Daily Thanthi |
- ஆன்மிகம் (15-10-2013)
- ‘ரெயில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது’; மத்திய மந்திரி நாராயணசாமி பேட்டி
- ஹர்பஜன்சிங் பந்து வீச்சில் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்தது திருப்புமுனை டிராவிட் கருத்து
- ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: விசாரணை நடத்த 3 பேர் கொண்ட புதிய கமிட்டி சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை
- டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு விரைவில் கிடைக்கும் ரோகித் ஷர்மா நம்பிக்கை
- ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க இந்திய தொடர் நல்ல வாய்ப்பாகும் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் சொல்கிறார்
- தர வரிசையில் போபண்ணா, சானியா முன்னேற்றம்
- மும்பை அணியில் தெண்டுல்கருக்கு பதவி?
- இந்திய இறையாண்மைக்கு விடப்படும் சவால்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
- ரூபாய் மதிப்பு சரிவு, சர்வதேச நிலவரங்களால் ஐ.டி. துறை நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம்
| Posted: 07 Oct 2013 02:29 PM PDT illavasa Malargal Image upload: ![]() illavasa Malargal PDF upload: |
| ‘ரெயில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது’; மத்திய மந்திரி நாராயணசாமி பேட்டி Posted: 07 Oct 2013 02:16 PM PDT ஆலந்தூர் ரெயில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று மத்திய மந்திரி நாராயணசாமி கூறினார். மத்திய மந்திரி நாராயணசாமி டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– மீனவர்கள் பிரச்சினை இந்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித் இலங்கை சென்று அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது பற்றியும், இலங்கை அரசால் பிடித்து வைக்கப்பட்டு உள்ள படகுகளை விடுவிப்பது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்துவார். |
| ஹர்பஜன்சிங் பந்து வீச்சில் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்தது திருப்புமுனை டிராவிட் கருத்து Posted: 07 Oct 2013 01:22 PM PDT புதுடெல்லி, ஹர்பஜன்சிங் பந்து வீச்சில் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்தது ஆட்டத்தில் திருப்புமுனையாகும். அதுவே ராஜஸ்தான் அணி தோல்விக்கு காரணம் என்று கேப்டன் டிராவிட் தெரிவித்து இருக்கிறார். டிராவிட் கருத்து 5–வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 33 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் வீழ்ந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. |
| ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: விசாரணை நடத்த 3 பேர் கொண்ட புதிய கமிட்டி சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை Posted: 07 Oct 2013 01:20 PM PDT புதுடெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட புதிய கமிட்டியை சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை செய்துள்ளது. ஐ.பி.எல். சூதாட்டம் இந்த ஆண்டில் நடந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோர் பெட்டிங்கில் சிக்கியது பூதாகரமான பிரச்சினையாக வெடித்தது |
| டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு விரைவில் கிடைக்கும் ரோகித் ஷர்மா நம்பிக்கை Posted: 07 Oct 2013 01:16 PM PDT புதுடெல்லி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என்று ரோகித் ஷர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரோகித் ஷர்மா பேட்டி டெல்லியில் நேற்று முன்தினம் இரவு நடந்த சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 33 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் ஷர்மா தலைமையில் கைப்பற்றிய 2–வது கோப்பை இதுவாகும். கடந்த மே 6–ந் தேதி ஐ.பி.எல். கோப்பையை வென்று இருந்தது. |
| Posted: 07 Oct 2013 01:11 PM PDT மும்பை, ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர வரிசையில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க இந்திய தொடர் நல்ல வாய்ப்பாகும் என்று பயிற்சியாளர் ஸ்டீவ் ரிக்சன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி பயிற்சி ஒரே ஒரு 20 ஓவர் மற்றும் 7 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட ஜார்ஜ் பெய்லி தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் வருகிற 10–ந் தேதி நடக்கிறது. ஒருநாள் போட்டி தொடர் 13–ந் தேதி முதல் நவம்பர் 2–ந் தேதி வரை நடக்கிறது. |
| தர வரிசையில் போபண்ணா, சானியா முன்னேற்றம் Posted: 07 Oct 2013 01:03 PM PDT உலக டென்னிஸ் வீரர்–வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (11,160 புள்ளிகள்) மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். செர்பியா வீரர் ஜோகோவிச் (11,120 புள்ளிகள்) 2–வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஐப்பான் ஓபனில் பட்டம் வென்ற இந்திய வீரர் ரோகன் போபண்னா 7–வது இடத்தில் இருந்து 5–வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். |
| மும்பை அணியில் தெண்டுல்கருக்கு பதவி? Posted: 07 Oct 2013 12:58 PM PDT சாம்பியன்ஸ் லீக் போட்டியுடன் 20 ஓவர் போட்டியில் இருந்து மாஸ்டர் பேட்ஸ்மேன் தெண்டுல்கர் விடைபெற்று விட்டார். இந்த நிலையில் தெண்டுல்கர் அளித்த ஒரு பேட்டியில், 'அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணியினருடன் ஏதாவது ஒரு வகையில் தொடருவேனா? என்பது எனக்கு தற்போது தெரியாது. சாம்பியன்ஸ் லீக் வெற்றியை அனுபவித்து வருகிறேன். அடுத்த ஐ.பி.எல். போட்டிக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கிறது. அதற்குள் ஏதாவது வரும் என்று உறுதியாக நினைக்கிறேன். நம்பர் ஒன் டெஸ்ட் அணி, உலக கோப்பை, ஐ.பி.எல், சாம்பியன்ஸ் லீக் சாம்பியன் அணிகளில் இடம் பிடிக்க வேண்டும் என்று விரும்பினேன். |
| இந்திய இறையாண்மைக்கு விடப்படும் சவால்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம் Posted: 07 Oct 2013 12:31 PM PDT சென்னை, இலங்கைக் கடற்படையின் வன்முறை நடவடிக்கைகள் இந்திய நாட்டின் இறையாண்மைக்கு விடப்படும் சவால் என்பதை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி இலங்கை அரசுக்கு தெளிவாக உணர்த்த வேண்டும் என்று பிரதமருக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர் பிரச்சினை குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதை கவிஞர் கனிமொழி எம்.பி. பிரதமர் மன்மோகன்சிங்கிடம் நேற்று வழங்கினார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:– மீனவர் பிரச்சினை |
| Posted: 07 Oct 2013 12:29 PM PDT புதுடெல்லி டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு, வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் போன்ற காரணங்களால் ஐ.டி. துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நிதி நிலை முடிவுகள் |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
