Tamil News | Online Tamil News |
- நூறு நாள் வேலைத் திட்டம் தேவையா? வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேச்சு
- 'இமாம் அலியை கொன்ற போலீஸ் அதிகாரிகளை கொல்வோம்': போலீசாரை மிரட்டிய பயங்கரவாதிகள்
- லோக்சபா தேர்தல் செலவு: முதலிடத்தை பிடித்தது பா.ஜ.,
- ஏற்காடு இடைத்தேர்தலில் பணமழை' இருக்குமா?பலமுனை போட்டி நிச்சயம்
- ரயில் கட்டண உயர்வு: மக்களுக்கு துரோகம் என்கிறார் ஜெ.,
- ரயில் கட்டணங்கள் உயர்வு : கூடுதலாக 2 சதவீதம் கொடுக்க வேண்டியது அவசியம்
- தெலுங்கானா எதிர்ப்பு போராட்டத்தால் இருளில் மூழ்கும் ஆந்திரா
- ஓட்டளிப்பதை கட்டாயமாக்க அத்வானி வலியுறுத்தல்
- "போலீஸ்' பக்ருதீனுக்கு ஏழு நாள் காவல்: பெங்களூரு போலீசும் சேர்ந்து விசாரணை
- ஊழல் எம்.பி.,க்களை பதவி நீக்கம் செய்வது எப்படி?:புதிய வழிகாட்டும் குறிப்பை வெளியிட கோரிக்கை
| நூறு நாள் வேலைத் திட்டம் தேவையா? வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேச்சு Posted: காரைக்குடி : ""வறட்சி நிவாரணம் வழங்குவதை விட, வறட்சிக்கான காரணத்தை கண்டுபிடித்து நிவர்த்தி செய்ய வேண்டும்,'' என, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார்.காரைக்குடியில் செந்தமிழர் பேரவை சார்பில் நடந்த உணவுத்திருவிழாவில், அவர் பேசியதாவது: கனிம வளங்களை, தோண்டி எடுப்பதுதான், அரசியல்வாதிகளின் மிகப்பெரிய தொண்டாக உள்ளது. இந்த நாடு நமக்கு உரியது என்று கொடி பிடிக்க வேண்டிய காலம், இது. வனம், பயிர், விதை, கால்நடை மட்டுமன்றி, உழைக்கக் கூடிய கரங்களையும், "நூறுநாள் வேலை திட்டம்' என்ற பெயரில் இழந்து நிற்கிறோம். "ஏசி' அறையில் உட்கார்ந்து கொண்டு, விவசாய ... |
| 'இமாம் அலியை கொன்ற போலீஸ் அதிகாரிகளை கொல்வோம்': போலீசாரை மிரட்டிய பயங்கரவாதிகள் Posted: மதுரை:'இமாம் அலியை சுட்டுக் கொன்ற, போலீஸ் அதிகாரிகளை இங்கே வரச்சொல்லுங்க; அவங்களை கொன்னுட்டு, நாங்களும் தற்கொலை செஞ்சிக்கிறோம்' என, புத்தூர் 'ஆபரேஷனின்' போது, பயங்கரவாதிகள் பிலால் மாலிக்கும், பன்னா இஸ்மாயிலும், போலீசாரிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.புத்தூரில் வாடகை வீடு: இதுதொடர்பாக, போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:இந்து நிர்வாகிகள் கொலை வழக்கில் தேடப்பட்ட இவர்கள், ஆந்திர மாநிலம், புத்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர்.நேற்று முன்தினம் அந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். சென்னை இன்ஸ்பெக்டர் லட்சுமணன், பால் வியாபாரி போல் ... |
| லோக்சபா தேர்தல் செலவு: முதலிடத்தை பிடித்தது பா.ஜ., Posted: புதுடில்லி:கடந்த லோக்சபா தேர்தலில், அதிகம் செலவு செய்த கட்சிகளின் பட்டியலில், பா.ஜ., முதலிடத்தை பிடித்துள்ளது. அந்த கட்சி, 448 கோடி ரூபாய் செலவழித்து உள்ளது.தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்துவதற்காக, 'அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களின் தேர்தல் செலவு கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.இதன்படி, அனைத்து அரசியல் கட்சிகளும், கடந்த லோக்சபா தேர்தலில், தங்கள் செலவு கணக்கு களை, தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்துள்ளன.இதில், அதிகபட்சமாக, பா.ஜ., 448 கோடி ரூபாய் செலவழித்துள்ளதாக தெரிவித்து உள்ளது.இதில், 162 கோடி ரூபாய், கட்சி ... |
| ஏற்காடு இடைத்தேர்தலில் பணமழை' இருக்குமா?பலமுனை போட்டி நிச்சயம் Posted: ஏற்காடு எம்.எல்.ஏ., பெருமாள் மறைவைத் தொடர்ந்து, அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில், ஆளும் கட்சியை எதிர்த்து, தி.மு.க., களமிறங்குகிறது. இந்த இடைத் தேர்தலில், திருமங்கலம் பார்முலா, "ஒர்க் அவுட்' ஆகும் பட்சத்தில், வாக்காளர்கள் காட்டில் பணமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏற்காடு சட்டசபை தொகுதியில், எம்.எல்.ஏ., வாக இருந்த, ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெருமாள் மரணத்தைத் தொடர்ந்து, அத்தொகுதியில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், டிச., 4ம் தேதி நடக்கவுள்ள தேர்தலில், போட்டியிட ஆளும் அ.தி.மு.க., ஏற்கனவே உறுதியாகி விட்டது. மற்ற கட்சிகள் ... |
| ரயில் கட்டண உயர்வு: மக்களுக்கு துரோகம் என்கிறார் ஜெ., Posted: சென்னை:பெட்ரோல், டீசல் விலையை மாதத்திற்கு ஒருமுறை உயர்த்த அனுமதித்தது போல், ஆறு மாதத்திற்கு ஒருமுறை, ரயில் சரக்கு மற்றும் பயணிகள் கட்டண உயர்விற்கும் வழிவகுத்த மத்திய அரசின் நடவடிக்கை, சாதாரண மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம். எனவே, கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று,தமிழக முதல்வர், மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்த, அவரது அறிக்கை:அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியையும், சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வையும் சுட்டிக்காட்டி, பெட்ரோல், டீசல் விலைகளை மாதந்தோறும் ... |
| ரயில் கட்டணங்கள் உயர்வு : கூடுதலாக 2 சதவீதம் கொடுக்க வேண்டியது அவசியம் Posted: புதுடில்லி: மாற்றி அமைக்கப்பட்ட ரயில் கட்டண உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. படுக்கை மற்றும் குளிர்சாதன வகுப்புகளில் பயணிப்போர், தற்போது செலுத்தும் கட்டணத்தை விட, இனி, கூடுதலாக, 2 சதவீதம் செலுத்த வேண்டியிருக்கும். இது, பயணிகளுக்கு கூடுதல் சுமையாக அமையும்.எப்.ஏ.சி., முறை:ரயில்வே அமைச்சராக இருந்த திரிவேதி, 2012 - 13ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை, கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்தார். அப்போது, சர்வ தேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கேற்ப, பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றி அமைக்கப்படுவது போல், ரயில் கட்டணத்தையும், ஆறு மாதங்களுக்கு ... |
| தெலுங்கானா எதிர்ப்பு போராட்டத்தால் இருளில் மூழ்கும் ஆந்திரா Posted: ஐதராபாத்:தெலுங்கானா தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சீமந்திரா பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்களும், காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால், மி்ன் உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஆந்திரா முழுவதும், இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, வன்முறையில் ஈடுபடுவோரை, கண்டதும் சுடுவதற்கு, உத்தரவிடப்பட்டுள்ளது.'ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு, ஆந்திராவில், தெலுங்கானா அல்லாத சீமந்திரா பகுதியைச் சேர்ந்த மக்களிடையே, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.மாநில ... |
| ஓட்டளிப்பதை கட்டாயமாக்க அத்வானி வலியுறுத்தல் Posted: புதுடில்லி: 'ஓட்டு போடுவதை கட்டாயமாக்க வேண்டும்' என்ற, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியின் கருத்தை, அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானியும், ஆதரித்துள்ளார்.குஜராத்தில், நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 'ஓட்டு போடுவதை கட்டாயமாக்க வேண்டும்' என்ற மசோதா, குஜராத் சட்டசபையில், இரண்டு முறை, மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அம்மாநில கவர்னர், அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.ஆனாலும், 'ஓட்டு போடுவதை, கட்டாயமாக்க வேண்டும்' என, நரேந்திர மோடி, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், பா.ஜ.,வில், நரேந்திர மோடியின் ... |
| "போலீஸ்' பக்ருதீனுக்கு ஏழு நாள் காவல்: பெங்களூரு போலீசும் சேர்ந்து விசாரணை Posted: இந்து பிரமுகர்கள் கொலை தொடர்பாக, கடந்த இரு தினங்களுக்கு முன், சென்னையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, "போலீஸ்'பக்ருதீனுக்கு, ஏழு நாட்கள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு பிரிவினர், அவரிடம் விசாரணையை துவக்கியுள்ளனர். பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கிலும், "போலீஸ்' பக்ருதீனுக்கு தொடர்பிருப்பதால், பெங்களூரு போலீசாரும் விசாரித்து வருகின்றனர். வேலூரில், ஜூலை, 1ம் தேதி, இந்து முன்னணி பிரமுகர், வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அதே மாதம், 19ம் தேதி, சேலத்தில், பா.ஜ., ... |
| ஊழல் எம்.பி.,க்களை பதவி நீக்கம் செய்வது எப்படி?:புதிய வழிகாட்டும் குறிப்பை வெளியிட கோரிக்கை Posted: புதுடில்லி:சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம் செய்வது குறித்து, புதிய வழிகாட்டும் குறிப்பு வெளியிட வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. குற்ற வழக்குகளில், இரண்டு அல்லது அதற்கு மேலான ஆண்டுகள் சிறைத் தண்டனை பெறும், எம்.பி., - எம்.எல்.ஏ., க்களின் பதவிகளை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை பயனற்றதாக்குவதற்காக, மத்திய அரசு, அவசர சட்டம் பிறப்பிக்க முன்வந்தது. கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, அந்த முடிவு, வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், ராஷ்டிரிய ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 07,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |