூலம், மின் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், மின் உற்பத்தி முற்றிலுமாக முடங்கி போயுள்ளது. இதனால், ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள், இருளில் மூழ்கும் அபாயம் ... |
| அமேதியை பெங்களூரு ஆக்க போகிறாராம் ராகுல் Posted: அமேதி:''அமேதியை பெங்களூரு ஆக்குவேன்,'' என, கூறியுள்ளார், அந்தத் தொகுதியின் லோக்சபா எம்.பி.,யும், காங்., துணைத் தலைவருமான ராகுல். 'ஆண்டாண்டு காலமாக, நேரு, இந்திரா குடும்பத்தின் வசம் உள்ள அந்தத் தொகுதி, துளியளவும் முன்னேறாத நிலையில், ராகுலின் இந்த அறிவிப்பு வினோதமாக உள்ளது' என்கின்றனர், அரசியல் நோக்கர்கள். காங்., துணைத் தலைவர் ராகுல், தன், லோக்சபா தொகுதியான, உ.பி., மாநிலம் அமேதியில், புதிதாக அமைக்கப்படவுள்ள, உணவு பூங்காவுக்கு, நேற்று அடிக்கல் நாட்டினார்.இந்த விழாவில், அவர் பேசியதாவது:விவசாயிகள் படும் சிரமங்கள், வேதனை அளிக்கிறது. விளைபொருட்களை ... |
| "வங்கி கடனை திருப்பி செலுத்த வேண்டாம்': காங்., தலைவர் அதிரடி Posted: பெங்களூரு:""வங்கிகளில், சிறுபான்மையின மக்கள் கடன் பெற்றிருந்தால், அதை திருப்பிச் செலுத்த வேண்டாம்; ஏராளமான பண முதலைகள், வங்கிகளில் கடன் வாங்கி, பணத்தை திருப்பிச் செலுத்தாமல் உள்ளனர்,'' எனப் பேசி, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர், பரமேஸ்வரா, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முதல்வர், சித்தராமைய்யா தலைமையிலான அரசு, பொறுப்பில் உள்ளது. இதில், துணை முதல்வர் பதவி தனக்கு வேண்டும் என, அடம் பிடித்து வருபவர், மாநில காங்கிரஸ் தலைவர், பரமேஸ்வரா. ஆனால், அவருக்கு அந்தப் பதவியை வழங்க, காங்கிரஸ் மேலிடம் தயாராக இல்லை. இதனால், ... |
| தி.மு.க.,வினருக்கு சுறுசுறுப்பு இல்லை: கருணாநிதி வருத்தம் Posted: சென்னை:'வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணியில், தி.மு.க.,வினர் சுறுசுறுப்பை காட்டவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்திலுள்ள வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்ய, வரைவு வாக்காளர் பட்டியலை, தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, 2014ல் ஜனவரி 1ல் 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலி"ல் இதுவரை இடம் பெறாத பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், தொகுதியிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை, தற்போதுள்ள பட்டியலில் இருந்து முறைப்படி நீக்கவும், உடனடியாக ... |
| அ.தி.மு.க.,வின் முதல்கட்ட வெற்றி: மிரண்டு போன தி.மு.க., - தே.மு.தி.க., Posted: அக்டோபர், 6ம் தேதி ஒவ்வொரு ஆண்டையும் போல, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 18 வயதை நிரம்பிய வாக்களார்களை பட்டியலில் சேர்க்கும் பணிக்கான முகாம் துவங்கியது. இறந்து போன வாக்காளர்களின் பெயரை நீக்கும் பணியும், அன்றைக்கு நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஆனால், தேர்தலை எதிர்நோக்கி இருப்பதால், இந்தமுறை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், பெயரை சேர்க்கும் ஆர்வம் பலருக்கும் இருந்தது. ஆனால், தெளிவான வழிமுறைகள் தெரியாது என்பதால், பலரும் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க, பெரிய அளவில் ... |
| கவர்னரிடம் எட்டு புகார்கள் அளித்த விஜயகாந்த் : மாநாட்டிற்கு அனுமதி வழங்க ரகசிய கோரிக்கை Posted: கவர்னரிடம், எட்டு புகார்களை அளித்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கும் மாநாட்டிற்கு, 144 தடை உத்தரவை நீக்கி அனுமதி வழங்க வேண்டும் என, ரகசிய கோரிக்கை விடுத்ததாக, தகவல் வெளியாகி உள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மற்றும் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், 21 பேர், கவர்னர் ரோசய்யாவை சந்திக்க அனுமதி கேட்டிருந்தனர். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு வரும்படி, அவர்களுக்கு கவர்னர் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை, கோயம்பேடு, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் இருந்து, தனித்தனி கார்களில், அவர்கள் புறப்பட்டு ... |
| பயங்கரவாதிகளுக்கு உதவிய உள்ளூர் பிரமுகர்களுக்கு வலை Posted: பயங்கரவாதி, "போலீஸ்' பக்ருதீனிடம் கைப்பற்றிய டைரியில், ஐந்து கொலைகளுக்கு உதவிய உள்ளூர் பிரமுகர்கள் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளதால், அவர்களைப் பிடிக்க, தனிப்படையினர், அந்தந்த பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். இந்து அமைப்புகளைச் சேர்ந்தவகளை கொன்று குவித்த, "போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகள், கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பக்ருதீனின் டைரியில் இருந்து, பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன. அதில், ஐந்து கொலைகளுக்கு உதவி செய்த, உள்ளூர் பிரமுகர்கள் குறித்த விவரம் கிடைத்துள்ளது. அவர்களைப் பிடிக்க, ஐந்து தனிப்படைகள், சம்பந்தப்பட்ட ... |
| புத்தகங்களில் மறைத்து வைத்துள்ள சித்திக்: பிடிபட்ட பயங்கரவாதி தகவலால் பரபரப்பு Posted: இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல, 100 புத்தக வெடிகுண்டுகளை, பயங்கரவாதி அபுபக்கர் சித்திக், தயாரித்து, மறைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவல், அவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வேலூரில் இந்து முன்னணி மாநில செயலர் வெள்ளையப்பன், சேலத்தில், பா.ஜ., மாநில செயலர் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்டவர்களின் கொலை வழக்குகளில், "போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் மற்றும் அபுபக்கர் சித்திக்கை, தமிழக போலீசார் தேடி வந்தனர். அபுபக்கர் சித்திக் தவிர மற்ற மூவரும், கடந்த வாரம், போலீசிடம் சிக்கி உள்ளனர். விசாரணையில் "திடுக்': இதில், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 08,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |